சொல்லக்கூடாத ஜோக்குகள் : பாலியல்,மனவியல் பின்னணி

அண்ணே வணக்கம்ணே !

என்னடா இது என்னமோ சர்ப்பதோஷம் வெர்சஸ் செவ் தோஷம் பத்தி எழுதறதா சொன்னாரு .மறுபடி பேய் முருங்கை மரம் ஏறிருச்சுன்னு பேஜார் ஆவாதிங்க. முக நூல்லயோ /இங்கயோ புதிய பதிவுகள் இல்லின்னா ஒழுங்கு மருவாதியா பொளப்பை பார்த்துக்கிட்டிருக்கேனு அருத்தம்.

நம்முது வேற ப்ரிபெய்ட் சர்வீஸ். போஸ்ட் பெய்ட்னாலும் பரவால்ல “எமக்கு தொழில் கவிதை -நாட்டுக்குழைத்தல்”னுட்டு பொஞ்சாதிய பக்கத்து வீட்ல நொய் கடன் வாங்க அனுப்பிரலாம். இன்னய தேதிக்கு அதுவும் இம்பாசிபிள்.

ஏன்னா எல்லா பயலும் ஜல்லிச்ச ப்ராண்டட் அரிசியே வாங்கிர்ரான். மேலும் ஒவ்வொரு குடும்பமும் தனித்தீவா தான் இருக்கு. ஒரு காலத்துல சனங்க சுக துக்கங்கள்ள நேரிடையா பங்கு கொண்டதெல்லாம் ஜஸ்ட் நினைவுகள் தான். நிற்க பல காலமா நம்ம மைன்ட்ல உள்ள இலக்கு ஜோதிடம்னா அதை இலவசமா தான் சொல்லனுங்கறது.ஆனால் புவ்வாவுக்கு என்ன பண்றது?

இதுக்கு ஆத்தா ஏதோ ரெண்டு ஆல்ட்டர்னேட்டிவ் கொடுத்திருக்கா ஒன்னு யு ட்யூப் – . இதுல மாசத்துக்கு ஒரு 2 கே தேறுது. என்ன 100 டாலர் ஆனாதான் கொடுப்பேங்கறான். அது வேற மேட்டர்.

அடுத்தது கின்டில் புக் ஸ்டோர்.பைசா சுத்தமா ராயல்ட்டி நம்ம கணக்குல வரவாயிருது. (ஹி ஹி இன்னய தேதிக்கு சம்பாதிச்ச ராயல்ட்டி ரூ.72.99 சிறுதுளி பெருவெள்ளம்னு நம்பிக்கையா இருக்கேன்) இந்தவருசம் முழுக்க குஷ்டப்பட்டு நம்ம 17 வருட வேலைகளை ஆவணப்படுத்தியாச்சுன்னா அப்படி நம்ம ஞான செல்வம் லோக சேமத்துக்கு உபயோகப்படும் .இப்படி நமக்கும் புவ்வா பிரச்சினை இருக்காது.

நான் என்னமோ பக்தி பரவசமா ஸ்ரீ அம்மன் சத நாமாவளி விளக்கத்தை தான் மொத புஸ்தவமா ஏத்தினேன். பேர் சொல்லல. செரினு ஜோசியத்துக்கு இறங்கி நம்ம புது புஸ்தவத்தையே 3 பார்ட்டா வேற வேற பேர்ல ஏத்தினேன். பெருசா ஒன்னும் போனியாகல. செரி தரை லோக்கலுக்கு இறங்க வேண்டியதுதான்னு இந்த பதிவோட தலைப்புல ஒரு புக் ஏத்தினேன்.

அதுக்குன்னு நான் எழுதின முன்னுரையை தான் இப்ப படிக்க போறிங்க. என்னதான் வெப் பப்ளிஷிங்,முக நூல் ,ட்விட்டர்னு இறங்கி அடிச்சாலும் பேசிக்கலா நாம ரைட்டர். கத்தை பேப்பரும் பேனாவும் கொடுத்துட்டா சுட்டியா எழுதிக்கிட்டிருப்பம்.

இந்த கம்ப்யூட்டர் முன்னே உட்கார்ந்தாலே பாதி கிரியேட்டிவிட்டி -ஸ்டஃப் ஆவியாயிருது. கொஞ்சம் பைசா புரண்டா நாம எழுத இன்னொரு பட்சி தட்டச்சி ஏத்தினா இன்னம் நல்லா பண்ணலாம்.

நாம வெளியிட்ட புது புஸ்தவத்துலயே பார்த்திங்கனா ஒரு பார்ட் ரெம்ப கிரியேட்டிவா -ஆழமா இருக்கும்.ஏன்னா அதெல்லாம் பேப்பர் பேனா வச்சு எழுதினது .

ஆத்தா கொஞ்சம் ஜில்லுனு பார்த்தா பொத்தாம் பொதுவா போடற ஜோதிட பதிவுகளை தாண்டி ஒவ்வொரு லக்னத்துக்கும் தனி தனியா எழுதலாம். அது இன்னம் டெப்தா இருக்கும். பார்ப்பம். சுமார் 17 வருட எழுத்துக்களை தொகுப்பதுன்னா அது தனியாளால் ஆவற காரியம் கிடையாது.அதனால முக நூல்ல வேண்டுகோள் எல்லாம் வச்சு 8 பேர் முன் வந்திருக்காய்ங்க. இதுல 6 பேர் பெய்டட் சர்வீஸ் .ஒருத்தர் உங்க புஸ்தவம் கொடுத்தா போதும் -இன்னொன்னு தயிரு .அவ்வ்வ்.

ஆனால் ஒரு வாரம் ஆகுது இதுவரை பத்துப்பக்கம் கன்டென்ட் கூட நம்ம மெயிலுக்கு வரல, நிற்க முன்னுரைக்கு போயிருவமா?

இதுவரை கின்டில் புக்ஸ்டோரில் அடியேன் கிடைக்க செய்த நூல்கள் ஸ்ரீ அம்மன் சத நாமாவளி , கீதை வெர்சஸ் கண்ணன் ,ஜோதிடம் – புதிய பார்வை ,கிரகபலன்-பரிகாரம்,வாஸ்து ரகசியங்கள்.. இதே கேட்டகிரியில் சுத்த சைவமாக நிறைய நூல்களை ஏற்ற இருக்கிறேன்.

ஆனால் ஆள் இல்லாத டீக்கடையில் டீ ஆத்துவது கொடுமை. இந்த காரியத்தை ப்ளாக் உலகில் 9 வருடங்கள் செய்துவிட்டேன்.

இந்த நூலிலான அத்யாயங்கள் தான் என் எழுத்துக்களை வெளிச்சம் போட்டன. இவற்றை படிக்க வந்தவர்கள் அப்படியே என் எழுத்து பழகிப்போய் நான் எழுதிய இன்ன பிற பதிவுகளையும் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இங்கும் அதே ஃபார்முலா. தலைப்பில் ஏதும் ஒளிவு மறைவில்லாத்தால் என் முந்தைய நூல்களை படித்தவர்கள் இந்த நூலை வாங்கி கடுப்பாவதெல்லாம் நடக்கவே நடக்காத காரியம்.

ஆனால் புதிய வாசகர்கள் எனக்கு வேண்டும்.முதலில் பாலியல் ஜோதிடம் காட்டி கவர்ந்து –பிறகு மனோ தத்துவம்-ஆன்மீகம் என்று புதிய உயரங்களுக்கு அழைத்து செல்லும் வல்லமை என் எழுத்துக்கு உண்டு. எனவே பெரியோர் பொருத்தருள்க.

இந்த நூலின் இறுதியில் இதில் பேசப்பட்ட 18+ ஜோக்குகளை ஒரே மூச்சில் கொடுத்திருப்பதோடு – பாலியல் வேட்கை -சில கசப்பான உண்மைகள் என்று ஒரு அத்யாயம் கொடுத்திருக்கிறேன். (பரிகாரம்?)

-சித்தூர் முருகேசன்

One Reply to “சொல்லக்கூடாத ஜோக்குகள் : பாலியல்,மனவியல் பின்னணி”

vino

13/02/2018 at 8:13 pm

Ninga yemadha.eallarum.eamaru?
Vangala. Vidhi.padidhan nadakum.ievaru pecha yarum nambadhinga.

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *