Skip to content

நிலையற்ற தன்மையை குறைக்க

22 February 20124 comments Featured, Tamil Horoscope

அண்ணே வணக்கம்ணே !
திங்கள் மாலை கூரியர்ல அனுப்ப முடிஞ்சவுகளுக்கெல்லாம் அனுப்பியாச்சு. விடுபட்டவுக, ஆர்.பிலதான் அனுப்பனுங்கற டிஸ்டன்ஸ்ல உள்ளவுகளுக்கு நேத்திக்கு அனுப்பிட்டம். ( ஜோதிடம் 360 புஸ்தவத்தை சொன்னேன்).
எடைக்கு போட்டா குவார்ட்டருக்கு கூட தேறாத அளவு பிரதிகள்தான் கைவசமிருக்கு. முந்திக்கங்க.அப்பாறம் நம்மை மறுபடி ரீ ப்ரிண்டுக்கு இழுத்துவிட்டுராதிங்க. ஜனவரி 30 க்கு மிந்தி அனுபவஜோதிடம் சைட்டு 25,000 க்குள்ள இருந்தது. இப்பம் பார்த்தா லட்சத்து நாப்பதாயிரம் ( ரேங்கை சொன்னேன் – இண்டியா ரேஞ்சுல) அதனால ரீ ப்ரிண்டுக்கெல்லாம் இன்னம் ஒரு வருசமாச்சும் பிடிக்கும்.ஆமா சொல்ட்டன்.
நேத்து மனித வாழ்விலான நிலையற்ற தன்மைக்கு சோதிட காரணத்தை (சந்திரன்) சொல்லியிருந்தேன். படம் வரைஞ்சு பாகங்கள் குறிக்காட்டாலும் லட்டு கணக்கா கேட்ச் பண்ணிட்டிங்க போல. ( புரியாட்டாலும் கமெண்ட் போட டைமில்லாதவுகளுக்காக மீள் பதிவு கணக்கா எதுல இன்ஸ்டெபிளிட்டிங்கற பத்தியை மறுபடி போட்டு – அது எந்த ராசி/லக்னத்துக்குங்கறதையும் சொல்லி – அதுக்கு பரிகாரத்தையும் தந்திருக்கன். தூள் பண்ணுங்க..Read More

Related Posts Plugin for WordPress, Blogger...

Enter your email address:

About the Author

கடந்த 2009 ,மே முதல் ரீ என்ட் ரி கொடுத்து 8 லட்சம் வருகைகளை கடந்து வெற்றி நடை போட்டுவரும் வலைஞன். 2000 பதிவுகளை கடந்தவன். தொழில் முறை ஜோதிடன். ஜோதிட ஆய்வாளன். மக்கள் தரும் ஆலோசனை கட்டணத்தை ஊதியமாக கருதி இந்தியாவை பணக்கார நாடாக மாற்றியே தீர்வேன் என்று புலம்பி அலம்பல் செய்துவருபவன். சமீபத்தில் வெளியிட்ட ஜோதிடம் 360 நூலில் கூட இதற்காக ஒரு அத்யாயத்தையே வைத்திருப்பவன். இதற்காக சந்திரபாபு மீதே வழக்கு போட்டவன். 12 நாள் உண்ணாவிரதம் இருந்தவன். அனைத்தும் இழந்தவன். பின் துளிர்த்தவன். கம்யூனிஸ்டோ,பெரியாரிஸ்டோ எந்த இஸ்டோ அல்லன். ஹ்யுமேனிஸ்ட் என்று வேண்டுமானால் சொல்லலாம். மணமாகி (1991) மனைவி, 18 வயது மகள் ,ஸ்வீட்டி என்ற பெண் பாமரேனியன் குட்டி மற்றும் லட்டு எனும் ஆண் பாமரேனியன் நாய் குட்டி அடங்கிய குடும்பம் என்னுடையது. ஆன்மீகத்தையும் ஒரு விஞ்ஞானமாக நிரூபிக்க துடிப்பவன். ஃப்ரம் செக்ஸ் டு சூப்பர் பவர் என்ற ஓஷோவின் சித்தாந்தத்தை கொள்கை ரீதியில் ஆதரிப்பவன். சான்றோருடைத்து என்ற பெருமை வாய்ந்த சித்தூர்(AP) நகரில் வசிப்பவன். சில காலம் பல நிறுவனங்களில் பணி புரிந்தவன். சமீபத்தில் தினத்தந்தி. Age 43. 1987லேயே முதல் சிறுகதை பாக்யாவில் பிரசுரமானபோதிலும் தமிழ் அச்சு ஊடகத்தில் நிலவும் பிராமணீயத்தால் வெளிச்சத்துக்கு வராதவன். லேட்டஸ்ட் உதாரணமாக நீங்கள் கேள்விப்பட்டும் அறியாத வலைப்பூக்கள் பற்றி பிராமண பத்திரிக்கைகளில் எழுதப்படுவது. தமிழ்10 ரேங்குகளில் முதல் 50 க்குள் தொடரும் இந்த வலைப்பூ கண்டு கொள்ளப்படாதது. 2007ல் ஜோதிட பூமி இதழில் நவகிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் , அனைவருக்கும் தனயோகம் போன்ற ஜோதிட ஆராய்ச்சி தொடர்கள் எழுதிய‌வன். சொந்தத்தில் வாங்குவோரை நம்பாமல் விளம்பரதாரர்களை மட்டும் நம்பி இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப் எனும் மாதமிருமுறை (தெலுங்கில்) நடத்துபவன். தெலுங்கில் வலை தளம் துவக்கி 2008 நவம்பர் டு மேக்குள் 20000 ஹிட்ஸ் கண்டு அங்கும் பிராமண சதியால் மொக்கையானவன். தற்போது தெலுங்கிலும் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருபவன்.

Spread The Love, Share Our Article

  • Delicious
  • Digg
  • Newsvine
  • RSS
  • StumbleUpon
  • Technorati
  • Twitter

Related Posts

Comments

  1. ஐயா,

    அருமையான பதிப்பு, எனது ராசி ரிஷபம் லக்னம் கும்பம். ரோகினி நட்சதிரம். சந்திரன் ஜோதிட கட்டத்தில் 4லமிடம்.

    1 .சென்னை வாசியான நான் கடல் போன்ற நீர்னிலை காண்பது பரிகரமகுமா?

    2 . எனது தம்பி சொந்த ஊரில் வாசிப்பதால் இந்த பரிகாரம் முடியாது சொந்த ஊர்
    செல்லும்போது இளநீர் வாங்கி கொடுயக்காலமா?, வாட்டர் பில்ட்டர் கொடுயக்காலமா? ( கிராமத்தில் கேன் வாட்டர் கிடையாது)

    லக்னா பரிகாரத்தில் கடன்படுவது உறவினர்களிடம், நான்பர்களிடம் எது சிறந்தது?

  2. S Murugesan February 22, 2012

    வாங்க விமலாதித்தன் !
    கடல் ஓகே.. இள நீர் சூப்பர். வாட்டர் ஃபில்ட்டர் தூள். கடன் வாங்கனும் அதான் முக்கியம். மாலையே திருப்பிரலாம். ஆரு கிட்டே வாங்கினாலும் ஓகே தாய்மாமன் கிட்டே வாங்கினா ஸ்ரேஷ்டம்.

  3. ஐயா,

    நேரடியாக கடனாக பணம் வாங்காமல் டீ கடை மற்றும் மெஸ்ல் அக்கௌன்ட் வைத்து கொள்ளுதல். கிரெடிட் கார்டு முலம் போன் பய்மேன்ட் இன்டர்நெட் பில் கட்டுதல். ஒரு மாதம் அல்லது 45 நாட்கள் கழித்து கிரெடிட் கார்டு கடனை வட்டிஇல்லாமல் கட்டுதல் கும்ப லக்ன பரிகாரமாகுமா?

  4. S Murugesan February 23, 2012

    நிச்சயமா..

Trackbacks

There are no trackbacks on this entry.

Add a Comment

Required

Required

Optional