ஜாதகம் இல்லாதோர்க்கும் முழு பலன் : (தொடர்) : பாகம்: 3 (தனபாவம்)

அண்ணே  வணக்கம்ணே !

 

இந்த தொடர்ல  புதுசா வந்தவிகளுக்கு  கலகால் புரியாது. ஆகவே சிறு விளக்கம். லக்னம் அல்லது ராசிய வச்சு  ஜாதகரோட குணாதிசயங்களை சொல்வது போல குணாதிசயங்களை வைத்து ஜாதகரோட ராசி லக்னம் எதுன்னு கணிக்கலாம் அல்லவா.  இதுதான் இந்த தொடருக்கான அடிப்படை.

 

குணாதிசயங்களை வைத்து லக்னம் எது  என்று கணித்துக்கொண்டால் அதை வைத்து அடுத்தடுத்த பாவங்கள் பாவாதிபதிகளை கணிக்கலாம் அல்லவா?

 

கடந்த இரண்டு பதிவுகளில் சூரியன் சந்திரன் தரக்கூடிய பொருளாதார பலனை பார்த்தோம்.

 

சூரியன் எந்த லக்னத்திற்கு தன பாவாதிபதி ?  இதை சின்ன குழந்தை கூட பட்டென்று சொல்லிவிடும் கடக உலகம்.

 

சந்திரன் எந்த லக்னத்திற்கு தன பாவாதிபதி ?   மிதுன லக்னத்துக்கு தானே? சூரியன் சந்திரன் இவர்களுக்கு ஒரே  ராசி தான். எனவே பிரச்சனை இல்லை.

 

சூரியனோ சந்திரனோ நல்ல இடத்தில் இருந்தால்  தங்கள் துறையில் வருமானத்தை தருவார்கள். ஜாதகரின் பேச்சு சூரியன் சந்திரன் பாணியில் இருக்கும்.  குடும்பத்துடன் இவர்களது உறவும் அப்படியே இருக்கும். உதாரணமாக சூரியன் என்றால் கண்டிப்பு சந்திரன் என்றால்  மாதத்தில் பாதி நாள் அன்பு பாதி நாள் கண்டிப்பு.

 

ஆனால் மேற்படி கடக ,மிதுன  லக்ன ஜாதகர்களுக்கு முறையே சூரியனும் சந்திரனும் கெட்டிருந்தால் அவர்களது பாணியில் வருவாய், குடும்ப ஒற்றுமை, பேச்சு, கண் பார்வை ஆகியவற்றை  கெடுப்பார்கள்.

 

இந்த தொடர் ஜாதகம் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என்ற இரண்டு பிரிவினரும் பலன் பெறும் வகையில் செல்லும். கவலை வேண்டாம்.

 

உங்களுக்கு எந்த லக்னம் தொடர்பான குணாதிசயம் அமைந்துள்ளது,  தன பாவாதிபதி யார், அவர் தொடர்பான இருந்து வருமானம் வருகிறதா/ அல்லது  வீண் செலவுகள் ஏற்படுகிறதா என்பதை பொங்கல் அனுபவமே சொல்லும்.

 

வீண் செலவுகள்   தான் ஏற்படுகின்றன என்றால் அதற்கு உரிய பரிகாரங்களை நீங்கள் செய்து கொள்ள வேண்டும். இப்போது பரிகாரங்களை சொல்ல ஆரம்பித்தால் தொடர்ச்சி போய்விடும் எனவே ஒன்பது கிரகங்கள் தொடர்பான வருமான வழிகளையும் சொல்லி முடித்துவிட்டு  பரிகாரங்களுக்கு போகலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

 

இப்போது செவ்வாய் தொடர்பான  வருமான முறைகளை சொல்கிறேன். செவ்வாய் இரண்டு ராசிகளுக்கு சொந்தக்காரர். மேஷம், விருச்சிகம். இவை முறையே மீனம் மற்றும் துலாம் லக்னங்களுக்கு தன பாவம் ஆகும்.

 

எனவே மீனம் மற்றும் துலாம் லக்ன ஜாதகர்கள் அடுத்த பதிவுக்கு காத்திருக்கவும்.

 

உடுங்க  ஜூட் !

 

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *