ச்சும்மா ! டச்சுல இருக்கனும்ல !

அண்ணே வணக்கம்ணே !
வேலை பெண்டு கழட்டுது . மூளை முரண்டு பிடிக்குது . எந்த அளவுக்குன்னா முரனா? முரணா?ங்கற அளவுக்கு. கையில எழுதும் போது ரிஃப்ளெக்ஸ்ல பக்காவா வந்துரும். டைப் பண்ணும் போது இந்த லொள்ளு .அவ்வ். பதிவு போட்டு ரெம்ப நாளாச்சு.ஒரு பதிவு போட்டே ஆகனும்னு ஆரம்பிச்சுட்டன்.

வெப்சைட் ரேங்க் குறைஞ்சுருச்சுன்னு வருத்தப்பட்டு ஒரு ஸ்டேட்டஸ் போட்டா உடனே சனம் நீ ஜோசியத்தை விட்டுட்டு அரசியலை பிடிச்சு தொங்கறேன் அதாங்கறாய்ங்க. நான் ஜோசியத்தை மட்டும் பிடிச்சு தொங்கிக்கிட்டிருந்தா இப்படி ஒரு மன்சன் இருக்கான்னே மஸ்தா பேருக்கு தெரிஞ்சிருக்காது. இதை சொன்னா……….
ஜோசியத்துல எத்தனை தான் பூந்து விளையாடினாலும் / வாழப்பழத்தை உரிச்சு காட்டினாப்ல காட்னாலும் சனம் வித்தைய தெரிஞ்சுக்க ஆர்வம் காட்ட மாட்டேங்கிறாய்ங்க. உடனே என் ஜாதகத்துலன்னு ஆரம்பிச்சு இன்பாக்ஸ் பண்றாய்ங்க.

நம்ம நோக்கம் சாகற வரைக்கு இப்படி உண்டக்கட்டி தின்னே வாழ்ந்துர்ரது இல்லிங்கோ .. செஞ்சோற்றுக்கடன் தீர்த்தாகனும். ஜோசியத்துல உள்ள எல்லா மேட்டரையும் அஃபிஷியலா /பொறுப்பா கை மாத்தி விடலாம்னு தான் பார்க்கேன். ஊஹூம். ச்சும்மா மேலெழுந்த வாரியா எழுதறதுக்கே சனம் ஜூட் விட்டுர்ராய்ங்க. இதுல என்ன பண்ண?

ஆனாலும் ச்சும்மா குத்துமதிப்பா வாச்சும் யு ட்யூப் வழியா அள்ளி விட்டுக்கிட்டிருக்கம்ல. அந்த வீடியோ கன்டென்ட்லாம் நண்பர் ஒருவர் எழுத்தாக்கி தரேன்னு முன் வந்திருக்கார். மொத வகுப்பை அனுப்ப திருப்தியாதான் இருக்கு. நான் கமிட் ஆயிட்டேன். அவர் என்ன பண்ணுவாரோ ஆத்தாவுக்கே வெளிச்சம்.
யு ட்யூப் ஆட் ரெவின்யூ ரூ. 9 ஆயிரத்தை இதுக்குன்னே ஒதுக்கி /அஃதாவது பதிவுகளை தொகுக்க /வீடியோ கன்டென்டை டெக்ஸ்டா தர அழைப்பு விட்டேன். எட்டு பேர் முன் வந்தாங்க.காரியம் மட்டும் நடக்கல. இந்த முறையாவது முழுமை பெறும்னு நம்பலாம்ல?

12 லக்னத்துக்கும் தனித்தனியா புஸ்தவம் போடனும். ஒவ்வொரு பாவத்தையும் அனலைஸ் பண்ணனும். இதே போல 9 கிரகங்களை பத்தியும் டீப்பா அனலைஸ் பண்ணி புஸ்தவம் போடனும் .வெப்சைட்ல சனங்களை இழுத்து பிடிக்க எழுதறது இல்லிங்கோ..டைரக்டா உட்கார்ந்து பேப்பர்ல எழுதனும்.

மொதல்ல இந்த கட்டண ஆலோசனைக்கு மங்களம் பாடனும். இதனால கொஞ்சம் பைசா கிடைச்சாலும் ஆவிசு குறையுது . நம்ம வில் பவர் விக்கிரமாவதாரத்துலருந்து வாமனாவதார ரேஞ்சுக்கு வந்துருச்சு இப்பமே.
அதே சமயம் வாழ்க்கையை நடத்தனும்ல அதுக்கு தேன் இந்த சதி திட்டம்லாம். யு ட்யூப் ஆட் ரெவின்யூ /வெப்சைட் கூகுள் ஆட்சென்ஸ்/ கின்டில் புக் ஸ்டோர் ராயல்ட்டி இதை வச்சே வாழ்க்கையை ஓட்டனும். அந்த ரேஞ்சுக்கு வரனும்னா இப்ப முன் வந்தவர் மாதிரி இன்னம் ரெண்டு பேராச்சும் முன் வரனும். வருவாங்கல்ல?

இந்தபதிவுல நண்பர் அனுப்பின மொத வகுப்பு பாடத்தை போட்டுரலாம் தான்.ஆனால் இன்னம் ஃபைனலைஸ் ஆகல. ஆகவே அம்பேல் .

ஆத்தா நினைச்சு -மேற்படி நண்பர் தினம் தினம் ஒரு வகுப்பை டெக்ஸ்டாக்கி கொடுத்தா ஏத்திருவம்ல? உடுங்க ஜூட்டு .

2 Replies to “ச்சும்மா ! டச்சுல இருக்கனும்ல !”

Murthy

07/06/2018 at 5:39 pm

Sir,

Romba naala follow panren for your paid service. Managlam paadidathenga sir……..enakku ungala vitta …valkiyala velakku yettha yarum illainga…..sir…..

Reply

    S Murugesan

    07/06/2018 at 8:03 pm

    ஹ ஹா கட்டணை ஆலோசனை நிறுத்தப்பட்டாலும் இலவச ஆலோசனை தொடரும்.கவலை வேண்டாம்.

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *