செவ் தோஷம் Vs சர்ப்பதோஷம் (Motion Poster )

அண்ணே வணக்கம்ணே !

ஜன. 11 ஆம் தேதி புதிய வீட்டுக்கு குடி வந்தாச்சு. ஜன 15 ஆம் தேதி புதிய ஜோதிட ஆய்வு நூலை வெளியிட்டாச்சு. ஆனாலும் என்னடா இது நம்ம சைட்ல பதிவு போட்டு ரெம்ப நாளாச்சே. எதையாச்சும் காத்திரமா எழுதினா நெல்லாருக்குமேன்னு யோசிச்சிக்கிட்டிருந்தன். படக்குனு இந்த தலைப்பு ஸ்பார்க் ஆச்சு. எல்லாரையும் போல நாமளும் இந்த ரெண்டு மேட்டரையும் தனித்தனியா எழுதியிருக்கம்.அது வேற கதை .ஆனால் ஒப்பீடு ? இல்லவே இல்லை. டீட்டெய்லா பாய்ண்ட்லாம் குறிச்சு வச்சிருக்கன். அடுத்த பதிவுலருந்து டாப் கியர்ல தூக்கறேன்.

ஏன்னா இந்த ரெண்டு தோஷங்களால கல்யாண மேட்டர்ல வர சிக்கல்கள் ஒரு பக்கம்னா -சமூக வாழ்வே டிஸ்டர்ப் ஆகுதுப்பா. நிற்க.

நாம ஊருக்கெல்லாம் சொல்றம் கெரகங்களை லூஸ்ல விடுங்கப்பா. ஒட்ட கறக்காதிங்க. ஓவர் டைம் செய்ய வைக்காதிங்கன்னு ஆனா கெரகம் நம்ம விளையாட்டுகள் எல்லாமே புத காரகத்துல தான் ஃபிட் ஆகுது . எழுத்து ஒரு தவம்னுட்டு பீலா விடலின்னாலும் அது தானா அமையனும் பாஸ் ! அதுவும் இவரு நமக்கு விரயாதிபதி -லக்னத்துலயே கீறாரு . இப்பமே ஸ்கின் ப்ராப்ளத்துக்கு ரெகுலரா மெடிசன் எடுத்துக்கிட்டிருக்கம். அப்பவும் கால் பாத தோல் ரெம்ப ட்ரை ஆயிருது -தகடு மாதிரி ஒரு ஃபீல். ஆகவே புதனுக்கு கொஞ்சம் ஆஃப் கொடுத்து பார்க்கலாம்னு ஒரு கெட்ட எண்ணம்.

அஃதாவது ஃபர்ஷ்ஷா இந்த செவ்-சர்ப்பதோஷ ஒப்பீட்டை மட்டும் மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டு ஃப்ரீ ஹவர்ஸ்ல பழைய சரக்கை எல்லாம் தூர் வார்ரது . நம்மை மாதிரி சிந்தனை பறவை சிறகடித்து பறக்கற பார்ட்டிக்கு இது கொடும் தண்டனை . அனுபவிப்பம் .எல்லாம் ஒரு பரிகாரம் தானே?

ஏறக்குறைய 17 வருசம் வர்ஜியா வர்ஜியமில்லாம எழுதி தள்ளிட்டம். சரக்கு அம்புட்டுதானான்னா ..நோ பாஸ் .. நாளிதுவரை கடற்கரை சிப்பிகளையும் சங்குகளையும் தான் டச்சு பண்ணியிருக்கம். நமக்கு வேற வயசாவுதா இந்த ப்ளாக் /வெப்சைட்ல எழுதினதெல்லாம் என்னவோ ஓடற தண்ணியில உரசி விட்ட சந்தனம் மாதிரி தான் ஃபீல் வருது .
ஆகவே இனி ஒரு விதி செய்வோம்னுட்டு குத்து மதிப்பா தலைப்புகள் வச்சு சின்ன சின்ன மின் நூலா கின்டில் புக்ஸ்டோர்ல ஏத்திக்கிட்டிருக்கன். இந்த வருசம் என் டார்கெட் 500 மின் நூல்கள். புதுசா ஏதும் எழுத போறதில்லை.ஏற்கெனவே எழுதி சிதறிக்கிடக்கிறதை குமிச்சாலே போதும். (இந்த தொடர் தவிர)

நம்ம யு ட்யூப் சானல் வழியா உபரியா ஒரு அமவுண்டு வரப்போகுது (பிப்.23 தான் அக்கவுண்டுக்கு வருமாம்) -அந்த காசை இந்த மேட்டர்ல இன்வெஸ்ட் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டன். சனம் படிச்சு உய்வதும் /உய்யாததும் அவிக தலை எழுத்து. எல்லா எழுத்துக்களையும் ஒரே தொகுப்பா பார்த்தா நமக்கு ஒரு சாலிடா ஒரு ஐடியா வந்துரும்.

எதை எல்லாம் எழுதியிருக்கம். எதையெல்லாம் விட்டிருக்கம் அல்லது ஸ்கிப் பண்ணியிருக்கம்?
இனி எதை எழுதினாலும் பாய்ண்ட் டு பாய்ண்ட் எழுதனும்.ஒரு ஆர்டர்ல எழுதனும்.ஆனால் பேச்சுதமிழ் தொடரனும். இல்லின்னா கொய்யால ஆட்டைய போட்டுருவானுவ.ஒரு மாசம் மிந்தி போட்ட லேட்டஸ்ட் பதிவை நம்ம க்ரூப்லயே வந்து போடுது ஒரு பக்கி. அவ்வ்.

நிற்க இருப்பது 330 நாள். இந்த கேப்புல எப்படி 500 மின் நூல்னு கேப்பிக. இன்னைய தேதிக்கு 3 புண்ணியாத்மாக்கள் இந்த மேட்டர்ல ஒத்துழைக்கறதா சொல்லியிருக்காங்க. ஏதோ பொன் வைக்க வேண்டிய இடத்துல பூ வச்ச மாதிரி பைசாவும் தரத்தான் போறம். அது வேற கதை .ஆனால் 3 பட்சிக்குமே தமிழ்-கணிணி-சோதிடம் இந்த மூன்றிலும் ஆர்வம் – அனுபவம் இருக்கு என்ன மாதிரி காம்பினேசன். இதெல்லாம் தானா அமையுமா? இது போதாதா?

500 மின் நூலையும் ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கிட்டு (கூவி கூவி விற்க போறதில்லிங்கோ) ஆராமா வாசிக்கோனம். பிறவு ஃப்ரஷ்ஷா கோதாவுல இறங்கனும். வாழ்த்துங்கண்ணே ..

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *