எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களே !

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களே !

வணக்கம். நலம் தானே? பெண் பாடகி விஷயம் –ஓலா விவகாரம் எல்லாம் பிறகு வந்தன. உயிர்மை வெளியீடான உங்கள் நூலை மின் நூலாக வெளியிட்ட சமயம் தான் மனுஷ்ய புத்திரன் முக நூல் பதிவு வழியாக உங்களை நான் அறிந்தேன். அதே வருடம் அந்த மின் நூலின் ஹார்ட் காப்பி எனக்கு புத்தக சந்தையில் கிடைத்தது. நான் வாங்கும் புத்தகங்களை படித்ததும் நண்பரின் உள்ளூர் வாடகை நூல் நிலையத்துக்கு அன்பளித்துவிடுவது வழக்கம். அதே போல் தான் தங்கள் நூலையும் தந்திருந்தேன். இன்று யதேச்சையாக அது என் கண்ணில் பட்டது. மீண்டும் படித்தேன். என் மனமெல்லாம் நீங்களே. உங்கள் பற்றிய நினைவுகளே. இந்த பதிவு போடாட்டா தூக்கம் வராது போல. போட்டுட்டன்.

நூல் வடிவமைப்பு – POD குறித்து நான் போட்ட முக நூல் பதிவுக்கு ரெஸ்பான்ட் ஆகி பதிலளித்ததெல்லாம் சரித்திர நிகழ்வுகள். தாங்கள் ரெஃபர் செய்த நபர்களிடமே வடிவமைப்பு(?) , ப்ரின்டிங் நடந்தது. மின் நூல் வெளியீட்டு விஷயத்திலும் தங்கள் வழிகாட்டுதல் போற்றுதலுக்குரியது . அதற்கு மீண்டும் நன்றி.

நூல் வடிவமைப்பு – POD விஷயத்தில் தாங்கள் ரெஃபர் செய்த நபர்கள் மூலம் எனக்கு கிடைத்த கசப்பான அனுபவங்களை /விவரங்களை தங்களுக்கு விலாவாரியாக அப்டேட் செய்யலாம் என்று நினைத்திருந்த போது உப்பு சப்பில்லாத மேட்டருக்கு என்னை ப்ளாக் செய்துவிட்டீர்கள். (எழுத்தாளன் எழுதிய கன்டென்டை பதிப்பகத்தார் சார்பில் பிற நபர்கள் எடிட்டலாமாங்கறது சப்ஜெட். கூடவே கூடாதுங்கறது உங்க ஸ்டான்ட். ஏன் கூடாதுங்கறது என் ஸ்டான்ட்)

அதுவும் எழுத்தாளர்களின் படைப்பு உரிய ராயல்ட்டி தராது வாயடிக்கும் பதிப்பாளர்களை விளாசும் அதே ரேஞ்சில் கமெண்ட்டெல்லாம் போட்டு –திட்டியாச்சுல்ல இனி ப்ளாக் எல்லாம் இருக்காது என்று நினைத்திருந்த நிலையில் ப்ளாக்கினீர்கள்.

அந்த சூழலில் இந்த விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டிருந்தால் அது மேலும் சிக்கலை உருவாக்கியிருக்கும்.
இப்போது கூட இந்த அனுபவங்களை பொதுவெளியில் வெளியிடுவது தங்களுக்கு நேரிடையாக கம்யூனிக்கேட் செய்ய முடியாத காரணத்தால் தான்.இவற்றை நான் எழுதுவதும் உங்கள் நலம் கருதியே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

சில மாதங்களுக்கு முன் ஒரு எழுத்தாளர் உடல் நலம் பாதித்து படுத்த படுக்கையாக இருப்பதை கேள்வி பட்டு பலவாறாய் மெனக்கெட்டு பிறகு அது அபாத்திர தானம் என்பதை உணர்ந்து கன்ஃபெஸ் செய்து எழுதியிருந்தீர்கள்.
உண்மையை சொல்லவேண்டும் என்றால் உங்களில் என் கேரக்டர் தெரிகிறது. நானும் இப்படித்தான் பட்டிருக்கிறேன்.
என் இருண்ட காலத்தில் எனக்கு நீங்கள் ரெஃபர் செய்தது போல் –நானும் சில மனிதர்களை சிலருக்கு ரெஃபர் செய்து செமயா பல்பு வாங்கியிருக்கேன்.. பிறவுதான்…

அறிமுகம் செய்யும் போதே/ரெஃபர் செய்யும் போதே பாருப்பா..எனக்கு இது எம்ஜிஆர் வேலை தான் இதால எனக்கு கால் காசு புண்ணியமில்லை.. கொய்யால லட்டு வந்தாலும் ல…டா வந்தாலும் நீங்களே திங்கனும். உங்க பஞ்சாயத்துக்கெல்லாம் என்னை கூப்பிடப்படாதுன்னு டிஸ்கி போட ஆரம்பிச்சேன்.

லே அவுட் ஆர்ட்டிஸ்ட்:

தாங்கள் அறிமுகம் செய்த லே அவுட் ஆர்ட்டிஸ்ட் பிரதமர் ஆன புதிதில் மோடி சீன் போட்ட கணக்காய் செமயா சீன் போட்டாரு. பணமா? அதெல்லாம் எனக்கு முக்கியமில்லை. வேணம்னா அஞ்சு ரூவா பத்து ரூவா போட்டு விடுங்க. வேலை முடிஞ்ச பிறகு வாங்கிக்கிறேனுல்லாம் சொன்னார்.

அப்பமே நான் கொஞ்சம் அலார்ட் ஆகி ஃபிக்ஸ் பண்ண பைசாவை கடைசி பைசாவரை மொதல்லயே அவர் கணக்குல போட்டுட்டன்.

கன்டென்டை எம்.எஸ்.வோர்ட்ல ஃபினிஷ் பண்ணி டிசம்பர் 31 மெயில்ல அனுப்பிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு என்ன போச்சு நாளைக்கு நிதானமா இன்னொரு தபா நாம பார்த்துட்டு ஓகே பண்ணபிறகு செய்யட்டுமேன்னு வாட்சப்ல மெசேஜ் பண்ணேன். ஜனவரி 1 ஆம் தேதி மொத ட்ராஃப்ட்ல சில திருத்தங்கள் –நகாசு வேலைல்லாம் செய்து மறுபடி மெயில் பண்ணென்.

மனுஷன் அதை கண்டுக்காம மொத ட்ராஃப்டையே லெட்டர் ப்ரஸ் காரவிகள விட சாமானியமா மொக்கையா மேக் அப் பண்ணி அனுப்பியிருந்தாரு. நான் அவரோட ப்ரூஃப் –மொத ட்ராஃப்ட் –ஜனவரி 1 ஆம் தேதி திருத்தின ட்ராஃப்ட் மூனையும் வச்சுக்கிட்டு மல்லுகட்டி ப்ரூஃப் ரீடிங் செய்து அனுப்பினேன். மேட்டர் போறாது இன்னம் வேணம்னாரு. ரெடி பண்ணி அனுப்பினேன்.

இந்த ப்ராசஸ்ல எவ்ளதான் கடுப்பானாலும் அன் பார்லிமென்டரி ஒக்காபிலரில்லாம் உபயோகிக்காம /வெஸ்டர்ன் ஸ்டைல்ல சூப்பர்-ஃபைன் –தேங்க்யூ –ஃபென்டாஸ்டிக்னு தான் வண்டி ஓட்டினேன்.

அவரு படக்குனு உன் வார்த்தைல்லாம் எனக்கு சோறு போடாது .இன்னொரு ஆயிரம் ரூவா போடு வெட்டி முறிச்சுர்ரேன்னாரு. செரி ஒழியட்டும்னு போட்டு விட்டோம்.

லே அவுட்லாம் முடிஞ்சு போச்சுன்னு ஃபைனல் காப்பி அனுப்பினாரு. அது எப்படி இருந்ததுன்னா ஒரு சாப்டர் முடிஞ்சதுன்னா ஒரு ஐஃபன் ஒரு ஜீரோ ஒரு ஐஃபன் வைப்பமே அது கூட இல்லாம / யூனிகோட்ல நான் நெஞ்சுக்கூடு நோக அடிச்சு அனுப்பின மேட்டரை அப்படியே வாரிப்போட்டு மங்களம் பாடியிருந்தாரு. ஒரு சாட்சிக்கு மொத பக்கத்தை மட்டும் இதே பதிவுல போட்டிருக்கன் பாருங்க. இதே கதை தான் மேட்டர் முழுக்க.

பிறகு அந்த (பேஜ் மேக்கர் ) பிடிஎஃப் ஃபைலை எல்லாம் இமேஜ் ஃபைலாக்கி என் மகளை வச்சு ஒப்பேத்தி ஃபினிஷிங் டச்சு கொடுத்து நீங்க ரெஃபர் பண்ண POD காரவிகளுக்கு அனுப்பினேன். ( நான் இருப்பது சித்தூர் –ஆபி என்பதை கவனத்தில் கொள்க மகளுக்கு ஃபோட்டோஷாப் தான் தெரியுமே கண்டி தமிழ் சுத்தம்)

POD:

சரி லே அவுட் தான் தாலியறுத்துருச்சு. PODல என்ன பிரச்சினை வரப்போகுதுன்னு தகிரியமா இருந்தேன். ரிலீஸ் தேதி பொங்கல் .பத்து நாள் முன் கூட்டியே கன்டென்ட் அனுப்பியாச்சு. காசு ? ஒரு மாசம் முந்தியே போட்டாச்சு.
பொங்கல் /மாட்டுப்பொங்கல் எல்லாம் முடிஞ்சு ப்ரொஃபெஷ்னல் கொரியர்ல எட்டு காப்பி அனுப்பியிருந்தாங்க. பார்த்தா 320 பக்கத்துக்கு 80 பக்கம் தான் ப்ரிண்ட் ஆகியிருக்கு.

ஏற்கெனவே விஜயதசமிக்கு ரிலீஸுன்னு சொல்லி அதை போஸ்ட்போன் பண்ணி மறுபடி இந்த மேட்டரை சொன்னா கிரெடியபிலிட்டி மண்ணா போயிரும்னு அதை டீப்பாய் மேல வரிசையா அடுக்கி டாப் ஆங்கிள்ள ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல டுபாக்கூர் போஸ்ட் போட்டுட்டு மறுபடி POD காரவிகளோட மாரடிக்க ஆரம்பிச்சேன். ( நான் ஒன்னும் அரிச்சந்திரன் இல்லை. பொய்யா போஸ்ட் போட்டதுல வருத்தமும் இல்லை. எப்பவும் உண்மையை சொல்லனும்னு நினைக்கிறவன். சில சமயம் தாமதாம சொல்வேன். அவ்ளதான். இப்ப போல)

ஒரு வழியா அச்சடிச்சாச்சு. அவங்களுக்கு வசதியான பார்சல் சர்வீஸுக்கு வேலூர்ல மட்டும் தான் கிளையாம். அதனால வேலூருக்கு போட்டாய்ங்க.

மாப்ளைய கெஞ்சி கூத்தாடி வேலூர் போய் லிஃப்ட் பண்ணிக்கிட்டு வந்தேன். ஒரு 300 ரூவா லாபம். அவ்வ்.
இதுல சோகம் என்னன்னா 80 பக்கம் (மட்டும்) அடிச்சு அனுப்பினதுக்கும் ஒரு 284 ரூ பில்.

இவ்ள அலைக்கழிச்சும் –நஷ்டமாக்கியும் இந்த பதிவை போடல.இப்ப ஏன் போடறேன்னா…

முருகேசா ! கொஞ்சம் ப்ராக்டிக்கலா யோசிச்சு பார். அவிகளுக்கு புத்தக சந்தை டைம். தலைகால் புரியாம டென்ஷன்ல இருந்திருப்பாங்க. உடுறா உடுறான்னு என்னை நானே ஆற்றுப்படுத்திக்கிட்டேன்.
பிறவு வாரத்துக்கு ஒரு முறை ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை ஃபோன் பண்ணுவாங்க. ஆர்டர் இருக்கான்னு கேட்பாங்க. இதான்டா சரியான நேரம்னு மறுபடி ஆர்டர் போட்டேன்.

என்னாச்சுங்கறிங்க.. 80 பக்கம் (மட்டும்) அடிச்சு அனுப்பி லந்து கொடுக்கலியே தவிர பயங்கர இர்ரெஸ்பான்ஸ்பில் ரெஸ்பான்ஸ்/ லேட்/ நோ ரெஸ்பான்ஸ்.அவிக சொன்னபடியே போன வாரமே பார்சல் வந்திருக்கனும்.
ஆனால் இன்னைக்கு தான் கன்சைன்மென்ட் நெம்பரை எஸ்.எம்.எஸ் செய்திருக்காங்க.

இதை எல்லாம் நான் உங்கள் பார்வைக்கு கொண்டு வர காரணம் இனி நீங்களும் என் ஸ்டைல்ல ஒரு டிஸ்கி போட்டுட்டு அறிமுகம் செய்ங்க.

டிஸ்கி ஞா இருக்குல்ல?

பாருப்பா..எனக்கு இது எம்ஜிஆர் வேலை தான் இதால எனக்கு கால் காசு புண்ணியமில்லை.. கொய்யால லட்டு வந்தாலும் ல…டா வந்தாலும் நீங்களே திங்கனும். உங்க பஞ்சாயத்துக்கெல்லாம் என்னை கூப்பிடப்படாது

நல்ல மனமுள்ள,நல்ல மனிதரான உங்களுக்கு இந்த சின்ன டிப்பை கொடுப்பதுதான் என் நோக்கமே தவிர பார்த்தயா உன்னால எனக்கு இவ்ள நஷ்டம்னு சொல்றதில்லை.

One Reply to “எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களே !”

Tamil Us

17/04/2018 at 12:31 pm

வணக்கம்,

http://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *