அனுபவஜோதிடம்: 8 ( ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்)

அண்ணே வணக்கம்ணே !

கடந்த பதிவுல நட்சத்திரங்களை பல வகைகளில் வகைப்படுத்தப்பட்டிருப்பதை பற்றி சொன்னேன். நட்சத்திரம் ஆணா -பெண்ணா -அலியா / சவ்யமா அபசவ்யமா – நட்சத்திர குணம் தாமசமா? ராஜசமா? சத்வமா? என்பது எல்லாம் ஜாதக பலன் மீது எந்தளவு இம்பாக்ட் பண்ணும் ? இந்த வகைப்படுத்தலின் பயன் என்னன்னு அடுத்த பதிவுல சொல்றேன்னு ச்சூ காட்டியிருந்தேன்.

ஒவ்வொரு கிரகமும் ஏதோ ஒரு ராசியில நிற்கனும். அந்த ராசியிலான ஏதோ ஒரு நட்சத்திரத்துல சஞ்சரிக்கனும் தானே? அப்போ அந்த நட்சத்திரத்தோட நேச்சர் கிரகத்தோட பலனை பாதிக்கும் தானே?

சைக்கிள் ஓட்டி மேம்பால சரிவுல ஓட்டறதுக்கும் / யு டர்ன் அடிச்சு மேடேறி மிதிக்கிறதுக்கும் வித்யாசம் இருக்கு தானே? இங்கே கிரகம் சைக்கிளிஸ்ட். நட்சத்திரம்ங்கறது பாதை .

சவ்யம் -அபசவ்யம்ங்கற வார்த்தை உங்களுக்கு ரெம்ப “Odd” ஆ இருக்கும். நாமதேன் பன்மொழி வித்தகராச்சே. சமஸ்கிருதம் மோஸ்ட்லி தெலுங்கு மாதிரி தேன்.என்னப்பா எல்லாம் நல்லபடியா நடக்குதாங்கறதை தெலுங்குல “அந்த்தா சவ்யங்கா ஜருகுதூந்தி கதா” ன்னு கேட்பம்.

சவ்யம்ங்கற வார்த்தைக்கு எதிர்பதம் அபசவ்யம். மொதல்ல சாம்பார் -அடுத்து ரசம் -அடுத்து மோர் -கடைசியில பாயசம்னா அது சவ்யம்.

மொதல்ல பாயசத்துல ஆரம்பிச்சு சாம்பார்ல முடிச்சா அபசவ்யம். ஒரு கிரகம் சவ்ய நட்சத்திரத்துல சஞ்சரிக்குதுன்னா அது தர வேண்டிய பலனை அதும்பாட்டுக்கு வரிசையா கொடுத்துக்கிட்டே போகும். அபசவ்ய நட்சத்திரத்துல சஞ்சரிச்சா ? பலன் மாறும் தானே?

இதுமட்டும் இல்லிங்கோ இந்த நட்சத்திரங்களை எப்படி வகைப்படுத்தியிருக்காங்களோ /அப்படியே கிரகங்களை /ராசிகளை கூட வகைப்படுத்தியிருக்காங்க. நட்சத்திரம் -கிரகம் -ராசி இவற்றிற்கு இடையில் ஒத்திசைவு இருந்தா அந்த ரேஞ்சே வேற.

போன வருசம் ஒரு ஜாதகம் வந்தது. ஜாதகர் ஹோமோவா இருக்கலாமோன்னு குடும்பத்தாருக்கு சந்தேகம். ஆக்சுவலா எல்லா ஆண் பிள்ளையும் ஆரம்பத்துல மைல்டா ஹோமோவாத்தான் இருக்கும்

(பையன் பையனுங்களோடவே குலவிக்கிட்டு கிடப்பான்) எல்லா பெண் பிள்ளையும் லைட்டா லெஸ்பியனாத்தான் இருக்கும் ( பொண்ணுங்க பொண்ணுங்களோடவே குலவிக்கிட்டு கிடக்கும் -இது சைக்காலஜி .பெரும்பாலும் எல்லா ஆண்/பெண் குழந்தைகளும் உரிய வயசு / வாய்ப்பு கிடைக்கும் போது உள்ளுக்குள்ள ஒரு ட்ரிக்கர் ஆன் ஆகி சரியான ரூட்டை பிடிச்சுருவாய்ங்க. சிலர் கதை மட்டும் வேற.

ஆனால் ஜாதகத்தை வச்சு இதை எப்படி கன்ஃபர்ம் பண்றது ?

ஆண் கிரகங்கள் -ஆண் ராசியில -ஆண் நட்சத்திர சாரம் வாங்கியிருக்கா பார்த்தா பாதி பிரச்சினை ஓவர். அடுத்து ஆண் கிரகங்கள் பலம் பெற்றிருக்கா ?பெண் கிரகங்கள் பலம் பெற்றிருக்கா பார்க்கோனம் .இதுக்கு மாறா இருந்தா ? “அதே” தான்.

செரி தொடர் ரெம்ப டென்ஸா போயிட்டிருக்கு. கொஞ்சம் வாட்சப் தனமா சில விஷயங்களை தரேன்.

டிஸ்கி: இதெல்லாம் குத்து மதிப்பா -அந்தாசா சொல்றதுங்கோ .ஜாதகத்துல உள்ள கிரக ஸ்திதிகளை வச்சு இதெல்லாம் தலைகீழா கூட மாறும்.

இராசிகளுக்கான பொதுப்பண்புகள் :

மேஷ ராசிக்காரர்கள், அவசர குணம் உள்ளவர்கள்.
ரிஷப ராசிக்காரர்கள், மாற்றத்தை விரும்பாதவர்கள்.
மிதுன ராசிக்காரர்கள், காமம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள்.
கடக ராசிக்காரர்கள், பிடிவாதக்குணம் மற்றும் வீட்டின் மீது அதிக பற்றுக்கொண்டவர்கள்.
சிம்ம ராசிக்காரர்கள்,பெண்களுக்கு ஏற்றம் தரும்;ஆண்களோ தற்காலிகமா தேவைகள் நிறைவேறும் வரை மட்டுமே உழைப்பவர்கள்.
கன்னி ராசிக்காரர்கள், கடன் / நோய் / எதிரிகளின் பாதிப்பு அதிகம்.

துலாம் ராசிக்காரர்கள்,துரிதமாக முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள், வாழ்க்கையில் அபாயகரமான திருப்பங்கள் அதிகம்.
தனுசு ராசிக்காரர்கள், சேமிக்கும் குணம் அதிகமிருக்கும்.
மகர ராசிக்காரர்கள், பலன் எதிர்பாராது, உழைப்பர்
கும்ப ராசிக்காரர்கள்,பலன் குறித்த எதிர்பார்ப்பு அதிகம்
மீன ராசிக்காரர்கள், வாழ்க்கையில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும்.

குறிப்பு: படங்கள் சின்னதா இருக்கேன்னு பேஜார் ஆவாதிங்க. படத்தின் மேல் க்ளிக் செய்தால் பெரிதாக தெரியும்.

(தொடரும்)

வேண்டுகோள்:

நம்ம யோசனைகளை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதும் – அவர்கள் கிடைக்கப்பெற்றோம் -கோப்பில் வைத்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டு கேவலமாக காப்பியடித்து சொதப்பி கொண்டிருப்பதும் தெரியும் தானே? இதை பெரிய அளவில் பொதுவெளியில் கொண்டு செல்ல சேஞ்ச் ஆர்க் வலைதளத்தில் ஒரு புகார் மனுவாக பதிவிட்டுள்ளேன். அன்பு கூர்ந்து இங்கு க்ளிக் செய்து புகார் மனுவில் கையெழுத்திடவும்( அதாங்க க்ளிக் பண்றது )

4 Replies to “அனுபவஜோதிடம்: 8 ( ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்)”

sankar

29/07/2018 at 12:06 am

மிதுன ராசிக்காரர்கள் காமக்கொடூரர்கள்தானா?

Reply

  S Murugesan

  29/07/2018 at 12:46 am

  சங்கர் !
  டிஸ்கிய படிக்காம அவசரப்பட்டா எப்பூடி ? நான் நீங்க சொல்றாப்ல சொல்லலிங்களே..அவர்களுடைய உயர்வு/தாழ்வு , ஏற்றம் /இறக்கம் எல்லாத்துக்கும் காமம் மையப்புள்ளியா இருக்கும். தட்ஸால்.

  Reply

sankar

28/07/2018 at 11:42 pm

அய்யா மிதுனம் என்றாலே காமம் தானா? வேறு எதுவும் சிறப்பு இல்லையா ?

Reply

  S Murugesan

  29/07/2018 at 12:47 am

  சங்கர் !
  நிறைய இருக்கு. சகோதரர்கள்/சகோதிரிகள் /பயணங்கள்/ அட்வென்சர்ஸ்

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *