வாழ் நாள் பலன் : மைனஸ் ஜாதகம் (9)

 

அண்ணே வணக்கம்ணே!

 

இன்னைக்கு சுக்கிரன் தன பாவாதிபதியா  இருந்தா எந்த வகையில் வருமானத்தை கொடுப்பார் என்று பார்க்கலாம் .

 

திருமணத்தின்போது பெண்ணுக்கு அவள் விட்டார் கொடுத்தனுப்பும் பாத்திர பண்டங்களை சீதனம் என்பார்கள் இது  ஸ்த்ரீ தனம் என்பதன் கொச்சை.  ஸ்த்ரீ என்றால் பெண்.

 

ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் சுபபலமாக இருந்தால் பெண்கள் வழியில் சொத்து சுகம் கிடைக்கும். பெண் ஜாதகத்தில் சுக்கிரன் சுபபலமாக இருந்தால் ஆண்கள் மூலம் சொத்து சுகம் கிடைக்கும்.

 

எதிர் பாலினத்திற்கு காரகம் கொண்டவர் சுக்கிரன்.  பொழுதுபோக்கு நடவடிக்கைகள் அனைத்துக்கும் காரகம் இவரே. பசிக்காக அல்லாமல் ருசிக்காக  உண்ணும் உணவுகள் தாகத்திற்காக இல்லாமல் ஆடம்பரம் கருதி அருந்தும் ,பானங்கள் ,வீடு, பகட்டான ஆடைகள் வெள்ளி நகைகள் , வாகனம் ,வாசனை பொருட்கள்,ஹோம் நீட்ஸ், டெக்ஸ்டைல்ஸ் அனைத்துக்கும் இவரே காரகன்.

 

இவர் இரண்டாம் இடத்தில் இருந்தால் தன் பேச்சால் கூட்டத்தையே கட்டிப்போடும் திறமை இருக்கும் விகட வினோத பரிகாசங்கள் இவர்களுக்கு கை வந்த கலை. தமிழ்வாணன் அந்த காலத்திலேயே பழக தெரிந்தால் பணம் கூட வேண்டாம் என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார் என்பதை நினைத்து பாருங்கள்.

 

சூழல் எப்படி இருந்தாலும்  தன்னுடைய பேச்சால் அதை இலகுவாக்க கூடிய திறமை இவர்களுக்கு உண்டு .எனவே நட்பு உறவு குடும்பம் அனைத்து வட்டங்களும் இவருக்கு ஒத்துழைக்க வாய்ப்புண்டு. தமது பேச்சு ரசனை ஆடை அலங்காரம் இவற்றைக் கொண்டு மேற்சொன்ன துறைகளில் பொருள் ஈட்டுவார்கள். எதிர்பாலினரின் ஒத்துழைப்பு இவர்களுக்கு கிடைக்கும்.

 

அதேசமயம் சுக்கிரன் பாதகாதிபத்தியம் பெறுவது / அவரது இருப்பது நீசம் பெறுவது/ அஸ்தங்கதம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஜாதகத்தில் இருந்தால் ஜாதகர் சதா சர்வ காலம் வெறும் பேச்சிலும் சுபகாரியங்களில் கலந்து கொள்வதிலும் காலத்தை வீண் அடிப்பார்.

 

அவசிய செலவுகளை கூட  ஒத்திவைத்து ஆடம்பரங்களில் ஈடுபடுவார். மேலும் காதல் விவகாரங்கள் காரணமாக தொழில் முடங்குவது /குடும்பத்தில் கலகம்போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி வரலாம்.

 

எனவே அடுத்த பதிவுகளில் தரவிருக்கும் பரிகாரங்களை இவர்கள் கட்டாயம் செய்து கொண்டு மெதுவாக தங்கள் தொழிலில் இருந்து வெளியேறுவது நல்லது.

 

அடுத்த பதிவிலிருந்து தன பாவாதிபதி யார் ?அவர் கேட்டால் என்ன பரிகாரம்? என்பதை பார்க்கலாம்

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *