செஞ்சோற்றுக்கடனும் -வரலாற்று கடமையும்

அண்ணே வணக்கம்ணே !
இந்த அரசியல் ஆர்வம்ங்கறது ஒரு வகையில எனக்கு நானே வச்சுக்கற ஆப்பு . அதுவும் ஆந்திர அரசியல்னாலாச்சும் நாளைக்கோ மிக்கா நாளைக்கோ ஒரு கவுன்சிலராவலாம் / லக்னத்துல உள்ள உச்ச குரு வேலை செய்தாச்சுன்னா எம்.எல்.ஏ/சி.எம் கூட ஆகலாம்.

இந்த தமிழக அரசியல்ல என்ன வெங்காயம் செஞ்சோற்றுக்கடன்? வரலாற்றுக்கடமைன்னு கேப்பிக. (சொல்லிர்ரன் –எனக்கு நானும் சொல்லிக்கனும்ல?)

செஞ்சோற்றுக்கடன்:
ஒலக வரலாறை கி.மு-கிபின்னு பிரிக்கிறாப்ல ஆந்திர அரசியல் வரலாற்றை என்.டி.ஆருக்கு முன் –என்.டி.ஆருக்கு பின் –இப்படி பிரிக்கலாம்.என்.டி.ஆருக்கு முந்தி இருந்த அரசியலே வேற.அந்த அரசியலுக்கும் வெகுசனங்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது .பெருந்தலைவர்கள்-தலைவர்கள் –குட்டித்தலைவர்களோட அரசியல் முடிஞ்சுரும்.

என்.டி.ஆர் வந்த பிறவுதான் அரசியலே மக்கள் மயமானது. பெரிய பெரிய ரெட்டி நாயுடுல்லாம் வாக்காளனோட தாவாங்கட்டைய பிடிச்சு கெஞ்சி கூத்தாடி ஓட்டு வாங்க வேண்டி வந்தது . அவரோட ஒற்றை முழக்கம் “சுயமரியாதை”தான். (இது பெரியார் டிப்பார்ட்மென்ட்)

என்னதான் “தேவுடு”வா இருந்தாலும் அவாள வைக்க வேண்டிய இடத்துல வச்சாரு .திருப்பதி கோயில்ல மிராசி சிஸ்டத்துக்கு சங்கு ஊதினாரு .கட்சி பதவிகளும் – எம்.எல்.ஏ /எம்பி டிக்கெட்டுகளும் மொத முறையா எந்த லாபியிங்கும் இல்லாம எஸ்.சி/எஸ்டி/பிசி அதுலயும் ஏழை பாழைக்கெல்லாம் “பொசிய” ஆரம்பிச்சது. டாக்சி டிரைவர் / கண்டக்டர்லாம் மக்கள் பிரதி நிதிகள் ஆனாங்க.(இது பெரியார்-அண்ணா-கலைஞர் வழி வந்த சமூக நீதி )

படக்குனு ரெண்டு ரூவாய்க்கு கிலோ அரிசின்னாரு (இது அண்ணாவோட டிப்பார்ட்மென்ட்) தெலுங்கு ஆட்சி மொழின்னாரு /திராவிட பல்கலை கழகம்னாரு /பெண்களுக்கு சொத்துரிமை / பெண்கள் பல்கலை கழகம்……எல்லாம் எங்கேயோ கேட்டகுரலா இருக்குல்ல?

மேட்டர் என்னடான்னா பாஸ் . சென்னை வாசி .சென்னை தண்ணி குடிச்சு வாழ்ந்தவன்னு சொல்லித்தானே தெலுங்கு கங்கை திட்டம் மூலம் தண்ணி தந்தாரு ? அண்ண காரு தண்ணிய மட்டும் குடிக்கல போல /உங்க அரசியலையும் சேர்த்தே குடிச்சிருக்காருங்கோ !

என்.டி.ஆருக்கு முந்திய அரசியல்தான் இன்னைக்கும்னா தாளி ..நம்மை எவனும் சீந்தவே மாட்டான்.அப்படியே சீந்தினாலும் அந்த பாணி அரசியல்லாம் நம்மால ஆவறதில்லை பாஸ் !

பிற்பாடு வந்த ஒய்.எஸ்.ஆர் அப்டியே என்.டி.ஆர் ப்ரோக்ராம்ஸை அடாப்ட் பண்ணி அப்டேட் பண்ணி தூள் பண்ணாரு. இனி எந்த வி.ம.ம வந்தாலும் அதே ரூட்டுல போக வேண்டியதுதான்.

நமக்கா அந்த ரூட்டு நம்ம கால் சட்டை பருவத்துலருந்தே ருடீ ஆயிருச்சுல்ல. ஆக இங்கே எனக்கு அரசியல் எதிர்காலம்னு ஒன்னிருந்தா அது என்.டி.ஆர் –ஒய்.எஸ்.ஆர் பேர சொல்லிக்கிட்டிருக்கிறதால தான் உருவாகனும்.
அந்த என்.டி.ஆருக்கே ரூட்டை போட்டு கொடுத்தது பெரியார்-அண்ணா-கலைஞர் தானே? அவியளுக்கும் செஞ்சோற்று கடனை தீர்க்க வேண்டிய கடமை இருக்கா இல்லையா?

இது மட்டுமில்லிங்ணா1990 மார்ச்-ல இருந்து 2009 மே வரைக்கும் நம்ம “கலைக்கு” ஆதரவு கொடுத்து சோத்த போட்டது ஆந்திர மக்கள் தானே? அவிய என்னமோ நம்ம சோசியத்துக்கு தேன் ஃபீஸ் கொடுத்தாய்ங்க. பலன் சொல்லியாச்சுன்னா கணக்கு பைசல் ஆயிருது (அவிக வ்யூல) ஆனால் என் வ்யூல நான் அவியளுக்கு கடன் படறேன்.

சோசியத்துல மேக்ரோ லெவல் சொல்யூஷனுக்கு வாய்ப்பு ஏதுங்ணா ஒரு பெட்டர் கவர்னன்ஸ் கிடைச்சாச்சுன்னா மேக்ரோ லெவல் சொல்யூஷன் சாத்தியம் தானே? அதுக்காவ சனத்துக்கு எது பெட்டர் சாய்ஸா இருக்கும்னு பார்த்து அந்த கவர்ன்மென்ட் வரதுக்கு ஏதோ அணில் கணக்கா கத்த வித்தையை எல்லாம் இறக்கறதும் மேற்படி செஞ்சோற்று கடன்ல ஒரு அங்கம் தான்.
______

அடுத்து தமிழக அரசியலிலான நம்ம ஆர்வம் /அலப்பறைகள் பத்தி சொல்லித்தானா புரியனும்? தமிழ் சனம் நமக்கு கொடுக்கிற ஃபீஸுக்கு பலன்-பரிகாரம்னு சொல்லியாச்சுன்னா மேட்டர் ஓவருதான் (அவிகள பொருத்தவரை )
ஆனா எனக்கு ?

_____

அடுத்து வரது வரலாற்று கடமை .விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்னுல ஒரு ஆசாமி பர்ஃபெக்டா ஒரு மேட்டரை சொன்னாரு .

சுதந்திரம் –இறையாண்மை –ஜன நாயகம்- ஒற்றுமை – சுயமரியாதை – சமத்துவம் –சகோதரத்துவம்-சமூக நீதி –அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இவை தான் மானுட குலத்தை செழிப்பாக்கும் –வளமாக்கும் –வலுவூட்டும் .

இந்த 8 மேட்டரையும் ஆமை வேகத்துலயாவது சாதிச்சு காட்டியது திராவிட இயக்கம் தான். (கட்சிகள்னு நான் சொல்லல/அதிமுகங்கறது திராவிட இயக்க பரிணாமத்துல ஒரு ம்யூட்டேஷன் தாங்கறது என் கருத்து )
குறைந்த பட்ச வரலாற்றுப்புரிதல் /மானுடத்தின் மீதான அசைக்க முடியாத கருணை அடிப்படையில் அரசியல்ங்கறது –அதுலயும் திராவிட அரசியல்ங்கறது வரலாற்று கடமை தானே?

செஞ்சோற்று கடனும் தீர்க்காம – வரலாற்று கடமையையும் ஆத்தாம வெறுமனே கல்லா கட்டிக்கிட்டிருந்தா நானும் மன்சன்னு எப்பூடி சொல்லிக்க முடியும்?

மொதல்ல மன்சனா இருந்து மிருகமா தாழ்ந்துராம –அப்படி தாழ்ந்துராம இருக்கவே தேவ நிலைக்கு உசர ட்ரை பண்றது தானே வாஸ்தவமான ஆன்மீகம்?

சர்வே ஜனா சுகினோ பவந்து

எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே; நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் …

ஈஸ்வரோ மனுஷ்ய ரூப்பேணா

கடவுளை மற மனிதனை நினை

மக்கள் சேவையே மகேசன் சேவை

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்
-அண்ணா

சமாஜமே நா தேவாலயம் –பேத ப்ரஜலே தேவுள்ளு
-என்.டி.ஆர்

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *