பிரம்மங்காரு 02

அண்ணே வணக்கம்ணே !

பிரம்மங்காருவை பற்றி ஏற்கெனவெ நிறைய எழுதிட்டதா ஞா. சமீபத்துல ஒரு வீடியோல சொன்னாப்ல கடந்த 3 மாசமா டாரா கிளிஞ்சு கிடந்தம்.ஸ்தூல வாழ்க்கையில ஒன்னம் பெருசா பிரச்சினை இல்லைன்னாலும் மனசு மட்டும் பஸ்ட் ஆன லாரி ட்யூப் மாதிரியே இருந்தது . ஒரு வேளை செவ் நாலு -அஞ்சுல இருந்த / அஞ்சுல சனி இருந்த எஃபெக்டா கூட இருக்கலாம்.

சனி வக்ரம்-செவ் தன் உச்ச வீட்டுக்கு போனது காரணமா இருந்தாலும் -அதுக்கு மிந்தியே ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னேங்கறாப்ல இந்த வாரம் லாஜிக்கே இல்லாம பிரம்மங்காரு பத்தின சின்ன சின்ன புத்தகங்கள் சில வாங்க முடிஞ்சது. மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தேவகுமாரன் மாதிரி பிரம்மங்காரு பற்றிய பதிவுகள் பொதிந்திருந்த நியூரான் கள் உயிர்த்தெழுந்துட்டாப்ல இருக்கு.

ஏற்கெனவே எழுதி இருந்தாலும் முத்தாய்ப்பா ஒரு பதிவு போடலாமேன்னு ஒரு கெட்ட எண்ணம். நேத்திக்கு நடந்த சம்பவத்தையே சங்கிங்க எப்படி எப்படியோ மாத்தி சாதிக்கிறானுவ. பிரம்மங்காருல்லாம் லெஜன்ட். எத்தனை எத்தனை கலர் கொடுத்து வச்சிருக்கானுவளோ நமக்கு எப்படி தெரியும்.

அவரை பற்றிய சின்ன வாழ்க்கை குறிப்பு இருந்தா ஒரு த்ரீ டி எஃபெக்ட் வரும் தானே. அதை மட்டும் ஷார்ட்டா கொடுத்துட்டு அவரோட கால ஞான மேட்டருக்கு போறேன்.

பிறப்பு : கி.பி.1604 பெற்றோர்: பரிபூர்ணாச்சாரி ,பிரக்ருதாம்பா .பொற்கொல்லர் வகுப்பில் பிறந்தவர். இவர் பிறந்ததும் தந்தை மரணம்- தாய் இவரை ஒரு முனிவரிடம் ஒப்படைத்து தானும் உயிர் துறக்கிறார்.
முனிவர் இவரை பாபாக்னி மடத்தை சேர்ந்த வீர போஜாச்சாரி – வீரபாப்பமாம்பாள் என்ற தம்பதிக்கு கொடுத்து வளர்க்க சொல்கிறார்.

இவரது 14 வயதில் வளர்ப்புதந்தை இறக்க -இவர் தீர்த்த யாத்திரைக்கு கிளம்புகிறார். தாய் தடுக்க கருவிலான குழந்தையின் படிப்படியான வளர்ச்சியை விவரித்து / 8-9 ஆவது மாதங்களில் பூர்வ ஜென்ம நினைவுகள் இருக்கும். கடந்த பிறவிகளில் நல்ல காரியமே பண்ணலியே என்று குழந்தை வருந்தும். கருப்பையை விட்டு வெளி வந்ததும் அனைத்து நினைவுகளும் மறந்து போகும் -ஆண் பெண் கலப்பு என்பது புனிதமானது என்பதை உணர்ந்து நல்ல பிள்ளைகளை பெற்று இனத்துக்கு நன்மை சேர்க்க வேண்டும் இத்யாதி விஷயங்களோடு -ஆத்ம போதமும் செய்து வெளியேறுகிறார்.

தீர்த்தயாத்திரையை முடித்து கொண்டு பனகானு பல்லெ என்ற கிராமத்தில் அச்சம்மா என்பவரின் பசுக்களை மேய்க்கும் வேலைக்கு அமர்ந்து அங்குள்ள ரவ்வல கொண்ட என்ற மலையின் ஒரு குகையில் அமர்ந்து உலக எதிர்காலத்தை விளக்கும் கால ஞானம் நூலை ஓலைச்சுவடிகளில் எழுதுகிறார். பசுக்களின் மேய்ச்சல் நிலத்தை சுற்றி தம் கைத்தடியால் கோடிட்டு விட்டு கால ஞானம் நூலை எழுதுவது வழக்கம்.

சக மேய்ப்பர்களின் புகாரின் பேரில் துப்பறிய அச்சம்மா வருகிறாள். அந்த நேரம் பார்த்து பசுக்கூட்டத்தை நோக்கி ஒரு புலி வருகிறது . பிரம்மங்காரு போட்ட வட்டத்துக்குள் பிரவேசிக்க வட்டத்தை சுற்றி தீஜுவாலை கிளம்ப புலி வெருண்டு ஓடுகிறது.

அச்சம்மா மெர்சலாகிறாள். குகையில் பிரம்மங்காருவின் தம் காரியத்தில் கண்ணாயிருக்க தாங்கள் எழுதும் நூலை பற்றி எனக்கும் சொல்லுங்கள் என்று கேட்கிறாள்.

பிரம்மங்காரு கால ஞானத்தை விளக்க அவள் பிரம்மாங்காருவின் பாதம் பணிந்து சிஷ்யை ஆகிறாள். அவள் மகன் கண் பார்வையற்றவன். அவனுக்கு பிரம்மங்காரு கண்ணொளி வழங்குகிறார். அவள் ஒரு மடத்தை கட்டித்தர அங்கேயே தங்குகிறார்.

சில காலத்துக்கு பிறகு மடத்தின் பொறுப்பை அச்சம்மா& அவள் மகனிடமே ஒப்படைத்து மீண்டும் தம் பயணத்தை துவக்குகிறார். பனகானு பல்லெ நவாபின் அழைப்பின் பேரில் அவரிடம் சென்று அவர் தந்த அசைவ உணவை பழங்களாக மாற்றி சித்து காட்டுகிறார்.

பெதகாமெர்லா கிராமத்தை சேர்ந்த பொற்கொல்லர் சிவ கோட்டையாவின் மகள் கோவிந்தம்மாவை மணக்கிறார் பின் கந்திமல்லய்ய பல்லெ கிராமத்தில் மக்கள் கட்டிக் கொடுத்த மடத்திலேயே தம் ஐந்து மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் தங்கிவிடுகிறார்.

அங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் மடுமாலா கிராமத்தை சேர்ந்த பீர்சாகிப் மகன் சித்தைய்யா அவரது சீடராகிறார்.அவர் உறவினர்கள் நவாபிடம் முறையிட நவாபிடம் இருந்து பிரம்மங்காருவுக்கு தாக்கீது வருகிறது. அவர் அரண்மனையில் தண்ணீரால் விளக்கெரித்து சித்து செய்கிறார்.

ஹைதராபாத் நவாபும் இப்படியே சல்லித்தனமாய் கேள்வி கேட்டு லொள்ளு பண்ண கர்பமாக இருக்கும் பெண் குதிரையின் கருவில் இருந்து குட்டியை எடுத்துக்காட்டி ரெஸ்டோர் பண்றார்.

புஷ்ப கிரி என்ற ஊரை சேர்ந்த பிராமணர்கள் தம் சாதித்திமிரை காட்ட அக்கிரகாரத்தையே பற்றி எரிய விட்டு/பின் அணைத்து அவர்களின் கொட்டத்தை அடக்குகிறார்.

தமது 90 ஆம் வயதில் முன் கூட்டியே அறிவித்து 1693 ஆம் ஆண்டு ஜீவ சமாதி அடைகிறார்.

பி.கு:
நீட்டி முழக்கி சொல்ல வேண்டுமானால் நிறைய சங்கதிகள் இருக்கு. பின்னொரு சமயம் பார்த்துக்கலாம்.ஆர்வமுள்ளவர்கள் பதிவின் இறுதியில் தந்திருக்கும் தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்.

கால ஞானம்:
நடப்பு கலியுகாதி 5,119 ( நம்ம இங்கிலீஷ் வருசம் மாதிரி -இது ஒரு கணக்குங்ணா) கால ஞானம் சொல்லக்கூடிய சம்பவங்கள் கலியுகாதி 5000 ஆண்டுகள் முழுமை பெற்ற பின் நடக்க விருக்கும் சம்பவங்களை சொல்வது .
அவர் என்னமோ வருசத்தோட பேர்/ மாசம்/ திதி /நட்சத்திரம் எல்லாத்தையும் குறிப்பிட்டுதான் சொல்றார். ஆனால் அவர் குறிப்பிடும் வருசம்லாம் தமிழ்/தெலுங்கு வருசம். மொத்தமே 60 தான். ஒரு ரவுண்டு முடிஞ்சாச்சுன்னா மறுபடி பிரபவ விபவன்னு ஆரம்பிக்கும்.

ஆக கால ஞானம் சொல்ற சம்பவங்கள் இன்னைக்கு நடக்கலின்னா 60 வருசம் களிச்சு நடக்கும்.(அவ்வ்) சில முந்திரி கொட்டைகள் (நான் உட்பட ) குருட்டு கணக்கெல்லாம் போட்டு இந்த வருசம் காலி -அடுத்த வருசம் காலின்னு விட்டுக்கிட்டிருந்தம்.

பிரம்மங்காரு தான் எழுதின சுவடிகளை அச்சம்மா வீட்டு முன்னே பள்ளம் பறிச்சு ஒரு கலசத்துல இட்டு புதைச்சு அதுமேல ஒரு புளிய மரத்தை நட்டுட்டு போனாருன்னு ஒரு செய்தி .

அப்போ இன்னைய தேதிக்கு செலாவணியில உள்ளதெல்லாம்? அவர் உபதேசிக்கும் போது கேட்டவன்ல எவனாச்சும் டாக்குமென்டைஸ் செய்திருக்கலாம் தானே? இதுல உள்ள ரிஸ்க் என்னன்னா இது “ஹியர் ஸே ”
என் கடந்த பதிவுகள்ள பிட்டு பிட்டா அது நடக்கும் இது நடக்கும்னு எழுதியிருப்பேன். இன்னய தேதிக்கு என் கான்ஷியஸ் படி அவர் கணிப்புகளை 3 கேட்டகிரியா பிரிச்சுக்கலாம்.

1.அழிவுகள்:
இதுல வெள்ளம்,வறட்சி ,பஞ்சம், இடி ,போர், தீ இப்படி பலதும் வருது . இந்த அழிவுகளுக்கு சூசகமா சில விஷயங்கள் வருது . உ.ம் திருப்பதி வெங்கடேசர் வலது புஜம் அதிரும்/காஞ்சி காமாட்சி ரத்தம் கக்குவாள்.
இது போதாதுன்னு ஹாலிவுட்/விட்டலச்சாரியார் படம் போல எமதர்மன் தோன்றி உபதேசம் செய்வார்/ ஹனுமான் பாவிகள் வதம் பண்னுவார்/காளி கோர நரத்தனம் புரிவாள் மாதிரி விஷயங்களும் வருது .

2.சுபிட்சம்:
இதை பத்தி பல மேட்டர் வருது. கம்மம் ஏரியில் தங்க எருதுகள் வெளிப்படும்னு ஆரம்பிச்சு பற்பல ஆறு /குளங்கள் / தேவாலயங்களில் இருந்து டன் டன்னா தங்கம் வெளிப்படும்ங்கறாரு. நம்ம காலத்துல பத்ம நாபஸ்வாமி கோவில் விஷயத்துல கண் கூடா பார்த்தம் தானே? நதிகள் திசை திருப்பப்படும். ஒரு ரூபாய்க்கு 16 புட்டி நெல் கிடைக்கும் என்றும் சொல்கிறார்.

3.சுபிட்சத்துக்கு முன்:
நான் வீரபோக வசந்த ராயனாய் வந்து உலகை ஒரு குடையின் கீழ் ஆள்வேங்கறாரு. ஒரு ஷெட்யூலே கொடுக்கிறாரு.

டிஸ்கி:
நேருவிடம் செயலாளராய் இருந்த வேத வியாஸ் என்ற பிராமண பிரமுகர் தம் குல வழக்கப்படி ரிட்டையர்மென்டுக்கு பிறகு சாமியாராகி கால ஞானம் /பவிஷ்ய புராணம்/பைபிள்/குரான் எல்லாத்தையும் போட்டு கிண்டி ஒலகம் 2000 ல அழிஞ்சுரும்னு ஒரு புஸ்தவம் எழுதினாரு.

அதுல பிரம்மங்காருவோட கால ஞானத்துல அவிகவிக அவிகவிகளுக்கேத்தாப்ல திணிப்புகள் செய்திருக்காங்கன்னும் குறிப்பிட்டிருக்காரு. அம்பேல் பார்ப்பம்..

எனது பழைய பதிவுகள்:

பதிவு 1

பதிவு: 2

பதிவு: 3

பதிவு: 4

பதிவு:5

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *