ஜோதிஷ சர்வஸ்வம் (2) <கிரக அவஸ்தா>

அண்ணே வணக்கம்ணே !

ஜோதிஷ சர்வஸ்வம் முதல் பாகம் எடிட் பண்ணி கின்டில்ல ஏத்திட்டன். இப்ப ரெண்டாம் பாகம். கையோட கையா உங்களுக்கும் ராஜயோகம் தொடரை நூலாக்கியிருக்கன். எப்பவும் மினிமம் ப்ரைஸ் தான் ஃபிக்ஸ் பண்ணுவேன். (ரூ49) ராஜயோகத்துக்கு மட்டும் ரூ.100. ஹ ஹா ..

கிரக அவஸ்தா

நம் அன்றாட வாழ்வில்   நாம் உபயோகிக்கும் வார்த்தைகளின் உண்மை பொருளே வேற. ஆனால் நாம வேற ஒரு அர்த்தத்துல உபயோகிச்சுக்கிட்டிருப்பம். அது போன்ற ஒரு வார்த்தை தான் அவஸ்தா.

நித்ராவஸ்தா = தூக்க நிலை / சேத்தனாவஸ்தா =விழிப்பு நிலை .அம்புட்டுதேன் (இது என்னடா அவஸ்தையா போச்சுன்னு சலிச்சுக்காதேள்)

கிரகங்களோட பலத்தை நிர்ணயிக்க – குறிப்பிட்ட பாவம் சேஃபா இல்லையான்னு டிசைட் பண்ண இன்னம் நிறைய விதிகள் இருக்கு.

கிரகங்களின் அவஸ்தா (நிலை) :

  1. ஒரு கிரகம் அதன் உச்சராசியில் இருந்தால் அது தீப்தாவஸ்தா.
  2. ஒரு கிரகம் தன் சொந்த வீட்டில் இருந்தால் அது – ஸ்வஸ்தாவஸ்தா
  3. ஒரு கிரகம் நட்பு வீட்டில் இருந்தால் அது. முதித்தாவஸ்தா.
  4. ஒரு கிரகம் சுபகிரகங்களுடன் சேர்ந்திருந்தால் அது சாந்தாவஸ்தா.

மேற்படி 4 அவஸ்தாவுக்கும் பலன்: குறிப்பிட்ட கிரகம் மற்றும் அது நின்ற பாவ காரகத்வத்தில் நன்மை ஏற்படும்.

  1. ஒரு கிரகம் வக்ரம் பெற்று இருப்பது சக்தாவஸ்தா: பலன்:

அது சாதாரணமா நின்னிருந்தா என்ன பலனை தரனுமோ அதுக்கு நேர் எதிரிடையான பலனை தரும்.

  1. ஒரு கிரகம் தான் நின்ற ராசியின் முதல் பாதத்தில் அல்லது கடைசி பாதத்தில் இருந்தால் அது பீடித்தாவஸ்தா . அந்த கிரகம் முழுபலனை தராது.
  2. ஒரு கிரகம் தன் பகை வீட்டில் நிற்பது தீனாவஸ்தா:

இது தீமை செய்ற நிலையில் இருந்தா தீமை கூடும். நன்மை செய்ற நிலையில் இருந்தா நன்மை குறையும்.

  1. ஒரு கிரகம் அஸ்தங்கதம் அடைந்திருந்தால் அது விகலாவஸ்தா (சூரியனுடன் சேர்ந்திருந்து எரிக்கப்படுவது) இது அளவு கடந்த ஈகோவை கொடுத்து – நட்பு உறவு வட்டங்களில் இருந்து தனிமைபடுத்திரும்.

சூரியனிலிருந்து சந்திரன் – 12 டிகிரி; செவ்வாய் – 17டிகிரி; குரு – 11 டிகிரி, சுக்கிரன் – 9 டிகிரி, சனி – 15 டிகிரியில் இருந்தால் எரிக்கப்படும். அதாவது அஸ்தமனம்.

  1. ஒரு கிரகம் தன் நீசராசியில் இருப்பது – கலாவஸ்தா . எச்சரிக்கை: நம்ம லக்னத்துக்கு பாவி – துர்ஸ்தானாதிபதில்லாம் நீசமானா நல்லதுங்க.
  2. ஒரு கிரகம் அதிசாரத்துல முன் கூட்டியே ராசி மாறி வந்திருப்பது கிரகம் பீத்தாவஸ்தா: பலன்: அந்த கிரகம் நின்ற பாவ பலனை கெடுக்கும் -அதுவே துர்ஸ்தானமா இருந்தா தூள்.

 

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *