ஜோதிஷ சர்வஸ்வம் : 2

அண்ணே வணக்கம்ணே !

நாம கடந்த 2017 ல் அறிவிச்சு 2018 ல்  வெளியிட்ட  “ஆறில் இருந்து அறுபது வரை ” திருத்திய பதிப்புக்கான டிடிபி வேலைகள் முடிஞ்சுருச்சு . அதற்கும் முன்னே 2014 ல் அறிவிச்சு 2015 ல் வெளியிட்ட நான்கு நூல்களின் திருத்திய பதிப்புக்கான தொகுப்பு வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு.

இப்போ ராமசாமியான நாம  நடக்கிறச்ச நடக்கட்டும் ராமசாமியா மாறிட்டம். அதுக்காவ கைய கட்டி உட்கார்ந்திருக்கேனு நினைக்காதீய. மத்தவிகள விரட்டறதில்லையே கண்டி பந்து நம்ம கோர்ட்டுக்கு வந்தாலும் அடிச்சு விளையாடிக்கிட்டிருக்கம்.

நிற்க நாளுக்கு நாள் புதிய வாசகர்கள் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது கூகுள் அனலட்டிக்ஸ் படி நம்ம எழுத்துக்களில்  வருசத்துக்கு ஒரு கோடி பக்கங்கள் படிக்கப்படுதுன்னா பார்த்துக்கங்க. ஆகையினால சில விஷயங்களை ரிப்பீட் பண்ண வேண்டியதாயிருது .

நாம வெளியிட்ட 1+5 நூல்களை படிக்காதவிக சடார்னு இந்த புஸ்தவத்தை வாங்கிட்டு தலை கால் புரியாம திகைக்க கூடாதேன்னு சில விஷயங்களை ரிப்பீட் பண்ணியிருக்கன். இதெல்லாம் பேஸ். நீங்க முட்டை பிரியாணி பண்ணனும்னாலும் / ஃப்ரைட் ரைஸ் பண்ணனும்னாலும் சோறு முக்கியமில்லையா? அப்படித்தான் இதுவும்.

ஆன்லைன் ஜோதிட வகுப்புகள் ஜரூரா நடந்துக்கிட்டிருக்கிறப்போ “ஷட்பலம்”ங்கற கான்செப்ட்ல வந்து முட்டிக்கிச்சு. இதுல தொழில் ரகசியம் என்னடான்னா நூல் பிடிச்ச மாதிரி போறது நம்ம ஸ்டைல். ஷட்பலம் அப்படியில்லை.இந்த ஜோதிஷ சர்வஸ்வம் நூலில் ஷட்பலமும் இடம் பெறுது.

ஆகவே ரிப்பீட்டட் கன்டென்டை ஒரே மூச்சா கொடுத்துட்டேன். புதிய வாசகர்கள் படித்து பயன்பெறலாம். சீனியர்ஸ் ச்சும்மா ஸ்க்ரால் பண்ணி ரிகலெக்ட் பண்ணிக்கலாம். ஓகேவா. உடுங்கஜூட்டு .

மு.கு:

நல்ல வேளையாக இந்த வேலையை ஆரம்பித்த 3 ஆவது நாளே அட்டவணையாய் சேமிப்பதில் உள்ள சிக்கல் உறைக்க நூல் வடிவுக்கே வந்துவிட்டேன்.

ஜாதக பலன்

 

ஜாதக பலன் என்பது ஒன்பது கிரகங்கள் மற்றும் 12 பாவங்களின் பலத்தை அசெஸ் செய்து அந்தந்த கிரக காரகங்கள் /பாவ காரகங்கள் என்னெல்லாம் நன்மையை தரக்கூடும் அல்லது தீமையை செய்ய கூடும் என்று கணித்து கூறுவதே.

 

இதற்கு ஆயிரத்தெட்டு விதிகள் உண்டு. அவற்றையும் இந்த நூலில் தரத்தான் போகிறேன். அதே சமயம் எந்த நிலையிலும் பொய்க்காத விதி ஜாதகரின் அனுபவம் தான்.

 

குறிப்பிட்ட கிரகத்தின் காரகங்கள் உங்கள் வாழ்வில் கை கொடுத்திருந்தால் அந்த கிரகம் உங்கள் ஜாதகத்தில் பலம் பெற்றுள்ளது என்று பொருள்.

 

குறிப்பிட்ட பாவத்தின் காரகங்கள் உங்கள் வாழ்வில் கை கூடி வந்திருந்தால் அந்த பாவம் சுப பலமாய் உள்ளது என்று பொருள்.

 

 

 

 

கிரக காரகங்கள்:

 

சூரியன் (பித்ருகாரகன்-தொழில்காரகன்)

 

தந்தை,தந்தை வழி உறவுகள் (சித்தப்பா/பெரியப்பா) உள்ளூர் தலைவர்கள்,ஊராட்சி/நகராட்சி நிர்வாகிகள்,சூப்பர்வைசர்,தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், டைம் ஆஃபீஸ், விளம்பர/விற்பனை பிரதி நிதிகள்,  தலைமை பண்புகள் , மனோதிடம்,தனித்தன்மை, சுய தொழில், கம்பீர தோற்றம்,   தன்மானம், தலை,மூளை,இருதயம்,எலும்புகள் (முதுகெலும்பு) காய்ச்சல்,ஒற்றை தலைவலி,

கண்நோய், பகற்பொழுது,,பாறை,காடு,சிங்கம், தாமிரம்,செந்தாமரை,காரச்சுவை, ஆரஞ்சு நிறம்,மாணிக்கம்,சிவபெருமான்,கிழக்கு திசை விமர்சனம்,தீரம், வெட்டவெளி, ஏக புத்திரன் ,தந்தையின் தொழிலை தொடர்ந்து செய்தல், சுய சம்பாத்யம், தூக்கமின்மை,கோரைப்புல் போன்று நிமிர்ந்த தலைமுடி ,தேன் நிற விழிகள் ஆகியன சூரிய காரகங்கள்..

 

 

சந்திரன் (மாத்ருகாரகன்-மனோ  காரகன் )

 

தாய்,தாய்வழி உறவுகள்,வயதில் மூத்த பெண்கள்,பிரபலங்களின் மனைவியர், சம வயதானாலும் மதர்லி ஃபிசிக் கொண்ட பெண்கள்..  நீர்  நிலைகள் ,ஏரிக்கரை/கடற்கரைகள்,மனம்,நுரையீரல் ,சிறு நீரகம்,ஃப்ளோட்டிங் பாப்புலேஷனை நம்பி இயங்கும் இடங்கள்  முத்து, வெண்மை , திரவ வடிவிலான உணவுகள் சஞ்சலம் குறைந்த காலத்தில் இளைத்தல் பருத்தல் உணர்ச்சிவசப்படுதல் மிமிக்ரி பேச்சை மாற்றி பேசுதல் திடீர் மனோ தைரியம் திடீர் அச்சம் இடமாற்றம் அடிக்கடி மாறும் மனநிலை நண்பர்கள் எதிரிகள் ஆவது எதிரிகள் நண்பர்களாவது காதல் விஷயத்திலும் அடிக்கடி மனம் மாறுவது தண்ணீர் மற்றும் காற்றால் பரவும் வியாதிகள் கடல் கடந்து செல்லும் பயணம் கப்பல் பயணம் புதுமுகங்களை சந்திக்க நேரும் தொழில் வட மேற்கு திசை இவையெல்லாம் சந்திர காரகம்

 

 

செவ்வாய் ( சகோதர காரகன்- பூமி காரகன் )

 

பூமி தாய்நாடு எதிரிகள் புரட்சி கோபம் ரத்தம் எரிச்சல் உஷ்ணம் தொடர்பான வியாதிகள் தர்க்கம் ஆயுதம் நெருப்பு எரிபொருள் வெடிபொருள் சமையல் யுத்தம் வியூகம்

காவல்துறை, இராணுவம்,தீயணைப்பு படை, விபத்து தீ விபத்து தற்காப்பு கலைகள் அறுவை சிகிச்சை கொம்புள்ள பிராணிகள் செம்பு பவழம் தெற்கு திசை, வயதில் இளையவர்கள் இளவயது தோற்றம் கொண்டவர்கள் ஆயுதம் தரித்தவர்கள் இவையாவும் செவ்வாய் காரகம். எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே – நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை / ரத்த சுத்திகரிப்பு –ரத்த உற்பத்திக்கும் செவ்வாயே காரகம். ரத்த சுத்திகரிப்பில் ஏற்படும் பிரச்சினைகளால் வரும் நோய்களான கட்டி /கொப்புளம் / எக்சிமா போன்ற வற்றிற்கும் இவரே காரகம்.

 

ராகு: (பிதாமஹ காரகன் –தந்தை வழி தாத்தா பாட்டி)

 

 

சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், சதுரங்க வேட்டை கணக்காய் ஆசையை தூண்டி ஏமாற்றுதல்/ ஆசைகள் தூண்டப்பட்டு ஏமாறுதல் ,  பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள்,வளர்ச்சிகள்,வீக்கங்கள். வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, அன்னிய  மொழிகள் பதுக்கல், திருட்டு கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் ராகு காரகம். உண்டவுடன் சுருண்டு படுத்து கொள்ளுதல் ,தேவையில்லாத விஷயங்களில் ரகசியம் காத்தல்,புதுமையான வார்த்தை /வாக்கிய பிரயோகங்கள்,கற்பனையான பயங்கள், வாரிசின்மை / கருக்கலைதல் ,வாழ்க்கை துணை மீது சந்தேகம் ,அன் வாரன்டட் மோஷன்ஸ் ,வாமிட்டிங் சென்சேஷன் இவை யாவும் ராகு காரகம்

 

குரு : (தன –சொர்ண கங்கண -புத்ர-பௌத்ர காரகன்)

 

தங்கம், பைனான்ஸ்(அஞ்சு வட்டி இல்லிங்கோ –இது சனி காரகம்) , அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை புத்திரர்,பௌத்திரர்(பேரன்) நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல் ஆகியவை குரு காரகம்

 

 

சனி : (ஆயுள் காரகன் –கரும காரகன்)

 

ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம்  க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு சனியே காரகம்.

 

புதன் : (மாதுல காரகன்) தாய் மாமன்)

 

தொடர்பில்லாத இருவரை சேர்த்து வைக்கும் எந்த நபரும் தொழிலும் புத காரகம்.  விவரங்களை சேகரித்தல் சேமித்தல் சேமித்தவற்றை ஆய்வு செய்தல் ஆய்வு செய்து சில முடிவுகள் எடுத்து செயல்படுத்துதல் இதற்கெல்லாம் புத பலம் தேவை.வியாபாரம்,ஏஜென்சி/ஃப்ராஞ்சைஸ்/ டீலர்ஷிப், கணிதம் accountancy ஆடிட்டிங் கம்யூனிகேஷன் கம்ப்யூட்டர் நூல் எழுதுதல் பிரசுரித்தல் ஜோதிடம்  போன்றவற்றிற்கு புத பலம் அவசியம். ஸ்பான்டேனியஸ் நெஸ் /டைமிங் சென்ஸ்/நகைச்சுவை,ஒருங்கிணைத்தல் புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், செல் ஃபோன். கூரியர், , கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றிக்கு புத பலம் அவசியம். மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள், மூட்டுக்கள் ,மருத்துவத்தொழில் திறமையான பேச்சாளர்கள் கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும்புதனே காரகம். ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் கடைத்தெருக்கள்  புதனின் ஆளுகைக்கு உட்பட்டவையே. புத்திக்குழப்பம்- சித்தப்பிரமையை தருவதும்  புதனே.

 

கேது  ( மாதாமஹ காரகன் – தாய் வழி தாத்தா பாட்டி)

 

இவர்  ஞான காரகன். ஞானத்துக்கு முதல் படி விரக்தி .மனிதனுக்கு வாழ்வில் விரக்தியை ஏற்படுத்தக்கூடிய எல்லா விஷயங்களுக்கும் இவர் காரகன். ஒரு நபர் ஆஸ்பத்திரி/போலீஸ் ஸ்டேஷன்/கோர்ட்/சுடுகாடு என்று அலைகிறார் என்றால் அவருக்கு கேது தசையோ /கேது புக்தியோ நடக்கிறது என்று தைரியமா சொல்லலாம். ஏன்னா ஞானம் இங்கே தானே கிடைக்கும். அவ்வ்..

 

புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் கேதுவே காரகம்.

 

 

சுக்கிரன் (களத்திர காரகன்)

 

வசதியான வீடு , வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றிற்கும் சுக்கிரனே  காரகன். தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் இவரே அதிபதி. பருவம் எய்துதல், காம உணர்வு/ஸ்கலிதங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட்ஸ், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களுக்கும் இவரே காரகம்.  கலா ரசனை,கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸ், கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகம்,.பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்  ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டி எல்லாத்துக்கும் சுக்ரன் தான் அதிபதி.

 

 

குறிப்பு:

 

இதுவரை ஒன்பது கிரகங்களின் காரகங்களையும் விரிவாக பார்த்தோம். இந்த காரகங்கள் உங்களுக்கு எந்த அளவுக்கு அனுகூலமாக இருந்துள்ளன என்பதை நீங்கள் வெகு எளிதாக அவதானிக்க முடியும்.

 

ஒரு பிரதமர் .அவரின் கீழ் ஒரு மந்திரி சபை . அதில் மந்திரிகள் .ஒவ்வொரு மந்திரிக்கும் சில துறைகள் .

 

உங்களுக்கு ஒரு மந்திரி மாமன் மச்சான் உறவு என்றால் அந்த மினிஸ்ட்ரி தொடர்பான எல்லா வேலைகளும் எளிதாக நடக்கும் .

 

ஒருவேளை ஒரு மந்திரிக்கும் உங்கள் குடும்பத்துக்கும் வாய்க்கால் வரப்பு தகராறு இருந்தால்?

 

அந்த துறை தொடர்பான வேலைகளில் இறங்கினால் என்ன ஆகும்?

இதே விதிதான் இந்த கிரகங்களின் விஷயத்திலும் வேலை செய்கிறது உங்களுக்கு அனுகூலமான கிரகம் தன்னுடைய காரகங்களில் உங்களுக்கு நன்மை செய்கிறது.

 

பிரதிகூலமான கிரகம் தீமை செய்கிறது.ஒரு கிரகம்  நன்மையோ தீமையோ செய்ய வேண்டுமென்றால் அதன் காரகத்துவத்தில் நீங்கள் எதையாவது முயற்சிக்க வேண்டும் .

 

 

கையில் ஸ்டேட் பேங்க் செக் வைத்துக்கொண்டு indian bank கிளைகளில் முட்டி மோதினால் என்ன ஆகும்?  இதேபோல் எந்த துறையில் அடி வைத்தால் அடிமேல் அடி விழுமோ?  அதே துறையில்மூக்கை நுழைத்தால் சிக்கன் சென்டர் எதிரில் குத்தாட்டம் போட்ட பிராய்லர் கோழி கதை ஆகிவிடும் தானே?

 

நான் ஜோதிட உலகில் முதல்முறையாக logical remidies என்று சொல்லிவரும் பரிகாரங்களில் முதல் சூத்திரம் நமக்கு பிரதிகூலமான கிரகங்களின்  காரகங்களிலிருந்து விலகி நிற்பது தான்

 

 

பாவ காரகங்கள்

 

நான் பாவம் என்று குறிப்பிடுவதில்லை சானல் என்று குறிப்பிடுவதே வழக்கம். கிரகங்களை போலவே ஒவ்வொரு பாவத்துக்கும் காரகங்கள் உண்டு.ஒரு பாவம் சுபபலமானால் அதன் காரகங்கள் கை கொடுக்கும். இல்லை என்றால் ஆப்பு தான்.

 

முத‌ல் சேன‌ல்:(ல‌க்ன‌ம்)

 

உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ந‌ல‌ம், ஒரு ஸ்டான்ட் எடுத்து ஃபிக்ஸ் ஆகி நிற்கிறது . நிற‌ம்,குண‌ம்

 

 

2ஆவது சேன‌ல்:

 

(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,(ரெவின்யூ இன் கம்( வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள், உங்கள் உணவு பழக்கங்கள் (ஓரல் செக்ஸ்?)

 

 

3 ஆவது சேனல்:

 

சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில்

 

பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள் பட்டை

 

 

4ஆவது சேனல்:

 

தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம், இதயம், திருமணத்துக்கு பின் மாமியார்

 

5.ஆவது சேனல்:

பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,

 

 

6.ஆவது சேனல்:

வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு,விவாதங்கள்

 

 

7.ஆவது சேனல்:

நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்

 

 

8.ஆவது சேனல்:

வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்,ரகசியங்கள்

 

 

9.ஆவ‌து சேன‌ல்:

த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து,

சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள். புத்தக பிரசுரம், திருமணமான பின் மாமனார்

 

 

10ஆவ‌து சேன‌ல்:

வாழும் வ‌ழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்,முழங்கால் பகுதி

 

 

11.ஆவ‌து சேன‌ல்:

மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,லாப‌ம் கருதிய செயல்கள், கணுக்கால் பகுதி

 

 

12ஆவ‌து சேன‌ல்:

தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.

 

கிரக காரகங்களுக்கு கொடுத்த குறிப்பே இதற்கும் போதுமானது.

 

 

 

One Reply to “ஜோதிஷ சர்வஸ்வம் : 2”

I.prema

10/02/2019 at 8:18 pm

ஒரு கிரகம் அதன் காரகத்துவங்களில் சில நன்மைகளையும் சில நேரங்களில் தீமைகளையும் செய்கிறது.நன்றாக இருக்கும் கிரகம் நன்மைகளை மட்டும் செய்துவிடுவதில்லை.கெட்டுப்போன கிரகம் கூட சில நேரங்களில் நல்லதையும் செய்கிறது.எனவே நமக்கு நடக்கும் பலன்கள் சில நேரங்களில் கிரகங்கள் வேலைசெய்வதை பொறுத்தும் பல நேரங்களில் நம்ம புத்தி வேலை செய்வதை பொறுத்தும் இருக்கிறது.

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *