*கட்டண ஆலோசனை

DSC_1239

எச்சரிக்கை:1
தற்போது தாமதத்தை தவிர்க்க ஜாதக பலன் எம்பி3 ஆடியோ ஃபைலாக மட்டுமே அனுப்பப்படுகிறது .

என் பதிவுகளை படித்து இன்ஸ்பைர் ஆகி தனிப்பட்ட ஜோதிட ஆலோசனை பெற இந்த பக்கம் வந்திருக்கும் தங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்!

நான் வெறுமனே ஜோதிடனா இருந்தா ஷார்ட்டா சலூன் மாதிரி ஒரு கட்டண அட்டவணை போட்டுட்டு முடிச்சுரலாம். பேசிக்கலா நான் ஹ்யுமேனிஸ்ட். மனிதகுலத்து மேல உள்ள கருணையாலதான் எழுத்தாளனானேன். உங்களை எஜுக்கேட் பண்ணி ஜோதிஷம்ங்கற பொக்கிஷத்தை முழுக்க முழுக்க கொள்ளையடிக்க ரூட் போட்டு கொடுக்கிறதுதான் என் உத்தேசம். அதனால பொறுமையா இந்த நாலு வரியை படிச்சுருங்க.

ஜோதிடம் … ஆன்மீக பயணத்தில் முதல் படி!
ஆன்மீகத்தை இலக்காய் கொண்டதே உண்மையான ஜோதிடம்

ஆமாங்க ஜோதிஷத்துல உங்க உடல் நலம், வருமானம், உங்களை சேர்ந்தவுங்களோட லைஃப்,அவிகனால உங்களுக்கு லாபமா நஷ்டமா ? படிப்பு,தொழில்,வேலை,உத்யோகம்,காதல்,கல்யாணம் ,பிள்ளை பேறு இப்படி லௌகீகமான கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் கிடைக்கும்னு எல்லாரும் நினைக்கிறாய்ங்க.

ஆனால் உங்க ஜாதக சக்கரத்தை வச்சி உங்க முன் பிறவி, அடுத்த பிறவி, கடந்தபிறவியிலான உங்க ஆன்மீக முயற்சிகள்,அதுக்கு தடையா இருந்த அம்சங்களை பத்தியெல்லாம் சப்ஜாடா தெரிஞ்சிக்கிடலாம்.
தெரிஞ்சுக்கிட்டு லௌகீக வாழ்க்கைல மட்டுமில்லை ஆன்மீக வாழ்விலும் சக்ஸஸ் ஆக ஜோதிஷம் உதவுது.

லௌகீகம் எல்.கே.ஜின்னா ஆன்மீகம் டாக்டரேட் மாதிரி. டாக்டரேட் வாங்கனும்னா னுலும் மொதல்ல நீங்க எல்.கே.ஜி படிச்சாகனும். இந்த கணக்குப்படி நீங்க லௌகீகமாவும் ஜெயிச்சாகனும்.

என்னோட ஜோதிட ஆலோசனையை நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கீழ் காணும் ஏதேனும் முறையில் ஆலோசனை கட்டணத்தை அனுப்பிவிட்டு, மெயில் மூலம் தங்கள் பெயர் , பிறந்த தேதி ,மாதம், வருடம், நேரம்( நள்ளிரவா இருந்தா விடிஞ்சா என்ன தேதி என்ன கிழமைங்கறதை விவரமா குறிப்பிடுங்க) ,அப்படியே நீங்க பிறந்த ஊர் (அருகில் உள்ள பெரிய நகரம்) ஆகியவிவரங்களை அனுப்புங்க.

தங்களுக்கான பதில்கள் எம்.பி 3 ஆடியோ ஃபைலாகவும் , மற்றும் தோஷங்களை குறைக்கும் நவீன பரிகாரங்கள் ரிச் டெக்ஸ்ட் ஃபார்மெட் ஃபைலாகவும் மெயில் மூலம் அனுப்பப்படும்.

பிறப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டிய இமெயில் முகவரி :

swamy7867@gmail.com

s_murugesan_67@yahoo.com

ஆலோசனை கட்டணம்:

1.விரிவான பலன் -பரிகாரம் -தசாபலன் மற்றும் 10 கேள்விகளுக்கான பதில் பெற ஜாதகம் ஒன்றுக்கு கட்டணம் ரூ.1000. ஒரு தம்பதி -ஒரு குழந்தை என்றால் ரூ.2000 செலுத்தினால் போதும்.

2.எதிர்காலம் குறித்த 10 கேள்விகளுக்கான பதில் – கேட்டிருக்கும் விஷயங்கள் நடப்பதில் தடங்கல் இருந்தால் அவை தடங்கலில்லாது நிறைவேற பரிகாரங்கள் – அவை எப்போது நடக்கும் என்ற கணிப்புகள் பெற கட்டணம் ரூ.500 .ஒரு தம்பதி ஒரு குழந்தை என்றால் ரூ.1000 செலுத்தினால் போதும்.

3.எதிர்காலம் குறித்த 5 கேள்விகளுக்கான பதில் – கேட்டிருக்கும் விஷயங்கள் நடப்பதில் தடங்கல் இருந்தால் அவை தடங்கலில்லாது நிறைவேற பரிகாரங்கள் – அவை எப்போது நடக்கும் என்ற கணிப்புகள் பெற கட்டணம் ரூ.250.ஒரு தம்பதி ஒரு குழந்தை என்றால் ரூ.500 செலுத்தினால் போதும்.

இலவச ஆலோசனை:
இது தொடரும். நிபந்தனை தபால் மூலமே தொடர்பு கொள்ள வேண்டும்.ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும்.ரிப்ளை கவர் வைக்க தேவையில்லை.பதில் தரவேண்டிய மெயில் முகவரியை சரியாக எழுதினால் போதும்.

கட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:

Name: Sundaresan Murugan A/C No: 30333022274

Name of the Bank : State Bank of India

Branch Name: GREAMSPET Branch Code: 7083

IFSC Code: SBIN0007083

Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP

Pincode: 517002

Swift Code: N/A RTGS : YES

If you have an account @ Indian bank and it is more convenient and less expensive to transfer you can transfer fee to the below account which is belong to my daughter and operated by me.

Name of the A/C holder: M.SIREESHA

ACCOUNT NO: 6108716338

Bank: INDIAN BANK

Address: SESHAPIRAN STREET, CHITTOOR 517001

State: ANDHRA PRADESH

District: CHITTOOR (Click here for all the branches of “INDIAN BANK” in “CHITTOOR ” District)

Branch: CHITTOOR MAIN

IFSC Code: IDIB000C026 (used for RTGS and NEFT transactions)

Branch Code: Last six characters of IFSC Code represent Branch code.

MICR Code: 517019099

கட்டணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு / அக்கவுண்டில் பணம் கட்டிவிட்டு அதன் விவரத்தை ஒரு மெயில் மூலம் தெரிவித்தால் நல்லது. பர்த் டீட்டெயில்ஸ் ஒரு மெயிலில், கட்டணம் செலுத்திய விவரம் ஒரு மெயிலில் அனுப்பாது ஒரே மெயிலில் அனுப்பினால் நல்லது.

எம்.ஓ அனுப்புவோர்:

எஸ்.முருகேசன் ( S.MURUGESAN ) என்ற பெயருக்கு # 17-201,Kummara st, சித்தூர் ஆ.பி 517001 , என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்

வெளி நாட்டு அன்பர்கள் மட்டும் எம்.ஓ அனுப்ப முயற்சி பண்ணாதிங்க. ( அது வந்து சேர அரை மாசம் ஆகுங்கண்ணா)

பே பால்:
கீழ் காணும் மெயில் முகவரி பே பால் மெயில் முகவரியாகும்.

swamy7867@gmail.com

எனவெ வெளி நாட்டு அன்பர்கள் பேபால் மூலம் காசு அனுப்பலாம்.

எம்.ஓ கூப்பனில் (ப்ளேஸ் ஃபார் கம்யூனிகேஷன்) பர்த் டீட்டெயில்ஸ், தங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டால் மிக நல்லது.

என்னை பார்க்க வராதீக
வெறுமனே பேச வந்தா பரவால்லிங்கண்ணா சோசியம் பார்த்துக்கிட்டு அப்படியே பேசிட்டு போகலாம்னு வந்துராதீக. ஏன்னா அதுக்கு பல காரணம் இருக்கு. நஷ்டம் உங்களுக்குத்தேன்.

நேரில் வந்து சந்திப்பதால் உங்களுக்கு நிறைய நஷ்டங்கள். போக்குவரத்து செலவு, களைப்பு, பிரயாண நேரம், என் எளிய தோற்றம், பின்னணி ஆகியன‌ என் பேச்சின் நம்பகத்தன்மையை குறைக்கலாம். மேலும் நேரில் எனும்போது வாயா வார்த்தையாதான் பலன் சொல்ல முடியும். அப்போ பெரிசா கமிட்மென்ட் வராது. த்ரூ மெயில் அனுப்ப வேண்டி வரும்போது அது ரிக்கார்ட் ஆயிருது. ஸோ ஒரு கமிட்மென்டும் வரும். உங்களுக்கு ஃப்ர்தர் ரெஃபரன்ஸுக்கும் உதவும்.

நேரில் சொல்லும் பலன் காற்றோடு போய் விடும். மேலும் அந்த நேரத்து என் மூட் கூட பலனின் தரத்தை குறைக்கலாம். த்ரூ மெயில் என்றால் எனக்கு எப்போ மூட் இருக்கிறதே அப்போது மட்டும் தட்டச்சினால் போதும். மூன்று தினங்களில் . வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நீங்க ஃபீஸ் ட்ரான்ஸ்ஃபர் பண்ணுங்க . நான் பலனை அனுப்பிர்ரன். அதுக்கப்புறமும் உங்களுக்கு நேரிடையா வந்து சந்திக்கனும்னு இருந்தா வாங்க. நோ ஃபீஸ்.

உறுதி மொழி:
தாங்கள் கட்டணமாக தரும் தொகைகள் சர்வ நிச்சய‌மாக எனது ஜோதிட ஆராய்ச்சிக்கும்,அதன் முடிவுகளை அனுபவ ஜோதிடம் ப்ளாகில்பிரசுரிக்கவும், நாட்டு முன்னேற்றத்துக்காக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரத்துக்கும் மட்டுமே செலவிடப்படும்

மெயில் அ கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டிய விவரங்கள்:

1.பெயர்:

2. டேட், டைம் ஆஃப் பர்த்( நள்ளிரவு நேரமானால் விடிந்தால் என்ன தேதி,கிழமை :

3.ப்ளேஸ் ஆஃப் பர்த்(சின்ன ஊரானால் பக்கத்தில் உள்ள பெரிய ஊர், மாவட்டம் :

4.கட்டணம் செலுத்தியுள்ள முறை,விவரம்:

5.கட்டண விவரம்(தொகை) :

6.பலன் அனுப்பவேண்டிய முறை:

7.பலன் அனுப்ப வேண்டிய மொழி:

8.முக்கியமான 10 கேள்விகள்:

9.சிறப்பாக தாங்கள் கூறவிரும்புவது:

ஏற்கெனவே ஆலோசனை பெற்றவர்கள் என்ன இது கட்டணம் எல்லாம் எக்கச்சக்கமா எகிறியிருக்கே. நம்மாளுக்கும் பணத்தாசை வந்துருச்சான்னு சந்தேகம் வரலாம்.

என் விளக்கம்:

2014 டிசம்பர் 25 வரை ஆன்லைன் ஜோதிட ஆலோசனைக்கு புதிய ஜாதகங்கள் எதையும் அனுப்ப வேண்டாம் என்று ஏற்கெனவே முக நூல் வழியாக அறிவித்துள்ளேன். அந்த அறிவிப்பு 2014 டிசம்பர் 25 வரை அமலில் இருக்கும்.2014, டிசம்பர் 26 முதல் ஜோதிட ஆலோசனைக்கு புதிய கட்டணங்கள் அமலுக்கு வருகின்றன.
ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் 2009 வாக்கில் நிர்ணயிக்கப்பட்டவை . இந்த ஐந்தாண்டுகளில் அலுலவலக வாடகை ( வீட்டுக்குள்ளயே தான்) ,மின் கட்டணம் ,இன்டர் நெட் கட்டணம் இப்படி பலவும் எகிறியிருக்கின்றன. இந்த வங்கிக்காரர்களின் லொள்ளும் உச்சத்துக்கு போயிருக்கிறது .(எதுக்கு வெட்டறாய்ங்கன்னே தெரியல)

இதெல்லாம் ஒரு பக்கம்னா இந்த ஆன்லைன் ஜோதிட ஆலோசனை காரணமா நம்ம பாடி காட்பாடி ஆயிட்டே போகுது. கண் டப்ஸ், கியாஸ் ட்ரபுள்,அஜீரணம்,அசிடிட்டி,இன்சோம்னியா,ஸ்கின் ப்ராப்ளம் ,கிக்கர் அடிக்கிறச்ச ஸ்லிப் ஆற அளவுக்கு வீக்கா போன முழங்கால் சில்லு .

செயில் கைதி கணக்கா விடியல் முதல் இரவு 7 வரை கம்ப்யூட்டரை கட்டிக்கிட்டு அழறேன். மறுபடி இரவு 9 ல் இருந்து நள்ளிரவு வரை கம்ப்யூட்டர்.

இதே ரேஞ்சுல போனா ரெம்ப நாளைக்கு தாங்காது .டிக்கெட் போட்டுர வேண்டியதுதான். இந்தியாவ வல்லரசாக்கிறது -இந்திய மானிலங்களை நல்லரசுகளாக்கிறதுன்னு ஏகப்பட்ட அஜெண்டா இருக்கு. எனக்காக இல்லின்னாலும் நாட்டுக்காக வாச்சும் நம்ம உடல் நலத்துக்காவ தினசரி 2 மணி நேரமாவது செலவழிச்சே ஆகனும்.

இதுக்கு ஜாதகங்களின் எண்ணிக்கை குறையனும். ஆனால் வருவாய் குறைய கூடாது. குறைஞ்சா ஒழிஞ்சேன். ஆன்லைன் சேவை காரணமா உங்க நல்லாதரவு காரணமா கைமாத்து,கடன் வாங்கற கப்பாசிட்டி கூட போயிருச்சு.
மேலும் 2016 முதல் வாழ் நாள் முழுக்க, இணைய உலக ஜோதிட ஆர்வலர்களுக்கு முழுக்க முழுக்க இலவசமாகவே ஜோதிட ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் ஒரு லட்சியம் இருக்கிறது.
இது நிறைவேற மாற்று வருமானத்துக்கு வழி தேடவேண்டும். என் எழுத்துக்களை ஆங்கிலத்தில் பெயர்த்து வலைதளத்தில் போட்டு ஆட்சென்ஸ் வாங்கி ஒரு மினிமம் கியாரண்டியை பெற்றே ஆகவேண்டும். அதற்காக மாத சம்பளம் ரூ.6,500 நிர்ணயித்து நண்பரின் சகோதரர் ஒருவரை ஃபிட் பண்ணியிருக்கன். அவருக்காகவாச்சும் நான் சம்பாதிச்சே ஆகனும்.

நாம பணத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தர்ர பார்ட்டியா இருந்தா ப்ராக்டீஸ் உச்சத்துல இருக்க சொல்லோ அடிக்கடி ஹவுஸ் ஃபுல் போர்ட் மாட்டியிருக்க மாட்டோம்.

நாம பணத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தர்ர பார்ட்டியா இருந்தா எவன் எக்கேடு கெட்டா என்ன.. நாடு எக்கேடு கெட்டு போனா என்னனு வெறுமனே ஜோதிட பதிவுகளை மட்டும் போட்டுக்கிட்டு பட்டையும்,கொட்டையும் மாட்டி பரிகார ஹோமம்,பரிகார பூஜை, அந்த சக்கரம் ,இந்த சக்கரம்ன்னு கல்லா கட்டியிருக்கலாம்
ஆனால் நாம அப்படி இருந்ததில்லை.இருக்கவும் போறதில்லை. அதே சமயம் இதுவரை பட்டியலிட்ட காரணங்களால பழைய கட்டணத்தை தொடர்வது முடியாத ஒன்று. எனவே புதிய கட்டணங்கள் டிசம்பர் 26 முதலே அமலுக்கு வருகின்றன.

இப்ப‌டிக்கு,
சித்தூர்.எஸ்.முருகேச‌ன் (எ) முருக‌ன்

S Murugesan
மணவை says:

அன்புள்ள அய்யா திரு. சாமி அவர்களுக்கு,
மன்னிக்கவும். எனக்கு சாமி மீது நம்பிக்கை இல்லை. இராமசாமி (பெரியார்) மீது நம்பிகை உண்டு. ஜோதிடம் பற்றியும் அதே கருத்துதான்.

எனது ’வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in

மணவை says:

அன்புள்ள அய்யா திரு.சாமி அவர்களுக்கு,

மன்னிக்கவும், எனக்கு சாமி மீது நம்பிக்கை இல்லை. இராமசாமி (பெரியார்) மீது நம்பிக்கை உண்டு. அதே போல்தான் ஜாதகத்தின் மீதும்.

எனது ’வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
http://www.manavaijamestamilpandit.blogspot.in

S Murugesan says:

வாங்க மணவை ஜேம்ஸ்!
நிச்சயமா வரேன். கடவுள்,ஜோதிடம் இந்த இரண்டை நம்புவதை தவிர நானும் பெரியார் பேரன் தான்.

Victor says:

ஐயா,
கட்டணம் அனுப்பி எத்தனை நாள் கழித்து பலன் அனுப்பி வைப்பீர்கள். எல்லாம் ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன். வாழ்கையில் அவ்வளவு குழப்பத்தில் இருக்கேன்.

S Murugesan says:

ஐயா !

இந்த நிமிடம் நிலுவையில் உள்ள ஜாதகங்களை வைத்து பார்த்தால் 7 நாட்கள் ஆகலாம்.

lalitha says:

Dear sir will you accept multi city cheque for detailed palangal .Do you need horescope? thank you.

S Murugesan says:

அம்மா !
செக் எல்லாம் பிரச்சினையில்லை. யு கென் ப்ரொசீட்.

lalitha says:

Dear sir will you accept multi city cheque for detailed palangal.will you need horescope? thankyou

vasant says:

Hi Sir,

Are you providing service now also ? because in Warning 2 its mentioned service is till 31.12.2015 only

S Murugesan says:

Vasant !
Yes. Stopped.

அய்யா என்பையனுக்கு ஜாதகம் பார்த்து சொல்வீர்களா உங்கள் போன் நம்பர் என்ன ராஜேஷ்ராம் என்று முக நூலில் வருவேனே நான் தான் நான் ஒய்வு பெற்றவன் என் பையன் பிறந்த நாள் 18-11-1990 என் மனைவிக்கு ஜாதகம் மீது அலாதி ப்ரியம்

S Murugesan says:

ஐயா ,
க்ட்டண ஆலோசனை நிறுத்தப்பட்டுவிட்டது.மன்னிக்கவும்.

Ashok Ramanujam says:

வணக்கம் ஐயா…..

அடியேன் தங்களிடம் என் ஜாதகத்தை அனுப்பி கட்டண ஆலோசனை பெற விரும்புகிறேன்….

வாழ்க்கையில் விரக்தி விரக்தி விரக்தி தவிர எதுவுமே இல்லாத நிலை ஐயா ….

தாங்கள் ஒவ்வொரு ஜாதகத்தையும் உற்று நோக்கி ஆராய்ந்து பலன் மற்றும் பரிகாரம் கூறி வருவது ஜோதிடம் மீதுள்ள தங்களின் அற்பணிப்பை காட்டுகிறது….

ஆகையால் தங்களின் ஆலோசனைக்கு பிறகு வேறு யாரிடமும் அடியேன் ஜாதகம் பார்க்க தேவை இருக்காது என்றே தோன்றுகிறது… .

தயவுகூர்ந்து மறுக்காமல் ஆலோசனை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா….

மிக்க நன்றி ஐயா

வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு

S Murugesan says:

Ashok Ramanujam !
மொதல்ல 4 புஸ்தவத்தையும் ஒரு ஓட்டு ஓட்டுங்க. உங்க பிரச்சினைக்கு தீர்வு கிடைச்சுரும்னு நம்பறேன். கிடைக்காத பட்சம் பார்க்கலாம்.

Ashok Ramanujam says:

மிக்க நன்றி ஐயா

நிச்சயமாக வாசிக்கிறேன்

Kathirvel says:

Hello Sir now you providing paid service . I am really impressed your detail Jothida Knowledge.

S Murugesan says:

Kathirvel !

Yes .Still it is going on.

THARUN says:

Sir,

I would like to get advise from you….

now you are providing paid service ?

S Murugesan says:

Tharun !
Yes. As per pending volumes it may take a week or 10 days even if you send yours today itself.

Uma says:

Sir,
Is there any possibility to meet in person.Do we get any appointment to meet.

S Murugesan says:

அம்மா !
மன்னிக்கவும். நேரில் ஆலோசனை வழங்குவதில்லை. மெயில் மூலம் -ஆடியோ ஃபைல் வழியாகவே வழங்கி வருகிறேன்.

இரா.விஜய் மனோஜ் says:

அய்யா வணக்கம்,
எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் , நான் எவளவு தொகை அனுப்ப வேண்டும் ,என் எதிர்காலம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி தெரிந்துகொள்ள .

S Murugesan says:

இரா.விஜய் மனோஜ் ,

மே 7 க்கு பிறகு மெயில் பண்ணுங்க. சொல்றேன். swamy7867@gmail.com

k.siva kumar says:

13.11.1989
11.30pm
Hosur
This birth chart favourable for ips sir plz

S Murugesan says:

Sivakumar !
You can /must communicate through post only .

ARUN says:

Sir,

I want to see kalyana portham,are u providing service for that ?
how much fees ?can i enclose the jadagam copy of the couple in mail ?

S Murugesan says:

அருண் !
செய்யலாம். ஆனால் ஒரு அட்டெம்ப்ட்ல நாலஞ்சு ஜாதகம் அனுப்பறாப்ல இருந்தா தான் ஒன்னு ரெண்டு தேறும். கட்டணம் கூட மொத ஜாதகத்துக்கு ரூ.250 அடுத்தடுத்த ஜாதகங்களுக்கு ரூ.100 என்று ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம். ஒவ்வொன்றாக அனுப்புவதை விட சேர்த்து அனுப்புங்க.

அதுவும் ஜாதகங்கள் வேண்டாம். பர்த் டீட்டெய்ல்ஸ் போதும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *