வக்ர சனி_செவ் சேர்க்கை பலன் : பகுதி 4 (ஏப் 19 முதல் மே2 வரை)

அண்ணே வணக்கம்ணே !
தெலுங்குல சர்க்கஸ் ராமுடுன்னு என்டிஆரோட டப்பா படம் . ஆனால் ஒரு பாட்டு எனக்கு ரெம்ப பிடிக்கும்.
பிரதிரோஜூ நா ரோஜனுகுன்டே பிரதி ரோஜு பண்டகே
ரேபு ரேபனி ஊரகுன்டே பிரதி ரோஜூ ஓ தண்டகே

இதுக்கு அருத்தம்:
ஒவ்வொரு நாளையும் என்னுடைய நாள்னு நினைச்சுக்கிட்டா
ஒவ்வொரு நாளும் பண்டிகை
நாளைக்கு நாளைக்குன்னு இருந்தா ஒவ்வொரு நாளும் வீண் தான்

இதே போல ரஜினி நடிச்ச பில்லாவின் தெலுங்கு வெஷன்ல என்.டி.ஆர் நடிச்சிருக்காரு. படம் பேரு யுகந்தர் .செம ஹிட்டு. அதுல ஒரு பாட்டு வரும்.

நின்னட்டி ப்ரதுக்கொக்க ஸ்வப்னமட்டா
ரேப்படி ப்ரதுக்கொக்க சாத்யமட்டா
உன்ன ஈ க்ஷணம் மீதன்டா
மஞ்ச்சி லேது செடு லேது அனுபவிஞ்சு ஹாயிகா

இதுக்கு அருத்தம்:
நேற்றைய வாழ்க்கை ஒரு கனவு
நாளைய வாழ்க்கை ஒரு சாத்தியம் (மட்டுமே)
இருக்கும் இந்த கணம் தான் உங்களுடையது

ஒரு காலத்துல இந்த மாதிரி கிரக பெயர்ச்சி /கோசார பலன்லாம் எழுதும் போது மிஞ்சி போனா ரெண்டு பிட்டா போடுவம். இப்ப என்னடான்னா இப்படி இழுக்குது. வீட்ல ப்ளாக் அண்ட் வைட் மானிட்டரோட / லோ கப்பாசிட்டி ஹார்ட் டிஸ்க் /512 எம்பி ராம் வச்சுக்கிட்டு ஒரு நாளைக்கு ரெண்டு பதிவுல்லாம் போட்டிருக்கன். (வீட்ல நெட் ஆக்செஸ் கிடையாது. பென் ட்ரைவ்ல போட்டுக்கிட்டு நெட் சென்டர்ல அப்லோட் பண்ணனும்) இப்ப என்னடான்னா இப்படி சிங்கியடிக்க வைக்குது.

அன்னைக்கே கொஞ்சம் தம் கட்டி 3 பதிவா போட்டிருக்கலாம் போல.

கடந்த பதிவுல விருச்சிகம் வரை பலன் சொல்லி நிறுத்திட்டம். இந்த பதிவுல தொடர்ரேன். 12 ராசிக்கும் பலன் கொடுத்து முடிச்சுட்டு பிறவு பரிகாரம் தரேன். அதுவும் ரெண்டு பிரிவா ஒன்னு வக்ர சனி+ செவ் சேர்க்கைக்கு ஷார்ட் டெர்ம் ரெமிடிஸ். அடுத்தது சனி வக்ர காலத்தை எப்படி ஓட்டறதுன்னு .இது செப் 6 வரைங்கோ. ப்ளீஸ் வெய்ட்.

9.தனுசு:

உங்களுக்கு சனி 2-3 க்குடையவர் . இவர் உங்க ராசியிலயே வக்ரம். 2க்குடையவரா இவர் சாதாரணமா நின்னா கொடுக்கல் வாங்கல்ல இழுவை /நிஷ்டூர பேச்சு / குடும்ப கலகம் ,கண் /வாய்/தொண்டையில் சிக்கல்னு அவதிப்படனும். இவரு வக்ரமா இருக்கிறதால கொடுக்கல் வாங்கல்ல இழுவை /நிஷ்டூர பேச்சு / குடும்ப கலகம் இத்யாதி கண்ட் ரோல் ஆகும்.ஆனால் செப்.6 ல இவர் வக்ர நிவர்த்தியாயிட்டா பெருசா வேலை கொடுத்துருவாரு. டேக் கேர். அதே சமயம் ,கண் /வாய்/தொண்டையில் சிக்கல் என்பது தொடரும் (செப்.6 வரை ). டேக் சம் ப்ரிக்காஷன்ஸ்.

3க்குடையவரா இவர் சாதாரணமா நின்னா தகிரியம் பொங்கனும் – அல்லல் அலைச்சலுக்கு குறைவிருக்காது .இவர் வக்ரமா இருக்கிறதால கொஞ்சம் பயம் இருக்கும். கிளம்பலாமா வேணாமாங்கற மீமாம்சையிலயே காலம் போயிரும்.
செவ் 5-12 க்குடையவர். இவர் ராசியிலயே நிற்கிறதால ஊன் சோறு திங்கனும் ( அதாங்க பிரியாணி ) கில்மா மேட்டர்ல கொஞ்சம் உற்சாகமா இருக்கவும் வாய்ப்புண்டு. வாரிசுகள் கொஞ்சம் ரத்தத்தை சூடேத்தி –பினாத்த வைப்பாங்க. நெருப்பு,மின்சாரம்,கூர்மையான ஆயுதங்கள் விஷயத்துல அலார்ட்டா இருங்க. பாக பிரிவினை நடக்காத குடும்பங்கள்ள அது தொடர்பான வாக்கு வாதங்கள் துவங்கலாம்.

வக்ர சனி_செவ் சேர்க்கை என்ற கோணத்துல பார்க்கும் போது 2/3 (வ)+5/12 இப்படி வருது. அதிர்ஷ்டத்தை நம்பி பணத்தை முடக்காதிங்க.இளைய சகோதரத்தை பேஸ் பண்ணி எதுலயும் இறங்காதிங்க. வித் இன் தி சிட்டி அவசியம்னா மட்டும் ட்ராவல் பண்ணுங்க. அதுவும் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்ல. பாலைவனத்துல ஓயாசிஸ் மாதிரி வராதுன்னு விட்டுட்ட காசு திரும்பலாம். குடும்பத்துல ஆருனா கோவிச்சுக்கிட்டு பிரிஞ்சிருந்தா வந்து சேரலாம் மனசுல ஒரு இனம் புரியாத பீதி இருந்துக்கிட்டே இருக்கும். இதுவும் நல்லதுதான். அடக்கி வாசிங்க.

10.மகரம்:
சனி உங்களுக்கு 1-2 க்குடையவர். இவர்விரயத்துல வக்ரமாறது நல்லதுதான்.இதுவரை உங்கள் இயல்புக்கு மாறா பிஹேவ் பண்ணிக்கிட்டு செமயா சொதப்பிக்கிட்டிருந்திருப்பிங்க.இப்ப கொஞ்சம் நின்னு நிதானிச்சு ..நான் யாரு? நான் என்ன பண்ணிக்கிட்டிருக்கேன்னு யோசிக்கற வாய்ப்பு கிடைக்கும். சமீப காலமா உங்க இயல்புக்கு மாறா தாராளமா –வெட்டியா செலவழிச்சுட்டதை உணர்விங்க. சகட்டுமேனிக்கு வாக்கு கொடுத்து சிக்கி –நட்டமானதை உணர்விங்க. செட் ரைட் ஆவிங்க.அதுக்காவ ஓவரா கஞ்ச பிரபு கணக்கா மாறிராதிங்க.த்ருஷ்டி பரிகாரம் போல ஏற்கெனவே கால் நரம்பு ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தா அதெல்லாம் மறுபடி தலை தூக்கலாம். டேக் கேர்.

செவ்வாய் உங்களுக்கு 4-11 க்குடையவர் .இவர் 12ல் வரது நல்லதில்லை. தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,பாசத்துக்குரியவர்கள்,மூத்த சகோதரம் வகையறாவில் கொஞ்சம் செலவழிக்க வேண்டி வரலாம். சைட்டு வாங்கறாப்ல இருந்தா கூடுதல் விலை கொடுத்துரவும் –விற்கிறதா இருந்தா குறைஞ்ச விலைக்கு கமிட் ஆறதும் நடக்கலாம். வாகன விஷயத்துலயும் இதுவே.

சேர்க்கைன்னு பார்த்தா ½(வ)+4/11என்று பார்க்கனும். தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,பாசத்துக்குரியவர்கள்,மூத்த சகோதரம் வகையறாவில் உங்க ஸ்கெட்ச்சோ / காசோ பணமோ ஒர்க் அவுட்டே ஆகாது.ஆகவே இந்த மேட்டர்ல செலவழிக்க வேண்டி வந்தா கொஞ்ச காசாவது கடன் வாங்கின காசா இருக்கட்டும். அதை சேர்த்து செலவழிங்க. ஒர்க் அவுட் ஆகலாம்.

11.கும்பம்:
உங்களுக்கு சனி 12/1 க்குடையவர் . இவர் 11 ல் வக்ரம். ராசியாதிபதி வக்ரமானாலே இயல்புக்கு மாறா பிஹேவ் பண்ணிக்கிட்டு செமயா சொதப்பிக்கிட்டிருக்க வேண்டியதுதான்.லாபம் கருதி நீங்கள் முன் யோசனையோ பெரிய திட்டமிடலோ இல்லாம செய்யும் முயற்சிகள் ஒர்க் அவுட் ஆகலாம்.

ஆனால் மூளைய செலவழிச்சு ஸ்கெட்ச் போட்டா மட்டும் பல்பு வாங்க வேண்டியதுதான்.முக்கியமா இந்த சனி வக்ர காலத்துல பத்து ரூவா சம்பாதிக்கனும்ங்கற எண்ணமே கூட இல்லாம போகலாம் . (இதுவும் நல்லதே) காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையா பைசா புரளும். லூஸ்ல விடுங்க. ஏற்கெனவே கால் நரம்பு ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தா அதெல்லாம் மறுபடி தலை தூக்கலாம். டேக் கேர்.

செவ் உங்களுக்கு 3/10 க்குடையவர். இவர் 11ல் வருவது நல்லதே.சகோதர வர்கத்தால் லாபம். காவல் துறை /ராணுவத்தாரால் நன்மை. எலக்ட் ரிக்கல்,எலக்ட் ரானிக்ஸ் வகையிலும் அனுகூலமே.பயணங்களுக்கு அஞ்சமாட்டீர்கள் பயணங்கள் லாபம் தரும்.மனோதைரியம் கூடும்.

சேர்க்கை என்று வரும் போது 12/1(வ)+3/10 என்று வரும்.இதனால் பயணங்கள்,தொழில் உத்யோகம்,வியாபாரம் தொடர்பான செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பயன் தரும். தகிரியம் மனசுல் பொங்குமே தவிர ஸ்பாட்ல ஆஃப் ஆயிருவிங்க.சேல்ஸ் லைன்ல் உள்ளவிகளுக்கு டார்கெட் ரீச் பண்றது மலையா இருக்கும்.சகோதர வர்கத்துடன் ஒட்டவே ஒட்டாது. தொழில் உத்யோகம்,வியாபாரம் விஷயத்துலயும் ஒரு ஒட்டுதல் வராது. எவனோ செத்தான் எனக்கென்ன போச்சு ஆட்டிட்யூட் இருக்கும்.

12.மீனம்:
சனி உங்களுக்கு 11/12 க்குடையவர். இவர் 10ல வக்ரம். 11க்குடையவர் 10 ல நின்னா உபரியா ஒரு வருமானம் வரனும். வக்ரமானா ? இருக்கிறத காப்பாத்திக்கிட்டா போதும்ங்கற ஃபீல் வந்துரும்.அப்படியா கொத்த சம்பவம்/திருப்பம்லாம் வரும். 12 க்குடையவர் 10 ல நின்னா வேலை போகனும். வக்ரமா இருக்கிறதால போகாது. அதே சமயம் உணவு/பலான மேட்டர்ல எல்லாம் ருசி போய் /புதிய ருசிய தேட சொல்லும். வவுத்த –வாழ்க்கைய கெடுத்துக்காதிய.
செவ்வாய் 2/9 க்குடையவர் இவர் 10 ல நிற்கிறது நல்லதுதான்.

பேச்சுக்கு முக்கியத்துவம் உள்ள தொழில்ல இருந்தா சிறக்கும். இல்லின்னாலும் கொடுத்த வாக்கை காப்பாத்த முடியும். காசில்லையே எப்படின்னு முழி பிதுங்கும்போது 108 கணக்கா வந்து சேர்ந்துரும். குடும்பத்துல கொஞ்சம் சூடான பேச்சு –வழக்கு இருந்தாலும் ஜமாளிச்சுரலாம். தந்தை,தந்தைவழி உறவு,தந்தை சொத்து, சேமிப்புக்கள்,தூரபிரயாணங்கள்,வெளி நாட்டுப் பயணங்கள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் நிர்வாகம் ஆகிய விஷயங்களில் அற்புதங்களே கூட நடக்கலாம். என் சாய் !

சேர்க்கை என்று வரும் போது 11/12(வ)+ 2/9 இப்படி வரும்.அன்றாட கொடுக்கல் வாங்கல் /பேச்சு வார்த்தைகளில் அடிச்சு பிடிச்சு தம் கட்டி ஷோல்டரை தூக்கி நின்னாலும் பெருசா வளர்ச்சி இருக்காது. அதே சமயம் பின்னடைவும் இருக்காது.

அடுத்த பதிவுல பரிகாரங்களை பார்க்கலாம் ! உடுங்க ஜூட்டு .

One Reply to “வக்ர சனி_செவ் சேர்க்கை பலன் : பகுதி 4 (ஏப் 19 முதல் மே2 வரை)”

மருதப்பன்

06/04/2018 at 5:30 pm

பரிகாரம் ஏவியேட்டர்

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.