அவன் -அவள்-அது : சாக்தேய அனுபவங்கள் ( மின் நூல்)

அண்ணே வணக்கம்ணே !

விரைவில் வெளிவர இருக்கும் அவன் -அவள்-அது : சாக்தேய அனுபவங்கள் மின் நூலுக்கான முன்னுரை தான் இது .
இது என் சாக்தேய அனுபவங்களின் தொகுப்பு . இந்த அனுபவங்களின் ஆரம்ப புள்ளி அவளது பீஜம். பீஜ மந்திர ஜெபம்.

என்னத்த பெரிய அனுபவம் என்று உலகியல் பார்வையில் இருந்து கேட்பவர்களுக்கு முதற்கண் சிறு விளக்கம்.
இது தான் அது என்ற தகவல் இல்லாமலே அவள் பீஜத்துடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டு பல ஆண்டுகள் ஜெபிச்சிருக்கன். (1984-2000) ஆனால் டெக்னிக்கலா,அஃபிஷியலா தொடர்பு ஏற்பட்டது 23-12-2000.

இந்த 17 வருடங்களில் உலகியல் ரீதியாக என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்றால் அதற்கு மிந்தி எழுவதும் -விழுவதும் தொடர்கதை . எழுந்தது வேணா எவனுக்கும் தெரியாம கூட போயிருக்கலாம்.ஆனால் விழுந்தது மட்டும் ஒலகத்துக்கே தெரியும். விழுந்து விழுந்து சிரிப்பானுவ. கதை கதையா பேசுவானுவ.

கோசாரம் -தசாபுக்தி -சந்திராஷ்டமம் -ஜன்ம நட்சத்திரம் -நைதனா தாரா -அட ராகு காலம் உட்பட அரை செகண்டுல புரட்டி போட்டுரும். ஏறுனா ரயிலு/இறங்கினா செயிலு.

கொய்யால ரயிலே ஏறினாலும் ரயில் மாறி ஏறிர்ரது / டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாம இருக்கிறது இப்படி ஏதோ ஒரு லொள்ளு நிச்சயம். ஜெயிலுக்கு போனா மட்டும் தாளி சொல்லி வச்சாப்ல ஜெயிலர்லருந்து ஆர்டர்லி வரை பம்ப் அடிப்பானுவ.

மோடிய கலாய்க்கிறமே லெக் தாதான்னு அப்படி ஒரு குட்டி லெக் தாதாவா இருந்தம். இத்தனைக்கும் 1986 முதலே ஹனுமத் தாசன் – ராம மந்திர ஜெபம். அந்த அனுபவங்கள் வேறு விதம். இந்த மாயா பீஜ அனுபவங்கள் வேறு விதம்.

ராம நாம ஜெபம் என்னை செதுக்கியது – இவ்வுலக /அவ்வுலக ஞானத்தை எல்லாம் என்னில் பதுக்கியது. ஆனாலும் நம்மை வடிவேலு மாதிரி ஈசியா அடிச்சுப்புடுவானுவ.பிறவு ரத்தக்கண்ணீர் வடிப்பானுவ. நமக்கு தேன் ஒரு பேல் பஞ்சு நஷ்டம்.

மாயா பீஜ ஜெபம் ஜஸ்ட் ரெண்டே வருடங்கள் .இந்த ரெண்டு வருட காலத்துல கூட நான் என்ன பண்றேன்/ எனக்கு என்ன நடக்குது / எனக்குள்ள என்ன நடக்குது/என்னை சுத்தி என்ன நடக்குது எவனாலயும் ஸ்மெல் கூட பண்ண முடியல. பல சந்தர்ப்பத்துல நமக்கே பஜ்னு இருக்கும். ஒரு மண்ணும் புரியாது .ஆனால் செம மேட்டர் ஓடி முடிஞ்சிருக்கும்.

2003 ல இருந்து இன்னய தேதி வரைக்கும் இடையில பல்பு வாங்கவே இல்லையான்னா வாங்கியிருக்கம்.ஆனால் வெளியாள் எவனுக்கும் தெரியாது. அப்படியே சொன்னாலும் “உடுங்க.. தலை ! இதுவும் கெத்து தானே”ங்கற பாராட்டு தான் கிடைச்சிட்டிருந்தது.

படிப்படியான முன்னேற்றம். இடை இடையில “ஆஹா ..வசந்த காலம் முடிஞ்சு போச்சு போல “ங்கற ஃபீல் எனக்கே வரும்.ஆனால் ஸ்விட்ச் போட்டாப்ல சீன் மாறும்.

ஜெபம் ஆரம்பிக்கும் போது நம்ம நிலை ?

ஒரு பிரபல டுபாக்கூர் ஹீலரோட டுபாக்கூர் மாச பத்திரிக்கைக்கு உதவி ஆசிரியரா போயி மனசாட்சியை தூங்க வைக்க முடியாம “போங்கடா ங்கோத்தா”ன்னு வாக் அவுட் பண்ணிட்டு அந்த வேளை சோத்துக்கே கியாரன்டி இல்லாத கையறு நிலை.

இன்னைக்கு??

மானாம்பா திருஷ்டி ஆயிர போகுது. வேணம்னா ஷார்ட்டா இப்படி சொல்லலாம். லக்சரி லைஃப்க்கும் – கம்ஃபர்ட்டபிள் லைஃப்க்கும் இடையில ஊசலாடற ஒரு மிடில் க்ளாஸ் பக்கி.

இன்னைக்கு நாம வாழ்ந்துக்கிட்டிருக்கிற வாழ்க்கைய எல்லாம் கனவு கூட கண்டதில்லை ( நம்ம கனவெல்லாம் ஏக் தம் ஹெவிங்கறத மறந்துராதிய).ஆனால் சாத்தியமாகியிருக்கு. இது உலகியல் வாழ்விலான முன்னேற்றம்.
ஆன்மீக ரீதியில் சொல்லனும்னா ஆத்தாவே ..நைனா உன்னை பார்த்து ரெம்ப நாளாச்சுடா.. பார்க்கனும் போல இருக்கு .ஒரு நடை வந்து போ ராசானு கூப்பிடறதை எல்லாம் உணர முடியுதுங்கோ.

ரஜினி சொல்வாரே “ஆண்டவன் சொல்றான் ..அருணாசலம் செய்றான்”னு ஏறக்குறைய அந்த ஸ்டேஜ் .
இடையில நம்ம ஈகோ சுத்தியடிக்கும்.ஆனாலும் ஆத்தா விடாப்பிடியா லந்து கொடுத்து கட்டைய போட்டு சரியான ரூட்டுக்கு திருப்பிட்டு தான் மறு வேலை . ஒன்னமே புரியலதானே?

படிக்க அம்புலிமாமா கதை மாதிரியே இருக்கும்.ஆனால் இங்கே நான் சொல்றதெல்லாம் அட்சர சத்தியம். வேணம்னா என்னோட தியரி -அனலைஸ் தப்பா இருக்கலாம்.ஆனால் சம்பவங்கள் மட்டும் சத்தியமுங்கோ.
உதாரணமா 2001 கால கட்டத்துல விஜயவாடா நித்யானந்தம்னு ஒரு குரல் கேட்டுது . (அசரீரி?) (ஆடிட்டரி ஹெலூசினேஷன்?) இன்னைக்கு ஆந்திர தலை நகரம் அமராவதி. அமராவதிக்கும் விஜயவாடாவுக்கும் டிஸ்டன்ஸ் 59 கிமீ.

சந்திரபாபு இந்த தலை நகர் மேட்டர்ல மொக்கை ஆயிட்டாரு. ஜகன்? தப்பி தவறி அடுத்த எலீக்சன்ல இங்கே ஜகன் சி.எம் ஆனாலும் சென்டர்ல யுபிஏ சர்க்கார் வந்தாச்சுன்னா அன்னாரும் பயங்கர மொக்கை ஆக சான்ஸ் இருக்கு.
என் முதலும் முடிவானதுமான லட்சியம் அரசியல் அதிகாரம் அதன் மூலம் மக்களின் லௌகீக வாழ்விலான பிரச்சினைகளை அசால்ட்டாக தீர்த்து வைத்து அப்படியே ஆன்மீகத்துக்கு பேக் பண்றதுதான்.

ஆரு கண்டா ? பாகுபலி டைரக்டர் தலை நகர நிர்மாணம் செய்றத விட நம்ம பையன் பண்றதே பெட்டரா இருக்கும்னு ஆத்தா ஸ்கெட்ச் பண்ணி வச்சிருந்தா அதை ஆரு மாத்த முடியும்?

. அன்னய தேதி முதல் பல காலம் விஜயவாடா நித்யானந்தம்ங்கற வார்த்தைகளை என்னென்னவோ கான்டெக்ஸ்ட்ல அனலைஸ் பண்ணி பார்த்தேன். எல்லாம் புஸ்ஸு. இந்த நொடியிலான அனலைஸும் புஸ்ஸாகலாம்.ஆனால் மேற்படி வார்த்தைகள் இருமுறை ஒலித்தது மட்டும் சத்தியம்.நிற்க.

நான் மாஸ்டர் சிவிவி பயாக்ரஃபிய அனலைஸ் பண்ணாப்ல இந்த அனுபவங்களை அனலைஸ் பண்ணிரலாம்னு நினைச்சுராதிய.ஏன்னா நாம ஃபிசிக்கலா வேணம்னா வீக்கா இருக்கலாம்.ஆனால் சைக்கலாஜிக்கலா செம ஸ்ட் ராங்கு. எந்தளவுக்கு ஸ்ட் ராங்குன்னா கனவு வரும் போது இது கனவுங்கற உணர்வும் இருக்கும்.கனவுலயே பொய் வேற சொல்லுவம்.அவ்வ் !

ஆகவே இந்த அனுபவங்கள் என் பலகீனமான மனதின் சேஷ்டைகள் என்று நீங்க நினைச்சுர முடியாது.
அடுத்து என்னையும் அறியாம மூட நம்பிக்கை ஏதாச்சும் ஊடுருவிருமோங்கற பயத்துல பெரியார்ங்கற காவல் தெய்வத்தை வேற 24×7 மண்டைக்குள்ளவே வச்சிருக்கம்.ஆகவே நம்பி படிக்கலாம்.

(எச்சரிக்கை: நம்ம எழுத்துக்களை எல்லாம் மின் நூலாக்கி –கின்டில் புக்ஸ்டோர்ல ஏத்தி கல்லா கட்டறதுன்னு தீயா வேலை செய்துக்கிட்டிருக்கம். அவன்-அவள்-அதுங்கறது நாம தொடர்ந்து எழுதி இடையில டீல்ல விட்ட மேட்டர். தொடரையும் தொடரப்போறம். மின் நூலுக்கான முன்னுரை தான் இது)

டிஸ்கி: செவ் தோஷம் வெர்சஸ் சர்ப்பதோஷம் ?? அதுவும் வருது அடுத்த பதிவுல.

2 Replies to “அவன் -அவள்-அது : சாக்தேய அனுபவங்கள் ( மின் நூல்)”

Thanigaivel

15/02/2018 at 9:57 pm

/////இத்தனைக்கும் 1986 முதலே ஹனுமத் தாசன் – ராம மந்திர ஜெபம். அந்த அனுபவங்கள் வேறு விதம். இந்த மாயா பீஜ அனுபவங்கள் வேறு விதம்.

ராம நாம ஜெபம் என்னை செதுக்கியது – இவ்வுலக /அவ்வுலக ஞானத்தை எல்லாம் என்னில் பதுக்கியது. ஆனாலும் நம்மை வடிவேலு மாதிரி ஈசியா அடிச்சுப்புடுவானுவ.பிறவு ரத்தக்கண்ணீர் வடிப்பானுவ. நமக்கு தேன் ஒரு பேல் பஞ்சு நஷ்டம்.

மாயா பீஜ ஜெபம் ஜஸ்ட் ரெண்டே வருடங்கள் .இந்த ரெண்டு வருட காலத்துல கூட நான் என்ன பண்றேன்/ எனக்கு என்ன நடக்குது / எனக்குள்ள என்ன நடக்குது/என்னை சுத்தி என்ன நடக்குது எவனாலயும் ஸ்மெல் கூட பண்ண முடியல. பல சந்தர்ப்பத்துல நமக்கே பஜ்னு இருக்கும். ஒரு மண்ணும் புரியாது .ஆனால் செம மேட்டர் ஓடி முடிஞ்சிருக்கும்./////

ஐயா,

ராம நாம ஜெபம்/பீஜ ஜெபம் பற்றி விரிவாக சொல்லுங்கள்.

நன்றி.
தணிகைவேல். ம

Reply

    S Murugesan

    16/02/2018 at 9:35 am

    வாங்க தணிகை வேல் !
    நம்ம ப்ளாக்ல பீஜம் அல்லது ராம மந்திரம் என்று தேடிப்பாருங்கள்.

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *