நில் – கவனி -செல்

அண்ணே வணக்கம்ணே !

இது ஏதோ சாலையோரத்துல மஞ்ச பேக் கிரவுண்டுல கருப்பு எழுத்துல எழுதி வைக்கப்பட்ட சாலைப்பாதுகாப்பு விதியாச்சே .. இந்த தலைப்புல மனுசன் என்னத்தை பினாத்த போறாரோன்னு டர்ராயிராதிங்க.
என் கவலை எல்லாம் மனிதர்களை பற்றியதே..மத்த ஜீவராசிகளுக்கான ஜீவ காருணயத்தை எல்லாம் கொஞ்சம் தள்ளீப்போட்டிருக்கன். (நம்ம விஷன் இம்ப்லிமென்ட் ஆற வரை ) அதே நேரம் உணவுக்காகவும் இல்லாம – சர்வைவலுக்காகவும் இல்லாம மாடியிலருந்து நாய்க்குட்டிய வீசறதுக்கெல்லாம் நான் ஆதரவும் இல்லை.

மனிதர்களை பற்றி நான் கவலைப்பட காரணம் ரெம்ப சிம்பிள். மன்சன் மட்டும் கொஞ்சம் மாத்தி யோசிச்சான்னா ஒட்டு மொத்த படைப்பும் செட் ரைட் ஆயிரும். இந்த பூமியே குட்டி சொர்கமாயிரும்.(வேவிக்கள் சொல்லும் சொர்கமல்ல).

மனிதர்கள்ள ரெண்டு விதம்.வவுத்தை கையில பிடிச்சுக்கிட்டு லொங்கு லொங்குனு ஓடிட்டே இருக்கிற சாதி ஒரு விதம் ( பஸ் ஸ்டாண்டு கக்கூஸுக்கு இல்லிங்கோ -பசிக்கு ) .இவியளயாவது புரிஞ்சுக்கலாம்.

ஆனால் வாழ்வின் அடிப்படை தேவைகள் நிறைவேறிய பிறகும் வெறிபிடிச்ச மாதிரி -முனி அடிச்ச மாதிரி எதோ கருமத்தை அடைஞ்சே தீர்ரதுன்னு ஓடுற சாதி இன்னொரு விதம்.

இந்த ரெண்டாவது கேட்டகிரி கொஞ்சமே கொஞ்சம் மொத கேட்டகிரிய திரும்பி பார்த்தா போதும்.இவன் ஓடறத நிறுத்துவான்.அவன் சுரண்டப்படறது கொஞ்சத்துக்கு கொஞ்சம் குறையும்.

என் பாய்ண்ட் நேரிடையானது. ஓடிட்டே இருக்கே பசிக்காவன்னால் – நின்னா சோறு கிடைக்காது நீ ஓடு. உன்னை நில் -கவனி -செல் என்று சொல்வது கயவாளித்தனம்.

ஆனால் ரெண்டாவது கேட்டகிரிய பார்த்து கேட்கிறேன். அடிப்படையான தேவைகள் நிறைவேறிருச்சுல்ல.ஆனாலும் தொடர்ந்து ஓடிக்கிட்டே தானே இருக்கு. அட 3 மாசத்துக்கு ஒரு தரம் உட்கார்ந்து சுஜாதா மாதிரி கற்றதும் -பெற்றதும் தொடர் எழுதாட்டி போகுது. பெற்றது என்ன? இழந்தது என்னன்னு யோசிக்கலாம்ல?

ஆன்லைன் கன்சல்ட்டன்ஸின்னதும் ஒரு நாளைக்கு ஒரு பத்து ஜாதகமாச்சும் பார்ப்பியளான்னு கேட்காய்ங்க. க்கும்.. 3 ஜாதகத்தை பைசல் பண்ணியே உடல் எடை கூடி போச்சு – பசி போச்சு – ஸ்கின் ப்ராப்ளம் -கியாஸ் ட்ரபுள் – சமூகத்தோட தொடர்பே விட்டு போச்சு -இதுல பத்து ஜாதகம்லாம் பார்த்திருந்தா? சவுக்ல நம்ம ஃபோட்டோவுக்கு கீழ ஒரு அகல் விளக்கு போட்டு 2 க்கு 3 ஃப்ளெக்ஸ் வச்சிருப்பானுவ.

மேலும் எல்லா ஜாதகங்களையும் நானே பார்த்து தொலைச்சா மத்த ஜோசியர்லாம் பிழைக்க வேண்டாமா? அதுல ஒரே ஒரு ஜோசியர் என்னை விட டேலன்டட்/என்னை விட சின்சியர்னு வைங்க . அவருக்கு சாப்பாட்டுக்கில்லாமலோ – துணிக்கு இல்லாமலோ மனசு நொந்து ஒரு பெருமூச்சு விட்டா என்ன ஆறது ?
நிற்க.இந்த அளவு அடக்கி வாசிச்சு நான் பெற்றதும் – கடந்த 7 வருசமா தொடர்வதும் அகரமுதலி தெரியாத பக்கிக கிட்ட அஞ்சு பத்துக்கு போய் நிற்காத நிலை – தப்பித்தவறி தகுதி படைத்த பட்சி கிராஸ் ஆகும் போது படக்குனு சின்னதா உதவி பண்ற நிலை . இந்த ரெண்டு ஐட்டம் தேன்.

மத்தபடி வாழ்வு -வசதி -வண்டி இன்னபிற ஸ்தூல சமாசாரம்லாம் வரும் போகும். வரும் போது கொய்யால ஒரு செல்ஃபி எடுத்து போட்டாச்சுன்னா மேட்டர் ஓவர் .அது மேட்டர் முடிச்சுட்ட ஃபிகர் மாதிரி. (இதெல்லாம் மனவியல் படி அப் நார்மல் தான் இல்லேங்கல)

இதனால நான் பற்றற்ற துறவி -ஒப்பற்ற யோகி- படுத்ததும் தூங்கிருவன் / நின்னுட்டே தூங்கிருவன்னுல்லாம் சொல்ல வரல. பாதிராத்திரி -ஏன் விடியல்வரை கூட தூக்க வரமாட்டேங்குது.அது வேற கதை .
ஆனால் நம்ம தூக்கம் கெடறதுக்கெல்லாம் சிரியா – மோடி – சந்திரபாபு -ஜகன் மோகன் ரெட்டி – மூக்கர் -இபிஎஸ்-ஓபிஎஸ் இத்யாதி ஃபாரின் மேட்டர்தான் காரணமா இருக்குமே கண்டி சொந்த சமாசாராங்க இல்லை .
இது என்னா மாதிரி கொடுப்பினை. பழைய தமிழ் சினிமாவுல மனசாட்சி வந்து பேசறாப்ல இன்னொரு முருகேசன் இந்த அறையின் வாசலில் நின்னு ஒரு பேச்சு பேச முடியாம நம்மை பெருமையா பார்க்கிறான் பாருங்க.அது ஒன்னு போதும்.

இப்படி ஒரு பக்கம் பெருமையா இருந்தாலும் .. பவர் இல்லாத வீட்டில் -தாழ்வான ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டில் புழுங்கி வேர்த்து விறு விறுத்துக்கிட்டு பேப்பர் இல்லாம ஒன் சைட் பேப்பர்ல எழுதின மேட்டர்ல இருந்த சத்தா இன்னைக்கு மாப்ள உபயத்துல இன்வெர்ட்டர் – சொந்த லேப் டாப் -சில் காத்துல எழுதற மேட்டர்ல இல்லாததை கவனிக்க முடியுது.

என்ன தான் நில் -கவனி -செல்னு நின்னு நின்னு கவனிச்சு கவனிச்சு பயணத்தை துவக்கினாலும் மத்தவிகளை போல எருமைத்தனமா இல்லின்னாலும் ஒரு வித “பெரும் போக்கு ” லேசா இருக்கிறத உணர முடியுது .
விரட்டறேன். விட்டுருவனா இல்லையா? இதுல மொத படி தான் டிவிஎஸ் எக்ஸெல்லை தலைமுழுகினது . அன்னைக்கு அஞ்சு பத்து நீட்டினாலே பதறி பதறி சொன்ன மன நிலை இப்ப இல்லை தான். அதே நேரம் சிக்கிட்டான்டா – நாம என்ன சொன்னாலும் சரிங்கற பாவத்து நம்ம கிட்ட இல்லை. ஆனாலும் …
பாடி மைன்ட் ரெண்டையும் ஓவரால் பண்ணியே ஆகனும். இன்னம் பெட்டரா -இன்னம் சின்சியரா மாறனும். இல்லின்னா நமக்கும் சூப்பற ஸ்டாருக்கும் என்ன வித்யாசம்?வரேன்.

பிகு: நீங்களும் இந்த ஃபார்முலாவ ட்ரை பண்ணி பார்க்கலாம் .ஏன்னா வாழ்க்கைங்கற வண்டி முட்டு சந்துல சிக்கிருச்சுன்னா ரிவர்ஸ் எடுக்க பின்னாடி சைடு பார்த்து விசிலடிக்க ஆளிருக்காது வாத்யாரே !
_________

ஒரு சாலை விதி வாழ்க்கை விதியாவும் எப்படி ஒர்க் ஆகுது பார்த்தியளா? எதையும் எதோடவும் லிங்க் பண்ணி யோசிக்கலாம் பாஸ் !
இன்னொரு சாலை விதியை பாருங்க.. ஸ்டார்ட் எர்லி -ரீச் சேஃப்லி . அஃதாவது சீக்கிரமா படிப்பை முடிச்சு /சீக்கிரமா வேலைல சேர்ந்து /சீக்கிரமா புள்ளை குட்டி ஆயாச்சுன்னா ??
இன்னொரு சாலை விதி ஆபத்தான வளைவுகள் எச்சரிக்கை . வாழ்க்கையில ஒவ்வொரு செகண்டும் ஆபத்தான வளைவுதானே?
_____
எதையும் எதோடவும் தொடர்பு படுத்தலாம். எந்த விதியையும் எங்கயும் ஊஸ் பண்ண முடியுமா பார்க்கலாம். உதாரணமா அரசு நிறுவனங்கள் பொருட்களை வாங்கும் போது டென்டர் கூப்டுவாங்க. குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் எவன் குறைஞ்ச விலைக்கு சப்ளை பண்ண முன் வரானோ அவனுக்கு தான் டென்டர் கிடைக்கும்.
இதையே அரசு ஊழியர் மேட்டர்ல அப்ளை பண்ணா? தேவையான தகுதி ப்ளஸ் எதிர்ப்பார்க்கும் கு.பட்ச சம்பளம்? எப்பூடி ??

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *