பணம் பணம் பணம் 2.0 ( 2)

 

அண்ணே வணக்கம்ணே !

 

பணம் 2.0 தொடர்கிறது. இது இரண்டாவது அத்யாயம் . ( ஏக் தம் அப்படியே கின்டில்ல ஏத்திர்ராப்ல ஒழுங்கு மருவாதியா எழுதிக்கிட்டிருக்கன். அடுத்த பதிவு ஜோதிட பதிவு தான். டோன்ட் ஒர்ரி .

 

குழந்தை பத்து மாதம் தன் தாயின் கருவிலேயே இருக்கிறது. பிறந்த பிறகும் குறைந்தபட்சம் தாயின் மடியில் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறது. மிகக் குறைந்த பட்சமாய் அவளை அணைத்துக் கொண்டே  இருக்க வேண்டும் என்று எண்ணுகிறது .ஆனால் வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருந்தாலும், இல்லத்தரசியாக இருந்தாலும் சதா சர்வ காலம் குழந்தையுடன் ஒரு தாயால் இருந்துவிட முடியாது.

இந்த நிலையில் குழந்தை தாயின் இடத்தில் ஒரு டெடி பேர் பொம்மையை  வைத்துக்கொள்கிறது. அப்படித்தான் மனித மனமும், சுயம் (self)  என்பதற்கு பதிலாக ஈகோவை வைத்துக்கொள்கிறது .

டெடி பேர் எந்தவிதத்திலும் குழந்தையை ஹார்ம் செய்வதில்லை. ஆனால் இந்த ஈகோ சுயம் மறந்து மனிதன் நாசமாய் போக எல்லாவகையிலும் உதவுகிறது.

மனிதர்கள் சொல்லப்படுவதை கேட்பதில்லை. காட்சிகளை உள்ளபடி காண்பதில்லை தாங்கள் எதை விரும்புகிறார்களோ அதை கேட்ட தாய் நினைத்துக் கொள்கிறார்கள். தாங்கள் எதை காண விரும்பினார்களோ அதை கண்டதாக  நினைத்துக் கொள்கிறார்கள் .

பண விவகாரத்தில் உங்கள் கான்சியஸ் கிரிஸ்டல் கிளியர் ஆக இருந்தாக வேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பது பண விஷயத்துக்கு சால பொருத்தம்.

மேலும் தன் ஈகோவை  திருப்தி படுத்த எண்ணுபவன் செலவழிக்க வேண்டும் .எதிராளியின் ஈகோவை திருப்தி படுத்த சித்தமாய் இருப்பவன் பொருள் ஈட்டலாம் இதுதான் விதி.

 

 

 

 

பாடம்: 3

பொருள் ஈட்டுபவர்களுக்கு ஒருவித குற்ற மனப்பான்மை வந்துவிடுகிறது. இது அவர்களின் பேச்சு செயல் அனைத்திலும் வெளிப்படுகிறது. இதற்கு காரணம் நம் பொருளாதார அமைப்பு தான். இதில் ஒருவனுடைய நட்டம் தான்  இன்னொருவருடைய லாபமாய் மாறுகிறது.  அந்த நட்டத்தை இன்னொருவனை நட்டப்படுத்தி ஈடு செய்ய வேண்டி உள்ளது.

எனவே குற்ற மனப்பான்மை வருவதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் ஆட்டக்காரன் ஆட்ட விதிகளை மாற்ற முடியாது. இருக்கும் விதிகளுக்கு ஏற்ப தான் ஆடி ஆக வேண்டும்.

இயற்கையின் முதல் மூன்று கடமைகளையும் காற்றிலே விட்டு விட்டு கதை பண்ணும் சோம்பேறிகள் பொருளீட்டுபவர்களின்  இந்த குற்ற மனப்பான்மையை ஒரு சாக்காக சொல்லி தாங்கள் உத்தமர்கள் எனவேதான் பொருள் ஈட்ட முடியவில்லை என்று  நழுவுவார்கள்.

உயிர்களின் முதல் கடமை உயிர்வாழ்தல்- உயிர்ப்புடன் வாழ்தல். உயிர்களின் இருக்கும் ஒரே பவர் செக்ஸ் பவர். அது பல முறைகளில் வெளிப்படும். உருவாக்குதல், மீள் உருவாக்குதல் ,செழுமை படுத்துதல், பரவுதல் இப்படி பலப்பல வகைகளில் வெளிப்படும்.

வாழும் பிணங்களாய் இருக்கும் நபர்கள் தங்கள் சக்தியையெல்லாம் வெறுமனே உடலுறவுகளில்/இனப்பெருக்கத்தில்  செலவழித்துவிட்டு போர்த்திக் கொண்டு தூங்குவார்கள்.

உடல் உறவுகளில் – இனப்பெருக்கத்தில் முற்றிலும் செலவழிந்து விடாத சக்தி படைத்த நபர்கள்தான் உருவாக்குதலில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள். உருவாக்கும் மனிதனுக்கு கனவுகள், கற்பனைகள் ஆயிரம் ஆயிரம். அவற்றுக்கு உயிர் கொடுக்க பணம் தேவைதான். இவர்கள் தங்கள் சொந்த ஈகோவுக்காக செயல்பட்டாலும் மறைமுகமாக இந்த சமூகம் அவர்களின் செயல்பாடுகளால்  பயன்பெறும். எனவே பொருளீட்ட வேண்டும் என்ற எண்ணம் உங்களை சக்தி மிக்கவர் என்று நிரூபிக்கிறது.

 

ஜெனரேட் ஆன சக்தி செலவழிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் அது அந்த கலனை நாசமாக்கிவிடும். பொருளீட்ட வேண்டும் என்ற எண்ணம் தவறில்லை. இன்றைய பொருளாதார அமைப்பில் ஒருவனுடைய நட்டம் இன்னொருவனின் லாபமாய் மாறுவது தவிர்க்க முடியாதது. ஏற்கனவே சொன்னதை போல் ஆட்டக்காரர்கள் ஆட்ட விதிகளை மாற்ற முடியாது. எனவே குற்ற உணர்ச்சியை தூக்கி குப்பையில் போடுங்கள். ஆட்டவிதிகளை மாற்றும் நிலைக்கு நீங்கள் வந்து விட்டால் மாற்றுங்கள்.

ஈட்டிய பணத்தை வைத்து நீங்கள் உங்கள் உயிருக்கு உயிர்ப்பூட்ட போகிறீர்களா? மரணத்தை தள்ளிப்போட போகிறீர்களா?  உங்கள் கனவுகள் கற்பனைகள் இத்யாதிக்கு  உயிர் கொடுத்து உருவாக்க போகிறீர்களா?

உங்கள் பதில் ஆம் என்றால் மோஸ்ட்  வெல்கம் ! இல்லை நான் பெருவாரியான மக்களை போல் மரணத்தின் நிழல்களோடு போராடப் போகிறேன் என்று களம் காண போகிறீர்களா? ஆழ்ந்த வருத்தங்கள்.

நிழல் யுத்தம்  எப்போதும் வெற்றியை தராது .முதுமை மரணத்துக்கான முன்னோட்டம். ஹேர் டை முதல் தங்க பஸ்பம் எல்லாமே முதுமைக்கு எதிராக நடத்தும் போர் தான். ஆனால் வெல்லப் போவது என்னவோ மரணம்தான் .

உங்கள் காரியத்திற்கான காரணத்தை உணர்ந்து ஒரு விளையாட்டு போல இறங்கினால் வெற்றி நிச்சயம். அதைவிட்டு பலவிதமான பிரமைகள், இல்யூஷன்களோடு  காரியத்தில் இறங்கினால் நீங்கள் வென்றாலும் தோற்றுப்போவீர்கள். குழப்பம்தான் மிஞ்சும் டேக் கேர்

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *