மாயா 2.0 :18 (B)+19

அத்யாயம்:18 (B)

 

“ஏம்மா நேத்து நான் பேசினதுல உனக்கு எதுனா தப்பா பட்டுதா?”” நீ ஒன்னும் வருத்தப்படலியே ” அது இதுன்னு  என்னமோ சமாதானம் பேசிக்கிட்டு இருந்தார்.

“ஏம்மா இதுக்கு முன்னே நேரு தெருவுல இருந்தே.. ட்ராவல்ஸ் ஆஃபீஸ் கிட்டக்க இருந்தது.  இப்ப ரொம்ப டிஸ்டன்ஸாயிருமே.. பேசாம ஒரு ஸ்கூட்டி வாங்கிக்கறியா”ன்னாரு அப்பா.

எனக்கு பயங்கர கடுப்பு. “அப்பா ! இது ஆனாலும் அநியாயம்.. நான் போன வருஷம் ஒரு டிவிஎஸ் வாங்கிக்கறேன்னா சாலைபாதுகாப்பு வார விழால ட்ராஃபிக் கமிஷ்னர் மாதிரி ஸ்பீச் கொடுத்தே இப்ப இவளுக்கு மட்டும் ஸ்கூட்டி..  ஐ நெவர் எக்ஸ்பெக்டட் திஸ் டைப் ஆஃப் பார்ஷியாலிட்டி ஃப்ரம் யு. “ன்னேன்.

“டே நீ ஏற்கெனவே ஆஞ்சனேயர் மாதிரி உனக்கு டிவிஎஸ் வாங்கித்தர்ரது ஆஞ்சனேயர் வாலுக்கு நெருப்பு வச்ச மாதிரி. நீ செத்தா பரவாயில்லே தாடு தகா இல்லே . உன் வண்டில எவன்னா குடும்பஸ்தன் விழுந்து செத்து தொலைச்சா அவன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துருமே அதுக்குத்தான் வேணாம்னேன். வேணம்னா மாயா ஸ்கூட்டில ஆஃபீஸ் போறப்ப பின்னாடி தொத்திக்க”ன்னாரு.

எனக்கு வாழ்க்கையே வெறுத்துருச்சு. “எல்லாம் நேரம்”னு முனகிக்கிட்டே மாயாவோட புறப்பட்டேன்.  ஷேர் ஆட்டோ பிடிச்சு ஆஃபீஸ் கிட்டே  இறங்கினோம்.

கொஞ்ச நேரத்துல முனியம்மா வர ஆஃபீஸை பெருக்கி சாமி படத்துக்கு பூ போட்டு ஊதுவத்தி கொளுத்தி உட்கார்ந்தோம்.  மாயா என் பக்கம் திரும்பவே இல்லை. நான்

” மாயா! ஐம் சாரி”ன்னேன்
“எதுக்கு?”
“காலைல நடந்ததுக்கு”
” நீ எதை சொல்றே ஃபர்ஸ்ட் எபிசோடா? செகண்ட் எபிசோடா?”
” செகண்ட் எபிசோடுதான்”
“அப்ப ஃபர்ஸ்ட் எபிசோடுக்கு நான் சாரி சொல்லனுங்கறியா?”
“அப்படியில்லே  நான் சாரி அவ்ளதான்”
“அப்ப நான் செய்தது தப்பில்லயா?”
“ஆயிரம்தான் இருந்தாலும் நான் ஆம்பளை !”
“அப்ப எதுக்கு அலறியடிச்சுக்கிட்டு ரூமுக்குள்ள போய் பூந்துக்கிட்டே?”
“ஒரு கூச்சம் தான்”
“இங்கயும் அதுவே தான் .. வேலைய பாரு. 2200  எஃப்சிக்கு போயாகனும். எல்லாம் ரெடியா?”
“பெயிண்டர் வேலைதான் பாக்கி.. அப்ப நான் பெயிண்டரை பார்த்துக்கிட்டு ஆர்.டி.ஓ போயிர்ரன்”
“சரி”
ஆர்.டி.ஓ ஆஃபீஸ் வேலை முடிய சாயந்திரம் 5.30 ஆயிருச்சு. மாயா ஏதோ துணிக்கு எம்ப்ராய்டரி பண்ணிகிட்டிருக்க நான் ஏதோ பேசப்போக வாட்டர் ஃபில்டர்ல இருந்து   தண்ணிய  பிடிச்சி  டம்ளரை கொடுத்து” முதல்ல இதை குடி” ன்னா. குடிச்சேன். அப்புறம் ஃப்ளாஸ்க்ல இருந்து காஃபிய சரிச்சு ” இந்த காஃபிய குடி” ன்னா. குடிச்சேன்.

ஹேன்ட் பாகை திறந்து என் ப்ராண்டு சிகரட்டை எடுத்து கொடுத்தா.
” என்னம்மா கண்ணு ஓனருக்கு ஃபோன் கீன் போட்டியா வரச்சொல்லி. இல்லே அவரு ஃபோன் போட்டாரா வரேன்னு உபசரிப்பு பலமா இருக்கு ”

 

அத்யாயம் :19

“முகேஷ் ! பீ சீரியஸ். உங்க அப்பா ஒரு அமெச்சூர் ஃபோட்டோகிராஃபர்னு சொல்லியிருக்கே.. ஆம் ஐ கரெக்ட்?”
“ஆமாம்”
“உங்க சின்ன அண்ணன் ஒரு காலத்துல சினிமா வாய்ப்புக்காக அலைஞ்சிருக்காருன்னு சொல்லியிருக்கே ஆம் ஐ கரெக்ட்?”
“ஆமாம்”
“உங்க தம்பி காலேஜ் கோயர் .காலேஜ் ஒரு வேளைதான் இல்லையா?”
“ஆமாம்.. இதெல்லாம் எதுக்கு கேட்கிறே?”
” உங்க அப்பா ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோ ஆரம்பிச்சா எப்படி இருக்கும்?”
” என்ன மாயா நீ எங்கப்பாவுக்கு இப்ப 60 வயசு. இந்த வயசுல போய் ”
” நோ நோ .. உங்கப்பாவ பத்தி அப்படி சொல்லாதே. அவருக்குள்ள ஒரு வேக்குவம்   இருக்கு. ஹால்ல உங்க அம்மா ஃபோட்டோவ பார்த்துட்டு கலர் ஃபோட்டோனு நினைச்சேன். கேட்டும் தொலைச்சுட்டன். ஆனால் மனுஷன் ப்ளாக் அண்ட் வைட் படத்தை வெறுங்கையில கலரா மாத்தியிருக்காரு . அதே சமயம் இந்த ஸ்டுடியோ ஐடியாவே உன் பெரிய அண்ணன் ,சின்ன அண்ணனுக்காகத்தான். ”

“தபார்ரா..பெரியவன் தான் வேலையா இருக்கானே”
“அவருக்கு அல்லையன்ஸ் பார்க்கவேணாமா?”
“க்கும் அல்லையன்ஸ் பார்க்கிறதுக்கும் ஸ்டுடியோ வைக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?”
“ஹய்யோ.. பெண்ணை பெத்தவன் பொண்ணு வயசுக்கு வந்ததும் உட்கார வச்சு ஃபோட்டோ பிடிப்பான், ஜடை தச்சு ஃபோட்டோ பிடிப்பான். பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடறப்ப கொடுக்க ஃபோட்டோ புடிப்பான். ஆக கல்யாணமாகாத பெண்களோட பயோ டேட்டா ஸ்டுடியோவுக்கு வர நிறைய வாய்ப்பிருக்கு.”

” ஹும்..கொக்கு தலைல வச்சி வெண்ணைய பிடிக்கிறேங்கற. அது சரி சின்ன அண்ணனுக்கும் இந்த ஸ்டுடியோவுக்கும் என்ன சம்பந்தம்?”

“பெரியவருக்கு ஆனதும் சின்னவருக்கு பார்க்கனும் இல்லியா?”
“என்னாத்த ..பா……..ர்………….க்கனும்?”

“கல்யாணத்துக்கு பொ…………..ண்ணு .பொண்ணை குடுக்கிறவன் வெறும்பயலுக்கு கொடுப்பானா. ஸ்டுடியோவே அவருதுன்னு சொன்னா குடுப்பான்”

“கிழிஞ்சது போ.. இப்ப உன் உத்தேசம் என்ன ? டிவி சீரியல்ல வர மாதிரி எங்க குடும்பத்தை உருப்பட வைக்கப்போறியா? அது உன்னால முடியாது”

“உன் குடும்பம் என் குடும்பம்னெல்லாம் கிடையாது. எந்த குடும்பமும் கெட்டுப்போக கூடாது. ஒரு ஸ்டுடியோன்னு வச்சா உன் தம்பியும் அப்பப்ப வந்து போவானில்லையா. ஒரு வேளை இதுல ஆர்வம் வந்ததுன்னா தொழிலை கத்துக்கலாமில்லயா?”

“அது சரி. கிழவனோட நிம்மதிய கெடுத்து குட்டிச்சுவராக்க ஏதோ சதி பண்ணிட்டு அதை மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்ட் மாதிரி ஃபோக்கஸ் பண்றே”

“ஷிட்.. சொல்ல மறந்துட்டனே.. உனக்கும் கதை,கவிதை ரிப்போர்ட்டிங் இத்யாதில ஆர்வமிருக்கில்லயா.. ஸ்டுடியோன்னு இருந்தா நாலு லோக்கல் ரிப்போர்ட்டர்ஸ் ப்ரோக்ராமுக்கு கூப்பிடவோ, அட்லீஸ் ப்ரிண்ட் போடவோ வருவாங்க இல்லியா அவங்களோட அறிமுகம் உனக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தரலாமே”
“சரி மாயா.. இந்த ப்ரப்போசலை அப்பாகிட்ட சொல்றது யாரு?’
“ஏன் நானே சொல்றேன்..”

மாயா எப்போ சொன்னாளோ எப்படி சொன்னாளோ தெரியலை. அப்பா களத்துல குதிச்சாரு. பஸ் ஸ்டாண்ட்ல இருக்கிற  தினத்தந்தி ஏஜெண்ட் ஒருத்தரோட ஆஃபீஸ் மாடில ஒரு கடை காலியா இருக்கிறதா தெரிஞ்சு போய் பார்த்துட்டு அட்வான்ஸ் பண்ணாரு. மள மளன்னு வேலை நடந்தது. வெள்ளையடிக்கிறதுல இருந்து கார்பெண்டரிங் ஒர்க், கேமரா, ஃபோகஸ் லைட், ரிஃப்ளெக்டர்ஸ் ,டெவலப்பர் டார்க் ரூம் எல்லாம் தயாராச்சு. ஸ்டுடியோவுக்கான போர்ட் வந்து இறங்கினதை பார்த்தேன் ” சுசி ஃபோட்டோ சொல்யூஷன்ஸ்”  வலது பக்கம் ப்ளாக் அண்ட் வைட்ல சரோஜா தேவி, இடது பக்கம் கலர்ல  பானுப்ரியா.  ராணி முத்து காலண்டர்ல நல்ல நேரம் பார்த்து மாயாதான் தேங்காய் உடைச்சு கற்பூரம் காட்டினாள். முதல் ஆர்டரும் மாயாதான்

அப்பாவோட ஷெட்யூல் மாறிப்போச்சு.ஒரு நாள் கைசெலவுக்கு பணம் கேட்க வந்த  சின்ன அண்ணனை அப்பா பார்க்குக்கு கூட்டி போய் வித விதமா ஃபோட்டோ எடுத்தாரு. அந்த ஃபோட்டோஸை டெவலப் பண்ணி ப்ரிண்ட் போட்டு அவன் கைல கொடுத்தாரு. பார்த்தயா டி.பி பேஷண்ட் மாதிரி இருக்க. உடம்பை தேத்து. எதுனா கராத்தே கிராத்தே கத்துக்க. டான்ஸ் க்ளாஸுக்கு போ. மூனு மாசம் டைம் தரேன். மாசத்துக்கு ஆயிரம் ரூபா செலவுக்கு தரேன். ப்ரிப்பேர் ஆகி என் முன்னாடி வா . நான் ரெடின்னு சொல்லு. மறுபடி ரெண்டு ரோல் ஷூட் பண்ணீ ஆல்பம் போட்டுதரேன்.

 

சென்னைல தங்க இடம் ஏற்பாடு பண்றேன். மாசத்துக்கு 2000 ரூபா தரேன். ஒரு வருஷம் டைம். ஜெயிச்சா அங்கயே இருந்துக்க. இல்லே ஜெயிக்கலாயா சித்தூர் வந்துரு ஸ்டுடியோவ பார்த்துக்க”ன்னாரு. இப்படி சின்ன அண்ணனோட ஷெட்யூலும் மாறிப்போச்சு.

கடைசில தம்பி. அவனுக்கு என்னைக்குமே ஒரிஜினாலிட்டி இருந்தது கிடையாது. சின்ன வயசுல  எனக்கு நகலா இருந்தான்.ஸ்கூலுக்கு டுப்கி அடிச்சுட்டு  நான் கிணற்றுக்கு போய் நீச்சலடிச்சா அவனும் அடிப்பான். மாங்கா தோப்புக்கு போய் மாங்கா அடிச்சு தின்னா அவனும்.

 

பரீட்சைக்கு ஒரு மாசம் இருக்கும்போது நான்  பகல்லயே வெள்ளமா டீ குடிச்சிக்கிட்டு பாடம் படிச்சா அவனும் படிப்பான். எங்க உறவு எப்ப அறுந்து போச்சோ சரியா சொல்ல  முடியல. பிறகு சின்ன அண்ணனுக்கு நகலா தயாராயிட்டான். இப்போ அவன் ஏதோ ஒரு லட்சியத்தோட செயல்பட ஆரம்பிச்சிட்டதால இவன் சும்மா இருக்கமுடியாம டைப்ரைட்டிங்க், ஷார்ட் ஹாண்ட் க்ளாஸுக்கு போனான். லீஷர் அவர்ஸ்ல ஸ்டுடியோல இருப்பான். கொஞ்சம் கொஞ்சமா அவுட்டோர் ப்ரோக்ராம்ஸ் வந்தா அட்டெண்ட் பண்ணவும், டார்க் ரூம்ல டெவலப் பண்ணி ப்ரிண்ட் போடவும் கத்துக்கிட்டான்.

முதல் மாசம் பெரிசா ஒன்னும் வியாபாரம் இல்லே . அடுத்த மாசம் பீடை மாசம். எதுவும் நடக்கிற மாதிரி இல்லே.

 

கணக்கு பார்த்தா கைய கடிக்குது. அப்பா என்னவோ “மாயா ! இதெல்லாம்  ஒரு கணக்கே இல்லை. கை நிறைய பென்ஷன் வந்தும் ஏறக்குறைய  லைப்ரரிலயே குடியிருந்தேன், மண்டை சூடும், இன்சோம்னியாவும் தான் மிச்சம்.என்.ஜி.ஓ ஹோம் ( ஓய்வு பெற்ற நான்  கெஜட்டட் ஆஃபீசர்ஸ் அசோசியேஷன்)  போய் லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆனவனுக்கெல்லாம் ரெப்ரசன்டேஷன் எழுதிக்கொடுத்துக்கிட்டிருந்தேன்  செக்கு மாடு மாதிரி  சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருந்தேன். பொழுது போறதுக்காக உடுப்பில டிஃபன் சாப்டறது அஜீரணம்,அசிடிட்டினு அவஸ்தை பட்டேன்., கண்டவன் கல்யாணத்துக்கு,கருமாந்திரத்துக்கு போறதுன்னு வெட்டியா செலவு பண்ணிக்கிட்டிருந்தேன். இப்போ பாரு ஐம் ஹேல் அண்ட் ஹெல்தி. ராத்திரி பத்துக்கெல்லாம் அருமையா தூக்கம் வருது. மாத்திரை செலவு உட்பட என் அடிஷ்னல் பட்ஜெட்  பாதியா குறைஞ்சுருச்சு”ன்னுதான் சொன்னாரு.

 

ஆனா மாயா கன்வின்ஸ் ஆகல . நோ அங்கிள் லாபத்தை வேணா கூட தள்ளி போடலாம்.ஆனால் இந்த ப்ராசஸ்ல கூட .லேன்ட் –லேபர் –கேப்பிட்டல்-ஆர்கனைசேஷனுக்கு உண்டான ஃப்ரூட்ஸ் வந்தே ஆகனும். வாடகை / நம்ம உழைப்புக்கு ஊதியம் / எம்ப்ளாயிஸ் சேலரி / ஆகவேன்னுட்டு மாயா ஐடியா கொடுத்தா

 

 

 

 

 

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *