மரணத்தை முன் கூட்டி அறிய

 

அண்ணே வணக்கம்ணே !

மரணத்தை ஒன்னரை வருசம் முதல் 6 மாசம் முன் கூட்டியே கெஸ் பண்ணிரலாம். பண்ணியிருக்கன். ஏன்னா..

ஒர் மனுசன் சாகறதுக்கு 6 மாசம் முன்னாடியே அவனோட வீட்டு என்விரான்மென்ட்/ நூஸ்ஃபியர் மாறிப்போவுது.  அவன் மேல உண்மையான பாசம்/அட்டாச் மென்ட் வச்சிருக்கிறவங்களுக்கு தெரிஞ்சு போவுது, அவன்  பாடில பயோ கெமிஸ்ட்ரி மாறிப்போவுது. அவனுடைய சப் கான்ஷியஸ்லயோ, அன் கான்ஷியஸ் மைண்ட்லயே ஒரு ரெட் லைட் எரியுது.  அவன் உடல் மரணத்துக்கு சித்தமாயிருது.

அவனோட செயல்பாடுகளை கொஞ்சம் சூட்சும புத்தியோட பார்த்தா இதை புரிஞ்சிக்கிடலாம். இதை படிக்கிற நீங்க கூட சமீபத்துல செத்துப்போன உங்க சொந்தக்காரவுக, அப்பா,அம்மா அவிக சாகறதுக்கு 6 மாசம் முன்னே இருந்து என்னென்ன நடந்தது? அவிக கேரக்டர் எப்படி மாறிப்போச்சுனு கணக்கு போட்டு பார்க்கலாம். (தில்லு துரைகள் கமெண்டாவும் போடலாம்)

பார்த்து ரொம்ப நாளான பிள்ளை, மகள் அ உறவுக்காரவுகளை பார்க்கனும்னு அடம்பிடிச்சு போய் பார்த்திருப்பாய்ங்க. இல்லே வரவழைச்சு பார்த்திருப்பாய்ங்க. கொசுவர்த்தியை உங்க கண் முன்னாடி வச்சு சுழட்டி விட்டு ஃப்ளாஷ் பேக் எல்லாம் எடுத்து விட்டிருப்பாய்ங்க.( ரொம்ப உணர்வு பூர்வமா)  ஓஷோ ”  சாக 6 மாசம் இருக்கையிலயே மனுஷனோட கருவிழி உள்  நோக்கி திரும்ப ஆரம்பிச்சுரும். அதனால மூக்கு நுனியை பார்க்க முடியாது”ங்கறார்.

பழைய கடன் காரன்/ கெட்டுப்போன சொந்தக்காரன் எவனாச்சும் வந்து உதவி கேட்டு லந்து பண்ணுவான். நிறைய பேர் இதை அசால்ட்டா எடுத்துக்கிடறாய்ங்க. என் தம்பி ஃப்ரெண்ட் ஒருத்தன் 6 மாசத்துல சாகப்போறான். அவனுக்கு கெட்டு கீரைவழியாகிப்போன ஒரு தம்பி. அண்ணன்  என்னவோ நல்ல வசதியா தான்
இருக்கான். தம்பி அல்லாடிக்கிட்டிருந்தப்ப நான் கையில ஃப்ளூட் எடுத்துக்கிட்டு (கிருஷ்ணர் கணக்கா) தூது போனேன்.

“என்னமோ ஹோட்டல் வச்சு ஷெட் ஆயிட்டானாம்பா. ஜஸ்ட் ஒரு பத்தாயிரம் ரூ இருந்தா போதும் ரன்னிங்குக்கு வந்துருவன்ங்கறான்.யோசிச்சுப்பாருப்பா”ன்னேன்.

“அதெல்லாம் முடியாது. ஹோட்டல் கீட்டல் எல்லாம் ஜான்தா நை மொத்தத்தையும் விட்டுட்டு வந்து 6 மாசம் ஒழுங்கா இருக்க சொல்லு அப்பறம் பார்க்கலாம்”னான். என்னத்தை பார்க்கிறது. போய் சேர்ந்துட்டான்.

இன்னொரு தமாசு என்னடான்னா இந்த 6 மாசத்துல  சின்ன வயசுல நடந்த சம்பவங்கள் மறுபடி நடக்குது. எங்கப்பா 6 மாசத்துல சாக இருந்தப்ப லட்சியவாதி, சென்டிமென்ட்னாலே கடுப்பாகிற, பொறுப்பில்லாத பிள்ளையான அவருக்கு   நான் ஒரு  சட்டை ஹார்லிக்ஸ் பாட்டில், டி.ஏ.எஸ்,.ரத்தினம்பொடி  வாங்கி கொடுத்தேன். எங்கப்பா சாக ஒரு மாசம் இருக்கிறச்ச என் மகள் காணம போய் அரை மணி நேரத்துல கிடைச்சா.

எங்க சித்தப்பனுக்கு அஜந்தா ஹோட்டல் டிஃபன் வாங்கி கொடுத்தேன்.
இன்னொரு சித்தப்பன் நாங்க குழந்தையா இருக்கும்போதே பெண்டாட்டி …பின்னாடி காணாம போன பார்ட்டி. அவன் வீட்ல ஒரு மாசம் தங்கியிருந்தேன்.

(இதுக்கெல்லாம் லாஜிக்கே கிடையாது. ஏன்னா நான் எப்போ இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டனோ அப்பவே சொந்தம், பந்தம்லாம் வெட்டிக்கிச்சு. 1991 டு 1997 எந்த உறவுக்காரனோடவும் டச்சே கிடையாது.

பழைய ஆளுங்களை (இத்தனைக்கும் அவிகளோட பெரிய அட்டாச் மென்ட் கூட இருக்காது. பார்க்கும்போது திடீர்னு கண்ல தண்ணி பொங்கும்.

இப்படி நிறைய அனுபவங்கள் இருக்கு. இது மட்டுமில்லே.  ஸ்தூலமாவும் சில சம்பவங்கள் நடக்குது. வீட்ல ஒரு சாமி படமோ, முகம் பார்க்கிற கண்ணாடியோ உடையும்,  ஒரு காக்கா வீட்டுக்குள்ள வந்து ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு போகும். வீட்டு சுவத்துல திடீர்னு பிளவு ஏற்படும். வளர்ப்பு பிராணியோ/ஆடு,மாடு கன்னோ சாகும். சாகலைன்னாலும் 15 நாள் முன்னாடியிருந்தே ரொம்ப ரெஸ்ட் லெஸ்ஸா மாறிடும். வீட்டு கடியாரம் நின்னு போயிரும். சாகப்போற பார்ட்டி  நாற்காலில இருந்து தவறி விழும்.

யாராச்சும் ரெம்ப சீரியஸா இருந்து ரெகவரி ஆயிட்டாங்கண்ணா அந்த வீட்ல /வம்ச விருட்சத்துல கூடிய சீக்கிரமே ஒரு சாவு விழறதையும் பார்த்திருக்கேன்.

1984ல இன்னம் ஒரு நிமிஷத்துல எங்கம்மாவோட உயிர் பிரிய போகுதுன்னா ஜி.ஹெச் க்கு சைக்கிள்ள போறேன். ஹாஸ்பிட்டல் கேட்டை கூட தாண்டலை . விழுந்து செம சில்லறை.

எங்க மாதமிருமுறையோட ரெகுலர் அட்வர்டைசர் துர்கா ஸ்வீட்ஸ் முதலாளி லோக நாதம் நாயக்கர் மறு நாள் சாகப்போறாரு. முந்தின தினம் ராத்திரி டெஸ்க் டாப்ல இருந்த பிள்ளையார் படத்தை மாத்திட்டு துர்கை சூலத்தை இறக்கற மாதிரி படத்தை  டெஸ்க் டாப் பேக்கிரவுண்டா வச்சேன். அன்னைக்கு ராத்திரி பயங்கர ஹைப்பர் டென்சன். சிவராத்திரியாயிருச்சு.

இவ்ள ஏன் மங்களூர் விமான விபத்துல இறந்தாங்களே.. இவிக வேலை பார்த்த இடம்/தங்கியிருந்த/புறப்பட்ட  இடங்கள்ள என் கொய்ரி பண்ணா இதே மாதிரி சம்பவங்கள் அவிகளுக்கும் நடந்திருக்கிறது ஆதார பூர்வமா தெரியும்.

மொத்தத்துல சாவுங்கறது ஒரு செகண்ட்ல ஒரு நிமிஷத்துல படக்குனு வர்ர விசயம் கிடையாது. அதுக்குண்டான ப்ராசஸ் அட்வான்ஸா ஆரம்பிச்சுருது. நாமதான்  T.A, DA, HRA  கணக்குகள் டிவி, கிரிக்கெட், சீரியல்னு மெய்மறந்து இருந்துர்ரோம். பொட்டுனு பூட்றோம்.

மரணம் இவனை ஹலோ சொல்லப்போற  தினம் வீட்ல இருந்து  புறப்படும்போது (ட்ரஸ் அப் எல்லாம் முடிஞ்சு) திடீர்னு வயித்தை கலக்கும்.

சாவை முன் கூட்டி ஸ்மெல் பண்றது எப்படி எளிதோ.. சாவை தள்ளி போடறது கூட ரெம்ப சிம்பிள். உங்க சர்க்கிள்ள யாராச்சும் சாக பிழைக்க இருந்தா இன்ஃபர்மேஷன் கொடுங்க. சின்ன சின்ன வேலைகளால அவிக மரணத்தை தள்ளி போட முடியும். ஒரு தடவை தள்ளிப்போட்டுட்டா மறுபடி அந்த மரண முகூர்த்தம் வர பத்து பதினைஞ்சு வருசம் ஆயிருது.

8 Replies to “மரணத்தை முன் கூட்டி அறிய”

Vinu

07/12/2018 at 6:24 pm

Gjjj….super super superoo super💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕super super superoo super super super superoo super

Reply

S Muthukumar

06/12/2018 at 1:13 pm

அதாவது, தள்ளிப்போட சில டிப்ஸ்..

Reply

S Muthukumar

06/12/2018 at 11:43 am

சார், நான் சொல்ல வந்தது, என்ற இங்கிலாந்து அறிவியலாலர் ஒரு விதமான நோயினால் பாதிக்கப்பட்டு, அதனால் அவர் 2 வருடம் தான் உயிரோடு என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். அப்பொழுது அவருடைய வயது 21.. ஆனால் அவர் இறக்கும்போது அவருடைய வயது 70க்கும் மேல். அவரால் பேச முடியாது, நடமாட முடியாது. அவருடைய உலமே அவருடய …Computer பொருத்தப்பட்ட wheel chair தான். அவர் தன் வாழ்நாள் முழுவதும் பிரபஞ்சம் (Cosmos), கால வெளி, கருந்துளை (Black Hole) இதை பற்றித்தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட தியானம் என்பதும் இது தான்.. பிரம்மத்தோடு ஒன்றி இருப்பது…

பிரம்மம், அதாவது வெட்டவெளி என்பது 0 Hz. Frequency… கோள்கள் இயங்குவது 7 Hz. Frequency.. யில்.. ஆகவே பிரம்மத்தோடு ஒன்றி இருக்கும் பட்சத்தில், கோள்கள் பாதிப்பில் இருந்து ஓரளவு தப்பி விடலாம் என்று நினைக்கிறேன்…

அந்த கால் மகரிஷிகள், தவசிகள், சித்தர்கள் இதைத்தான் செய்தார்கள்.

இந்த point களில் தவறு இருந்தால் மன்னிக்கவும்..

Reply

  S Murugesan

  06/12/2018 at 12:48 pm

  உங்கள் கருத்தில் தவறு எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் மன்னிப்பு இத்யாதில்லாம் நமக்குள்ள தேவையில்லாத மேட்டரு .
  அவருடைய கமிட்மென்ட் / அட்டாச் மென்ட் உண்மைங்கறதால ஓகே. உங்களுக்கோ எனக்கோ இது ஒர்க் அவுட் ஆகுமாங்கறது தான் என் கேள்வி

  Reply

   S Muthukumar

   06/12/2018 at 1:12 pm

   OK.. நன்றி சார்..
   மரணத்தை தள்ளி போடுவது பற்றி நீங்களே ஒரு article எழுதுங்க..

   Reply

    S Murugesan

    06/12/2018 at 1:46 pm

    ஹ்ம் ..எழுதிருவம்..

    Reply

S Muthukumar

06/12/2018 at 9:46 am

Sir, வணக்கம்.
மரணத்துக்கும் எட்டாமிடத்துக்கும் தொடர்பு உள்ளாதால், வாழ்க்கையில் அதிகம் அவமானப்படுபவன் மரனம் தள்ளிப்போடப்படும்…
எப்பொழுதும் Cosmos.. Universe. (பிரம்மம்) பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்கள், பிரம்மத்தை ஆராய்ச்சி செய்பவர்கள் – இவர்கள் மரனமும் தள்ளியப்போடப்படும்..
ஊதாரனம் – Stephen Hawking..
இந்த கூற்று சரியா ?

Reply

  S Murugesan

  06/12/2018 at 10:47 am

  மொத பாய்ண்டுக்கு ..ம்..ஓகே. ஆனால் ஆராய்ச்சி விஷயத்துல அதன் நோக்கம்/ தரம் பொருத்து ரிலீஃப் கிடைக்கும்.

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *