நில் ! கவனி !! செல் !!!

அண்ணே வணக்கம்ணே !

இங்கே எவனும் ஜூரியில்ல. விழுந்து எழுந்து வந்தவன் தான். எல்லா பயலுக்கும் எல்லாம் தெரியாது. எதுவும் தெரியாதவன் எவனும் கிடையாது . எவனும் 24×7 விஞ்ஞானியும் இல்லை . எவனும் 24×7 முழு மூடனும் இல்லை.

நல்ல நேரம் துவங்கும் போது நம்பவே முடியாது. பழைய அனுபவங்கள் கொடுத்த உதறலால ஆரம்பத்துல  நல்ல வாய்ப்புகளை சுயமா இழந்தவிகளும் உண்டு. அதே போல கெட்ட நேரம் துவங்கும் போதுதான் பம்பர் ஆஃபர்லாம் வரும். அதுல சிக்கி சீரழிஞ்சவிகளும் உண்டு.

ஆக்சுவலாயிட்டு இந்த அஷ்டம சனி /கேது புக்தில்லாம் சாலை ஓர சைன் போர்ட் மாதிரி “நில் கவனி செல் “ போல. இதெல்லாம் ஒத்தனுக்கு வல்லன்னா நாசமா போறது கியாரண்டி.

கெட்ட நேரத்தால கெட்டவனை விட – கெட்ட நேரம் ஆரம்பிச்சிருச்சுன்னு தெரியாம அகல கால் வச்சு குண்டி கிழிஞ்சவன் தான் அதிகம். இதுல எதோ ஒரு சின்ன மேட்டர் ஊத்திக்கிச்சுன்னா அதை ஏத்துக்காம பெருசா புலி வேசம் போடறவனுக்கு தான் கொட்டை எடுக்குது கெட்ட நேரம்.

சனி பிடிக்கும் போது வீக்கம்,ஊளை சதை கணக்கா நம்மை ஒட்டியிருந்த பக்கில்லாம் காணாம போயிர்ரான். அவன்லாம் அட்டை மாதிரி . உதிர்க்கவே முடியாது.

சாவு வரதுக்கு சில மணி நேரம் முன்னாடியே தலையில இருக்கிற பேன்லாம் இறங்கி போயிர்ராப்ல இவன்லாம் கழண்டுக்குவான். ஆனால் நாம “போகாதே போகாதே என் கணவா”ன்னு பாட்டிக்கிட்டிருப்பம்.

ஆஃப்டர் ஆல் உயிர்-உணர்வு இல்லாத வாகனங்களையே லாங் ரன்ல சாலையோரம் பார்க் பண்ணி ரெஸ்ட் கொடுத்துர்ரம். அப்படியா கொத்தது  நாம மன்சங்க தானே. ஓய்வு முக்கியமில்லையா?

நான் தேய்ஞ்சு போன ரிக்கார்டு மாதிரி அந்த 16 வருசம் அந்த 16 வருசம்னு என் இருண்ட காலத்தை மென்ஷன் பண்றது எனக்கு நானே ஞா படுத்திக்க தான். இன்னய தேதிக்கான முருகேசனை மீஞ்சூர் சிற்பி மாதிரி செதுக்கினது அந்த 16 வருசம் தான்.

என் வாழ்க்கையிலருந்து அந்த 16 வருசத்தை எடுத்தாச்சுன்னா எனக்கும் அழகிரிக்கும் பெருசா வித்யாசம் இருந்திருக்காது . எனக்கும் மோடிக்கும் கூட வித்யாசம் இருந்திருக்காது .

இன்னைக்கு நான் உங்களுக்கு சொல்ற மேட்டரை எல்லாம் எவன்னா கன் பாய்ண்ட்ல கிட் நாப் பண்ணிட்டு போய் –அவுத்து  கவுத்து போட்டு சிங்கப்பூர் பிரம்புல நாலு கொடுத்து சொல்லியிருந்தாலும் நானே கேட்டிருக்க மாட்டேன். அது வேற கதை .ஆனால் எந்த பக்கியும் சொல்லலியேங்கற ஆதங்கம் உண்டு.

மன்சனோட மைன்ட் செட் வெற்றி தோல்விகளை பொருத்து மாறிருது . அடியோட மாறிருது .  நானே ரெம்ப குஷ்டப்பட்டுத்தான் அதே பிச்சைக்கார புத்திய மெயின்டெய்ன் பண்றேன்னா பாருங்க.

வாழ்ந்து – கெட்ட, கெட்டு முன்னேறின ஆயிரக்கணக்கான சனத்தை எனக்கு பர்சனலா தெரியும். அதனால தான் கன்ஃபார்மா சொல்றேன்.

என் பாய்ண்ட் ரெம்ப சிம்பிள். நடக்கும் போது  (அதாங்க யோகம் !) ஆட்டம் போட்டு பல்பு வாங்கினப்ப அடங்கி கிடக்கிறதுங்கறது நமக்கு மட்டுமில்ல. நம்மை படைச்ச ஆண்டவனுக்கே கேவலம்.

எப்பவும் கெத்தா வாழனும்னா யோகம் நடக்கும் போதும் கெத்து காட்டாம வாழறதுதான் ஒரே வழி.

அட..அண்ணன் எங்கயோ செம பல்பு வாங்கிட்டாப்ல இருக்கு. அதான் உடம்பு வளைஞ்சு உட்கார்ந்து பதிவை அடிச்சுக்கிட்டிருக்காரு. தத்துவமா கொட்டறாருனு நினைச்சுராதீய. நாம கொஞ்சம் டிஃப்ரன்ட் ஆச்சே.  கடந்த சனி பஞ்சம சனி ( என்னா அடி ?)  கடந்த 2 வருசம் குரு 3- 4 ல் , இதுல ராகு கேது வேற சேட்டை. புக்தியா சுய புக்தி . ஆனாலும் இந்த தத்துவத்தை எல்லாம் அப்ப வாந்தி பண்ணல.

பரவால்லடா தமாய்ச்சுக்கிட்டம்னு நம்பிக்கை வந்த பிறவு தான் இந்த தத்துவ மழை .  (இந்த கும்ப செவ்வாய் தான் என்ன பண்ண போறாரு தெரியல . பார்ப்பம் )

நான் யு ட்யூப் பக்கம் சாய்ஞ்சுட்டன்னு நிறைய பேரு கோவிச்சுக்கறாய்ங்க.  திருக்குறள் மாதிரி ஷார்ட்டா சொன்னா பச்சக்குனு கேட்ச் பண்ணிக்கிற மன்சங்க இப்ப இல்ல வாத்யாரே. அவனவனுக்கு ஆயிரத்தெட்டு இமிசை .

அவன் இமிசைக்கெல்லாம் மூலம் என்னன்னு  சொன்னா கூட ரீச் ஆக முடியாத அளவுக்கு பேஸ்த் அடிச்சு கிடக்கான். ப்ரிண்ட்டட் புக்/இபுக்லாம் ரீச் ஆகும். இல்லேங்கல.ஆனால் ரெம்ப டைம் எடுக்கும். ஆனால் இந்த வீடியோஸ் கதை வேற பத்திக்கிச்சுன்னா   நாலஞ்சு லட்சம் பேர் ஈசியா பார்த்துர்ராங்க.

ட்வீட்/ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்லாம் எப்படி தொகுத்தாலும் உதிரியா தான் தெரியும்.ஆனால் வீடியோ பேச்சு அப்படி இல்லை.  பார்ப்பம்.

என்னை பொருத்தவரை இன்னய தேதிக்கு இருக்கிற சின்சியாரிட்டி அடுத்த 15 வருசம் தொடர்ந்தா கூட போதும் ஒலக மக்கள் எல்லாம் திருந்திருவாய்ங்கனு சொல்ல முடியாட்டாலும் – கேள்விகள் உள்ளவிகளுக்கு விடையா நம்ம வீடியோஸ்/ அதுலருந்து பப்ளிஷ் பண்ற புக்ஸ் ஒரு ப்ளூ ப்ரிண்ட் கணக்கா உதவும்.

நீங்களோ நானோ எதை பெற்றாலும் –அறிவை சொல்றேன்-  இந்த மானுட குலத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் இருந்து தான் பெற்றோம். இதை மானுட குல மேம்பாட்டுக்காவ ஊஸ் பண்ணலின்னா அது களவாணித்தனமாயிராதா?

கொட்டி தீர்த்துருவம். கொட்டி தீர்த்த்தை அள்ளி எடுத்து பத்திரப்படுத்தி வைப்பம்

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *