அஜித்-விஜய் எனும் கோழைகளும் –அன்னாரின் அடிப்பொடிகளும்

அண்ணே வணக்கம்ணே !

ஜோசிய பதிவை எதிர்ப்பார்க்கிற சனம் இந்த பக்கம் அண்டியிருக்க மாட்டிங்கனு தெரியும்.ஆனாலும் சொல்ல வேண்டியது என் கடமை .கழண்டுக்கோங்க.

குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்க்கும்ங்கறாப்ல அஜித்-விஜய் என்ற இந்த இரண்டு பார்ட்டிகளுமே தங்கள் ரசிகர்கள் அல்லது ரசிகர்கள் என்று சொல்லிக்கிற பிரகிருதிகளோட ஆட்டத்தை  எல்லாம் பார்த்துக்கிட்டிருக்கலாம்.

ஏன் ரஜினி கமல் ரசிகர்கள் கொடுக்காத அலப்பறையான்னு கேப்பிங்க. அந்த காலத்துலயாவது  250 நாள் ,100 நாள் படம்லாம் வந்துக்கிட்டிருந்தது. அலப்பறை கொடுத்தாலும் செரி பல்லிருக்கிறவன் பட்டணி திங்கறான்னு இருந்தம்.

இன்னைக்கு சினிமான்னாலே 3 நாள் கூத்துன்னு ஆயிருச்சு. ஒவ்வொரு படமும் வெளி வர்ரது தலைபிரசவம் கணக்கா ஆயிருச்சு.ஃபைனான்ஸ் ப்ராப்ளம் ஒரு பக்கம் /கதை திருட்டு ஒரு பக்கம் . இந்த ஈரோக்களின் அரசியல் “நமைச்சல்” ஒரு பக்கம். எத்தனை கண்டம்? பாலாரிஷ்டம் கணக்கா அப்படியே அமுக்கி போடுது .  அப்படியே வெளி வந்தாலும் பேர் சொல்றது மலையா இருக்கு,

பத்து ரசிகன் வந்த இடத்துல ஒத்தன் தான் வரான். வராத அந்த 9 பேர் டிக்கெட் காசையும் வந்த ஒத்தன் தலையில போட்டு ஓட்டிக்கிட்டிருக்காங்க.

ஏதோ அந்த ரைட்ஸு /இந்த ரைட்ஸுன்னு ரத்தம் ஏத்தி /ஆக்சிஜன் கொடுத்து தியேட்டர்ல போட்டு வச்சாலும் வினியோகஸ்தருங்க அத்தனை கோடி போச்சு இத்தனை கோடி போச்சுன்னு லந்து . அந்த பஞ்சாயத்தெல்லாம் ஒரு ட்ராக்.

சினிமா துறையே ஐசியுல கிடக்கு.  இந்த கால கட்டத்துல இந்த ரசிகாள் வேற செமயா கடுப்பேத்தறாய்ங்க. ஊரு நாட்ல வேற பிரச்சினையே இல்லாத மாதிரி மோஷன் போஸ்டருக்கு ஒரு லொள்ளு ,டீசருக்கு ஒரு அலப்பறை .மிடியல.

விஜய்ணா ஸ்கூல் வேற . அவருக்கு எப்படியாச்சும் ரஜினி இடத்தை பிடிச்சுரனும்னு ஒரு அரிப்பு. ரஜினியாச்சும் சொல்லிக்கிறாப்ல ஒரு தரம் வாய்ஸாவது  கொடுத்தாப்ல.

விஜய்ணாவும் கொடுத்தாரு. எப்போ ? விரையை நசுக்கின பிறவு நசுக்கின விரையை மூடிக்கிட்டு வீடியோல்லாம் போட்டு மன்னாப்பு கேட்டு ..அணில் சேமியா ..அடச்சே அணில் கணக்கா ஆட்டுவம்னு மானங்கெட்டு நாலு காலும் தூக்கினதெல்லாம் மறந்து போயிருமா என்ன?

அஜித் ஸ்கூல் கொஞ்சம் டிஃப்ரன்ட். பில்டப்பே இல்லாத மன்சன்னு ஒரு பில்டப்பு .அன்பு செழியன் கிட்டே தொங்கினதெல்லாம் ரசிகாளுக்கு தெரியாது போல.கலைஞர் ஃபங்சனுக்கு கட்டாயப்படுத்தி கூப்டதா லைவ்ல லொள்ளு. மானமுள்ள மன்சனா இருந்தா கட்டாயப்படுத்தின அதே நிமிட் ப்ரஸ்ஸை கூப்டு சீறியிருக்கோனம். அதை விட்டுட்டு ஏதோ ஸ்டாப்பிங்ல முலைய அழுத்தினா பஸ் ஸ்டாண்டுல வந்து கூப்பாடு போட்ட மீ டூ கேஸ் மாதிரி சீன போட்டவர புலி சிங்கம்னு பில்டப் ஏத்துற ரசிக குஞ்சாமணிகளை என்ன சொல்ல?

மொத 100 படம் கூட ரீச் ஆகல .அதுக்குள்ள ரெம்ப ஓவர் பில்டப்பு. இதான் கடுப்பாக்குது.  (இவிக கலை திறமைகளை வீடியோவுல சொல்லியிருக்கன்.ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்)

அஜீத் கதை இன்னம் கொஞ்சம் டிஃப்ரன்ட். வரலாறு என்பது வர்க போராட்டங்களின் வரலாறேன்னு மார்க்ஸ் சொல்லி வச்சிருக்காரு.ஆனால் இந்தியாவில் வர்க போராட்டம் மட்டுமில்லை. வர்ண போராட்டமும் ஊடு பாவா நடந்துக்கிட்டே இருக்கு .

ஆரியம் –திராவிடம்னும் சொல்லலாம். பார்ப்பனர் –பார்ப்பனரல்லாதார் போராட்டம்னும் சொல்லலாம்.

ஆரியம் ரெம்ப தெளிவா இருக்கும். ஆட்டக்காரன் கிடைச்சா அவன் எவ்ள சோனியா இருந்தாலும் டோனி கணக்கா பில்டப் பண்ணும். (ஆட்டக்காரன் கிடைக்கலன்னா  நம்ம ஆட்டக்காரனையே ஓன் பண்ணிக்கும் –எம்.எல்.ஏ இல்லாத ஸ்டேட்ல பாஜக ஆட்சி அமைக்குதே அப்படி )

ஜெ டிக்கெட் போட்ட சமயம் ஒரு வதந்திய பரவலா கிளப்பி விட்டானுவ. பாட்டீக்கா உயில் எழுதி வச்சிருச்சாம். இவரு தான் வாரிசாம்.  இவனுவ கொடுக்கிற பில்டப்லாம் நெஜமா இருந்திருந்தா தல என்ன பண்ணியிருக்கனும்? இதெல்லாம் வதந்தி ஆள விடுங்கனு தெறிக்க விட்டிருக்கனும்.ஆசை யாரை விட்டுது ?

இத்தனை கருமத்துக்கும் மூலம் வாத்யாரு. ஆக்சுவலாயிட்டு அவரு ஒரு பூட்ட கேஸு.ஏதோ கலைஞர் கூட சகவாசம் வச்சுக்கிட்டதால –அவர் ஒரு ஸ்டார் ரைட்டரா இருந்த தால ரயிலு பட்டா ஏறிருச்சு.

அண்றைய திமுக இளைஞர்கள் எம்.ஜி.ஆர் படம் ஓடும் தியேட்டர் வாசலில் நின்று கொண்டு கொடுத்த பில்டப்லாம் இன்னய தலைமுறைக்கு எப்படி தெரியும்?

வாத்யாராச்சும் முக்காவாசி இன்டோர் ஷூட் /இல்லின்னா தன் மூஞ்சி மொவம் தெரியாத அவுட் டோர்ல ஷூட்டு / செட்ல சீக்ரசின்னு “ஒவ்வொரு செகன்டையும் அவரா ப்ளான் பண்ணி “வந்தாப்ல .

இந்த ரெண்டு டிக்கெட்டுக்கும் அந்த காஷஸ் கிடையாது. அன்னைக்காச்சும் சினிமா பார்க்கிறவிக சினிமாவ  நெஜம்னு நம்பற அளவுக்கு டெக்னாலஜி குதிரை கொம்பா இருந்த்து. இன்னைக்கு ஜஸ்ட் ஒரு மொபைல் ஆப்லயே மேட்டர் முடிஞ்சு போகுது.

இந்த காலகட்டத்துல அவனவன் ஒரு ட்ரான்ஸ்ல இருந்துக்கிட்டு பித்து பிடிச்சாப்ல பிட்ட ஓட்டறது அவனுவளுக்கும் நல்லதில்ல. மேற்படி பிம்பங்களுக்கும் நல்லதில்லை.

ஊதுற சங்கை ஊதி வச்சுட்டம். திருந்தினா செரி .

 

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *