அனுபவஜோதிடம்: 9 (ராசி சக்கரமும் -பிறவிசக்கரமும்)

அண்ணே வணக்கம்ணே !
ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்ங்கற பேர்ல நாம யு ட்யூப்ல “ஆத்தின” உரைகளை நண்பர் சரவணன் எழுத்தாக்கி தர அதை வச்சு இந்த தொடரை எழுதிக்கிட்டிருக்கன். எவ்ள பெரிய வித்வான் /வெல்வட்டா இருந்தாலும் பேசும் போது பல விஷயங்களை ஸ்கிப் பண்ணிர்ரம். நட்சத்திரங்கள் விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது .உரையை எழுத்தா வெளியிடும் போது பல சூட்சுமமான விஷயங்களை சேர்த்து எழுதினேன்.

இந்த ராசிகள் விஷயத்துல கூட அப்படி நிறைய மேட்டர் இருக்கு . பாட திட்டப்படி தரவேண்டிய டேட்டாவையும் அடுத்தடுத்த வகுப்புகள்ள தரேன். (கட் பேஸ்ட் தானே? ஆகவே கியாரண்டியா வரும்)
அதே சமயம் ராசிகள் விஷயத்துல ஒரு மேட்டரை சொல்லியே ஆகனும். நம்ம வாழ்க்கைங்கறது சிறுகதை இல்லிங்கோ .ஒரு மெகாசீரியல் மாதிரி .

ஒரு நடிகரோ/நடிகையோ டிக்கெட் போட்டாச்சுன்னா/ அல்லது லந்து கொடுத்து ப்ராஜக்ட்ல இருந்து நீக்கியாச்சுன்னா அவருக்கு பதில் இவர்னு புது ஆளை போடறதில்லையா அப்படித்தான் இதுவும். நம்ம வமிச விருட்சத்துல பல நூறு தலைமுறைகளுக்கு மிந்தி பிறந்து வாழ்ந்து முடிச்ச பார்ட்டியோட ரோலை நாம ப்ளே பண்ணிக்கிட்டிருக்கவும் வாய்ப்புண்டு.

அல்லது ஒரே நடிகன் /நடிகையை வச்சு ஒரு படத்தோட பார்ட் டூ எடுக்கறதில்லையா அப்படியும் நடக்கலாம்.
அல்லது அந்த கால பாய்ஸ் கம்பெனி மாதிரி ஒரே நாடகத்தை வெவ்வேறு ஊர்கள்ள போட்ட மாதிரியும் நடக்கலாம்.
ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு பிரத்யேகமான கிரக ஸ்திதிக்கு வெய்ட் பண்ணித்தான் பிறவி எடுக்குது . ஒவ்வொரு குழந்தையும் ஒரு பிரத்யேகமான கிரக ஸ்திதிக்கு வெய்ட் பண்ணித்தான் பிறக்குது .

இந்த பிறவி கடந்த பிறவியின் தொடர்ச்சியா இருந்தா தான் இந்த ப்ராசஸ்க்கு ஒரு அர்த்தம் . இல்லின்னா அனர்த்தம் தானே? படைப்பின் ஒழுங்கு ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கு. படைப்பின் அனர்த்தத்துக்குள்ள ஒரு அர்த்தம் ஒளிஞ்சிருக்கு.

இந்த பிறவிகளின் தொடர்ச்சிக்கு ஏதோ ஒரு லிங்க் இருக்கனும். நட்சத்திரங்களை பத்தி சொன்னது போலவே ராசிகளை பத்தி ஒரு சூட்சுமத்தை சொல்லப்போறன். நட்சத்திர மேட்டர்லயாவது யோக சாதனை – இஷ்ட தேவதை -பீஜ மந்திரம் தட்ஸால்

ஆனால் ராசிகள் மேட்டர்ல நம்ம கேரக்டரே அடங்கியிருக்கு. இந்த பிறவிகளின் தொடர்ச்சியை கணிக்க/பின்னோக்கி பார்க்க ஒரு சில “குன்ஸ்” எல்லாம் வச்சிருக்கன். (அங்கே இங்கே பீராய்ஞ்சதுதான்)

1.கர்ம காரகனாகிய சனி ஒவ்வொரு பிறவிக்கும் முன்னோக்கி நகர்வது
2.லக்னம்/ராசி முன்னோக்கி நகர்வது .

உதாரணமா இந்த பிறவியில என் லக்னம் கடகம். அடுத்த பிறவியில சிம்மம். கடகத்துக்கும் சிம்மத்துக்கும் இடையில ஒரு தொடர்ச்சி இருக்கனும்ல ? அது என்ன?

கடகம் ராசி சக்கரத்துல 4 ஆவது ராசி. இந்த பிறவியில என் வாழ்வின் அடி நாதம் தாய் ,வீடு,வாகனம்,கல்வி இத்யாதியா இருக்கு. அஃதாவது இவை பாசிட்டிவா அமைஞ்சாலும்/ நெகட்டிவா அமைஞ்சாலும் /இது தொடர்பான மெனக்கெடல் தொடர்ந்துக்கிட்டே இருக்கும்னு அருத்தம்.

அடுத்த பிறவியில ஒரு முன்னேற்றம் இருக்கனும் தானே? அதே சமயம் ஒரு தொடர்ச்சியும் இருக்கனும் தானே?
முன்னேற்றம்னா வீட்டை கட்டிக்கிட்டு அழாம புகழ் வேட்டையில சிக்கிர்ரது. தொடர்ச்சின்னா? அம்மா. இந்த பிறவியில எப்படி அம்மா கோண்டா இருந்தனோ /இதே சீக்வென்ஸ் அடுத்த பிறவியிலயும் தொடரலாம்.
_______
இந்த ஆங்கிள்ள சில விஷயங்களை சொல்லியிருக்கேன். பொறுமையா படிச்சு பாருங்க.இது தொடர்பா உங்களுக்கு எதுனா ஸ்பார்க் ஆனா கமெண்ட்ல சொல்லுங்க.

மேஷம்:
இந்த ராசிக்காரவுக ரொம்பவே சுறுசுறுப்பா இருப்பாக. எதிரி யாரு என்னனு பார்க்கமாட்டாக படக்குனு மோதிருவாங்க. ஒரு ப்ளான் இருக்காது. மளமளனு செயல்பட்டுகிட்டே போவாக ஒரு ஸ்டேஜ்ல திக்குதெரியாம நின்னுருவாக. பணம்,குடும்பம்,பேச்சு,வார்த்தை,சரசம்,சல்லாபம்,ரசனை, தீனி, நொறுக்குதீனி இதுக்கெல்லாம் இவிக லைஃப்ல இடமே இருக்காது. சதா தன்னை பத்தி, தன் முயற்சிகளை பத்தி,தன் முன்னேற்றத்தை பத்தியே சிந்தனை இருக்கும். இந்த சோம்பேறி உலகத்துல சுறுசுறுப்பா துடிப்பா இருந்த ஒரே காரணத்தால எதிரிகளை சம்பாதிச்சு லொள்ளுக்குள்ளாகி நாறியிருப்பாக . இவிக அடுத்த பிறவில ரிஷபராசிலதான் பிறக்க நினைப்பாங்க ஏன்னா………

ரிஷபம்:
இவிகளுக்கு பணம்னா உயிரு. இவிக நட்பு,விரோதம் எல்லாத்துக்கும் பணம்தான் காரணமா இருக்கும். கூடப் பிறந்தவுகளை கூட மறந்து குடும்பம் குடும்பம்னு மாடு மாதிரி உழைப்பாங்க. பேச்சுன்னா வெல்லம். நல்ல ரசனை இருக்கும். தீனின்னா முதல்ல நிப்பாங்க. சமையல் பக்குவம்லாம் மாஞ்சு மாஞ்சு சொல்வாங்க. செக்சுல நிறையவே கிழிக்கனும்னு நினைப்பாங்க ஆனா துரித ஸ்கலிதம் மொக்கையாக்கிரும். இதனால கூட கில்ட்டியால பெண்டாட்டி தாசர்களாயிருவாக. இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் உண்டு. பயம் இருக்கும்.. லேசான மிரட்டல் இருந்தாலே ஒடச்சி திருப்பிக்குவாங்க. ரிஸ்க் எடுக்கமாட்டாங்க. இவிக வாழ்க்கை செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருமே தவிர வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டாங்க. மாற்றத்தை விரும்பாத ராசி இதான்.

இவிக தான் அடுத்த ஜென்மத்துல மிதுன ராசில பிறப்பாங்க. ஏன்னா மிதுன ராசிக்காரவுக பணவிசயத்துல சூதாட்டத்தனமா இருப்பாங்க. சகோதரர்கள்,பயணங்கள் ,செக்ஸ் இதான் முக்கியத்துவம் வகிக்கும். பேச்சு மாறுவாக. குடும்பத்தை விட்டு ஈசியா பிரிவாக. தேவையிருந்தா மானாவரியா பேசுவாக. தேவையில்லன்னா முத்து உதிருமே தவிர பேச்சு வராது. பயங்கர ரிஸ்க் எல்லாம் ஃபேஸ் பண்ணுவாங்க.

இவிக அடுத்த ஜன்மத்துல கடக ராசில பிறப்பாங்க. ஏன்னா கடக ராசிக்காரங்க தாயையே சுத்தி சுத்தி வருவாக.( அன்போ விரோதமோ எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்டேதான். பெண்டாட்டிய கூட வேலக்காரிதனமாதான் பார்ப்பாங்க. வீடு வீடுனு வீட்டையே கட்டிக்கிட்டு அழுவாங்க. பிடிவாதமிருக்கும். மாற்றத்தை ஆரம்பத்துல எதிர்த்தாலும் பேஷா செட் ஆயிருவாங்க.

இந்த கடக ராசிக்காரங்கதான் அடுத்த பிறவில சிம்மராசில பிறப்பாங்க. ஏன்னா.. சிம்மராசிக்காரன் வீட்டு வேலைய கூட விட்டுட்டு ஊர் வேலைய செய்வான். வீட்ல இருக்கிறவக “அவனா அவன் தண்டத்தீனி தாண்டவராயன்”னுவாங்க. ஊர்ல இருக்கிறவகளோ அந்த தம்பியா நல்ல ஹெல்பிங்க் நேச்சரும்பாங்க. ஆனால் இவிகளுக்கும் செக்ஸ் மேல தணியாத ஆர்வமிருக்கும். அதே சமயத்துல தாய் மேல நல்ல மரியாதை வச்சிருப்பாங்க. தாய் சொல்லை தட்டாத தனயன்னா அது இவிகதான்.

கடக ராசில பிறந்து அட்ஜஸ்ட் ஆகியே வாழ்ந்த வாழ்க்கைக்கு கொயட் ஆப்போசிட்டா இந்த பிறவில கலகக்காரர்களா இருப்பாங்க. நம்பி வந்துட்டா உசுரை கூட கொடுத்து காப்பாத்துவாக. ஆனால் உலகம் இவங்களோட தன்னம்பிக்கைய ஆணவமாவும், தான குணத்தை திமிராவும், உதவும் தன்மையை இளிச்ச வாய்த்தனமாவும், பொதுவேலைல இறங்கறத உருப்படாத குணமாவும் ட்ரீட் பண்ணி ரொம்பவே நோகடிப்பாங்க. இவிக மனசுல வாரிசுகள் குறித்த அனேக கனவுகள் இருக்கும். ஆனால் இவிகளுக்கு ஆண்வாரிசு இல்லாம போகலாம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணேனு குழந்தை பிறக்கும் . அதுவும் நாமர்தாவா மாறி கவலைய குடுக்கும்

இப்படி நொந்து நூடுல்ஸ் ஆன பார்ட்டிகள்தான் அடுத்த பிறவில அண்டினவனை எல்லாம் எக்ஸ்ப்ளாயிட் பண்ற கன்னிராசில பிறப்பாங்க. கன்னிராசிக்காரவுக தங்களோட மித்ர துரோகத்தை நினைச்சு அடுத்த ஜன்மத்துல நட்புக்கு முக்கியத்துவம் தர்ர துலா ராசில பிறப்பாங்க. துலா ராசில பிறந்து நட்பு,காதல்,மனைவினு சுத்தி சுத்திவந்து நொந்து போனபிறகு அடச்சீ இந்த மென்மையான உணர்வுகளே வேணாம்னு ராசிச்சக்கரத்துல அஷ்டம ராசியான விருச்சிகத்துல பிறப்பாங்க.

விருச்சிக ராசியோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா.. இவங்களை சேட்டிஸ்ஃபை பண்ண கடவுளால கூட முடியாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைம்பாங்களே அப்படி சுற்றத்துல குற்றம் பார்க்கிறதும் தேள் கொட்டற மாதிரி அந்த குற்றங்களை பட்டியல் போடறதுமே இவிக வேலையா இருக்கும். இவிகளுக்கு வாழ்க்கை சூடும் சுவையுமா நகரனும்னா எதிரி இருக்கனும்.ஒரு எதிரி இருக்கிறவரை ரெம்ப சுறு சுறுப்பா இருப்பாய்ங்க. எதிரி ஒழிஞ்சதுக்கப்பாறம் ரெம்ப டீலாயிருவாய்ங்க.லைஃப்ல சொம்மாவே இருக்கமாட்டாய்ங்க. ரிஸ்க் எடுக்கிறது ரஸ்கு சாப்பிடற மாதிரி. இப்படியே உடம்பு,மனசு எல்லாத்தையும் ரணமாக்கிக்குவாய்ங்க. இப்படி வாழ்ந்த ஒரு பார்ட்டி சாகறச்ச என்ன நினைக்கும்? தூத்தெரிக்க.. இதெல்லாம் வேஸ்டுப்பா.. அடுத்த சான்ஸுனு ஒன்னு கிடைச்சா படிப்பு,வேலை,வெட்டி, பதவி, சொத்து ,சுகம்னு செட்டில் ஆயிரனும். உப்பு ஊறுகாய்க்கு உதவாத விவகாரத்துல இறங்கவே கூடாதுனு தான் நினைக்கும் ,

இவிகளுக்கு தனுசு ராசியில பிறக்கறது தான் பெஸ்ட் சாய்ஸா தோணும். எதிரியை நினைச்சே வாழ்க்கைய வீணாக்கினவுக இந்த பிறவில எதிர்காலத்தை நினைச்சே நாசமா போவாய்ங்க. கிடைச்சதை வச்சு அனுபவிக்காம முதலீடு பண்றது, சொத்தாக்கிறது, அதுல வில்லங்கம், சேமிக்கிறது அதுல வில்லங்கம்னு அல்லாடற பார்ட்டி யாருன்னு பார்த்தா அது தனுசு ராசியா தான் இருக்கும்.

இப்படி வாழ்ந்து எதையுமே அனுபவிக்காத பார்ட்டி சாகறச்ச என்ன நினைக்கும்? தத்.. இந்த தொலை நோக்கு ,தொலையாத நோக்கெல்லாம் பிராணத்துக்கு இம்சைய கொடுக்கிற ஐட்டமா இருக்கு அடுத்த ஜென்மத்துல தாளி “கருமத்தை செய் பலனை எதிர்பாராதே” ரேஞ்சுல வாழ்ந்துரனும்னு தான் நினைப்பாய்ங்க.. அவிகளுக்கு பெஸ்ட் சாய்ஸ் மகரம்.

ஏன் உழைக்கிறோம் எதுக்கு உழைக்கிறோம் நம்ம உழைப்பின் பலன் ஆருக்கு போகுதுன்னு கூட தெரியாம உழைக்கிறவுக ஆருனு பார்த்தா மகர ராசிக்காரவுகதான். இவிக லாபத்தையே நோக்கமா கொண்ட கும்பராசியில பிறக்கிறதும் – ஒவ்வொரு வேலையிலயும் லாபத்தை எதிர்பார்த்தே நொந்து நூடுல்ஸ் ஆன பார்ட்டி இருக்கிற அழிக்கறதுக்குனு பிறக்கிற மீன ராசியில பிறக்கறதும் தர்க பூர்வம் மட்டுமில்லை . இட்ஸ் கொய்ட் நேச்சுரல்.

இங்கத்திக்கி பிறவிச்சக்கரம் முடியுதுனு கேள்விப்பட்டிருக்கேன்..

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *