சாடிசம் -மசாக்கிசம் : இதில் எது அசலான பரிகாரம்

அண்ணே வணக்கம்ணே !
வீடியோ பார்க்கிறவிக பதிவை படிக்கிறதில்லை /பதிவை படிக்கிறவிக வீடியோ பார்க்கறதில்லை (விதிவிலக்குகள் இருந்தாலும் விரல் விட்டு எண்ணிரலாம்) .ஆனால் அங்கயும் போட்டு இங்கயும் அதே மேட்டரை போட்டா -அதுவும் நானே போட்டா சரக்கு தீர்ந்துருச்சு போலனு டவுட்டு வந்துரலாம்.

இந்த மொக்கை எதுக்குன்னா இன்னைக்கு விடியல்ல கிரக பாதிப்புகளே அசலான பரிகாரங்கள்னு ஒரு வீடியோ போட்டிருந்தன். But அந்த அப்ரோச் ரெம்ப பிடிச்சிருந்தது. ஐ லைக் இட். அந்த மேட்டரையே பதிவா போட்டுரலாமான்னு ஒரு கெட்ட எண்ணம் வந்தது. So dropped !

ஆனாலும் ப்ளடி மிடில் க்ளாஸ் மென்டாலிட்டின்னு ஒன்னு இருக்குல்ல. என்னங்கடா வெப்சைட்டுக்கு வருசத்துக்கு ஒரு அமவுண்டு கட்டறம் மாசத்துக்கு ஒரு பதிவு கூட போடலின்னா எப்படின்னு ஒரு பிச்சைக்காரத்தனம் வரும் தானே? மேலும் இப்பம் கூகுள் ஆட்சென்ஸ் வேற அப்ரூவ் ஆயிருக்கு.

மிந்தின்னா என்னதான் ஹிட் அடிச்சாலும் வெட்டி ஓலு நித்திரைக்கு கேடு மாதிரி கதை முடிஞ்சுரும். இப்ப பைசாவும் புரளும். ஆனாலும் பதிவு போட முடியல. வீடியோன்னா அஞ்சு -பத்து -15 நிமிட்ல “தம்” முடிஞ்சுருது. பதிவு அப்படில்ல ஃப்ளோ வந்தாச்சுன்னா போட்டு காட்டடி அடிக்க ஆரம்பிப்பம். விடிஞ்சுரும்.

ஆனாலும் ஆசை விடுதா ? ஆகவே தான் இந்த பதிவு. வீடியோ பதிவுக்கும் இந்த பதிவுக்கும் சங்காத்தமே கிடையாதுங்கோ !

நிற்க இந்த சாடிசம் -மசாக்கிசம் இந்த ரெண்டுல எது அசலான பரிகாரம்? இந்த பதிவுல பார்த்துரலாம். சாடிசம்னா என்ன? எதிராளியை இமிசை பண்ணி சந்தோசப்படறது. மசாக்கிசம்னா என்ன தன்னை எவனாச்சும் இமிசை பண்ணா அதை உள்ளூற என் சாய் பண்றது .லாஜிக்கே இல்லாம தன்னை தானே இமிசை பண்ணிக்கிறது . இந்த ரெண்டு குணங்கள்ள எது கிரக தோஷங்களை குறைக்கும்?

இந்த கேள்விக்கு என் பதில்………..ரெண்டுமே.

ஆமாம் பாஸ் ! லக்னத்துல பாப கிரகம் இருந்தும் நீங்க “இவர் அய்யர். மிக நல்லவர்” ரேஞ்சுல இருந்திங்கன்னா மேட்டர் ஓவராயிரும். அதாவது அந்த பாவ கிரக காரக நோய்கள் உங்களுக்கு வரலாம். உ.ம் சூரியன் இருந்தா ஒத்தை தலைவலி / மண்டையில அடிபடறது /எலும்பு முறிவு நடக்கிறது இப்படி .(ஏழுல பாப கிரகம் இருந்தாலும் இந்த கதை தான்)

வாக்குஸ்தானத்துல பாபகிரகம் இருந்தும் நீங்க பொன்மொழிகளையே உதிர்த்துக்கிட்டிருந்தா கதை கந்தலாயிரும். அதாவது அந்த பாவ கிரக காரகங்களால பிச்சை எடுக்கிற நிலைக்கு வந்துருவிங்க. உ.ம். செவ் இருந்தா குத்துவேன் -கொல்லுவேன்னு கத்தனும். இல்லின்னா தொண்டை /வாய்/கண்லாம் பாதிக்கப்படும்.
அஞ்சுல பாப கிரகம் இருந்தும் நீங்க பாசிட்டிவ் திங்கிங்/வெங்காய திங்கிங்னு கதை பண்ணிக்கிட்டிருந்தா பெத்தது ஒன்னு கூட பேர் சொல்லாது.

பத்துல பாப கிரகம் இருக்கு. வீட்லயோ /வெளியவோ சனம் கொடுத்த வேலையில சொதப்பறாய்ங்க. நீங்க பாட்டுக்கு ராசா ..கண்ணானு செல்லம் கொஞ்சிக்கிட்டிருந்தா தொழில் நாசம்.

விரயத்துல பாப கிரகம் இருக்கு. மதிய சாம்பார்ல உப்பு சாஸ்தின்னு பொஞ்சாதிய காச்சியிருப்பிங்க. ராத்திரி அதெல்லாம் மறந்து மேல கை போடுவிங்க. வீட்டம்மா ஒரு உதறு உதர்ராய்ங்கனு வைங்க. நீங்க பாட்டுக்கு படக்குனு திரும்பி படுத்துக்கிட்டு கொறட்டை விட்டு தூங்க ஆரம்பிச்சுட்டா என்னாகும்? மறு நாள் எவனாச்சும் வந்து லம்பா ஒரு அமவுண்டை ஆட்டைய போட்டு போயிருவான்.

ஆகவே கொஞ்சம் கெட்டதை யோசிச்சு / கெட்ட வார்த்தை பேசி / சுத்து பட்ட சனங்கமேல கொஞ்சம் எரிஞ்சு விழுந்துக்கிட்டிருந்தா இதான் சாடிசம். இதுவும் ஒரு பரிகாரம் தான்.

ஆனால் ப்ராக்டிக்காலிட்டி இல்லாம /விளைவுகளை யோசிக்காம காட்டடி அடிச்சுட்டா அதுக்குண்டான விளைவுகளையும் சந்திக்க வேண்டியது தான்.

இந்த மசாக்கிசம் இருக்கு பாருங்க. இதுல இந்த பிரச்சினையே கிடையாது. எப்படின்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *