திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள்

“கலைஞர்100 ” நூலுக்கு வாழ்த்துச்செய்தி கோரி

சித்தூர் (ஆந்திர மானிலம் )
2018 .ஜூலை,31

விடுனர்
சித்தூர் முருகேசன், எழுத்தாளர் -கவிஞர்,
20-447, அண்ணா சாமி தெரு,
மிட்டூர் ,சித்தூர் ஆ.மா

மாண்பு மிகு திமுக ச.ம .உறுப்பினர் அவர்களுக்கு ,

2014 முதல் இதுவரை 6 நூல்களை வெளியிட்டு வெற்றிகரமாக விற்பனையும் செய்து கொண்டிருக்கும் பதிப்பாளன் நான் .
மறைந்த என் தந்தையார் மாவட்ட கருவூல அதிகாரி .ஆனால் அவரது சொந்த நூலகத்தில் தான் எனக்கு பெரியார் -அண்ணா-கலைஞர் எல்லாம் கிடைத்தனர் . என் சித்தப்பா தீவிர திமுக அனுதாபி.ஆந்திர மானில அமைப்பாளராக இருந்த மறைந்த கே.எம்.எர்ரய்யா எங்கள் குடும்ப நண்பர் .

தற்போது என் வயது 51 என்றாலும் இணையத்தில் வலம் வரும் நவயுக இளைஞர்கள்- அறிவு ஜீவிகள்- நடு நிலையாளர்களை போலவே நானும் கலைஞர் மீது வலிந்து விமர்சனம் வைத்துக்கொண்டிருந்தவன் தான்.ஆனால் செம்பரம்பாக்கம் செயற்கை வெள்ளம் /அரசு இயந்திரம் ஸ்தம்பித்து நின்றமை – நிவாரண பொருட்களை தடுத்து ஸ்டிக்கர் ஒட்டுதல் இத்யாதி சம்பவங்கள் என் மயக்கத்தை தெளிவித்தன.

மானிலத்தின் உடனடி தேவை ஆட்சி மாற்றம் மற்றும் கலைஞரின் நிர்வாகத்திறமை என்று முடிவு கட்டி அது முதலே கலைஞர் ஆதரவு நிலையை மேற்கொண்டு இணையத்தில் முழு வீச்சில் இயங்கி வருகிறேன்.

கலைஞரின் 95 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர்100 என்ற தலைப்பில் 100+ குறும்பாக்களை முக நூலில் எழுதினேன்.அவை பெரும் வரவேற்பையும் பெற்றன. அவற்றை அழகுற வடிவமைத்து இணையத்திலும் உலவ விட்டுள்ளேன். அதனை கீழ் காணும் தொடுப்பை சொடுக்கி காணலாம்.

கலைஞர்100

இதனை அச்சாக்க வேண்டும் தமிழகமெங்கும் பரப்ப வேண்டும் என்று முடிவு கட்டியுள்ளேன். (ஏற்கெனவே நூல் பதிப்பில் அனுபவம் உண்டு என்பதால் எளிதாக அச்சாக்கிவிட முடியும்-ஆன்லைன் மூலமே விற்பனையும் அமோகமாய் செய்ய முடியும்)

இந்த நூலை தளபதியாரின் வாழ்த்து செய்தியோடு வெளியிட வேண்டும் என்பது ஆவல் . இது குறித்து ஏற்கெனவே தளபதியார் இல்லத்தை தபால் மூலம் தொடர்பு கொண்டும் நாளிதுவரை பதிலில்லை.

தாங்கள் சற்று ஆவன செய்து தளபதியாரின் வாழ்த்து செய்தி கிட்டும்படி செய்தாலும் சரி.குறைந்த பட்சம் தாங்களாவது வாழ்த்து செய்தியை அனுப்பினாலும் சரி .எப்படியும் ஒரு வாரகாலத்துக்குள் நூலை வெளியிட்டுவிட வேண்டும் என்பது என் ஆசை .ஆகவே தான் தாமதத்தை தவிர்க்க இந்த கோரிக்கையை வாட்சப் மூலம் அனுப்புகிறேன். தாங்களும் வாட்சப் மூலமே வாழ்த்து செய்தியை அனுப்பினால் நல்லது. ( தாமதத்தை தவிர்க்கலாம்)

நன்றி ஐயா !
தங்கள் உண்மையுள்ள,

சித்தூர் எஸ்.முருகேசன்

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *