அனுபவஜோதிடம்: 2

அண்ணே வணக்கம்ணே !

இந்த தொடரை படிப்பவர்கள் இவற்றை படித்து தேறிவிட்டால் –பரீட்சையில் அல்ல – பலருக்கும் எளிதில் பலன் சொல்லி விடலாம் –காசு பார்க்கலாம் –காரியம் சாதிக்கலாம் என்று எண்ணிவிடாதீர்கள். காரணம் ஜோதிடத்தில் எவ்வளவு குறைவான அறிவிருந்தால் அந்தளவுக்கு தகிரியமா பலன் சொல்லலாம். எந்தளவுக்கு அதிகமான அறிவை பெற்றிருந்தால் அந்தளவுக்கு வண்டிய எந்த பக்கம் திருப்பினாலும் கேட்டை (Gate) போடும்.

மேலும் மற்றவர்களுக்கு,ஜோதிடப்பலன்கள் சொல்வதும், ஜோதிடம் கற்றுத்தருவதும் கூட கருமம் தான். பெரும் பாவம் செய்தவர்கள்,குறிப்பாக மிக அதிகவட்டி வாங்குபவர்கள், பொற்றோரை கவனிக்காதவர்கள் போன்றவர்களுக்கு பணத்தைப் பெற்றுக்கொண்டு ஜோதிடர்களாக நாம் கூறும் பலன் மற்றும் பரிகாரங்கள் மூலம் அவர் எந்தளவு பலன் பெறுகிறாரோ அந்த அளவுக்கு அவரின் பாவக்கணக்கு ஜோதிடரின் தலையிலே விழுகிறது. துவாதச பாவங்களில், அதாவது பன்னிரெண்டு பாவங்களில், லக்னத்திற்கு பத்தாமிடம் கர்மஸ்தானம் என அழைக்கப்படுகிறது.அந்த 10 வது வீடே தொழிலை குறிக்கும்.

வியாபாரம் துரோஹ சிந்தஹ .வியாபாரம் என்று இறங்கினாலே பாவம் தான். கருமம் தான். இதனால் தான் இதை கர்ம ஸ்தானம் என்று சொல்லியிருக்கிறார்கள். பலன் சொன்னாலே கருமம் எனும் போது ஜோதிடம் கற்பிப்பது கர்மம் ஆகாதா என்றால் ஆகும். இலவசமாக கற்பிப்பதால் கர்மம் என்னை அண்டாது. ஆனால் இலவசமாய் பெற்றால் உங்களை அண்டும்.

இதற்கு பரிகாரம்? உண்மையிலயே உங்களால் இந்த பாடங்களில் இருந்து எதையாவது கற்றுக்கொள்ள முடிந்தால் அந்த கர்மம் தொலைய ஏழைபிள்ளைகளுக்கு ஸ்டடி மெட்டீரியல் வாங்கி கொடுங்க ஸ்கூல் பேக் வாங்கி கொடுங்க.

எதிர்காலத்தில் இந்த பதிவுகள் கூகுள் ஆட்சென்ஸ் ஆட் ரெவின்யூ மூலமோ /இவற்றின் தொகுப்பை கின்டில் மூலம் வெளியிடும் போது ராயல்ட்டி மூலமோ எனக்கு பைசா புரண்டால் என்னையும் கர்மம் அண்டும். நானும் பரிகாரம் தேடவேண்டியதுதான்.

சொல்ல மறந்து விட்டேன். பின் வரும் அத்யாயங்களில் ஆழமாக பார்க்கலாம் என்றாலும் ஒரு குறிப்பை மட்டும் தந்துவிடுகிறேன். லக்னாத் இரண்டாமிடம் தான் பணவரவையும் /வாக்பலிதத்தையும்/குடும்ப நிலையையும் காட்டுகிறது .இதில் ஏதேனும் ஒன்று டாப்புக்கு போனால் /ஒன்று பல்பு வாங்கிவிடும்.

ஆனாலும் யாருக்கு எது அறிவிக்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு மட்டுமே அது சரியாக போய் சேரும். மற்றவர்களுக்கு ? ஊஹூம். இந்த தைரியத்தில் தான் ஜோதிடம் கற்றுக்கொடுக்க முடிவு செய்தேன். (என்னா ஒரு வில்லத்தனம்?)

வானவெளியில் உள்ள நட்சத்திர மண்டலம் வட்ட வடிவாக/ சரியாக சொன்னால் படுக்கை வாட்டில் வைக்கப்பட்ட கோழி முட்டை வடிவத்தில் அமைந்துள்ளது.இந்த வட்டம் 360 டிகிரிகளைக் கொண்டது.

ஆனால்,முட்டை வடிவிலான நட்சத்திர மண்டலத்தை, நமது ஜோதிட பயன்பாட்டிற்கு,ஒரு சௌகரியத்துக்காக சதுரமான கட்டமாக வரைந்துக்கொள்கிறோம். இந்த ஜாதக கட்டத்தினை பன்னிரெண்டு சம பாகங்களாக பிரிக்கிறோம்.
அதாவது வட்டம் 360 டிகிரி /அதில் உள்ள 12 பாகங்களும் ஒவ்வொன்றும் = 30 டிகிரி. 12×30=360 டிகிரி.
.

ஜாதக கட்டங்களை செங்குத்தாக நிமிர்த்தி நிறுத்தி மனித உருவத்துடன் ஒப்பிட்டால், முதலாவது கட்டம் லக்னம்- இது தலையை குறிப்பதாகும்.இவ்வாறே, பன்னிரெண்டு பாவங்களையும் வரிசைப்படுத்தினால், பன்னிரெண்டாவது பாவம், பாதம் ஆகும்.

இதனைத்தொடர்ந்து, நவக்கிரகங்கள் பற்றி பார்ப்போம்.அவையாவன,

சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு (அல்லது) வியாழன்
சுக்கிரன்
சனி
ராகு
கேது

இதில், ஜோதிட வரலாற்றில் குறிப்பிட்ட கால கட்டம் வரையில் ஜோதிடத்தில், ராகு, கேதுக்கள் இல்லை. பிற்பாடே,அவை இணைக்கப்பட்டன. ஏன்? எதற்கு ?எப்படி? என்பதை ஆராய்ச்சி பூர்வமாக ஏற்கெனவே வலைப்பூவில் எழுதியது ஞா வருகிறது . நிற்க.

நட்சத்திர/ராசி/வான்வெளி மண்டலத்துக்கு போவோம்.இது 12 ராசிகள்-27 நட்சத்திரங்களை உள்ளடக்கியது . மொத்தம் 27 நட்சத்திரம் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு ராசிக் கட்டமும் ஒன்பது நட்சத்திர பாதங்களை உள்ளடக்கியது.

, முதலாவது கட்டம் மேஷ ராசிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், அஸ்வினி,பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தின் ஓன்றாவது பாதம் அடங்கியுள்ளது. அஸ்வினி என்பது ஒரு நட்சத்திரம் அல்ல, அது ஒரு நட்சத்திரக்கூட்டம். குதிரை முக வடிவிலான நட்சத்திரக்கூட்டமே அஸ்வினி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது.

சந்திரனின் நகர்வைக்கொண்டே, இராசி நிர்ணயிக்கப்படுகிறது.சந்திரன், அஸ்வினி,பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திர முதல் பாதத்தில் சஞ்சரிக்கும்போது பிறந்த குழந்தையின் ராசி மேஷமாக இருக்கும்.

அடுத்து, 27 நட்சத்திரங்கள் பற்றி பார்ப்போம்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *