கலைஞர் 100 ( பிறந்த நாள் கவிதைகள்)

அண்ணே வணக்கம்ணே !

வர்ர ஜூன் 3 தேதிக்குள்ள செஞ்சுரி போட்டுரலாம்னு தான் கலைஞர் 100னு பேர் வச்சிருக்கன். என் குரல்ல கேட்க விரும்பினா இங்கே அழுத்துங்க. இல்லின்னா இங்கயே படிங்க.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
ஷீரடி நாதனையே கஞ்சா குடிக்கி
என்று தான் சமகாலர்கள் சாதித்திருப்பார்கள்.
இதில் நாத்திகம் பேசிய உன் நிலை ?
உன் சீவனை சிவனாக்கியது உன் தியாகம்.
பலன் கருதாது இன நலன் காக்க
நடந்தவனே உன் பேச்சும் எழுத்தும்
நாளைய சமதர்ம சமுதாயத்தின்
வேதமாகும்.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
குடும்ப அரசியல்
என்று கும்மியடிக்கும்
குறு மதியாளர்களில் எத்தனை பேர்
சன்யாசம் வாங்கி கொண்டு அரசியலுக்கு வந்தவர்கள்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
வெறுமனே ஊழல் கீதம் பாடும் ஊதுகுழல்களுக்கு தெரியுமா?

தில்லியின் சல்லித்தனம் ? வடவரின் வஞ்சகம்? நடுவண் அரசின் நாதாரித்தனம்?

உளவு அமைப்புகளின் உள் குத்துகள்? பங்காளி சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்ட சூதுகள்

எதையும் தாங்கும் இதயத்தை இரவல் பெற்று
உதயம் நோக்கியே நடை போட்டாய். படை நடத்தினாய்

விடியட்டும் என்றே விரைவு படுத்தினாய். விளங்காத வீணர்களின் சதியால் வீணாய் போனது வியர்வையும் ரத்தமும்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
ஈரோட்டு சித்தனின் சித்தப்படி சுமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கினாய் .

கழகமே ஒரு சமுதாய இயக்கம் என்று முழங்கினாய்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
சமூக நீதிக்காக கண்டாய் சமத்துவ புரங்கள்.அதற்கு முன் உன் வீடே ஒரு சமத்துவ புரம் என்பதை சரித்திரம் சொல்லும்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
வாழும் வரலாறே ! உனை பாடி வைக்க கூட்டிட வேண்டுமடா நாற்சங்கமும்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
பகைவனுக்கருள்வாய் நெஞ்சே என்று நீ அருளிய போதெல்லாம் நஞ்சூட்டப்பட்டாய் .

நஞ்சூட்டியவர்க்கெலாம் அமுதே ஊட்டி அந்த சிவனை விஞ்சி விட்டாய்
#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
முத்தமிழ் அறிஞன் என மூவுலகும் பூசித்தாலும்

நதி மூலம் மறவாது அந்த ஈரோட்டு கிழவனின்

பாதம் பணிந்தவன்.

கொண்ட கொள்கைக்காய் மணி முடி துறக்க துணிந்தவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
அரசியலில் நீ புரிந்ததோ அட்டாவதானம் – சமூக நீதியில் செய்ததோ சதாவதானம்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
அகிலம் புகழும் நிலை வரினும்

அண்ணன் புகழ் பாடிய அண்ணலே..

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
கன்றுக்குட்டி வயதில் ஏடு
காளைப்பருவத்தில் நாடு

அடிமாடாய் அனுப்பப்பட்ட போதும் அதே முறுவலுடன் சென்றவன்.

எம் உள்ளங்களை வென்றவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
“என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் அகத்தியன்.
தமிழால் உயர்ந்து -தமிழை உயர்த்தி
வசையும் கொண்டு
ஆனாய் நித்தியன்.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
ரோஜாவை எந்த பெயரால் அழைத்தாலும் அது ரோஜா தான்.

அப்படியே நீயும்..

தம்பீ -அண்ணன் – தலைவா – தாத்தா

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
இவை சூரியனுக்கு அடிக்கப்படும்
சோலார் டார்ச் ஒளிக்கீற்றுகள் .
நாய்களின் குரைப்பையும் இசையென ரசித்தவன்
சேய்களின் மழலையை ரசியாது விடுவானோ?

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
பூமித்தாய் தன் கருவில் புதைந்த நிலக்கரியை
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்தான் வைரமாக்குகிறாள்

அஞ்சுகத்தாய் இந்த சாதனையை ஈரைந்து மாதங்களில்
புரிந்து விட்டாள்.

இதனால் தானோ என்னவோ சாதனை இவன் பலவீனம்.
சாதனைகளில் மட்டும் சாதனை படைத்தால் போதாதென்றே
சோதனைகளிலும் /வேதனைகளிலும் படைத்து விட்டான் சாதனை

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
பெரியார் ,அண்ணா வழி களத்திற்கு வரலாகி – வரலாறாகி
வரலாறு என்பது இறந்த காலம் என்பதை மாற்றியவன்.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
இந்த வைரத்தை அவ்வப்போது தோல்வி சேறு
புதைத்த போதும் வைரமாகவே வாழ்ந்தான்.

நிலவுக்கு நிலா காட்டி சோறூட்டியது போல்
வைரத்துக்கு இங்கே வைரவிழா.
காதறுந்தவைக்கும் ,மூக்கறுந்தவைக்கும் மட்டுமே
இந்த வைரம் மீது அப்படி ஒரு வைரம்.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
இந்த சூரியனின் சிரசில் கிரீடம் நிலைத்ததில்லை
ஆனால் இந்த தமிழ் வைரத்தை தன் கிரீடத்தில் இருந்து
அகற்றியதே இல்லை எங்கள் தமிழன்னை

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
தனை நோக்கி எறியப்பட்ட கற்களை கொண்டே
தன் கோட்டையை நிர்மாணித்த பொறியாளன்
தன்னை புதைக்க வெட்டப்பட்ட சவக்குழிகளை
பதுங்கு குழிகளாக்கி தொடர்ந்து போராடிய போராளி

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
தோல்வி எனும் உப்பு நீரையே வார்த்த போதும் தென்னையாய் நின்ற தென்னவன்.
முன்னை மறுதலித்தோர்க்கும் தன்னையே தந்த மன்னவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
ஒரு நா கொண்டு அவன் செய்த தொண்டு
இரு நா கொண்ட நயவஞ்சகரால்
தொன்று தொட்டு பழிக்கப்பட்டாலும்
அவன் தொண்டை பாட ஆயிரம் நா கொண்ட ஆதி சேடராலும் இயலாது

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
தன்னை சபித்தோர்க்கெல்லாம் வரமானவன்
தனக்கு மட்டுமே சாபமானவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
அவ்வப்போது தன்னை தள்ளி வைத்த மக்களுக்கெல்லாம்
எப்போதும் தன்னையும் தமிழையும் அள்ளி கொடுத்தவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
நாற்பது வயதுக்கு பிறகும் கம்யூனிஸ்டாகவே
வாழ்ந்து வரும் முட்டாள் கிழவன்.

நாடெங்கும் தன் வீடே இருக்க வேண்டும் என்று
அலைந்த கூட்டம் ஒரு புறம்.
தன் வீடும் நாட்டுக்கே என்ற இவன் ஒரு புறம்.
மக்கள் கூட்டமோ முன்னவர்க்கே வீசியது சாமரம்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
பெரியாரின் கசப்பு கஷாயத்தில் அண்ணா வெல்லம் கலக்க
இவன் தேன் கலந்து
கை சோர ,மெய் சோர பகிர்ந்தே வந்தான்

இன எதிரிகள் சதியில் தகர்ந்தே வந்தான்.
தகர்ந்தது தான் எனினும் இனம் ஓரடி
முன் நகர்ந்ததென்று முறுவலித்தான்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
கடவுளை ஏற்பதா வேண்டாமா என்று வீண் ஆராய்ச்சி செய்யாது
அப்படி ஒருவன் இருந்தால் தன்னை ஏற்கும்படி வாழ்வோம் என்று வாழ்ந்தவன்.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
ஆலாலம் கிளம்பிய போதெல்லாம் நஞ்சுண்ட கண்டன்
அமுதம் வரும் வரை கடைதலை விடாகண்டன்
அமுதம் வந்த போதெலாம் பொதுவில் வைத்த தமிழ் சிவன்.

என் அன்னை போன்றே
நிந்தா ஸ்துதிக்கும் அருள் சுரக்கும் கருணா நிதி

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100
பிரம்மனின் படைப்புகளில் கூட
குற்றம் குறைகள் இருக்கலாம்.
ஆனால் நக்கீரர்களாலும் குற்றம் சொல்லிவிட
முடியாத படைப்பாளி இவன்

முதுமை இவன் உடலில் எழுதியிருக்கலாம்
நரை -திரை கவிதைகள்.

இவன் மனதில் மட்டும் ஒரு ஹைகூ எழுத
இத்தனை காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

தமிழ்க்காதலன் அல்லவா? அந்த ஹைகூவில் மயங்கி விட்டான்.

விரைவில் அதன் பொருள் கூறுவான்
எமை மயக்கத்தில் ஆழ்த்துவான்.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

பகைவர்க்கும் அருளியது
அவன் நெஞ்சு

துரோகிகள் அனுதினம் ஊட்டியதோ வீண் பழி எனும் நஞ்சு

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

வானில் இருந்து வந்தோம் என்று
இறுமாந்திருந்த வடவரை
தன் வாழ்விடம் நோக்கி வர செய்தவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

வழக்கு என்று வந்தால் தள்ளி வைக்கவே கேட்டு தவித்த

தளுக்குக்காரிகள் போலல்லாது
தள்ளாத வயதிலும் தானே நேரில் சென்று சந்தித்தவன்.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

தண்டவாளத்தில் தலை வை என்றாலும்

தம்பீ ! பதவியேற்க வா என்றாலும் ஒன்றே போல் எதிர்வினையாற்றியவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

எவளையோ திருப்தி படுத்த
தாயாய் வளர்த்த இவன் நெஞ்சம் பிளந்து

கொண்டு சென்ற போதும் சென்றவன் தடுக்கி விழுந்த போது வலிக்கிறதா தம்பீ என்று துடித்தது அவன் நெஞ்சம்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

அவன் எண்ணியிருந்தால்
பழி சொன்ன பாதகர்கள்
அனைவரும் அவன் பாதங்களில்.

பாவம் பார்த்தே விட்டுவைத்தான்
வீணர்களை

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

ஆயிரமாயிரம் நூல்கள்
உண்டு அவன் நூலகத்தில்

ஒரு நூல் இல்லாத காரணத்தால்
எப்போதும் நிறுத்தப்பட்டான்
குற்றவாளி கூண்டில்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

அவன் வார்த்தைகளில்
விளையாடியதுண்டு

மக்கள் வாழ்க்கையில்
அல்ல

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

ஒரு தேர்தலில் தனக்கு வாக்களிக்கவில்லை
என்று ஒரு மானிலத்தையே
சுடுகாடாக்கும் விடலைகள்
வாழும் நாட்டில்

பலப்பல தேர்தல்களில் தன்னை
தோற்கடித்தாலும்
வஞ்சம் வளர்த்ததில்லை அவன் நெஞ்சம்.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

அவன் கோபுரகலசம்
எத்தனையோ முறை தரையில் வீசப்பட்டான்.

அவ்வப்போது அடித்த காற்றுக்கு
எச்சில் இலைகள் எல்லாம்
கோபுரத்தில் ஒட்டிக்கொண்டன.

இதையும் தாங்கியது அவன் நெஞ்சம்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

வழக்கு தொடுத்து – நடுவர் மன்றம் கண்டு -தற்காலிக தீர்வு பெற்று -நிரந்தர தீர்வு பெற்று தந்தும்
பழிச்சொல்லே பலன் என்றாகியும் அதையும் தாங்கியது அவன் நெஞ்சம்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

கடல் கடந்த சொந்தங்களுக்காய் இருமுறை ஆட்சி இழந்தும்

கடல் கொண்ட லெமூரியா போல் பழி சொல் சூழ்ந்த போதும் அதையும் தாங்கியது அவன் நெஞ்சம்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து பின் தூங்கி -முன் விழித்து பணியாற்றும் தன்னை விடுத்து..

தமிழக கோவலர்கள் மாதவியின் பின்னேகிய போதும் கற்போடு காத்திருந்த கண்ணகி அவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

அவன் ஒரு தீவிரவாதி
வசனங்களில்
வெடிமருந்தை
திணித்து
வீசிய தீவிரவாதி

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

கொள்கைகளை வைத்திருந்ததால்
ஆட்சியை பிடித்த காலம் போய்
எவரோ வைத்திருந்ததால் ஆட்சி பிடித்த காலமும் வந்தது .

அதையும் தாங்கியது அவன் நெஞ்சம்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

தூண்களின் ஒன்றாய் தூக்கி நின்ற தோள் வலி ஒரு புறம்

கோபுரத்து பொம்மைகள் உரிமை கோரி கொடி பிடித்த மனவலி ஒரு புறம்

இதையும் தாங்கியது அவன் நெஞ்சம்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

சன நாயக திரௌபதி துகில் உரியப்பட்ட போது வேடிக்கை பார்த்த விகர்ணர்கள் கர்ணர்களாய் காட்சிப்படுத்தப்பட்டனர் .

இதையும் தாங்கியது அவன் நெஞ்சம்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

கடவுளை போற்றி உயர்ந்தவர்களை விட
அவனை தூற்றி உயர்ந்தவர்களே அதிகம்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

அவன் வளர்த்த கிடாய்கள் தான்
அவன் நெஞ்சில் முட்டின .

காலம் அவற்றை தோலுரித்து தொங்க விட்டது .

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

அவன் எழுதுகோல் அசைவுக்கே
பல செங்கோல்கள் ஆடிப்போயின

செங்கோல் அவன் வசம்
வந்த போதெல்லாம் அது மந்திரக்கோல் ஆனது .

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

எந்த சரித்திர புருஷனைத்தான்
சமகாலர்கள்
சன்மானம் செய்திருக்கிறார்கள்.

எதிர்காலம் கூறும்
அவன் ஓர் அதிமனிதன் என்று

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

அவன் கையில் எடுத்த சிறு செயலுக்கு பின்னும்
வரலாறு குறித்த விழிப்பிருந்தது .

வள்ளுவன் ஓவியத்துக்கு சால்வை அணிவித்தாலும்
வள்ளுவனுக்கு 133 அடியில் சிலை வைத்தாலும்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

தனியொருவன்
தரணி மிசை
காணக்கூடுமோ இனியொருவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

அவன் ஆணைக்கு பெரும்படை காத்திருப்பினும்

அவனே ஒரு படை .
தற்கொலைப்படை

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

அவன் தங்கம் என்பதாலேயே அதிகம் உரசப்பட்டான்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

பேசுவதை நிறுத்தியிருக்கலாம்.
ஆனால் உலகம் அவனை பேசுவதை எப்போதும் நிறுத்தாது

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

அவன் ஒரு வாழ் நாளில் செய்த சாதனைகளில்
ஏதேனும் ஒன்றை செய்யவும் #அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100 வாழ் நாட்கள் தேவை

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

அவன் மக்களின் கைகளில் பூட்டிய கங்கணங்களை
மக்கள் சினிமா கிலுகிலுப்பைகளுக்காய் இழந்த போதும்..

அவர்கள் பாலான கருணையை அவன் குறைத்து கொள்ளவே இல்லை

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

அவன் அழிந்தே ஆக வேண்டும் என்று உழைத்தவர்கள் எல்லாம்
காலக்கணக்கில் கழிந்து போனார்கள்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

அவன் இருப்பே இன வைரிகள் பலரின் இருக்கைகளின் கீழ் நெருப்பானது .

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100

அவன் வாய் மூடியிருக்கலாம்.
ஆனால் மக்கள் குறை கேட்க
இல்லத்து வாயில் மூடியதே இல்லை .

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100
எம் இனம் விழிக்க கூவிய சேவல்
என்றும் அவனே எம் காவல்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100
கடமையை தான் செய்து
உரிமைகளை எமக்கு பெற்றுத்தந்தவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100
குழந்தை பிறந்தது என்றால்
வரவா செலவா என்பர்.
பெண்குழந்தை என்றால்
செலவா என்றே
நொட்டை விடுவர்.
பெண்குழந்தைகளின்
கணக்கிலும் வரவு வைத்தவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100
பத்து தேய்த்தே
பத்து விரலும்
தேய்ந்து கிடந்த
பெண் குழந்தைகளுக்கு
சொத்தே தந்தவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100
மனிதனை மனிதன்
வைத்து கை சோர இழுப்பதோ
கால் நோக ஓடுவதோ
என்று கை ரிக்ஷாவுக்கு
காரியம் செய்தவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100
அனைவருக்கும்
அன்னமிட்டு தான் மட்டும்
பட்டினி கிடந்த
விவசாயிக்கு
இலவச மின்சாரம் தந்து
அவர் தம் வாழ்வில்
ஒளியூட்டியவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100
சாதி வேறுபாடின்றி
அனைத்து சாதியினராலும்
அனைத்து சாதிகளுக்குள்ளும்
ஒதுக்கி வைக்கப்பட்ட
உண்மையான தலித்தாம்
பெண்களுக்கு வேலை வாய்ப்பில்
30% இட ஒதுக்கீடு தந்தவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100
வயிற்றுத்தீ ஓலைக்கீற்றுக்கு என்று பற்றுமோ
என்று பதறிக்கிடந்த குடிசை வாழ்மக்களுக்காய்
இந்திய ஒன்றியத்துக்கே முன் மாதிரியாய்
குடிசை மாற்று வாரியம் அமைத்தவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100
தனியார் வசமிருந்து
அவர் தம் இரும்பு பெட்டிகளை
மட்டும் நிரப்பி கொண்டிருந்த
போக்குவரத்து துறையை
நாட்டுடமையாக்கி
சாதீய,பிரபுத்துவ இரும்புக்கோட்டைக்குள்
மூச்சு திணறிக்கிடந்த
கிராமங்களுக்கும் பேருந்துகள் விட்டு
அம்மக்களுக்கு
சிறகுகள் தந்தவன்
சாதீயத்தை எரிக்க விறகுகள் தந்தவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100
விவசாயக்கடன் மீதான வட்டியை ஒன்பதிலிருந்து
நான்கு சதவீதமாக்கி அன்னமிட்ட கைகளுக்கு
உரம் ஊட்டியவன்.
இனம் செழிக்க தானே உரமானவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100
வெத்துணவாக இருந்ததை சத்துணவு ஆக்கியவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100
எது முதல் என்று அறிந்து
அவன் இட்ட முதல் தான்
கல்வி கட்டண ரத்து.
அந்த முதல் தரும்
வட்டி இன்றைய வளர்ச்சி

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100
அவன் இலவசம் என்று எதை
அறிவித்தாலும் செலாவணி ஆகாத
செல்லா காசுகள்
வெட்டி செலவென்றும்
கவர்ச்சி திட்டம் என்றும் கரைந்தன.

அவன் தந்த இலவசங்களே
தமிழக பொருளாதாரத்துக்கு விழுதானது
பசப்புவோர் பார்வை பழுதானது .

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100
சன்யாசிக்கு இருபிறப்பு என்பர்
பெண்ணுக்கும் இது பொருந்தும் தானே
ஒரு பிறப்புக்கு மட்டுமா உதவினான்.
மறுபிறப்பாம் பிரசவத்துக்கும்
திறந்தது அரசுக்கருவூலம்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100
தன் மக்கள் உணவால்
நிறைந்த வயிறுடன் மட்டும் இருந்தால்
போதாதென்று
சுயமரியாதையால் நிறைந்த நெஞ்சும் வேண்டும் என்று
தொலைக்காட்சியை தொலைவில் இருந்து பார்த்தாலே
விரட்டப்பட்ட ஏழை மக்களுக்காய்
அவர்களுக்கே அவர்களுக்காய் அளித்தான் வண்ண தொலைக்காட்சி
அவனை போலவே அவற்றுக்கும் ஆயுசு கெட்டி

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100 #HBDKalaingar95 #கலைஞர்100 #கலைஞர்100
இனப்பகையை விரட்டுவதோடு நின்று விடவில்லை
பெண்களின் நெஞ்சுக்கூட்டை தின்று கொண்டிருந்த
புகையையும் விரட்டினான்
இலவச எரிவாயு இணைப்புடன் அடுப்புகள் தந்து

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
பேரு வச்சிங்களே
சோறு வச்சிங்களா?
இது பெயர்மாற்றங்கள் குறித்த
தட்டையான நக்கல்.
பெயர் தான் ஒவ்வொரு
உயிரணுவையும் உலுக்குகிறது.
ஊனமுற்றவர் என்ற பெயர்
ஊனத்தையே ஊட்டும்.
அதனால் தான் மாற்றுத்திறனாளிகள்
என்று செய்தான் பெயர் மாற்றம்.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
இன வைரிகளால்
அவனுக்கு எதிராய்
நிறுத்தப்பட்டவர்களை
காலம் தன் தராசில் நிறுத்தும்
எதிர்காலம் குற்றவாளி கூண்டில்
நிறுத்தும்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
அவனை உலகின் எந்த ஒரு மேதையோடும்
ஒப்பிட முடியும்.
ஆனால் அவன் வாழும் நாட்டில்
அவனை மமதை ஒன்றன்றி வேறில்லா
பேதைகளோடு ஒப்பிட்டு
மகிழ்ந்தது ஒரு கூட்டம்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
பழங்குப்பைகளை கிளறும் கோழிகளுக்கு
தெரியாது .
நூலோர் கொண்டாடும்
“மேலோரை” நீ எப்படி எல்லாம் அலறவிட்டாய் என்று

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
பழங்குப்பைகளை கிளறும் கோழிகளுக்கு
தெரியாது .
வருமானவரித்துறையின் கண் சிவந்ததால்
கொடுத்து சிவந்த கரத்தின் சாயம் வெளுத்த கதை.
மத்திய அரசின் கொடுங்கரங்கள்
குரல்வளை நெறித்த போதும்
உன் எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலித்த கதை

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
பழங்குப்பைகளை கிளறும் கோழிகளுக்கு
தெரியாது .
தாய்த்திரு நாட்டில்
ஜன நாயகத்தை காத்திடவே நின்
ஆட்சியை காவு கொடுத்த கதை.
இந்தியாவே சிறைக்குள் இருந்த காலத்தில்
ஒரு விசாரணை கமிஷன்.
அதன் அறிக்கைதான் வேதம் இந்த சாத்தான்களுக்கு

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
பாசம் என்று பழி சொல்வரோ என்று தானே
படை நடத்தும் பக்குவம் பெற்றும் தளபதியை
தள்ளியே வைத்திருந்தாய்.
எள்ளி நகையாடும் பகையின் உதடுகளில்
தள்ளி வைத்தாலும்
அள்ளி அணைத்தாலும்
குறு நகைதானே
ஆகாத மருமகள் நீதானே

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
காவிரி மேலாண்மை வாரியம் முதல்
விஷயம் எதுவானாலும்
உழுவதும்,விதைப்பதும்,நீர் பாய்ச்சுவதும்
களைபறிப்பதும்,கண்ணாய் காப்பதும் நீ
அறுவடை ? கண்ட கழிசடைகளுக்கு.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
அவன் என்றோ சாதித்து காட்டியவற்றை
இன்று நடுவண் அரசு முரசறைந்து
அறிவிக்கிறது.
அவன் ஒரு தீர்க தரிசி என்று புரிவிக்கிறது

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
நல்ல வேளையாய்
அவன் பெரியார் வழி வந்தவன்
இல்லை என்றால் “நல்லவர்கள்”
அவன் நாவில் நாமகளுக்கு
பட்டா போட்டிருப்பார்கள்.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
தனக்கு அறம் பாடியவர்களுக்கெல்லாம்
இரங்கற்பா பாடிவிட்டவன் அவன்.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
அவனை அழுக்கு மூட்டை என்றவர்களை
காலம் வெளுத்துவிட்டது.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
அவன் மனதை புண்படுத்தியவர்களை
எல்லாம் காலம் பண்படுத்தியது

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
நீண்ட ஆயுள் படைத்த எந்த ஆளுமையும்
முதுமையில்
நீர்த்துப்போனதாய் தான் வரலாறு சொல்கிறது.
ஆனால் இந்த தாத்தாவின் அலம்பல்
அவாளின் புலம்பல் ஓயவே இல்லை

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
பாரதமாதாவின் நெற்றிப்பொட்டில்
துப்பாக்கி பதிந்திருந்த நாளில்
கத்தையாய் துண்டு பிரசுரம் ஏந்தி
ஒத்தையாய் வீதிக்கு வந்த வேங்கை மகன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
கோட்டை வளாகத்து சட்டமன்றத்தில்
புல் பிடுங்கவும் நடுவண் அரசு
அனுமதி தேவை.
கூர்த்த மதி கொண்ட இவன்
கோட்டைக்கு வெளியே மானில அரசின்
ஆளுகைக்குட்பட்ட இடத்தில் சட்டமன்றம்
நிர்மானித்தான்.
அது மருத்துவமனையாய் மாற்றப்பட
நிர்மூடர்கள் அதற்கும் “ஜெய”கோஷமிட்டனர்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
வருவதை அறிந்தவன்.
கதை போகும் திசை புரிந்தவன்
சகதியில் சுகம் காணும் எருமைகளுக்கு
அவன் சொல் உண்டி வில்லாக துன்பம் தந்தது
நோய் படுக்கை மரணப்படுக்கையாக்கப்படும்
என்று எண்ணித்தானோ என்னவோ
படம் காட்டிய பாவிகளுக்கு செக் வைக்க
புகைப்படம் வெளியிட கேட்டான்.
அவன் சொல்லை எவன் கேட்டான்?
கேட்காதவன் கெட்டான்.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100

தமிழக மக்கள் கிலுகிலுப்பைக்கு மயங்கும் குழந்தைகளாய்
எப்போதும் தன்னை கை விட்டாலும்
தமிழக மக்களை கைவிடாதவன்
சாமானியர்களுக்குரிய
மன மாச்சரியங்களை தாண்டிவிட்ட
சித்தன்.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
ஊழல் ஊழல் என்று ஊதித்தள்ளும்
ஊதுகுழல்களுக்கு தெரியும்.
அவனை விட அதிககாலம் ஆண்டவர்கள்
கைக்கு ஈறத்தனை ஆதாரம் கிடைத்திருந்தாலும்
அதை பேனாக்கி பெருமாளாக்கிவிட்டிருப்பார்கள் என்று

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
கொண்ட கொள்கைக்காய்
முடி துறந்த போதும்
“முடி” துறந்ததாகவே கருதி
முறுவலித்தவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
சமகால வைரிகளே !
அவன் கீழ் வானில் உதித்த போது
அ(ற்)ப்பம் இது
விழுங்கி ஏப்பம் விடுவோம் என்று
இறுமாந்தீர்கள்.
உச்சிவானில் உக்கிரம் காட்டிய போது
ஒவ்வொரு கிரணத்துக்கும்
வக்கிர பாஷ்யம் சொன்னீர்கள்
மேலை வானில் அன்றே போல்
பால சூரியனாய் தோற்றம் தரும்
இந்த வேளையிலாவது
மனம் திரும்புங்கள்.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
குறுகிய கால பயிர்கள் போதும் என்று
ஆயிரங்காலத்து பயிர் இவனை மறுதலித்தீர்கள்.
அந்த பயிர்களே களைகளாயின.

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
தலை சீவப்படும் என்று காவி கரைந்த போதும்
தலையை தடவிக்காட்டி
என் தலையை நானே சீவியதில்லை என்று
கடந்து போனவன்

#அவன் #HBDKalaingar95 #கலைஞர்100
வாழ்க்கை கிரிக்கெட்டில்
நீ சதம் அடி.
உன் இருப்பே அதிரடி

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *