ஏழு ஏழா ஒலக வாழ்வைபிரிச்சுக்கோ !

அண்ணே வணக்கம்ணே !
நம்ம சூப்பற ஸ்டாரு எட்டு எட்டா ஒலக வாழ்வை பிரிச்சுக்கோன்னு பாடினது வாஸ்தவம் தான். அந்த பாட்டுப்படி (ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை -நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்லை) அம்பத்தாறுக்கு ரிட்டையர் ஆகி 64 க்கு டிக்கெட் போட்டிருக்கனும். போட்டாரா? இல்லை. இதுவே வாத்யாருக்குன்னு எழுதின பாட்டுல “எனக்கொரு மகன் பிறப்பான்” தவிர எல்லா கருமமும் மெட்டீரியலைஸ் ஆயிருச்சு.

என்னடா மேட்டருன்னா அந்த காலத்துல பாட்டுக்கு கூலி குறைவு / அ.கா கவிஞர்களுக்கு பணத்தை எப்படி காபந்து பண்றது /பெருக்கறது மாதிரி திரிசமன்லாம் தெரியாது . ஆகவே தொட்டுக்கோ தொடச்சுக்கோன்னு வாழ்ந்து பூட்டாங்கோ.அவிக ஜாதகத்துல ரெண்டாமிடம் தனஸ்தானமா ஃபெயில் ஆகி /வாக்குஸ்தானமா கில்லியடிச்சுது.
இந்த காலத்துல அப்படியா?

நிற்க எண் கணிதம் – ஜாதக சக்கரம் ரெண்டையும் போட்டு குழப்பி ஒரு டெக்னிக்கை டெவலப் பண்ணிக்கிட்டிருக்கன். (லேப் லெவல் தான்) விருப்பமுள்ளவிக அப்ளை பண்ணி தங்கள் அனுபவத்தை கமெண்ட்ல சொல்லுங்க. மத்தவிக? ஜோரா கைதட்டிட்டு ஜூட் ஆயிரலாம்.

எல்லார் வாழ்க்கையையும் எட்டு எட்டா பிரிச்சா எல்லாமே உதைக்கும். ( உயிர் எண்/ கூட்டு எண் இத்யாதி 8 ஆ அமைஞ்சவிகளுக்கு – கூடவே அவிக ஜாதக லக்னத்துக்கு சனி லக்னாத் சுபரா இருந்து எடப்பாடி மாதிரி “அஜீஸ்” பண்ணி டேரா போட்டிருந்தா அவியளுக்கு ஒர்க் அவுட் ஆகலாம்)

இப்ப நான் சொல்லப்போற மேட்டரை ஓரளவு கெஸ் பண்ணியிருப்பிங்கனு நினைக்கேன். அஃதாவது நம்ம உயிர் எண் /கூட்டு எண் இந்த இரண்டில் எது தொடர்பான கிரகமும் நம்ம ஜாதகத்துல ஓரளவு சொல்லிக்கிற ரேஞ்சுல உட்கார்ந்திருக்கோ அதுதான் உங்க வாழ்க்கைய பிரிப்பதற்கான அலகு .

நம்ம லேப்ல நாம தானே மொத எலி. நான் பிறந்த தேதி 7 (உயிர் எண்) கூட்டு எண் 7/8/1967 =38=11. இப்ப 7 என்றால் கேது . இவர் லக்னம் முதல் 12 பாவங்களில் நின்றால் என்ன பலனோ அதை தன்னோட மொத ரவுண்டு கால கட்டத்துல தரனும்.

டீட்டெய்லாவே சொல்றேன். 1967-1974 காலகட்டத்துல ஜன்ம கேது எஃபெக்டை தரனும். 1974-1981 தன,வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானத்துல இருந்த எஃபெக்ட் . இப்படி ஒவ்வொரு ரவுண்டுக்கும் லக்னம் முதல் ஒவ்வொரு பாவத்துல நின்ன பலனை தரனும்.

எல்லாம் செரி பாஸ் ! அந்த நெம்பர் வந்தா மட்டும் போதாது .அந்த நெம்பருக்குரிய கெரகம் சொல்லிக்கிற ரேஞ்சுல ஜாதகத்துல நின்னிருக்கனுமேன்னு கேப்பிக. சொல்றேன்.

நம்முது கடகலக்னம் ( இதை எத்தனையாவது முறையா சொல்றேன்னு நான் சத்தியமா கணக்கு வச்சிக்கல) . 5-10 க்குடையவர் செவ். இவரோட சேர்ந்து கேது நான்காம் இடத்துல நிற்காரு. 4= தாய். உசுருள்ள இடம் .ஆகவே தாய்க்கு டிக்கெட். வாகனங்களை காட்டும் இடம் இது. சைக்கிள்கள் முதல் /பஜாஜ் சன்னி 1+1 /ஸ்கூட்டி / டிவிஎஸ் எக்செல் /மொபைல் புக் ஸ்டோர் எல்லாமே ஆப்புதான். (லேட்டஸ்டா வண்டி வித்த கதைய கூட சொல்லிட்டேனு நினைக்கேன்)

கல்வி ? இன்டர் மொத வருசத்துலயே குண்டு. டிகிரி ஃபைனல் இயர் டிஸ்க். வீடு கதைன்னா சொல்லவே தேவையில்லை .இப்படி எல்லா காரகங்களுக்கும் ஆப்பு வச்ச கேதுவை எப்படி பேஸ் பண்ணலாம்னு கேப்பிக. சொல்றேன்.

4=வித்யாஸ்தானம் கேது = ஆத்ம ஞான காரகன். ஞானி ஆயிட்டமான்னா இல்லை தான்.ஆனால் இன்னைய தேதி ஞானின்னு சொல்லிக்கிற பக்கிங்க பண்ற எந்த கூத்தையும் பண்ணாம குட்டா வாழ்ந்துக்கிட்டிருக்கம்.

கெரகங்க கூட ஏதோ கடமைக்கு வருசத்துக்கு ஒரு ஆப்பு வச்சி / இன்னம் கொஞ்சம் ஞானத்தை கொடுத்துட்டு ஜூட் ஆயிக்கிறாய்ங்க. அந்த அளவுக்கு விலகி வந்துட்டம் . ஐ மீன் பந்த பாசங்கள் /உலக விவகாரங்கள்ள இருந்து.
வெறுமனே பழங்கதைய சொன்னா கடுப்பாயிருவிங்க. இந்த கணக்கு என்னமா டாலி ஆகுதுன்னா ஏழாவது ரவுண்டு ( 7X7=49 வயசு வரை/அஃதாவது 42 முதல் 49 வயசுவரை பொஞ்சாதி தான் ஆப்பு வைக்கனும். நாம கண்ணாலமான புதுசுல /ஏன் 12 வருசம் வரை கூட கொஞ்சம் லைவா இருந்து ரெம்பவே பட்டுட்டம். அது வேற கதை .ஆனால் 2003 லருந்து ஃபாரின் ஸ்டைல் மெயின்டெய்ன் பண்றதால கிரேட் எஸ்கேப்.

ஆனாலும் இது மெட்டீரியலைஸ் ஆச்சு. எப்படி ? மவ வருசத்துக்கொன்னா ரெண்டு பெத்தாச்சு. அந்த கொளந்தைகளை கவனிச்சுக்கற ப்ரஷர்ல பொஞ்சாதி இருந்தாலும் இல்லேங்கற மாதிரி நிலை. (இதைவிட பரிகாரம் என்ன?)

அடுத்து நம்ம 49 ஆவது வயசுல இருந்து 56 வயசு வரைக்கு எட்டாவது ரவுண்டு. பழைய அனுபவங்களின் படி ஒன்னு டிக்கெட் போடனும்/அல்லது பிச்சை எடுக்கனும்./ அல்லது செயிலுக்கு போகனும். நம்ம நவீன பரிகாரங்கள் அடிப்படையில 3ஆவது மேட்டருக்கு தான் ட்ரை பண்றம் . எவனுக்கும் மான ரோசம் இல்லை என்ன பண்ண?
இப்ப இந்த ஆகஸ்ட் வந்தா 51 முடியுது.போன 2 வருசத்துல மேற்படி 3 மேட்டர்ல எதாவது ஒன்னு நடந்திருக்கனும். நடக்கல. ஏன்னா நம்ம லைஃப் ஸ்டைல் அப்படி . ராத்திரி எழு மணி வரை சிறைக்கைதி மாதிரி . ஒரு லக்கேஜ் ஆட்டோ சைஸுக்கு ரூம்பு. சின்னதா போர்ட்டபிள் டிவி. எல்.இடி.பல்பு தேன். தொழிலுக்கு அவசியம் கருதி லெனோவா. சொந்த உபயோகத்துக்கு 500 ரூவா ஃபோன் தான்.

ஏழு மணிக்கு மேல செம்ம ஜாலி போலன்னு நினைச்சா அதுவும் புஸ்ஸு. 200-300 ரூ ரேஞ்சுல பேன்ட்/ 100-150 ரூ ரேஞ்சுல சட்டை -கைசெலவுக்கு 100 ரூ கொண்டுட்டு போனாலும் நூறையும் வேட்டு விட்ட நாட்களை விரல் விட்டு எண்ணிரலாம். மிச்சத்தை கொண்டு வந்து கம்பெனியில ஜமா பண்ணிர்ரது. (மவ தானே கல்லாப்பெட்டி இன் சார்ஜு )
____

இது ஒரு வ்யூ. கூட்டு எண் என்று பார்த்தா 2 வருது . அதுக்கு மிந்தி 11 . என் வாழ்க்கையை 11 -11 ஆ பிரிச்சு பார்த்தாலும் செமயா டாலி ஆகுது. நாலாவது ரவுண்டுல ( 33 முதல் 44) 24 மணி நேரத்துக்கெல்லாம் வீடு மாத்திக்கிட்டிருந்த பக்கி 44 ஆவது வயசு ஆரம்பிச்ச பிறவு ஒரே வீடு /வசதிக்காவ ஒரு முறை /வாஸ்துக்காக ஒரு முறை மாத்தியிருக்கன். அம்புட்டுதேன்.

இப்ப 44 -55 அஞ்சாவது ரவுண்டு. நம்ம கையில சந்திர மண்டலத்துல இருந்து ஒரு ரேகை படுக்கை கோடா துவங்கி தன ரேகையில கிராஷ் ஆகி அங்கே ஒரு ரகசிய முக்கோணத்தை ஏற்படுத்தி / இடையில் வெட்டுப்பட்டிருந்தாலும் கங்கண ரேகையில இருந்து கிளம்பி கேப்பை ஃபில் அப் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டிருக்கிற வாழ்க்கை ரேகையின் இரண்டாம் பகுதியை கூட டச்சு பண்ணி சுக்ர மேடுக்கு போகுது.

அஞ்சு =புத்திஸ்தானம் /சந்திரன் = இன்ட்யூஷன்ஸ்/அமானுஷம்/ சிக்ஸ்த் சென்ஸ் இப்படி என்ன வேணா சொல்லலாம்.
கடந்த ரெண்டு -வருசமா வாசியோகம்னு தேடித்தேடி பிடிச்சதெல்லாம் நாம ஏற்கெனவே ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டிருக்கிறதையும் /நமக்கு தானா நடந்துக்கிட்டிருக்கிறதையும் தான் சொல்லியிருக்கு.
இவ்ள தூரம் தானா நடந்த சமாசாரம் க்ளைமேக்ஸுக்கு போகலின்னாலும் ஒரு அந்தாசா தொடரும் தானே?

என்னாச்சு? ஓ எங்க கதையை சொல்லுங்க பாஸ்னு கேட்கிறிங்க. அதானே. இந்தியன் படத்துல மணீ ஷா கொய்ராலாவுக்கு பலான ஜோக் புக்கையே கமல் தூக்கி கொடுத்துர்ராப்ல அசலான மேட்டரையே கொடுத்துட்டனே.
உயிர் எண் /அல்லது கூட்டு எண் எது பாருங்க. அதுக்குரிய கிரகம் எது ? அது ஜாதகத்துல பேர் சொல்லும் பிள்ளையா இருக்கா பாருங்க.

அந்த கிரகம் லக்னம் முதல் எந்தெந்த பாவத்தில் நின்னா என்னென்ன பலன் தரும்னு கெஸ் பண்ணிக்கோங்க.
இப்போ மொத ரவுண்டுன்னா அந்த கிரகம் லக்னத்தில் நின்றபலனை தரனும். ரெண்டாவது ரவுண்டுன்னா தனபாவத்துல நின்ன பலன். இப்படி கேல்க்குலேட் பண்ணி கொஞ்சம் முக்கிப்பாருங்க.
அடுத்த பதிவுல நாம எழுதின கிரகங்கள் நின்றபலன் பதிவை தேடிதரேன்.

3 Replies to “ஏழு ஏழா ஒலக வாழ்வைபிரிச்சுக்கோ !”

Tamilblogs

01/05/2018 at 7:40 am

தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in/

Reply

selva

30/04/2018 at 6:30 pm

அன்ணே,

ரொம்ப சரிதான். 19‍‍/4/1974

உயிர் எண் 19 அல்லது 1. அப்ப வருச வருசம் மாறனும். ஆனா 19 ஆ எடுத்துக்கிட்டா வாழ்கையை 19 ஆ பிரிச்சா எல்லாம் சரியாதான் வருது.

இதையே நல்லா எழுதுனா சரியாதான் இருக்கும்.

ரொம்ப ந்ன்றி .

Reply

    S Murugesan

    30/04/2018 at 7:17 pm

    வாங்க செல்வா !

    வேணம்னா இதையே ஒரு தொடரா எடுத்துக்கிட்டு கதை பண்ணலாம்.ஆனால் கற்பூர அறிவு கொண்டவிக அறுக்கறான்யான்னிருவாங்களே

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *