*எண் கணிதம்
ராசிச்சக்கரத்தை பார்த்து சொல்லும் பலன் எப்படி சரியாக இருக்கிறதோ அதே போல் பிறந்த தேதி,பெயர் எண் இத்யாதியை வைத்து சொல்லும் பலனும் ஒர்க் அவுட் ஆகிறது.
உ.ம் : சோனியா அம்மையார் .பிறப்பு எண் 9 அவருக்கு தற்போது எட்டாவது ரவுண் நடக்கிறது. ஐ மீன் அவர் வாழ்க்கைய ஒன்பது ஒன்பதா பிரிச்சா 9X7 = 63 வயசு முடிஞ்சு எட்டாவது ரவுண்டு நடக்குது .
உ.ம் : நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வந்த தேதி -குடியரசான தேதியை பாருங்க (விரிவா)
நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த தேதி 15/08/1947. இதில் தேதியை மட்டும் கூட்டுங்கள். 6 வரும். இதன் அதிபதி சுக்கிரன்.(பிறப்பு எண்) தேதி,மாதம்,ஆண்டுகளில் உள்ள இலக்கங்கள் எல்லாவற்றையும் கூட்டி ஒற்றை எண்ணாக்குங்கள். 8 வரும்.( கூட்டு எண்) இதற்கு அதிபதி சனி.
நம் நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது 26/01/1950 . இதில் தேதியை மட்டும் கூட்டுங்கள். 8 வரும்.(பிறப்பு எண்) இதற்கு அதிபதி சனி.தேதி,மாதம்,ஆண்டு எல்லாவற்றையும் கூட்டி ஒற்றை எண்ணாக்குங்கள். 6 வரும்.( கூட்டு எண்) இதற்கு அதிபதி சுக்கிரன்.
ஆக எண்கணிதப்படி நம் நாடு சுக்கிரன்,சனி ஆதிக்கத்தில் உள்ளது.
ஜோதிட விதிப்படி சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்களே. ஆனல் சற்றே ஆழமாக யோசித்தால் இதுவே இந்தியாவின் முன்னேற்றத்தை முடக்கியுள்ளது என்று ஆணித்தரமாக கூறலாம். காரணம், சனி ஏழ்மை,பசி,பட்டினி,தாமதம்,கூலிக்கு மாரடித்தல்,ஏழை மக்களை இம்சித்து பொருளீட்டுதல்,முதியவர்கள் அங்கஹீனமுள்ள்வர்களை காட்டும் கிரகமாகும்.
முட்டிவலியால் அவஸ்தைப் பட்ட வாஜ்பாயி,தொண்டு கிழமான பி.வி.நரசிம்ம ராவ்,ஒட்டிய முகம் கொண்ட சோனியா ,எல்லோருமே சனியின் தூதுவர்கள்தான். இவர்களின் தாமஸ புத்தியாலும்,கூலிக்கு மாரடிக்கும் எண்ணத்தாலும் ஏழ்மை அதிகரித்தது.
கலை உள்ளம் கொண்ட நேரு, இளமை தோற்றம் கொண்ட இந்திரா,ஓவியரான வி.பி.சிங் எல்லாம் சுக்கிரனின் தூதுவர்கள் . இவர்களின் ஆட்சி சனியின் தடைகளையும் மிறி ஓரளவேனும் ஏழை மக்களின் உணவு,உடை,இருப்பிடம் (சுக்கிரனின் ஆதிபத்யம் உள்ள) ஆகிய விஷயங்களில் அக்கறையுடன் நடந்தது.
சுக்கிரன் காதல், சிற்றின்பங்களின் மீதான நாட்டத்தை அதிகரிப்பதால் தான் நேருவுக்கும், லேடி மவுண்ட் பேட்டன் இடையில் காதல், இந்திராவின், ராஜீவின் காதல் திருமணம் ஆகியன நடந்ததோடு , ராகுல் கதையும் அதே ட்ராக்கில் போகிறது.
மக்கள் தொகையும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. மத்திய அரசாங்க முடிவுகளில் பெண்ணான சோனியாவின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.
சுக்கிரன் என்றால் கூட்டுறவு. சனி என்றால் விவசாயம். கூட்டுறவு பண்ணை விவசாயம் அமல் செய்யப்பட வேண்டும்.அதிலும் விவசாய கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு சமமான இடம் தரப்பட வேண்டும்.மேலும் பூக்கள்,பழங்கள் தொடர்பான உற்பத்தியில் கவனம் செலுத்தினால் சனி,சுக்கிர தொடர்பினால் ஏற்பட்ட முன்னேற்ற தடைகள் விலகி சுக்கிரனின் ஆதிக்கத்திற்குட்பட்ட உணவு,உடை,இருப்பிடம் ஆகியன எல்லோருக்கும் கிடைக்கும். அதோடு மக்கள் தொகை பெருக்கமும் கட்டுப் படுத்தப்படும்.இது ஜோதிட ரீதியில் மட்டும் அல்ல விஞ்ஞான முறைப்படியும் சாத்தியமே.
இதை .. இந்த கனவை நனவாக்க ஒரு திட்டம் தீட்டி அதன் அமலுக்கும் பிரச்சாரத்துக்கும் உழைத்துவருகிறேன். அதன் பெயர் ஆப்பரேஷன் இந்தியா 2000.
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்
13 Replies to “*எண் கணிதம்”
Arul
21/04/2017 at 8:42 pm
Neenga sonnathula 1 mattum nadanthuduchu. Demonetization.
S Murugesan
21/04/2017 at 8:58 pm
அருள் !
தலை கால் புரியல. முன் கதை சுருக்கம் ப்ளீஸ்
K Nandakumaar
24/01/2017 at 1:25 pm
My DOB IS 25.03.1973 Pls give me prediction thru numerology
Thanks
S Murugesan
24/01/2017 at 2:41 pm
நந்தகுமார் !
இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலமே தொடர்புகொள்ள வேண்டும். என்றாலும் நியூமராலஜி என்பதால் ஒரு பாய்ண்ட் சொல்றேன்.
உயிர் எண் 7 ஸ்தூல எண்: 3 நீங்க நாத்திகரா இருந்தா நோ ப்ராப். ஆத்திகரா இருந்தா பைசா,காதல்,திருமணம்,மனைவி ,குழந்தைகள் விஷயத்துல சிக்கல் இருக்கலாம்.
Am I right?
Ashok Ramanujam
17/04/2016 at 5:00 pm
தங்களின் இந்த உயர்ந்த லட்சியம் நிச்சயம் நடந்தேறும் ஐயா….
எல்லாம் இறைவன் செயல்….
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
rajesh
18/11/2015 at 11:50 pm
hello sir,
My dob :29/11/1988 when is my turning point and what is round now ?can we find marriage year ?
S Murugesan
19/11/2015 at 12:11 am
ராஜேஷ்!
48வயசு வரை ஏதோ ஒரு குறை இருக்கும். (கல்யாணமாகல,ஆண் பிள்ளை பிறக்கல,சொந்தவீடு கட்டல -இது போல) பிறவு அதுவும் ஃபுல்ஃபில் ஆய்ரும்.
அஞ்சாவது ரவுண்ட்ல இருக்கிங்க. 48டிவைடட் பை 11 .இது அஞ்சாவது ரவுண்டு .புத்தி குழப்பம்,புகழ்/இகழ் மாறி மாறி வர்ரது இப்படி போகும்.
கல்யாணங்கறது 2 நாள்ள ஃபிக்ஸ் ஆகி 2 வருசம் வரை அவதிப்படற மாதிரி இருக்கும். கொஞ்சம் பெரியவிகள கலந்து பேசி செய்ங்க.
Rajesh
19/11/2015 at 8:24 pm
ayya vanakkam,
steady life irukkuma ayya ?marriage aliance pakuranga entha vayasla marriage panlam manivi niram ,vasathi epidi irukkum ayya .
S Murugesan
19/11/2015 at 9:36 pm
வாங்க ராஜேஷ் !
இந்த கேள்விக்கு ஏற்கெனவே பதில் தந்துட்டனே //கல்யாணங்கறது 2 நாள்ள ஃபிக்ஸ் ஆகி 2 வருசம் வரை அவதிப்படற மாதிரி இருக்கும். கொஞ்சம் பெரியவிகள கலந்து பேசி செய்ங்க.//
Dinesh.R
03/10/2015 at 4:08 pm
Sir, I saw your interview in Vendar tv, regarding the world catastrophes, said by Veera Bramendrar and Kala Gnananm book, Sir i need your guidance to think about my future, since me and my family were suffering from lots and lots of debts and low income, i know it will be rectified by our birth fate and our karma’s, Please tell me an advice to survive.
S Murugesan
03/10/2015 at 5:40 pm
Welcome to Dinesh !
I don’t know about your mother tong .If you are a Tamil-ion you can find solutions in this post itself.(Many of my readers asked the same questions) If you can’t find here try at the Facebook Page.
If your mother tong is Telugu you can find here.
dhanush
27/09/2014 at 7:04 pm
Great thought sir..fantastic.it will come true defnatly.
S Murugesan
27/09/2014 at 10:44 pm
வாங்க தனுஷ்!
வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி .