அனுபவஜோதிடம் : 5 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்)

அண்ணே வணக்கம்ணே !
இங்கே ஒவ்வொரு உயிரின் இறுதி இலக்கும் முக்தி தான். முக்தி = பிறவிச்சக்கரத்துல இருந்து விடுபடுவது. உங்க ஜாதகத்துல எல்லா கிரகமும் கேந்திர -கோணங்களில் இருந்தா உங்கள் செயல்களால் கர்மம் கூடாது . மற்ற எந்த பாவங்களில் கிரகங்கள் நின்றிருந்தாலும் அந்த கிரக காரக செயல்களால் கருமம் கூடும். பிறவிச்சக்கரத்தில் சிக்க வைக்கும்.

நம் ஒவ்வொருவரின் ஜாதகமும் நம் கருமங்களை ஒழிக்க ஏதுவான வாழ்வை தான் தரும். ஆனால் இடையில இந்த சூட்சுமம் தெரியாம “அய்யோ அம்மா . னு அலறியடிச்சு சாமி கிட்ட வாயிதா வாங்கறது / பரிகாரம் பண்றதுன்னு இந்த ப்ராசஸை டபுள் டிலே பண்ணிர்ரம்.

நாம சொல்ற பரிகாரங்கள் கொஞ்சம் டிஃப்ரன்ட் .கருமங்களை ஒழிக்க கிரகம் என்னெல்லாம் பண்ணனுமோ அதை எல்லாம் உங்க சமூக -பொருளாதார-குடும்ப வாழ்க்கை பாதிக்காம உங்களை கொண்டே செய்ய வச்சுரும்.
மத்தவிக சொல்ற பரிகாரம்லாம் வேற லெவல் .இரும்பை காய்ச்சி மோல்டுல ஊத்தற நேரத்துல அது மேல தண்ணி அடிச்ச கதைங்கோ .

ஏற்கெனவே கடந்த பதிவுகள்ள சொன்னாப்ல நட்சத்திரம்ங்கறது ஷார்ட் கட் ( கம்ப்யூட்டர் பரிபாஷை )ஒவ்வொரு நட்சத்திர( கூட்டத்)த்தோட அதிர்வுக்கும் சில எழுத்துக்களை உச்சரிக்கிறப்ப ஏற்படற த்வனிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதை கவனிச்சாய்ங்க. சந்திரன் ஒவ்வொரு நட்சத்திர கூட்டத்தினூடே சஞ்சரிக்கிறப்ப பிறக்கிற குழந்தைகள் ஒவ்வொரு விதமான குணாம்சங்களோட இருக்கிறதை கவனிச்சாய்ங்க.

ஒரு குழந்தை ஏன் குறிப்பிட்ட நட்சத்திரத்துலயே பிறக்கனும். புனரபி மரணம் புனரபி ஜனனம். உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பதை பார்த்தா இந்த பிறப்புகளுக்கு இடையில் ஒரு லிங்க் இருக்கனும். ஒரு நோக்கம் இருக்கனும். அது என்ன? ஒரு இலக்கை நோக்கின பயணம் இது. இந்த பயணம் தடையில்லாம நடக்கனும்னா அதுக்கு சில ஏற்பாடுகள் அவசியம். அதை அவிக செய்தாங்க.

ஒரு குழந்தை ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துல பிறந்தா அதனோட உடல்,மனம் ஒரு குறிப்பிட்ட எழுத்துக்களோட த்வனியை அதனோட அதிர்வுகளை ஏத்துக்கிட்டு வலுப்படறதை பார்த்துத்தான் இன்ன நட்சத்திரத்துல பிறந்த குழந்தைக்கு இன்ன எழுத்துல துவங்கறாப்ல பேர் வைக்க சொன்னாய்ங்க.

இன்ன எழுத்துல துவங்கற பேரை கொண்ட பெண்ணை கண்ணாலம் கட்டனும்னு தீர்மானிச்சாய்ங்க. அதுமட்டுமில்லிங்கண்ணா இன்ன நட்சத்திரத்துல பிறந்து இன்ன எழுத்துல துவங்கற பேரை கொண்டவன் இன்ன எழுத்தோட “ம்” சேர்த்து (பீஜம்) ஜெபிக்கனும்னும் ஒரு ஏற்பாடு பண்ணாய்ங்க. ஏன்னா அந்த எழுத்தைத்தான் அவன் கடந்த பிறவில ஜெபிச்சிருக்கக்கூடும்னு அவிக ஆராய்ச்சில கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு ரகசிய விஞ்ஞானம்.

பீஜ ஜெபம்:
அந்த காலத்துல கை பம்பு இருக்கும். தண்ணிய மேல இழுக்கனும்னா மொதல்ல கொஞ்சம் தண்ணிய பம்புல விட்டு அடிப்பாய்ங்க. அதை போன்றது தான் நாம மேன்யுவலா ஜெபிக்கிறதும்.

ஆக்சுவலா மந்திர ஜெபம் நமக்குள்ளே ஏற்கெனவே நடந்துக்கிட்டிருக்கும் பாஸு.ஆனா நாமதேன் உணர்ரதில்லை .ஏ.ஆர் ரஹ்மான் மியூசிக்கை கேட்டுக்கிட்டிருக்கும் போது காற்றில் வரும் கீதம் செவிக்கு உறைக்குமா என்ன?
ஆக மேன்யுவலா மந்திரங்களை ஜெபிக்க ஆரம்பிச்ச சில காலத்துல அந்த மந்திர ஜெபம் “தானா” நடக்கனும். காலாகாலத்துக்கும் நான் தான் “வலிந்து” ஜெபிக்கிறேன் என்றால் இத்தனை கால மந்திர ஜெபத்தின் போது உங்க மனசு அங்க இல்லைனு அருத்தம்.

பீஜம் எப்படி வேலை செய்யும்:
யாராவது யாரையாவது சக்கையாக ஏமாற்றிவிட்டால்..ஏமாந்தவர் தன் ஏமாந்த கதையை அடிக்கடி நினைத்துப்பார்ப்பார். ஒவ்வொரு முறையும் தன் ஏமாந்த கதையை நினைத்து “ஹும்” என்ற ஒலியுடன் பெருமூச்சு விடுவார். ஹும் என்பது சண்டி பீஜம். பீஜங்களை தொடர்ந்து உச்சரிக்கும் போது அதன் அதிர்வு மூலாதார சக்கரத்தினை மோதுகிறது. இது தொடர்ந்து நடை பெறும்போது குண்டலி சக்தி விழிக்கிறது அடுத்த‌ நிலையான‌ ஸ்வாதிஷ்டான‌ ச‌க்க‌ர‌த்தை நோக்கி முன்னேறுகிற‌து. அப்போது பூமி தொட‌ர்பான‌ பொருட்க‌ள் மீதான‌ க‌வ‌ர்ச்சியிலிருந்து ம‌னித‌ ம‌ன‌ம் விடுத‌லை பெற்று அவ‌ற்றி‌ன் மீது ஆதிப‌த்ய‌ம் பெறுகிறது. பூமி மீதான‌ பொருட்க‌ளை த‌ன் விருப்ப‌ப்ப‌டி ஆட்டுவிக்கும் ச‌க்தி ம‌னித‌ ம‌ன‌த்துக்கு கிடைக்கிறது. இது பீஜாக்ஷ‌ர‌த்தின் ம‌கிமைக்கு சின்ன‌ உதார‌ண‌ம் ம‌ட்டுமே.

குண்டலி மூலாதாரத்தில் விழிப்படைந்தால்:
சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும்.

குண்ட‌லி ஸ்வாதிஷ்டான‌த்தை தொட்டால்:
செக்ஸ் மீது க‌ட்டுப்பாடு ஏற்ப‌டும். நாமாக‌ போதும் என்று நினைத்தால‌ன்றி வீரிய‌ம் ந‌ழுவாது. உடலுறவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி ஏற்படும்.

குண்ட‌லி ம‌ணிபூர‌க‌த்தை அடைந்தால்:
எல்லையில்லாத‌ ச‌ஞ்ச‌ல‌ம் ஏற்ப‌டும். பந்தாடும்.

அணாஹ‌த‌ ச‌க்க‌ர‌த்தை அடைந்தால்:
அவ‌ர் இவ‌ர் என்ற‌ வேறுபாடு ம‌றைந்து எல்லோர் மீதும் நிப‌ந்த‌னைய‌ற்ற‌ அன்பு ஏற்ப‌டும்.

விஸுத்தி:
வாக் ப‌லித‌ம் ஏற்ப‌டும். பேச்சில் காந்த‌ம் வ‌ரும்.அனைவ‌ரையும் க‌வ‌ரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்ப‌டிவ‌ர்.

ஆக்னா:

பேச்சுக்கு அவ‌சிய‌மின்றி வெறும் பார்வையாலேயே ந‌ம் ம‌ன‌தில் உள்ள‌ எண்ண‌ங்க‌ளை ஆணையாக்கி எதிராளியை கீழ்ப‌டிய‌ வைக்க‌லாம்.

ச‌ஹ‌ஸ்ரார‌ம்:

இறைவ‌னுட‌ன் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்கலாம்.

(கடைசி ஐட்டம் மட்டும் இன்னும் அனுபவமாகலிங்கண்ணா . குண்டலி மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம், மணி பூரகம், அனாஹதம், விசுத்தி எல்லாம் தாண்டி ஆக்னா சக்கரத்துல உட்கார்ந்து உட்கார்ந்த இடத்துல கண்டமேனிக்கு காரியம் நடந்துக்கிட்டிருக்கு. இடையில் தான் பழிக்கு பழி – பைசா பொறுக்கறதுனு கொஞ்சம் பின்னடைவு. அதையும் இன்னொரு ரவுண்ட்ல பிக் அப் பண்ணிருவம்லே)

ஓகே இதுவரை சொன்ன தியரிய லாஜிக்கலாவோ அல்லது என் பேர்ல இருக்கிற நம்பிக்கையாலயோ ஏத்துக்கிட்டிங்கனு நினைக்கிறேன். உங்கள் பெயர்களிலான முதலெழுத்து – நீங்க “ம்” சேர்த்து ஜபிக்க வேண்டிய எழுத்தையும் அடுத்த பதிவுல தந்துர்ரன். எழுத்துன்னா அந்த ஒரு எழுத்து மட்டும் கிடையாது “க”ன்னா க,கா,கி,கீ முதல் கௌ வரை. (க’வர்கம்)

பை தி பை இந்த பீஜம், மந்திரம் மேட்டர்ல எல்லாம் உச்சரிப்பு ரெம்ப முக்கியம். அதனால உச்சரிப்பை ஆங்கிலத்துலயும் தந்திருக்கேன். அடுத்த பதிவுக்கு காத்திருக்கவும்.

இதே சப்ஜெக்ட், இதே பீஜாட்சர உபதேசத்தை ஒரு (விஷயம் தெரிஞ்ச) அந்தண குல தோன்றலான சாமியார் கிட்டே வாங்கனும்னா பத்து வருசம் மடத்துல எச்சில் இலை எடுத்து , சாமியாருக்கு மூட் வந்தப்ப ஒரு தங்க குச்சி வாங்கி தந்து ,தட்சிணை அள்ளிக்கொடுத்து, அவர் குச்சில எழுதிட்டு மடில கட்டிக்குவார் (பல் குத்த?) .
மேட்டர் இப்படி இருக்க சொல்லோ அடுத்த பதிவுக்காக வெய்ட் பண்ணலாம்ல??

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *