அனுபவஜோதிடம் : 3

அண்ணே வணக்கம்ணே !

அடுத்து, 27 நட்சத்திரங்கள் பற்றி பார்ப்போம். இந்த நட்சத்திரங்களுக்கு என்ன பலன் என்பது இணையத்தில் கொட்டிக்கிடக்கும். பார்த்துக்கலாம்.ஜோதிடத்தில் இந்த நட்சத்திரங்களின் முக்கியத்துவம் என்ன?

1.குழந்தை பிறந்த நேரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரம் ஜன்ம நட்சத்திரம் எனப்படும். இந்த நட்சத்திரம் ,நட்சத்திர பாதம் இவற்றை வைத்தே ராசி நிர்ணயிக்கப்படுகிறது .

2.கிரகங்கள் குறிப்பிட்ட ராசிகளில் சஞ்சரித்தாலும் –அஃதாவது 30 டிகிரிக்குள் எந்த டிகிரியிலாவது – அந்த ராசிக்குட்பட்ட எந்த நட்சத்திரத்தில்/எந்த டிகிரியில் சஞ்சரிக்கிறது என்ற அடிப்படையில் அவற்றின் பலம் துல்லியமாக கணிக்கப்படுகிறது .

3.சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தை/ஜன்ம நட்சத்திரத்தை வைத்து ஜன்ம தசை நிர்ணயிக்கப்படுகிறது .

4.ஜ.நட்சத்திரத்தை கொண்டே தாராபலம் கணிக்கப்படுகிறது. /மூகூர்த்தங்களை நிர்ணயிப்பதில் தாராபலம் முக்கியம்.

5.திருமண பொருத்தமும் ஜ. நட்சத்திரங்களை கொண்டே பார்க்கப்படுகிறது .

ஆனால் நட்சத்திரங்களின் முக்கியத்துவம் இத்துடன் முடிந்துவிடுவதல்ல. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு?

அங்கே பால் வீதி .இங்கே மெரிடியன் சைக்கிள். (சைனீஸ் அக்குபஞ்சரில் இந்த வார்த்தையை உபயோகிப்பார்கள்) வாழ்க்கையில் முதல் முறையாக இந்த வரியை கூகுளில் தேடினேன். கிடைத்த வரி “நமது உடலில் மொத்தம் 361 அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கின்றன . முக்கியமான 12 உறுப்புகளில் “.

ஒரு குத்து மதிப்பாக மேற்படி 12 உறுப்புகளை கால புருஷனின் 12 அங்கங்களாக / ராசிகளாக வைத்துக்கொள்வோம். ஒரு ராசிக்கு 30 டிகிரி என்ற கணக்கில் 12 ராசிகளுக்கு 360 டிகிரி. அக்குபஞ்சர் புள்ளிகள் 361.(கணக்குல ஒன்னு உதைக்குது .லூஸ்ல விடுங்க)

நம் உடலில் உள்ள பால்வீதியின் முதல் ராசி நம் தலை,முகம்.கடைசி ராசி பாதம் .யோக சாத்திரத்தில் கூறப்படும் சக்கரங்களை நாளமில்லா சுரப்பிகளுடன் தொடர்பு படுத்தி ஒரு வீடியோ யு ட்யூபில் பார்த்தேன்.தர்க ரீதியாகத்தான் இருக்கிறது.

எல்லாம் சரி தான். இதில் நட்சத்திரத்தின் சிறப்பு என்ன என்று அவசரப்படுவது புரிகிறது. கணிணி வழியாக படிக்கும் உங்களுக்கு கணிணி மொழியிலேயே சொல்கிறேன்.

ஏதேனும் சாஃப்ட்வேரை நண்பர்கள் விர்ச்சுவல் மெமரியில் ஒரு ஃபோல்டரில் போட்டு தருவார்கள். அதை கொண்டு வந்து நம் கணிணியில் காப்பி செய்து கொள்வோம்.அந்த ஒரு ஃபோல்டரில் எக்கச்சக்கமான ஃபைல்ஸ் இருக்கும்.அதில் ஒன்றே ஒன்று செட் அப் ஃபைல் என்ற பெயரில் இருக்கும். அதை சொடுக்கினால் தான் மொத்த சாஃப்ட்வேரும் இன்ஸ்டால் ஆகும். அப்படி தான் நம் ஜன்ம நட்சத்திரமும்.

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் நம் ஜாதகம் ஒரு மரம் / ஜ.ந அதன் விதை . இன்னும் எளிமையாக சொன்னால் ஜன்ம நட்சத்திரம் என்பது ஒரு ஷார்ட் கட்.

கடந்த காலத்தில் நீங்கள் எத்தனை எத்தனை பிறவிகள் எடுத்தீர்களோ அவற்றின் சுருக்கமும்/ இந்த பிறவியின் சுருக்கமும் /உங்கள் ஜ.நட்சத்திரத்தில் அடங்கி இருக்கும்.

குழந்தை இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் இன்ன எழுத்தில் துவங்கும்படி பெயர் வைக்கும்படி ஜோதிடர் சொல்வார். அதில் எவ்வளவு விஷயம் இருக்கிறதோ அடுத்து வரும் இரண்டு பதிவுகளை பார்த்தால் உங்களுக்கு புரியும்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *