கொல் அல்லது கொல்லப்படு : Choice is Urs

அண்ணே வணக்கம்ணே !

இது மேலுக்கு வெட்டி வேதாந்தமா தெரிஞ்சாலும் – உங்க ஜாதகத்துல உள்ள தீய கிரகங்கள் எல்லாத்தையும் எக்ஸாஸ்ட் பண்ணி / நல்ல கிரகங்களை ரேக்கி விடற சூப்பர் ஃபார்முலாவும் இருக்கு. கண்ணிருப்போர் காணக்கடவர்.

ஆயிரமாயிரம் தத்துவங்கள்..ஆயிரமாயிரம் ஆற்றுப்படுத்தல்கள்..ஆறுதல்கள். ஆயிரமாயிரம் உபதேசங்கள். யாவும் ஒன்று மற்றதை நோக்கி நம்மை செலுத்துகின்றன. உந்தி தள்ளியது பிந்திப்போகிறது .

முன்னேறி செல்கிறோம் என்ற உண்மை நம்பிக்கையை தந்தாலும் ஒரு பதட்டமும் வருகிறது . நம்மிலான வெள்ளந்ததித்தனம் -குழந்தைமை குறைந்து போவதாலோ என்னமோ ..பதட்டம் பிறப்பதை உணர முடிகிறது.
உயிர்களின் இறுதி இலக்கு என்னவோ முக்தி – விடுதலை -பிறவிச்சக்கரத்தில் இருந்து விடுபடல் தான்.அதற்கு ஒரே வழி கருமங்களை அனுபவித்து தீர்த்தல்.வறுமை ,தனிமை, நிராகரிப்புகள்,அவப்பெயர்,நோய்,அடிமைப்படுதல் , மறைந்து வாழ்தல் ,சிறையிடப்படல் இதெல்லாம் நம் கருமங்களை தொலைக்கின்றன.

செல்வம், சமூக அங்கீகாரம் , நட்பு ,உறவு,காதல்,பெயர் புகழ் ,சுதந்திரம், இதெல்லாம் நம் பூர்வ புண்ணியங்களை கரைத்தே விடுகின்றன.

இந்த அடிப்படையில் பார்த்தால் நாம் நம் கருமங்களை கரைப்பவற்றைத்தானே விரும்ப வேண்டும். ஏன் நாம் நம் பூர்வ புண்ணியங்களை கரைத்து விடக்கூடியவற்றையே விரும்புகிறோம்.

சுவையான முரண்.

மனவியல் படி எடுத்துக்கொண்டால் எல்லா உயிர்களிலும் -முக்கியமாய் மனிதர்களில் இருப்பவை அவனை செலுத்துபவை இரண்டே இரண்டு ஆசைகள் தானாம். ஒன்று கொல்லுதல் அடுத்தது கொல்லப்படுதல்.

கொன்றால் கருமம் கூடும். கொல்லப்பட்டால் கருமம் தொலையும். கொல்லுதலும் -கொல்லப்படுதலும் ஸ்தூலமாக அப்படியே நிகழவேண்டும் என்பதில்லை. அவற்றிற்கு எத்தனையோ மாற்றுகள்.

செக்ஸ் -பணம் -அதிகாரம் ..

மண்ணுலகிற்கு நாம் வந்ததென்னமோ கருமம் தொலைக்க தான். ஆனால் மண்ணில் வீழ்ந்ததுமே நாம் அதற்கு சொந்தம் என்பதாலோ என்னமோ இந்த மண்ணுடன் அப்படி ஒரு பந்தம் ஏற்பட்டுவிடுகிறது.

ஒரு வேளை பூமியின் புவியீர்ப்பு சக்தி மூளையிலான கடவுள் மையத்துக்கான ரத்த ஓட்டத்தை குறைத்துவிடுகிறதோ என்னவோ? பால் குடி பருவம் வரை குழந்தைமைக்கு குறைவில்லாமல் தான் இருக்கிறது .பிறகு தான் மண்ணில் விளைந்தவற்றை உண்பதாலோ என்னமோமனிதனுக்கு இந்த மண்ணுடன் அப்படி ஒரு பந்தம் உறுதிப்படுகிறது.
என்னமோ கல்ப்ப காலங்கள் இங்கு வாழ இருப்பதை போல் விஸ்தாரமாக திட்டமிடுகிறான். செயல்படுகிறான். ஸ்தூல திட்டங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.ஆனால் மனவியல் ரீதியாக அவனை உந்தும் ஆசைகள் மேற்சொன்ன இரண்டே தான்.

கொன்றால் கருமம் கூடும். பிறவிகள் எழும். கொல்லப்பட்டால் கருமம் குறையும் .இதுவே கடைசி பிறவியாக கூடும்.
கொல்லப்படுதல் என்றால் எதிராளியிடம் கத்தி கொடுத்து குத்து என்பதல்ல.

“என்ன ஊஸ் பண்ணிக்கோ” – “என்னை டைம் பாஸுக்குன்னே வச்சுக்கோ” “என்னை எவ்ள வேணா இன்சல்ட் பண்ணு” என்பதில் ஆரம்பித்து வாங்காத கடனுக்கு வட்டி கட்டுவது வரை எல்லாமே இதில் அடக்கம்.

ஃபார்முலா கைவசம் இருப்பதால் என்னை பொருத்தவரை தனியொருவனாய் இலக்கை அடைதல் எளிது போல் தோன்றினாலும்..லக்னாதிபதியே இரண்டில் இருக்க நான் பேச மாட்டேன்/எழுதமாட்டேன் என்று அடம் பிடித்தால் பேசவும் எழுதவும் மட்டுமே இன்னொரு பிறவி எடுக்க வேண்டி வந்து விடுமோ என்னமோ? எதுக்கு லொள்ளு ..அதான் ஜெ ‘ சொல்ற மாதிரி “தெம்பு -திராணி ” இருக்கும் போதெல்லாம் எழுதிப்புடறது /பேசிப்புடறது .

ஒரு மவுசுக்கு இத்தனை க்ளிக் மாதிரி ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இத்தனை எம்.பின்னு இயற்கை லிமிட் வச்சிருந்தா நான் அம்பேல். நிறைய எழுதிட்டேன். நிறைய பேசிட்டேன். என்ன ஒரு வில்லங்கம்னா எல்லாமே ஸ்வீப்பிங்கா போயிருக்கு. தவளைப்பாய்ச்சல் நடைம்பாங்களே அப்படி.

லக்னாதிபதியே ரெண்டுல இருக்கிறதாலயோ என்னமோ பேச்சு -எழுத்து இதான் நான். என் வாழ்க்கை என்னை தயார் படுத்தினதே இதுக்கு தான்னு நல்லா புரியுது. என் அனுபவங்கள் /வாசிப்புகள்-நேசிப்புகள் எல்லாமே இந்த ஒரு புள்ளியை நோக்கி தான் என்னை தள்ளியிருக்கு. நல்லா புரியுது .

ஆனால் அஃபிஷியலா / ஒரு எடிட்டட் மூவி மாதிரி நான் பேசறதும் இல்லை. எழுதறதும் இல்லை. ஸ்பான்டேனியஸா எழுதிட்டே/பேசிட்டே போயிருவன். அப்படி நூல் பிடிச்ச மாதிரி போனாலும் பரவால்லை ..வாசகனை ரெம்ப படுத்தறமோங்கற ஃபீல் வரும் போது கொஞ்சம் சைடு வாங்கறது / சப்ஜெக்டை தாண்டி போறதுல்லாமும் உண்டு.

வலைப்பதிவுகளை தொகுத்து மின் நூலாக்கிருவம்னு இறங்கினப்ப தான் இதெல்லாம் உறைச்சது. ஆனாலும் என்ன.. இயற்கை கொஞ்சமே போல ஆவிசும் / உதவியாளர்களையும் தந்தாச்சுன்னா குறிப்புகளை தயாரிச்சுக்கிட்டு மாலை உரை. மறு நாள் அந்த உரை , நூலாயிரனும். செய்யலாம்.

உயிரின் அடிப்படை கடமை உயிர்வாழ்வது -பரவுவது . பரவுதல் என்பது ஃபிசிக்கலா மட்டுமில்லை கருத்தியல் ரீதியிலும் சாத்தியமே. இந்த பேச்சு எழுத்துல்லாம் கருத்தியல் பரவல் தான்.

கமல் சொன்னாப்ல நாமல்லாம் நம்ம முன்னோர்களின் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் உசுரு கொடுத்துக்கிட்டிருக்கம். நம்ம கனவுகள்? நம்ம கற்பனைகள்? அடுத்த தலைமுறை நிறைவேத்துமோ?

ஆனால் ஒன்னு ஓவர் கான்ஃபிடன்டா சொல்றேனு வேணா நினைச்சுக்கோங்க. என்னமோஒரு பட்சி சொல்லுது..என் கடந்த கால அனுபவங்கள் மனித குல மீட்புக்கான தீர்வுகளை நோக்கி என்னை தள்ளினாப்ல /அந்த தீர்வுகளை பேச்சா/எழுத்தா கொட்டச்செய்தாப்ல …………………….செரி விட்டுருவம். நாளை நடப்பதை ஆரே அறிவார்?

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *