சோதிட குறிப்புகள் : 1

அண்ணே வணக்கம்ணே !

நான் ஓரலா பேசும் போது சொல்வேன் ” ஒருத்தனுக்கு வாகன சுகம் அனுபவிக்க வேண்டிய நேரம் வந்தாச்சுன்னா அவன் வாகனத்தை வாங்கித்தீருவான்னு அடிச்சு சொல்ல முடியாது -ஆனால் வாகனத்தால அல்லாடனும்னு இருந்தா மட்டும் சோத்துக்கே இல்லின்னாலும் வாங்கிருவான்”

இன்னைக்கு குரு வக்ர நிவர்த்தி . குரு நம்ம லக்னத்துக்கு 6-9 க்குடையவர். துலாம் நான்காம் வீடு. இங்கே குரு வக்ரமானதும் / ஃபாரஸ்ட்ல வாக் போக ஃபீஸ் கேட்க வீபா கட்ட பொம்மன் கணக்கா காண்டாகி வண்டிய வித்துட்டு ஊருக்குள்ள நடக்க ஆரம்பிச்சுட்டம். (டூ இன் ஒன் + நிம்மதி )

இன்னைக்கு குரு வக்ர நிவர்த்தியாகறாரு (சத்தியமா நான் கவனிக்கல) நேத்திக்கு 3 ஆயிரத்து 600 ரூவா கொடுத்து ரேஞ்சர் சைக்கிள் வாங்கினேன்.(நம்ம கொள்கைக்கு விரோதமா புதுசு.அவ்வ்)

இன்னைக்கு சாயந்திரம் சைக்கிளை எடுக்கிறேன். பேக் வீல்ல காத்து சுத்தம். அக் 11 வரை அல்லாடனுமோ? ஆனால் ஒரு ஆறுதல் குரு 9க்குடையவராவும் இருக்கிறதால வித்தை -தூர தேசம் வரைக்கும் பரவலாம் போல !

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *