புலம்பல் : 1

அண்ணே ! வணக்கம்ணே !

2000-2009- காலகட்டத்துல தினம் தவறாம பதிவு போட்டுக்கிட்டிருந்த பார்ட்டி – அது வாரத்துக்கு ஒன்னாகி இப்ப மாசத்துக்கு ஒன்னாயிருச்சு . இத்தனைக்கும் இப்ப கூகுள் ஆட்சென்ஸ் வேற அப்ரூவ் ஆகியிருக்கு. போட்டு தாக்கினா நம்ம ஆல் இண்டியா டூருக்கு தேவையான பிரச்சார வாகனத்தை ஏக் தம் வாங்க முடியாட்டியும் கு.பட்சம் கடனுக்கு ஒரு வேன் வாங்கி –அதை மொபைல் புக் ஸ்டோரா மாத்தலாம் . மாசா மாசம் தவறாம தவணைய கட்டலாம். ஒரு அஞ்சு வருசத்துக்கு பிறகாவது மேற்படி பிரச்சார வாகனத்தை வாங்கிரலாம்.

ஆனாலும் மிடியல. ச்சும்மா நம்ம ஃப்ளாஷ் பேக்ஸை வச்சு கூட ஓட்டலாம். லேசா ஜோசியத்தையும்/மனவியல் /பாலியலை தொட்டுக்காட்டிக்கிட்டே போனா சனத்துக்கும் ஊஸ் ஆகும். ஆனாலும் மிடியல.

செரி ஃபேஸ்புக்ல வேகமா இயங்கறம்னு ஒரு ஆறுதலாவது இருந்தது. அதுவும் இப்ப இல்லை. எல்லாத்தையும் கொட்டி கவுத்தாச்சு. (மேட்டரை சொன்னேன்) எல்லாத்தையும் தொகுக்கலாம் பார்த்தா அதுவும் மிடியல.

மிந்தி எல்லாம் ரெண்டு விதமான ஒர்க் இருக்கும். மனசு என்னதான் முரண்டு பிடிச்சாலும் எப்படியோ பேர் பண்ணிருவம். இப்ப ? ஊஹூம். மெக்கானிக்கலா ஒர்க் பண்ற கப்பாசிட்டி சுத்தமா போயிருச்சசு .

பேசிக்கலா நம்ம கிட்டருந்த ஒரே தெறம கம்யூனிக்கேஷன் தான் .அதுவே சொதப்ப ஆரம்ப்ச்சிருச்சு. கலைஞர்100 கவிதை தொகுப்புல ப்ரூஃப் ரீடிங்குல ஒரு டஜனுக்கு மேல கோட்டை விட்டிருக்கன். ( அச்சகத்துக்கு காசு போட்டாச்சு .மேட்டர் அனுப்பியே ஆகனும்ங்கற நிலை )

இத்தனை காலம் பார்ட் டைமா இயக்கிக்கிட்டிருந்த சக்தி என்னை தன் முழுக்கட்டுப்பாட்டுல எடுத்துக்கிட்டுதோன்னு ஒரு சந்தேகம். என்னதான் பால்யத்திலிருந்தே சித்தம் போக்கு சிவன் போக்குன்னு இருந்திருந்தாலும் –மாஸ்டர் பீஸுக்கு தான் அந்த சக்தியோட பிரவாகம் தேவை. மத்த படி எப்படியோ பேர் பண்ணிருவன்.

நம்ம சகல வீர –தீர –பராக்கிரமங்களும் ஏறுனா ரயிலு இறங்கினா செயிலுன்னு இருந்திருந்தாலும் இப்படி ஒரு நிலை வந்ததே இல்லை.

ஏதோ ஃபௌண்டேஷன் ஸ்ட் ராங்கா போட்டு தொலைச்சதால பொளப்பு- பொருளாதார நிலையில் இன்ஸ்டெபிலிட்டி இல்லையே தவிர மனதளவில் –உடலளவில் பயங்கர வேரியேஷன் இருக்கு .

வயசு –ஹார்மோன் குளறுபடி காரணமா ? இது டெம்ப்ரவரியா அல்லது இனி இப்படித்தானா? புரியல.

ஆனால் ஒன்னு தற்சமயம் நடப்பு ராகு தசை –ராகு புக்தி . பத்துல ராகு இருக்கிறதால நாம
ஒரு ப்ரொசிஜர் படி மூவ் பண்ணா நிச்சயம் ஊத்திக்கும். சகட்டு மேனிக்கு ஃபௌல் ப்ளே பண்ணனும்..டக்கால்ட்டி பண்ணனும்.ஆனால் ஜன்ம குரு விடமாட்டேங்கிறாரு. குற்ற உணர்ச்சி வந்துருது.

எது எப்படி போனாலும் சின்ன சின்ன பதிவாவாச்சும் எதையோ ஒன்னை போட்டுக்கிட்டே இருக்கனும்.ஒருவர் ஆன்லைன் ஜோதிட வகுப்புகளை டெக்ஸ்டா தந்திருக்கார். அதை மேக் அப் பண்ணி பதிவு செய்யனும். இன்னொருவர் நம்ம பதிவுகளை எல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணி மொத்தையா தந்திருக்கார் .அதையும் ஒரு வழி பண்ணனும்.

நம்ம லட்சியமா ரெம்ப பெருசு .ஒர்க் அவுட் ஆனா நம்ம வாழ்க்கையே சரித்திரம் ஆயிரும். இந்திய துணை கண்டமே சொர்க பூமி ஆயிரும்.ஆகனும். பார்ப்பம்

2 Replies to “புலம்பல் : 1”

பானுகுமார்

13/09/2018 at 7:36 pm

ஹார்மோன் மாறுதலெல்லாம் ஒரு காரணமே இல்ல பாஸ்.ஒரே மாதிரி வேலைகளை தொடர்ந்து செய்து வருவதினால் வரும் மனத்தடை.மேலும் உங்கள் மனோ வேகம் மிக அதிகம்(ஐ மீன் எண்ணங்களின் உத்வேகம்)ஆனால் சூழ்நிலை அதற்கு ஈடு கொடுப்பதில்லை.ஈஸியாய் எடுத்துக் கொள்வது போல் தோன்றினாலும் உள் மனது சோர்ந்து போகிறது.கொஞ்சம் ஃபிரியா உடுங்க பாஸ்.ஜீபூம்பா போல வேற சப்ஜட்டுக்கு மாறி ரிலாக்ஸ் பண்ணுங்க.ஜோதிட பலன் கொஞ்சம் குறைங்க.அடுத்தவர்களின் கர்மாவை சீண்டாமலிருங்களேன் கொஞ்சநாள்….oo

Reply

    S Murugesan

    14/09/2018 at 12:44 am

    Well said !
    தெய்வாதீனமா சம்பந்தமே இல்லாம வீடியோ எடிட்டிங்ல ஆர்வம்-லைட்டிங் /க்ரீன் ஸ்க்ரீன்னு டைவர்ட் ஆனதுல நேரம் வீணானாலும் மைன்ட் பூஸ்ட் ஆயிருச்சு. மறுபடி அந்த துறு துறு வந்திருக்கு. வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி .

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *