குருப்பெயர்ச்சி பலன் 2018 -19 (பகுதி1)

அண்ணே வணக்கம்ணே !

குருப்பெயர்ச்சி பலன் போட்டாத்தான் உங்களை ஜோசியராவே ஏத்துப்பம்ங்கறாய்ங்க சனம் .ஆகவே தொடங்கியிருக்கேன். குருப்பெயர்ச்சிக்குள்ள முடிச்சுரலாம் தானே?

தற்போது துலா ராசியில் சஞ்சரிக்கும் குரு 2018, அக் 12 முதல் விருச்சிகத்தில் சஞ்சரிக்க உள்ளார்.துலாம் என்பது உலகியல் சுகங்களை சுட்டும் சுக்கிரனுடைய ராசி. குரு என்பது அரசை காட்டும். இது நாள் வரை விருந்து -விழா -புதிய வண்டி வாகனம் என்று சுகித்திருந்த ஆட்சியாளர்களுக்கு ஆப்பு ஆரம்பம் என்று சொல்லலாம்.
குரு கிரகம் யுத்த காரகனாகிய செவ்வாயின் ராசியான விருச்சிகத்துக்கு வருவது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நல்லதல்ல.

மேலும் நவ.12 முதல் டிச.11 வரை குரு அஸ்தமனம் வேறு ஆகிறார். இது அரசுகள் உள்ளூர் தலைவர்களை பெரிதும் நம்பியாக வேண்டிய நிலையை ஏற்படுத்தலாம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தூங்க முடியாத காலம் இது.
2019 மார்ச் 10 முதல் குருவின் வக்ர சஞ்சாரம் ஆரம்பம். அரசின் செயல்பாடுகளில் தலைகீழ் மாற்றம் ஏற்படும்.
நிற்க இந்த குரு பெயர்ச்சி 12 ராசிக்காரர்களுக்கும் என்ன விதமான பலன் தரும் என்று பார்த்துவிடலாம்.

மேஷம்:
இவர்களுக்கு குரு 9/12 க்குடையவர் கடந்த காலத்தில் 7 ல் இருந்து வந்ததால் வாழ்க்கை துணையால் சில விரயங்கள் ஏற்பட்டாலும் அவராலேயே சொத்து/முதலீடுகள் /அல்லது அவற்றால் கிடைக்க வேண்டிய பலன் /வட்டி/வாடகை இத்யாதி காப்பாற்றப்பட்டிருக்கும்.

இவர் 2018, அக் 12 முதல் 8 க்கு வருவதால்- இவர் 9 க்குடையவர் என்ற வகையில் மிச்சம் மீதி இருக்கும் சேமிப்பு/கையிருப்பு கரையும். கடன் வாங்கியும் சுப காரியம் செய்யவேண்டி வரலாம். கோவில் குளம் என்று செல்கையில் சிறு விபத்து /பொருள் இழப்பு நடக்கலாம்.

இவர் 12 க்குரியவராகவும் இருப்பதால் செலவுகள்/தூக்கம்/உணவு / வீண் விரயங்கள் குறையும்.
நவ.12 முதல் டிச.11 வரையிலான குரு அஸ்தமன காலத்தில் வாரிசுகளுக்கு கண்டம் /தங்களுக்கு அவப்பேர் / அதிர்ஷ்டகுறைவு /தற்கொலை நினைவுகளுக்கும் வாய்ப்புண்டு.

2019 மார்ச் 10 முதல் குருவின் வக்ர சஞ்சாரம் ஆரம்பம் ஆவதால் ஆரம்பத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சொன்ன பலன் தலைகீழாய் மாறுவதோடு வயிறு இதயம் தொடர்பான சிக்கல்களும் ஏற்படலாம் டேக் கேர்.

ரிஷபம்:
குரு உங்களுக்கு 8/11 க்குடையவர் .இவர் 6 ல் இருந்து 7 க்கு மாறுவதால் வாழ்க்கை துணையுடன் சச்சரவுகள் பிரிவுகள் தோன்றலாம். அதே நேரம் அவரிடம் இருந்து பரிசுகள் இன்ப அதிர்ச்சிகளையும் எதிர்ப்பார்க்கலாம்.

கடந்த காலத்தில் தீராமல் இருந்த கடன் தீரலாம். அடகு வைத்திருந்த நகை மீட்கப்படும்.உங்கள் பிடிவாதம் குறைந்து இறங்கி போய் சமாதானம் பேசலாம். ஒரு ஆண்டு காலமாய் அடங்கி இருந்த நோய் குறிகள் மீண்டும் தோன்றலாம்.

நவ.12 முதல் டிச.11 வரையிலான குரு அஸ்தமன காலத்தில் (4- 7) உங்கள் வாழ்க்கை துணையிடம் மதர்லி ரிசீவிங் –ஃபாதர்லி கண்டிப்புகள் வெளிப்படும்.

2019 மார்ச் 10 முதல் குருவின் வக்ர சஞ்சாரம் ஆரம்பம் ஆவதால் ஆரம்பத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சொன்ன பலன் தலைகீழாய் மாறுவதோடு வயிறு இதயம் தொடர்பான சிக்கல்களும் ஏற்படலாம் டேக் கேர்.

(கு.பெ பலன் அடுத்த பதிவிலும் தொடரும்)

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *