இப்படி நடந்திருந்தா??

அண்ணே வணக்கம்ணே !

நாம எல்லாருமே லைஃப்ல பல்பு வாங்கினப்ப -அதுக்கு லீட் பண்ண சீக்வென்ஸை எல்லாம் நினைச்சு அது அப்படி இல்லாம இப்படி நடந்திருந்தான்னு நினைச்சு பார்ப்பம்ல. அதையே கொஞ்சம் மேக்ரோவா ஓட்டியிருக்கன்.

யுபிஏ 1 போலவே யுபிஏ2 வுக்கும் பெருசா மெஜாரிட்டி இல்லாம தொட்டுக்கோ தொடைச்சுக்கோன்னு செயிச்சிருந்தா ? காங்கிரஸ் மேலிடத்துக்கே உரிய அந்த “ஆங்கார போக்கு வெளி வராம இருந்திருக்கும். யுபிஏ 2 வுக்கு ஆப்பா முடிஞ்ச எத்தனையோ விஷயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
சரி ஒழியட்டும் 2014 தேர்தல்ல பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காம இருந்திருந்தா அத்வானி பல்லு போன புலி வேணம்னா அவரை ஏத்துக்கறம்னு கூட்டணி கட்சிக்காரனுவ அடம் பிடிச்சிருப்பானுவ. அத்வானியும் பதவிசா ஒப்பேத்திக்கிட்டிருந்திருப்பாரு.

அட.. இந்த உபி இடைத்தேர்தல்ல ஏற்பட்ட எதிர்கட்சி கூட்டணி சட்டமன்ற தேர்தல்லயே ஏற்பட்டிருக்கலாம். கு.பட்சம் ஒரு கடிவாளம் போட்ட மாதிரியாச்சும் இருந்திருக்கும்.
டிமானிட்டைசேஷன் எப்பிசோட் தான் ரெம்ப கேவலம்னா..அதையடுத்து நடந்த சட்டமன்ற தேர்தல்கள்ள பாஜக கரையேறினது அதை விட கேவலம். குசராத்துல ? அது அதை விட பெரிய கேவலம்.
இந்த டிமானிட்டைசேஷன்லாம் அப்பப்போ தவணையில நடந்த கூத்து தான். மோடி அதிரடியா ஒட்டுமொத்தமா நடத்திரலாம்னு ப்ளான் பண்ணது கூட பரவால்ல.ஆனால் கருப்பு பணத்தை பெத்துப்போடற மேட்டர்ங்களுக்கு கு.க செய்யாம /கால மாற்றத்துல கருப்புப்பணத்தை சேஃப் பண்ண ஆயிரம் வழி இருக்கிற காலக்கட்டத்துல அமல் செய்தது பக்கா கயவாளித்தனம்.

இது கூட பரவால்ல 500/1000 ரூபாயை செல்லாதுன்னுட்டு 2 ஆயிரம் ரூவா நோட்டை விட்டானுவ பாருங்க அதான் செம காமெடி. இதுல புது நோட்டு அடிச்சு வச்சுக்காம / நோட்டு சைஸை குறைச்சு /ஏடிஎம்ல வைக்க முடியாம கைக்காசை கூட செலவழிக்க முடியாம/ஏடிஎம்ல எடுக்க முடியாம சனம் அல்லாடினதை எல்லாம் நினைச்சா இப்பக்கூட செமயா கடுப்பாகுது.

இந்த ஜிஎஸ்டி? அது ஒரு கூத்து .ஒலக நாடுகள்ள 4% இருக்க இங்கே யதேஷ்டமா ஃபிக்ஸ் பண்ணி /பெட் ரோல் -டீசலை – லிக்கரை அதுக்குள்ள கொண்டு வராம..ச்சே.

இப்படில்லாம் ஏரியா மாறி விளையாடி சொதப்பினதுக்கு ராமர் கோவிலே கட்டியிருக்கலாம். இவனுவ சுய ரூபம் வெளிப்பட்டு முன் கூட்டியே விடிஞ்சிருக்கும்.

உங்க பக்கத்துல கலைஞர் ஹெல்த்தியா இருக்கும் போதே மோஸ்ட்லி கொத்துசாவிய ஸ்டாலின் கிட்டே கொடுத்திருந்தார். அவரும் நமக்கு நாமேன்னு மெனக்கெட்டார். செரி போட்டுத்தான் பார்ப்பமேன்னு ஓட்டு போட்டு தொலைச்சிருந்தா கொஞ்ச நாள் கலைஞர் கதை பண்ணாலும் பிறவு செயல் தலைவர் ஆன மாதிரி ஸ்டாலின் சீட்ல ஒட்கார்ந்திருப்பாரு.

பாட்டிக்கா மேட்டர் ஒரு காலத்துல ராஜினாமா லெட்டர் லீக் ஆன மாதிரி லீக் ஆகியிருக்கும். படக்குனு ஃப்ளைட் ஏத்தி ஃபாரின் அனுப்பியிருப்பாங்க. ஒரு வேளை மேட்டர் ஓவருன்னா செப்.22 ஆம் தேதியே அறிவிச்சிருப்பாய்ங்க.

அதிமுகவுலயும் – தமிழக அரசிலும்/அரசின் செயல்பாட்டிலும் இன்னைக்கு வரைக்கும் நடந்த கூத்து எதுவும் நடந்திருக்காது. தமிழ் நாடு முன்னேற்ற பாதையில் முயல் வேகத்துல விரையலின்னாலும் வெட்டியா பொழுது போயிருக்காது.

எங்க பக்கத்துல பார்த்தா 2009 தேர்தல்ல ஒய்.எஸ்.ஆர் தோத்தே போயி இருந்தாலும் தெலுங்கானா மேட்டரை புஸ்வானமாக்கியிருப்பாரு. மானிலம் ஒன்னா இருந்திருக்கும். 2014 தேர்தல்ல பம்பர் மெஜாரிட்டியில வந்து உட்கார்ந்திருப்பாரு.

சந்திரபாபுல்லாம் பூட்ட கேஸு. தான் சி.எம்மா இருந்தப்பயும் ஹைதராபாத் ஹைதராபாத்னு டெவலப்மென்டை சென்ட்ரலைஸ் பண்ணி/ஹைதராபாத் போனதும் வாய்க்கு வாழைப்பழம் தான் மிச்சம்.
பிஜேபி காரவிகளோட கூட்டு வச்சு நாலு வருசம் நெஞ்சு நக்கிக்கிட்டிருந்து ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் இல்லின்னதும் ..மனாவே போச்சு /ஸ்பெஷல் பேக்கேஜ் போதும்னுட்டு பெசல் பேக்கேஜ்லயும் வேலை கொடுத்துரவே இன்னைக்கு பிரதமர் ஊட்டான்ட போராடற ரேஞ்சுக்கு போயிட்டிருக்காரு.

குன்டி நிறைய ஓட்டை புடிச்சு உள்ளே வச்சாச்சுன்னா கட்சியே இருக்காது. இவ்ள ரணகளத்துலயுமமொரு ஆறுதல் ஒருபக்கம் தெலுங்கானா சி.எம்/ ஒரு பக்கம் கர்னாடகா /ஒரு பக்கம் கேரளா ஏதோ சொல்லிக்கிறாப்ல போயிட்டிருக்கு. அற்புதங்கள் நடந்துரலன்னாலும் கொஞ்சம் நம்பிக்கை மிச்சம் இருக்கு.
இன்னம் என்னெல்லாம் நடக்க இருக்கோ ? நெனச்சாலே பயம்மா இருக்கு. ரெம்ப நாளைக்கு தாங்காது போல. அவ்வ்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *