சமூகம் 0.2 (சோதிட பதிவல்ல)

அண்ணே வணக்கம்ணே !

மாற்றம் மனிதர்களின் செயல்களில் மட்டும்..இருக்கிறது. செயலுக்கான பின்னணியில் ஒரு வெங்காய மாற்றமும் இல்லை .

குழந்தை தாயின் மார்பிலிருந்து பாலை உறிஞ்சுகிறது / பிறகு ஃபீடிங் பாட்டில் /பிறகு ரப்பர் நிப்பிள்/பிறகு ? லாலி பாப் – பிறகு சிகரட் -பிறகு மனைவியின் மார்பு . இங்கே குழந்தை வளர்கிறது .செயல்களில் மாற்றம் வருகிறது.ஆனால் செயலுக்கு பின்னான உந்துதலில் ?? மாற்றம் இல்லை .

சிறுவனாக இருக்கும் போது தீப்பெட்டி லேபிள்களை சேகரிக்கிறான்.பெரியவனான பிறகு ? கரன்சி .சிறுவனாக இருக்கும் போது மணல் வீடு /இப்போதைய பிள்ளைகளுக்கு கையில் மண் படாமல் வீடு கட்டும் வசதி இருக்கிறது /விச்சுவல் ஹவுஸ் பில்டிங் கூட இருக்கலாம்.

மனிதன் கல்வி கற்கிறான் -தொழிற்பயிற்சி பெறுகிறான் -வேலைக்கு போகிறான் /தொழில் துவங்குகிறான் – மணக்கிறான் -மருவுகிறான் (கில்மா) -பிள்ளை பெறுகிறான். செயல்கள்தான் வேறு . நோக்கம் ?
உயிர் வாழ்தல் – தொடர்தல் – இனப்பெருக்கம் – பரவுதல்.

சிலர் தற்கொலையும் செய்கிறார்கள் . ஒரே மின் உபகரணத்தில் ஆன் -ஆஃப் ஆப்ஷன் இருப்பது போன்றதே இது . ஒரு உபகரணம் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை உணர செய்ய அதை ஆன் செய்வதே வழி அல்ல. இயங்கி கொண்டிருப்பதை ஆஃப் செய்வதும் ஒரு வழி .

உயிர் வாழ்தல் – தொடர்தல் – இனப்பெருக்கம் – பரவுதல். இந்த நான்குக்கும் ஸ்தூலமாக இருக்கும் ஒரே வழி செக்ஸ். எல்லாம் இருந்தும்/ பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் திருமணம் -செக்ஸ் இல்லாது வாழ்பவர்களிடம் மனம் விட்டு பேசியிருக்கிறீர்களா?

அவர்கள் வாழ்வில் பெரிதாய் கூட சாதிக்கலாம். உயிர் வாழ்தல் – தொடர்தல் – இனப்பெருக்கம் – பரவுதல் என்ற இந்த நான்கை அவர்கள் வேறு முறையில் / வேறு தளத்தில் செய்து கொண்டிருக்கலாம்.ஆனால் அவர்களின் ஆழ்மனதில் ஒரு ஏக்கம் இருப்பது உறுதி. அது உண்மை கண்டறியும் சோதனையிலோ /முழு போதையிலோ /உடைந்து போகும் போதோ வெளிப்படலாம்.

இவர்கள் பணம் -பெயர் -புகழ் – அதிகாரம்-சன்னியாசம் என்று எத்தனை சுற்று வழிகளில் பயணித்தாலும் இவர்களின் ப்ரக்ஞை மட்டும் மையத்திலான ஸ்தூல விஷயங்களை நோக்கியே கவரப்படும்.

உயிர்களின் அடிப்படை துடிப்பு /அவா /உந்துதல் உயிர் வாழ்தல் – தொடர்தல் – இனப்பெருக்கம் – பரவுதல் தானே இவை ஸ்தூலமாக நிறைவேறினால் என்ன? வேறு தளத்தில் நிறைவேறினால் என்ன என்ற கேள்வி எழலாம்.
வருந்தத்தக்க உண்மை என்ன என்றால் மனித உடல் தவிர்க்கப்படவே முடியாத சத்தியம். மேற்படி அவா மேம்போக்கானதா இருந்தால் ஸ்தூலமான வழிகளிலேயே வடிந்து போகும்/ ஒரு வேளை அது ஆழமானதாக இருந்தால் …அது வேறு தளங்களை தேர்வு செய்து இயங்க ஆரம்பிக்கும்.

என்னில் மேற்படி அவா டன் டன்னாக இருக்கிறது எனவே ஸ்தூலமான வழிகள் எனக்கு ஏற்புடையவை அல்ல என்று நீங்கள் எஸ் ஆக முடியாது .ஏன் என்றால் ஏற்கெனவே சொன்னபடி மனித உடல் தவிர்க்கப்படவே முடியாத சத்தியம்.
மனித குலம் தன்னை மேம்படுத்தி கொள்ளவேண்டும் என்றால் சமூக வாழ்வு உயிர்களின் அடிப்படை உந்துதல்களின் யதார்த்தத்தை புறம் தள்ளாத யதார்த்த பார்வையுடன் இருந்தாகவேண்டும்.

இது ஆரம்ப புள்ளி மட்டுமே. ஸ்தூலமான வழிகளில் முழுக்க வடிந்து போகாத உயிர் வாழ்தல் – தொடர்தல் – இனப்பெருக்கம் – பரவுதல் தொடர்பான உந்துதல் கொண்ட மனிதர்களை ஸ்தூலமான சிறைகளில் இருந்து விடுவிக்கவும் சமூகம் முன் வரவேண்டும்.

இதெல்லாம் நடக்கிற காரியமாஆஆ??

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *