சரஸ்வதி சபதம் ( நாடகம்) :1

காட்சி:1

( சரஸ்வதி அம்மாவோட – பி.டி.சரஸ்வதி இல்லிங்கோ – ஹெட் குவார்ட்டர்ஸ்.  சத்திய லோகம் – நாரதர் என்ட்ரி. )

 

நாரதர்:

நாராயண!  நாராயண ! நாமகளுக்கு  நமஸ்காரம். சத்ய லோகத்தில் என்ன விசேஷம்?  வேதவித்துக்கள்,பிராமணோத்தமர்கள் எல்லாம் மந்தை மந்தையாக பசுக்களை ஓட்டிச்செல்கின்றனர். மூட்டை மூட்டையாக  பொற்காசுகளை சுமந்து செல்கின்றனர்…

 

சரஸ்வதி:

நாரதா உன் ஒக்காபிலரிய மாத்திக்க சொல்லி பல வருசமாச்சு. சனங்க லேங்குவேஜுக்கு வந்துரு..

 

நாரதர்:

இது என்ன தாயே சனங்களோட லேங்குவேஜ் என்று ஆங்கில கலப்போட பேசறிங்க

 

சரஸ்வதி:

முட்டாள் நாரதா ! பக்தர்களால தான் பகவான் சர்வைவ் ஆகிறார்.  பேசும் மக்களாலதான் மொழி சர்வைவ் ஆகுது. மக்கள் பேசும் மொழி தான் மொழி. மக்களுக்காகத்தான் மொழியே தவிர, மொழிக்காக மக்கள் இல்லை.

 

நாரதர்:

என்னவோ அம்மா தமிழ் நாடு பக்கம் போகும்போது சற்று எச்சரிக்கையாக இருங்கள்.

 

சரஸ்வதி:

அவிக பவிசு எனக்கு தெரியாதா? அதான் கேபிள் கனெக்சன் ஒன்னு வாங்கி வச்சிருக்கே . அந்த கருமாதியெல்லாம் பார்த்து பார்த்துதான் என் லேங்குவேஜே மாறிருச்சு

 

நாரதர்:

தாயே நான் கேட்ட கேள்விக்கு பதிலே கிடைக்கவில்லை. சத்திய லோகத்தில் என்ன விசேஷம்?

 

சரஸ்வதி:

அது ஒன்னுமில்லை சாஸ்த்ரோக்தமா கோபூஜை செய்தோம்.

 

 

நாரதர்:

ஆக மொத்தத்துல சத்தியலோகத்தை  லட்சுமி கடாட்சமாக்கிட்டிங்க

 

சரஸ்வதி:

என்ன உளர்ரே. இது சத்திய லோகம். என் உலகம். என்னவோ லாயிட்ஸ் ரோட்ல கலைஞர் வாழ்கனு கோஷம் போட்டாப்ல லட்சுமி கடாட்சமாம் லட்சுமி கடாட்சம்

 

நாரதர்:

இதென்ன தாயே வம்பு. ஜெயலலிதா திரைப்பட கலைஞர்னு தான் சொல்ல முடியும்.. புது வார்த்தையையா கண்டுபிடிக்க முடியும் லட்சுமி கடாட்சம்ங்கறது பொதுவான பேர்.

 

சரஸ்வதி:

இந்தியன்ங்கறது கூட பொதுவான பேரு. தமிழக பொறியாளர்கள் முல்லை பெரியாறு அணைய பார்க்க போனாங்க என்னாச்சு தெரியும்ல? அட ஒரு நாட்டோட பிரதமர் தன் நாட்ல இருக்கிற மானிலத்துக்கு போனாரு என்னாச்சு தெரியும்ல?

 

நாரதர்:

தாயே இதென்ன தாயே அந்த காலத்து வளர்மதி  மாதிரி பேசறிங்க..

 

சரஸ்வதி:

பேசுவதென்ன? வீட்டுக்கு ஆட்டோ வரும்

 

நாரதர்:

சரி தாயீ  என் ஸ்டேட்மென்டை வாபஸ் வாங்கிக்கிறேன். எனக்கென்ன போச்சு. எமர்ஜென்சி பீரியட்ல சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் கொடுத்த ரிப்போர்ட்டை  இந்திரா அம்மையார் நம்பின மாதிரி நீங்க ஏதோ நினைப்புல இருக்கிங்க அதை நான் ஏன் கெடுக்கனும்?

 

சரஸ்வதி:

என்ன சொல்கிறாய்?

 

நாரதர்:

ஏதோ சொல்ல வசதியா இருக்குன்னு கல்வி,செல்வம்,வீரம்னு சொல்றாய்ங்க. இதை மெரிட் லிஸ்டா நினைச்சுட்டாப்ல இருக்கு

 

சரஸ்வதி:

அப்போ கல்விக்கு மரியாதையே இல்லேங்கறியா?

 

நாரதர்:

சினி ஃபீல்டுல மட்டும்  ஊமை விழிகள் பீரியட்ல கொஞ்சமா இருந்தது

 

சரஸ்வதி:கொஞ்சம் விவரமா சொல்லு

 

நாரதர்:

ஒரு முக்கியமான கூட்டத்துக்கு யார் யாரை அழைச்சிருக்கிங்கனு முதல்வரா இருந்த  காமராஜர் கேட்டாராம். அதிகாரிங்க ஒரு லிஸ்ட் கொடுத்திருக்காய்ங்க. உடனே அவர் என்னய்யா எல்லாம் படிச்சவனையே கூப்பிட்டிருக்கிங்க.. இவிக மேடையேறி மைக்கை பிடிச்சி அவன் என்ன சொன்னான்  தெரியுமா இவன் என்ன சொன்னான் தெரியுமானு வெறும் கொட்டேஷன்ஸா அடிச்சி விடுவானுகன்னாராம்

 

சரஸ்வதி:

படிச்சவனுக்கு சொந்தபுத்தியே இருக்காதுனு சொல்றியா?

 

நாரதர்:

இருக்குது தாயே .. இவிகளுக்கு லஞ்சம் வாங்குவது எப்படி? பெண் ஊழியர்களை மிரட்டி படுக்க போடறது  எப்படினு பாடம்  நடத்தியா டிகிரி தராய்ங்க

 

சரஸ்வதி:

படிச்சவனெல்லாம்  இதே கேசுங்கறியா?

 

நாரதர்:

அப்படி சொல்லலேம்மா. ஆனா படிச்சவனுக்கெல்லாம் முதுகெலும்பு ஜல்லியா தானே இருக்கு. அரசியல்வாதி படிக்காதவன். அவன் பி.ஏ படிச்சவன். இவனுக்கு முதுகெலும்பிருந்தா 100 நாள் பி.ஏவா  வேலை பார்த்து அந்த நாதாரி பண்ற பிக்காலி வேலையையெல்லாம் பட்டியல் போட்டு மக்கள் மன்றத்துல வைக்கவேண்டியதுதானே

 

சரஸ்வதி:

என்னப்பா இது அநியாயமா இருக்கு.. கல்வியை கண்ணுனு சொல்றாய்ங்க. படிச்சவுக இப்படி குருட்டுத்தனமா பிஹேவ் பண்ணுவாய்ங்களா?

 

நாரதர்:

அது நகக்கண்ணா இருந்தாலும் ஊசி இறங்கினா வலிக்கும். கல்வி சைனா க்ளேல பண்ண கண்ணு மாதிரி ஆயிருச்சு. அ நீதி கண்டு சிவக்கவும் மாட்டேங்குது ? கொடுமை கண்டு கலங்கவும் மாட்டேங்குது

 

சரஸ்வதி:

சரிப்பா லஞ்சம் வாங்கறானோ, பெண் கொலிக்ஸை படுக்க போடறானோ, முழங்காலும், முதுகெலும்பும் ஜல்லியா இருக்கோ படிச்சவன்னா ஒரு மரியாதை இருக்கில்ல.

 

நாரதர்:

அன்யோ அன்யோ எந்த காலத்துல கீறே தாயி. உலகத்துல எட்டு மணி நேர வேலை அமலாகி இத்தீனி காலம் ஆச்சு. சித்தாளு, மேஸ்திரி கூட பொழுது சாஞ்சதும் வேலைய விட்டு இறங்கிர்ரான். ஆனால் சாஃப்ட் வேர் இஞ்சினீருங்க கக்கூஸ்ல கூட வேலை பார்க்கிறாய்ங்க

 

சரஸ்வதி:

சரிப்பா.. செல்வம் டெம்ப்ரரி.கல்வி பர்மெனென்டு இல்லியா?

 

நாரதர்:

அதெல்லாம் அந்த காலம் தாயி. நேத்திருந்தவன் இன்னிக்கில்லங்கற மாதிரி.. நேத்து படிச்சதை இன்னிக்கு அப்டேட் பண்ணிக்கலன்னா அவன் காலி

 

சரஸ்வதி:

என்ன நீ  அப்ப படிச்சவன்லாம் முட்டாள் தானா?

 

நாரதர்:

இல்லியா பின்னே. இப்போ ஜன நாயக யுகம் . சனம் போடற வாக்குதான் ஆட்சியாளர்களை தீர்மானிக்குது. பதிவாகற ஓட்டு சதவீதத்தை பார்த்தா 60 அ 70 சதவீதத்துக்கே முக்குது. படிச்சவன் எவனும் ஓட்டுப்போடறிதில்லை தாயே அதனாலதான் அரசாங்கமெல்லாம் இப்படி இழவெடுக்குது

 

சரஸ்வதி:

ஓட்டு போட வரலைன்னாலும் படிச்சவுக தான் எம்.எல்.ஏ எம்பிக்களுக்கு ஆலோசனை சொல்ற ஸ்தானத்துல இருக்காய்ங்கனு நீயே சொன்னே. அப்போ இந்த நாட்டை ஆள்றது படிச்சவுக தானே

 

நாரதர்:

சின்ன புள்ளத்தனமா பேசறிங்க. ஒரு பீரியட் வரை ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு, அவிக பேச்சு,கருத்துக்கு  ஒரு மரியாதை இருந்தது. இல்லேங்கலை. இப்போ சிங்கத்துக்கு வேட்டைய காட்டி கொடுக்கிற சிறு நரி கூட்டமாயிருச்சும்மா படிச்சவுக கூட்டம்.

 

சரஸ்வதி:

என்ன நீ எல்லாம் என் டிப்பார்ட்மென்டுக்கு எதிராவே பேசிக்கிட்டிருக்கே. பணம் சம்பாதிக்கனும்னா முதலீடு செய்ய  வேணம். ஆனால் கல்வி அப்படியில்லையே. ஊக்கமிருந்தா போதும்

 

நாரதர்:

க்கும் தமிழ் நாட்ல வாத்யாரு தாதாங்களுக்கெல்லாம் அரசு நிலத்தை தாரை வார்த்து கல்வி தந்தை ஆக்கிட்டாரு. ஆந்திராவுலன்னா ஒரு கல்வித்தந்தை மந்திரியாவே ஆயிட்டாரு.அவிக ஹாஸ்டல்ல நாளொரு மேனி பொழுதொரு வண்ணமா மாணவர்கள் தற்கொலை தொடர்ந்துக்கிட்டே இருக்கு. நடவடிக்கை தான் இல்லை. என்னன்னா.. சி.எம்க்கே அவர் தான் பினாமின்னு பேச்சு

 

சரஸ்வதி: கேட்கவே கேவலமா இருக்கே..

 

நாரதர்: இதுமட்டுமா பிரம்மங்காரு கணக்குப்படி 119  வருசமா தான் மனுதர்மம் அசைஞ்சு கொடுத்திருக்கு. அதுக்கு மிந்தி 5 ஆயிரம் வருசமா ஒரு வர்ணம் தானே படிச்சது. அதுவும் வாழ்க்கைக்கு உதவாத வேதம் –புராணம் –இதிகாசம்.. அந்த காலத்துலருந்து ராஜா விஷ்ணு அம்சம்னு அரசனுக்கு சால்ரா  போட்டுதானே பொளப்பை ஓட்டினாங்க.

 

சரஸ்வதி : இப்பவும் அப்படித்தானோ?

 

நாரதர்: நல்ல வேளையா இல்லை. இஸ்லாமியர்கள் படையெடுப்பு –பிரிட்டீஷ் படையெடுப்பு புண்ணியத்துல கட்டு தளர்ந்து வாழ்க்கைக்கு உதவற கல்வி – மத்த வர்ணத்தாருக்கும் சேர ஆரம்பிச்சது .

 

 

 

 

 

சரஸ்வதி: அப்போ எல்லாருக்கும் கல்வி போய் சேர்ந்துருச்சுங்கறே?

 

நாரதர்: இல்லம்மா.. அந்த காலத்துல அண்ணா வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறதுன்னு சொன்னாராம். இப்பவும் பட்ஜெட்  ஒதுக்கீடு அப்படிதான் இழவெடுக்குது. ஆனால் தென் மானிலங்கள்ள கல்வி வளர்ச்சி சொல்லிக்கிறாப்ல இருக்கு. சிக்கல் என்னடான்னா பிரிட்டீஷ் ஆட்சியில மெக்காலே பிரபுன்னு ஒரு ஆள் கல்வி முறையை வடிவமைச்சிருக்கான்.அவிக தேவைக்குன்னு கொண்டு வந்த அந்த முறையை சுதந்திரம் வந்து 71 வருசம் முடிஞ்ச பிறவும் அந்த கருமத்தையே ஃபாலோ பண்றானுங்க. இதனால என்னடா ஆகுதுன்னா டாக்டர் ,இஞ்சினீர்லாம் நித்யானந்தா மாதிரி போலி சாமியார் கிட்டே சரண்டர் ஆயிர்ரானுங்க

 

சரஸ்வதி: அரசுகள் இதை எல்லாம் மாத்த முயற்சி செய்யலியா?

 

நாரதர்: ம்.. தமிழ் நாட்ல கலைஞர்னு ஒரு பட்சி முந்திரி கொட்டை மாதிரி அடுத்த தலைமுறையில வர போற மாற்றங்களை எல்லாம் முன் கூட்டியே கணிச்சு அதுக்கேத்தாப்ல கல்விமுறையை அப்டேட் பண்ணாரு 5000 வருசமா ஒடுக்கப்பட்ட சனத்தை எல்லாம் பார்த்து பார்த்து இட ஒதுக்கீடு கொடுத்து அரசு வேலை கொடுத்து என்னென்னமோ மாய்மாலம் பண்ணாரு.ஆனாலும் ஒரு மானில அரசா ஒரு அளவுக்கு மேல தம் கட்ட முடியல.

 

சரஸ்வதி: அடடே அப்ப அவர் வாழ் நாள் முழுக்க முதல்வராவே இருந்திருப்பாரே?

 

நாரதர்: கலிகாலமாச்சே. அதெல்லாம் எப்படி நடக்கும். அவரோட கட்சி 70 வருசத்துல 25 வருசம் தான் ஆண்டிருக்குன்னா பார்த்துக்கங்க

 

சரஸ்வதி: என்னப்பா இது ஒரு வர்ணத்தாரோட பிடியில இருந்ததை விடுவிச்சு மத்த 3 வர்ணத்தாருக்கும் கொடுத்த மனுசனுக்கு அந்த சனம் ஆதரவு கொடுக்கலியா?

 

நாரதர்: கொடுத்திருப்பாங்க தான். இவரை அடக்கி வைக்க  மத்திய அரசு –மத்திய உளவுத்துறை எல்லாம் கருக்கட்டிக்கிட்டு வாத்யாரை ஊட்டி ஊட்டி வளர்த்தாங்களே

 

சரஸ்வதி: இரு.. இரு.. கல்விங்கறது ஒரு வர்ணத்தோட பிடியில இருந்து மத்தவங்க படிக்காதவங்களா இருந்து இப்படி நடந்தா ஒரு லாஜிக் இருக்கும். அவருதான் எல்லாரையும் படிக்க வச்சிருக்காரே .இட ஒதுக்கீடுல்லாம் கொடுத்து அரசு வேலைல்லாம் கொடுத்திருக்காரே. ஆனாலும் ஏன் மக்கள் அவரை ஆதரிக்கல?

 

நாரதர்: அதாங்க கரண்ட்ல இருக்கிற கல்வியோட சிறப்பு . அவன் சாக்கடை ஓரத்துல பிறந்து அரசு செலவில் படிச்சு –இட ஒதுக்கீட்ல அரசு வேலை வாங்கியிருப்பான்.ஆனால் தான் யாரு –எங்கருந்து வந்தம்னே மறந்துருவான்.

 

சரஸ்வதி : கல்விக்குனு ஒரு மரியாதையே இல்லாம போயிருச்சாப்பா

 

நாரதர்:

கல்யாண மார்க்கெட்ல வரதட்சிணை கொஞ்சம் கூடுதலா கிடைக்கலாம்.மானம்,ஈனம்,சூடு,சொரனை எல்லாத்தையும் விட்டுட்டு ஒரே ஃபர்ம்ல குப்பை கொட்டினா சோத்துக்கு லாட்டரி அடிக்காம காலத்தை தள்ளலாம். அவ்ளதான்

 

சரஸ்வதி:

சாஃப்ட் வேர் இஞ்சினீரெல்லாம் கை நிறைய சம்பாதிக்கறதா கேள்விப்பட்டேனே

 

நாரதர்:

அதெல்லாம் ஒரு காலம் தாயி. இப்ப அதுவும் வாய்தா போச்சுனு பேசிக்கிறாய்ங்க. என்ன இவிக கொஞ்ச நாள் கை நிறைய வாங்கி கொத்து கொத்தா க்ரெடிட் கார்டை வச்சி வேட்டு விட்டுக்கிட்டு  , ரியல் எஸ்டேட் பூம் கொண்டு வந்தாய்ங்க அவ்ளதான்

 

சரஸ்வதி:

கல்விக்கு மரியாதையே இல்லேங்கறியா?

 

நாரதர்:

எப்படிம்மா இருக்கும். படிச்ச படிப்புக்கும்  யதார்த்தத்துக்கும் சம்பந்தமே இல்லேன்னா எப்படி மரியாதை கிடைக்கும்.

 

சரஸ்வதி: ஏன் அப்படி?

 

நாரதர்: இவிக ஒரு சப்ஜெக்ட்ல பாட நூல் எழுதி அச்சு கோர்த்து வெளியடறதுக்குள்ள அது அவுட் டேட்டட் ஆயிருது. மேலும் பாட நூலை எழுதறவிக இதை படிக்கிறவன் புரிஞ்சிக்கிட்டு உருப்படனும்னு எழுதறதில்லை. அதனாலதான் கைட் போடறவன் கொழிக்கிறான். இவிக புத்தகம் போட்டு அதை இவன் படிச்சு வெளிய வந்தா நிலைமை தலை கீழா மாறியிருக்கும்.

 

சரஸ்வதி:

மொத்தத்துல என் நிம்மதிய கெடுத்திட்டே

 

நாரதர்:அதானே நம்ம வேலையே. இந்த  நாரதன் கலகம் நன்மையில முடியட்டும். எனக்கு விடை கொடுங்கள்.

 

 

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *