பெரியார் எனும் சித்தரின் சித்துவிளையாட்டு ஆரம்பம்!

அண்ணே வணக்கம்ணே !

இதே மேட்டரை விஸ்தாரமா ஒரு வீடியோவா போட்டது ஞா வருது.ஆனால் இங்கே சிக்கல் என்னன்னா வீடியோ பார்க்கிற சனம் வேற பதிவை படிக்கிற சனம் வேற.

ஆகவே உங்களுக்காகவே இந்த பதிவு .

குண்டலி சக்தி மூலாதாரத்துல நித்ராவஸ்தைல இருக்கிறப்பதான் மனுசன் சுய நலம், பேத பாவம், அடிமை மோகம், குருட்டு தனம், வெந்ததை திங்கறது விதி வந்தா சாகிறதுனு (ஆசனப்பருவம்) கிடப்பான்.சிலருக்கு கடந்த பிறவிகளின் சாதனை காரணமா பிறப்புலயே குண்டலி விழிப்புற்ற நிலைல இருக்கும்.

படக்குனு ஒரு ஆதர்சபுருஷனோட சாங்கத்தியம் ஏற்பட்டதும் ( காந்தி) இவிங்களோட வாழ்க்கை ஒரு யு டர்ன் அடிக்கும். கள் எதிர்ப்புக்கு ஆதரவா தன் தோப்புல இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி சாய்ச்சது இதுக்கு ஒரு உதாரணம்.

கடந்த பிறவிகளின் சாதனை செமர்த்தியான ஃபவுண்டேஷனா இருக்க சீக்கிரமே குண்டலி மூலாதாரத்துலருந்து ஸ்வாதிஷ்டானத்தை நோக்கி தன் பயணத்தை துவக்கினதுமே கொஞ்சம் கொஞ்சமா செக்ஸை ஜெயிப்பாய்ங்க. சுய நலம் பொது நலமா மாறும், பேத பாவம் சமத்துவ உணர்வா மாறும்.
குண்டலி ஸ்வாதிஷ்டானத்தை அடைஞ்சதுமே தன்னை தான் உணர்ந்துருவாய்ங்க.

தங்களோட பிறப்பின் நோக்கம் என்னனு புரிஞ்சு போயிரும். அந்த நோக்கத்தை தவிர வேற எதுலயும் கவனத்தை சிதற விடமாட்டாய்ங்க அடிமை மோகம் சுதந்திர தாகமா, சுய மரியாதையா மாறும், குருட்டு தனம் காணாமப்போயி தீர்க தரிசனம் . மனவியல் படி சொன்னா ஆசனப்பருவம் தாண்டி , செக்ஸ் மேல 100%கட்டுப்பாட்டை பெறுவாய்ங்க.

இதனால இவிகளுக்குள்ள யதேஷ்டமான பவர் ஜெனரேட் ஆகி ரெம்ப ரெஸ்ட்லெஸ்ஸா மாறிடுவாய்ங்க. இவிகளோட கருணை தீய சக்திகள் மேல கோபமா வெளிப்படும். இந்த சமயத்துல தங்களோட ஆதர்ச புருஷனையே எதிர்க்கவும் தயங்க மாட்டாய்ங்க ( ஆஞ்சனேயர் ராமரை எதிர்த்தாப்ல) .

குண்டலி ஸ்வாதிஷ்டானத்துலருந்து மணி பூரகத்தை நோக்கி பயணிக்கும்போது கச்சா முச்சானு பிரயாணம் பண்ணுவாய்ங்க. அலைச்சல் திரிச்சலுக்கு அஞ்சமாட்டாய்ங்க. குண்டலி அனாஹத சக்கரத்தை அடையும்போது உலகையே தங்கள் வீடா பாவிக்க ஆரம்பிப்பாய்ங்க.

ஹ்யுமேனிட்டிக்காக எந்த கட்டுப்பாட்டையும் உடைக்க தயங்க மாட்டாங்க. குண்டலி விசுத்தியை சென்றடையறப்ப இவிக பேச்சு ஸ்தூலமா பார்க்க எத்தனை கரடு முரடா இருந்தாலும் இவிக பேச்சை கேட்டு சனம் லட்சக்கணக்குல ஈர்க்கப்படுவாய்ங்க.

குண்டலி ஆக்னாவை சென்றடைஞ்சுட்டா இவிக ஒன்னுமே செய்யத்தேவையில்லை செயலின்மையில் செயல்னு ஓஷோ சொல்வாரே அந்த ரேஞ்சு வந்துரும். பெரியார் இந்த ஸ்டேஜ்ல இருந்தப்பதான் அண்ணா முதல்வராகி பெரியாரோட கனவுகளையெல்லாம் நனவாக்கினார். கருணாநிதியும் அதை தொடர்ந்தார்.

மனிதம் காக்க பெரியார் நடத்திய தற்கொலைப்படை தனமான , சமரசமற்ற போர் அவரோட யோகாபிவிருத்திக்கு கோ ஆப்பரேட் பண்ணதால குண்டலி விசுத்திலருந்து சஹஸ்ராரத்தை நோக்கி தன் பயணத்தை துவக்கியிருக்கனும். குண்டலி மூலாதாரத்தை தாண்டினாலே பஞ்ச பூதங்களோட வடிவமான இந்த படைப்பின் மேல சாதகனுக்கு கட்டுப்பாடு வந்துருது.

குண்டலி சஹஸ்ராரத்தை நோக்கிப் பயணிக்கிறப்ப தன் மரணத்தை தான் முன் கூட்டியே உணர்ரது பெரிய விஷயமே கிடையாது. குண்டலி தேவி பாகவதம் சொல்ற “மணி” த்வீபத்தை, யோக சாஸ்திரம் சொல்ற சஹஸ்ராரத்தை அடையற நிலைல கட்சியை கட்டிக்காக்க -கட்சியின் சொத்துக்களை பராமரிக்க வாரிசை நியமிக்க சட்ட சிக்கல்களை தவிர்க்க மணியம்மை பெரியாரோட வாழ்க்கைத்துணையாகியிருக்கனும்.

ஒரே விஷயத்தை 14 வருஷம் சொன்னா அதுக்கு மந்திர சக்தி ஏற்பட்டுரும்னு விவேகானந்தர் சொல்லியிருக்காரு. ஆனால் சனம் 14 வருசமென்னா 14 நாள்லயே தங்களோட ஸ்டாண்டை மாத்திர்ராய்ங்க. ராமதாஸ் நாட் பேட். எலக்சன் எலக்சனுக்கு தான் மாத்தறார்.ஒரே விஷயத்தை 14 வருஷம் சொல்லனும்னாலே கடவுளோட கருணை இருக்கனும். அப்படியிருக்க பெரியார் ஒரே மேட்டரை எத்தீனி 14 வருசம் சொல்லியிருப்பாரு. அதனால தான் அவரோட பேச்சு இன்னைக்கும் சிரஞ்சீவியா இருக்கு.

பெரியார் சிலையில் பெரியார் இல்லை தான். ஆனால் பெரியார் சிலையை உடைப்போம் என்று கொக்கரிப்பவர்கள் பார்வைக்கு பெரியார் சிலையில் பெரியார் காட்சி அளிக்கிறார். அவர்களை மிரட்டுகிறார்.

பதற்றத்தில் உளறுகிறார்கள் .பின் தவறு நடந்து விட்டது என்று பதறுகிறார்கள் .அவர்களை ஏவி விட்டவர்கள் யார்?. ராட்சத பலத்துடன் மத்தியிலும் ஏறக்குறைய எல்லா மானிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியின் தூண்கள்.ஆனால் எழுந்த எதிர்ப்பை பார்த்து அக்கட்சி நாலு காலையும் தூக்குகிறது .

இதை பெரியார் என்ற சித்த புருஷனின் ஆன்மா மட்டும் நடத்துகிறது என்று சொல்ல மாட்டேன். அனைத்து மக்களிலும் தன்னை கண்டு – மக்கள் சேவையையே தன் சேவையாய் கருதி வாழ் நாள் முழுக்க உழைத்த அந்த சித்தனின் ஆன்மா சார்பில் இறையே நடாத்தும் திருவிளையாடல் இது. இப்போதுதான் துவங்கி இருக்கிறது.

தைத்த அம்புகள் முனை முறிந்து விழுவதோடு முடியப்போவதில்லை கதை . ஏவியவர்கள் / அதை ஏவ தூண்டிய ஆட்சி அதிகாரம் எல்லாமே முடியப்போகிறது .

விளக்கெண்ணெயில் குண்டி கழுவும் சந்திரபாபுவே போர் கொடி உயர்த்திவிட்டார் என்றால் ..நாட்கள் எண்ணப்படுகின்றன என்று தான் பொருள்.

டிஸ்கி:
எல்லாம் நல்லாத்தான் இருக்கு எங்கடா பிரச்சினைன்னா பெரியாருங்கற சித்த புருஷரை உள்ளபடி உணரனும்னா கொஞ்சம் “பவர்” தேவைப்படுது . பவர் எப்ப ஜெனரேட் ஆகும்? ஒரே வார்த்தைல சொன்னா பெரியாரா மாறனும். அட்லீஸ்ட் மாற முயற்சி பண்ணனும்.

கிறிஸ்தவம் எப்படி இன்னொரு ஏசுவை உருவாக்க முடியலியோ .. இஸ்லாம் எப்படி இன்னொரு முகமதுவை உருவாக்க முடியலியோ அதே மாதிரி பெரியாரியல் கூட இன்னொரு பெரியாரை உருவாக்க முடியலை.

அவர் நினைச்சா உருவாக்கலாம்.. பார்ப்பம் ..

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *