திருமணமான பெண்களின் மனோதத்துவம்

அண்ணே வணக்கம்ணே !

 

எதையோ தேட போனா எதெல்லாமோ கிடைக்குது. தொடரோட அடுத்த பதிவு நாளை நிச்சயம் வெளிவரும். அதுக்குள்ற இதை ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

திருமணத்துக்கு முன் மார்க்கெட்டிங் நிர்பந்தங்கள் காரணமாய் கவர்ச்சி முகமூடி அணிந்து வாழும் பெண்கள் திருமணம் முடிந்த பின் தமது மார்க்கெட்டிங் உத்திகளுக்கு மங்களம் பாடி விடுகிறார்கள். (தமது அம்மாக்களின் லேட்டஸ்ட் ஜிராக்ஸ் பிரதியய் மாறிவிடுகிறார்கள்)

திருமண பந்தத்தில் கிடைக்கும் பாதுகாப்பு ஒரு வித அசமஞ்சத்தனத்தை பெண்களில் ஏற்படுத்தி விடுகிறது. விவாகரத்து சட்டத்தில் (ஆண்களுக்கு) உள்ள சிக்கல்களும்,

தனியக வாழும் ஆண் குறித்த சமூக சந்தேகங்களுமே ஆணின் கைகளை கட்டி விடுகின்றன. திருமண உறவென்றே இல்லை எந்த உறவிலும் ஒருவர் சேடிஸ்டாகவும்,மற்றவர் மசக்கிஸ்டாகவும் இருந்தால் தான் அந்த உறவு தெடரும்.

சேடிஸ்டு-சேடிஸ்டு,மசக்கிஸ்டு- மசக்கிஸ்டு ஜோடி சேர்ந்தால் அந்த உறவு நிச்சயம் முறிந்து விடும். மகளிர் காவல் நிலையம்,·பேமிலி கோர்ட்டு,கொலை,தற்கொலை தம்பதிகளில் இருவருமே சேடிஸ்ட் அல்லது மசக்கிஸ்டுகளாகத்தான் இருந்திருப்பர். சேடிசம்,மசக்கிசம் இரண்டுக்குமே மனித மனங்களில் புதையுண்டு கிடக்கும் 2 அடிப்படை கோரிக்கைகளே(கொல்லுதல்/கொல்லப்படுதலுக்கான விருப்பம்)

 

மின் உபகரணங்களில் ஆன்,ஆ·ப் ஸ்விட்ஸ் இருப்பது போல மனிதர்களிலும் உயிர் வாழும் இச்சையை போலவே, தற்கொலை விருப்பமும் உள்ளது.மனிதன் அடிப்படையில் மிருகம். தன் மிருகத்தன்மையை மறைக்க விரும்பும் மிருகம். உடலினை ஆடை கட்டியும், மனதை தான் மிருகமல்ல என்ற போலி நம்பிக்கையலும் கட்டுப்படுத்தி வைத்துள்ளான். ஆடைக்குள் மிருகமாகவே உள்ளான்.

 

அடிமனதிலான மிருக இச்சைகளுடனேயே வாழ்கிறான். பழைய கற்காலத்தில் ஆண்,பெண் இருவருமே சவால்கள் நிறைந்த ,எந்த நொடியிலும் மரணம் எதிர்படலாம் என்ற ஆபத்தான வாழ்வை வாழ்ந்ததால் அவர்களின் மனதிலான கொல்லுதல்/கொல்லப்படுதலுக்கான விருப்பம் பெருமளவு தானாகவே நிறைவேறி வந்தன, இருவரும் சமமான உடல் வலிமையுடன் வாழ்ந்து வந்ததால் இதனால் மனோதத்துவ ¡ரீதியில் பெரிதாய் வேறுபாடுகள் இல்லாமலிருந்தன,

 

புதிய கற்காலத்தில் வாழ்விலான சவால்கள் ஓரளவு குறைந்தன. ஆண்,  பெண்ணை கர்பகாலம் ,குழந்தை பேறு காலங்களில் ஓய்வெடுக்க அனுமதித்திருக்க வேண்டும். ஓய்வுக்கு பழக்கப்பட்ட பெண்ணுடல் மேலும் பலவீனப்பட்டு,அவள் தந்திரங்கள் பல கற்று தேறி இருக்க வேண்டும்.

மனித உடலின் தர்மம்:

மனித உடல் எத்தனைக்கெத்தனை உழைக்கிறதோ அத்தனைக்கத்தனை வலிமை பெறும்.

எத்தனைக்கெத்தனை ஓய்வெடுக்கிறதோ அத்தனைக்கத்தனை வலிமை இழக்கும்.

 

புதிய கற்காலத்தில் வாழ்க்கை போராட்டத்தில் சவால்கள் கூர் மழுங்கினபடியல் ஆண் அவற்றை தானே சமாளிக்க முடிவு செய்திருக்க வேண்டும். டிவிஷன் ஆ·ப் லேபர் என்பது ஆரம்பித்தது. நான் அவுட்-டோர், நீ இண்-டோர்

 

மனிதன் வேட்டையடுதல்,மீன் பிடித்தலை தெழிலாக கொண்டிருந்த போது சஞ்சரியய் இருந்தான். விவசயத்தி ஈடுபட்ட புதிதில் கூட  சஞ்சரியகவே தெடர்ந்தான். ஸ்திரவாசம் ஆரம்பித்த போதுதான் தன் உழைப்பின் பலனாய் சீர்பட்ட நிலம் தன் வாரிசுக்கே கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மனிதனில் பிறந்தது. பெண்ணை கட்டுப்படுத்த ஆரம்பித்தான். தண்ணீரை அழுத்தி சுருக்க முடியது என்பது பாஸ்கலின் விதி.(மனித மனம்= தண்ணீர்,காற்று,நுரையீரல் அனைத்துக்கும் சந்திரனே காரகன் என்பது ஜோதிட விதி) இதனால் தானோஎன்னவோ தண்ணீரை அழுத்தி சுருக்க முடியது என்ற பாஸ்கலின் விதி மனித மனம் (முக்கியமாக பெண் மனம்) விஷயத்திலும் வொர்க் அவுட் ஆகியுள்ளது.

 

தாளி ! உனக்கு உன் வாரிசுதான் முக்கியமே தவிர நான் முக்கியமில்லை அப்படித்தானே என்று பெண் மனம் கருவுகிறது. கள்ளக்காதல்,தெடுப்பு,வேலி தாண்டுதல் எல்லாம் இந்த அடிமைத்தனத்துக்கு எதிரான புரட்சி தான்.

 

இதில் இன்னொரு பாயிண்டும் உள்ளது. பெண்ணுக்கு கிடைத்த ஓய்வு அவளை

உடல் ¡ரீதியக,பலவீனப்படுத்தி அதன் மூலம் அவள் மனதையும் பலவீனப்படுத்தியது. பலவீனமே பாவங்களுக்கான பிறப்பிடம்-விவேகானந்தர். இந்த பலவீனம் தந்த பாதுகாப்பின்மைதான் திருமணத்திற்கு முன்னான மார்க்கெட்டிங் உத்திகளுக்கு அடிப்படை.

 

பெண் குழந்தை பார்க்கும் முதல் ஆண் தந்தை. ஆண் குழந்தை முதலில் பார்க்கும் பெண் தாய்.பெண் குழந்தை தன் தந்தையையும்,ஆண் குழந்தை தன் தாயையும் ஆதர்சமாக கொள்கின்றன. வளர்ந்த பின்பு பெண் ,ஆணில் தன் தந்தையை தேடுகிறாள். ஆண் , பெண்ணில் தன் தாயை தேடுகிறான். இதெல்லாம் ·ப்ராயிடு சித்தாந்தம்.

 

தேடுவது எதற்கு தெரியுமா? பெற்றோர்கள் தன் சிறுவயதில் தனக்கு செய்த

கொடுமைகளுக்கெல்லாம் பழிவாங்கத்தான்.  இந்த பழி உணர்ச்சி கான்ஷியஸ் மைண்டில் இருக்காது. சப்கான்ஷியஸ் மைண்டில் ஒளிந்திருக்கும். தமது செயல்பாடுகளுக்கான காரணம் அவர்களுக்கே தெரியது.இதை ஆராய்ந்து கண்டுபிடித்து பகிரங்கப்படுத்தும் நான் அவர்கள் வார்டில் கவுன்ஸிலராய் நின்றால் கூட திருமணமான பெண்கள் எனக்கு ஓட்டுப்போடமாட்டார்கள்.அது வேறு விஷயம்..

 

ஆக ஒரு ஆண் ஒரு பெண்ணை தேடுவது தன் தாயை மீண்டும் சந்திக்கத்தான்.சந்தித்து  தன் சிறகுகளை வெட்டிப்போட்ட அவளை பழிவாங்க்கத்தான்

 

ஆக ஒரு பெண் ஒரு ஆணை தேடுவது தன் தந்தையை  மீண்டும் சந்திக்கத்தான். தன் சிறகுகளை வெட்டிப்போட்ட அவனை  பழிவாங்க்கத்தான்

 

இந்த நிலையில் திருமணம் முடிந்த பின்பு பெண் என்ன செய்வாள் கணவனை தன் தந்தையய் (மனதில்/அதிலும் அடிமனதில்) பாவித்து சிறுவயதில் தன் தந்தை தன் இழைத்த கொடுமைகளுக்கெல்லாம் பழிவாங்குவாள்.

 

எந்த தாய் தகப்பன் தம் குழந்தைகளை கொடுமைப்படுத்தாது வளர்க்கிறார்கள். இதில் பெறுப்புள்ள பெற்றோர், அதிலும் வசதி படைத்த பெற்றோர் செய்யும் கொடுமைதான் அதிகம். பெறுப்பற்ற பெற்றோர் தம் பெறுப்பை(?) தட்டிக்கழித்துவிடுவதால் அவர்களது குழந்தைகள் ஓரளவேனும் சுதந்திரமாய் வாழ்ந்து தம் வாழ்க்கைத்துணையின் உருவத்தில் தம் பெற்றோர்களை கண்டு அன்பு செலுத்துகின்றன.

 

 

 

 

 

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *