உங்க லைஃப் லைவா? ரிக்கார்டட் ப்ரோக்ராமா?

அண்ணே வணக்கம்ணே !

உங்க லைஃப் லைவா? ரிக்கார்டட் ப்ரோக்ராமா? இத வச்சு பல அற்புதங்கள் நடக்குது. கிரகங்கள் தரும் பலனில் வித்யாசத்தை சொல்றேன்.

உங்க தொழில் -உத்யோகம் -வியாபாரத்துக்கு நீங்க செலவிடும் 8-10 மணி நேரமும் லைவா இருந்தா நீங்க அதிர்ஷ்டசாலி. இது லைவா இருக்கனும்னா நீங்க பிசினஸ் லைன்ல இருக்கோனம் /அதுவும் சேல்ஸ் மேனா இருந்தாலோ /ஒன் டு ஒன் டீல் பண்ணி விற்கிற வியாபாரத்துல இருந்தாலோ சூப்பர்.ரிப்பீட்டட் கஸ்டமர்ஸ் இல்லாம /புது புது கஸ்டமரா பார்க்கிறாப்ல இருந்தா உங்க லைஃப் லைவ் தான். அதுவும் ஊர் ஊரா போயி கூடாரம் போட்டு விற்கிற பார்ட்டியா இருந்தா சூப்பரோ சூப்பர்.

ஆனால் இந்த மாதிரி தொழில்ல உள்ளவிக மேற்படி 8-10 மணி நேரத்துக்கே டயர்டாகி மிச்சமுள்ள நேரத்தை ரிக்கார்டட் ப்ரோக்ராம் மாதிரி வச்சுக்குவாங்க.

எப்ப என்ன நடக்கும்? நீங்க யாரை சந்திக்க போறிங்க? உங்க சந்திப்பில் என்ன நடக்கும்னு தெரியாத லைஃப் இருக்கு பாருங்க அதான் லைவ்.

__________

தொழில் -உத்யோகம் -வியாபாரத்துக்கு நீங்க செலவிடும் 8-10 மணி நேரம் ரிக்கார்டட் ப்ரோக்ராமா இருக்குன்னு வைங்க . அது போக மிச்சமுள்ள நேரமும் ரிக்கார்டட் ப்ரோக்ராமாவே இருக்கத்தான் வாய்ப்பு அதிகம். பளக்க தோஷம் பாஸ்..

நம்ம லைஃப் லைவ் ப்ரோக்ராமா இருந்தா ஜாதகத்துல உள்ள தோஷங்கள் கரையுது . இன்னைக்கு ராத்திரி எங்கே ஹால்ட் ஆகபோறோம்/ எங்கே திங்க போறம்னு தெரியாத லைஃப் லைவ் ப்ரோக்ராம் தானே?

ஆனால் நம்ம லைஃப் ரிக்கார்டட் ப்ரோக்ராம் மாதிரி இருக்குன்னு வைங்க. என்னாகும்னா நம்ம ஜாதகத்துல உள்ள யோகங்கள் பாதி ஆவி ஆயிரும்.

One Reply to “உங்க லைஃப் லைவா? ரிக்கார்டட் ப்ரோக்ராமா?”

S Muthukumar

11/07/2018 at 11:08 am

வித்தியாசமான அனுகுமுறை. இது வரை யாரும் சொல்லாத விசயம். நன்றி sir..

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *