ஜோதிஷ சர்வஸ்வம் :8 <ஷட் பலம் > <நைசர்கிக பலம்>

அண்ணே வணக்கம்ணே !

இன்னம் 10 மாசத்துல என் எல்லா எழுத்துக்களையும் – கு.பட்சம் ஷார்ட்டாவாச்சும் கின்டில்ல ஏத்திர்ரதுன்னு ஒரு சங்கல்ப்பம். நோவை பார்த்தா பிள்ளை பெத்துக்க முடியாதே.. அதான் கோதாவுல இறங்கிட்டன். ஜோதிஷ சர்வஸ்வம் தொடரின் லேட்டஸ்ட் சப் டைட்டில் +விளக்கம் கீழே .

 

குன்ஸா பார்த்துட்டு போயிராதிய. உங்க கருத்தையும் சொல்ல்லுங்க. குத்தம் குறை இருந்தா திருத்திக்கலாம்ல.?

 நைசர்கிக பலம்

 

கேது 1
ராகு 2
சூரியன் 3
சந்திரன் 4
சுக் 5
குரு 6
புதன் 7
செவ் 8
சனி 9

 

மேற்படி அட்டவணை  நீங்க ஏற்கெனவே பார்த்தது தான்.

 

 

ச்சும்மா உங்கள் புரிதலுக்காவ தான்  இதை சொல்றேன். ( நாம கீழ இருந்து மேல போவம் )

 

சனி =தொழிலாளி , தொழிலாளிகள் வேலை செய்திக்கிட்டிருக்காங்க.

 

அந்த தொழிலாளிகளில் யார் சண்டியனோ அவனுக்கு பலம் அதிகம். (செவ்) கொஞ்ச நேரத்துல ஸ்பாட்டுக்கு ஒப்பந்தக்காரர் வராருனு வைங்க ( புதன்) இப்ப யாரு பவர் ஃபுல் ? ஒப்பந்த காரர் தானே?

 

அந்த நேரம் பார்த்து முதலாளியோட மகன் /முதலாளிக்கு ஃபைனான்ஸ் பண்றவரு /அவருக்கு ஆலோசனை தர்ரவரு  வராருன்னு வைங்க (குரு ) என்னாகும்?

 

கொஞ்ச நேரம் கழிச்சு முதலாளியோட மனைவியே வந்துர்ராங்க. அப்போ ? (சுக்)

 

முதலாளியோட மனைவியாவே இருந்தாலும் ஒரு தொழிலாளி காலையிலருந்தே மூட் அவுட்.(சந்திரன்) அப்போ முதலாளி பொஞ்சாதியாவது இன்னொன்னாவதும்பானா இல்லையா?

 

அவன் பாராமுகமா இருக்கிறத பார்த்து அந்த பெண்மணி அவன் ஈகோவை (சூரியன்) ஹர்ட் பண்ணிர்ராங்கனு வைங்க. அப்போ?

 

சரி மேற்சொன்ன இடம் –பாத்திரங்கள் எல்லாரும் அப்படியே இருக்காங்க. அந்த நேரம் பார்த்து ஒரு பாம்பு  நுழைஞ்சதுன்னு வைங்க என்னாகும்? பாம்பு தானே ஹீரோ(ராகு)

 

இந்த சமயம் பார்த்து அங்கே ஒரு யோகி (கேது ) வராரு ..பாம்பை பார்த்து “என்ன நீ ..பகல்ல எல்லாம் வெளிய வரப்படாது வீட்டுக்கு போ”ங்கறாருன்னு வைங்க. பாம்பு வாலை சுருட்டிக்கிட்டு பேக் டு தி பெவிலியன் போயிருச்சுன்னு வைங்க அப்ப ஹீரோ யாரு ?

 

இப்ப புரியுதுங்களா? கிரகங்கள்ல ஆருக்கு பலம் அதிகம்னு ?

 

இந்த விவரம் எதுக்குன்னா ஒரு பாவத்துல எத்தனை கெரகம் இருந்தாலும் அதுல எந்த கிரகத்துக்கு நைசர்கிக பலம் அதிகமோ அதுதான் எஃபெக்ட் பண்ணும் (மொதல்ல).

 

இதை தெரிஞ்சுக்கத்தான் இந்த விவரம்.

 

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *