யுவர் மைன்ட் வாய்ஸ் & மை ஓப்பன் டாக்

அண்ணே வணக்கம்ணே !

சேராதிருப்பது கல்வியும் செல்வமும்னு சொன்னது ஆரோ கண்டி ..ஸ்..யப்பா.. அட்சர சத்தியமுங்கோ ..ஒரு காலத்துல எழுத பேனா இருக்காது பென்சில்ல எழுதுவேன். எழுத பேப்பர் இருக்காது. ஒன் சைட் பேப்பர் / போஸ்டல் கவரை பிரிச்சு வச்சுல்லாம் எழுதுவேன்.

இப்ப லே அவுட் ஆர்ட்டிஸ்ட் பக்கம் குறையும் போல இருக்கேன்னா கெதக்குனு ஆகுது . இன்னம் இத்தனை பக்கம் மேட்டர் வேணம்னா வவுத்தை கலக்குது.

இது ஏன் ? ஏன்னா ரெண்டாமிடம் தான் வாக்கையும் -தனத்தையும் காட்டுது . நம்ம ஜாதகத்துல ஒரு காலத்துல ரெண்டாவது பாவம் வாக்கு ஸ்தானமா வேலை செய்துக்கிட்டிருந்தது போல. இப்ப ? தனபாவமா? அதான் அன்னைக்கு சோத்துக்கே லாட்டரி. இன்னைக்கு இப்படி .

என்னடா பண்ணலாம்னு ரோசிச்சு கேள்வி பதில்னு ஒரு சாப்டரை சேர்த்துட்டேன். சனத்தை கேட்க சொல்லி பதில் சொல்லலாம் பார்த்தா சனம் சாவுக்கு வான்னா காரியத்துக்கு தான் வரும். (மக்கள் கருத்துனு ட்ரை பண்ணி நொந்துட்டன்)

எனவே கேள்வியையும் நானே கேட்டுக்கிட்டு பதிலையும் கொடுத்திருக்கன். இதுல ஒரு தொழில் ரகசியம் என்னன்னா 6-60 என்று பேரை வைத்து விட்டு இதற்கிடையிலான மேட்டர் பலதும் மிஸ் பண்ணியிருக்கிறது உறைச்சது . அதையும் கவர் பண்ணனும் ப்ளஸ் இதை படிக்கிறவிக மைன்ட்ல எழக்கூடிய கேள்விகளையும் முன் கூட்டியே கெஸ் பண்ணி ஆன்சர் பண்ணிரனும். இதான் டார்கெட்.

இதுல நீங்க பதில் தேடிக்கிட்டிருந்த கேள்விகளும் இருக்கலாம். என் ஜாய் !

1.உங்கள் நூல்களில் ராசிச்சக்கரத்தை தாண்டி எதுவுமே இல்லையே?

ராசி சக்கரத்தில் ஒரு ராசியில் நின்ற கிரகம் -நவாம்சத்திலும் அதே ராசியில் நின்றால் அதை வர்கோத்தமாம்சம் என்பர். அதற்கு பலம் அதிகம்னு ஒரு வரி சொல்லியிருப்பனே?

எத்தனை சக்கரங்களை பார்த்தாலும் -எவ்வளவு துல்லியமாக கிரக பலங்களை நீங்கள் கணக்கிட்டாலும் தலையாய விதி சுபர்கள் பலம் பெற்றால் நற்பலன் கூடும் .அசுபர்கள் பலம் பெற்றால் தீய பலன் குறையும் என்பதே. சுபர்-பாபர் நிர்ணயம் ராசிச்சக்கரத்திலேயே /லக்னத்தை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

ராசிச்சக்கரத்தை ஆதியோடந்தமாக அனைத்து விதிகளையும் அப்ளை செய்து அலசினாலே 60 முதல் 70 சதவீதம் துல்லியமான பலன் கிடைத்துவிடுகிறது.

பல்வேறு சக்கரங்கள் பற்றி ஆரம்பத்திலேயே சொல்லி வாசகனை /மாணவனை டர்ராக்குவது என் நோக்கம் அல்ல. ஜோதிடம் என்பது ஜோதிடர்களின் பேட்டை என்ற பிம்பத்தை உடைத்து இதை சாமானியர்களிடம் கொண்டு செல்வதே என் நோக்கம். ஆர்வத்தை ஏற்படுத்தி, அடிப்படைகளை புகட்டி விட்டால் பிறகு “அவரவர் சாமர்த்தியம்”.

முடிவாக கிரகங்களின் பலம் பற்றி நாம் அத்தனை விதிகளை அப்ளை செய்து ஒரு முடிவுக்கு வருவதை விட அந்த கிரக காரகம் நமக்கு எந்தளவு அனுகூலமாக இருந்தது என்பதை வைத்து முடிவு செய்வது எளிது.உறுதியானது.

டிஸ்கி:
ஒரு வெற்றிகரமான ஜோதிடரிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில் ” ராசி ச்சக்கரத்தை வச்சு ஒரு பலன் சொல்றோம் -அது நடக்கலின்னா அடுத்த சக்கரத்தை பார்க்கனும்”. அவ்வ் !

2.நீங்கள் ஆத்திகரா ? நாத்திகரா?கோவில்கள் ,பூசைகள்,யாகம்,ஹோமம் இவற்றிற்கு எதிராக நிறைய எழுதுகிறீர்களே?

இறைவனின் படைப்பான கிரகங்களை -அவற்றின் பலா பலனை மாங்கு மாங்கு என்று எழுதுகிறேன். இதில் இந்த சந்தேகம் ஏன் வந்தது? ஓ.. கோவில்கள் ,பூசைகள்,யாகம்,ஹோமம் இவற்றிற்கு எதிராக நான் எழுதுவதால் எழுந்த சந்தேகம் போல.
மேற்படி காரியங்களின் அசலான நோக்கம் உங்கள் மைன்டை ட்யூன் செய்து மனோபலத்தை தூண்டுவதே. குறிப்பாக சொன்னால் சப் கான்ஷியஸை உசுப்புவது. இதை செய்ய இன்னும் நாசூக்கான – நறுவிசான – தர்க ரீதியிலான முறைகள் இருக்கின்றனவே? மேலும் சப் கான்ஷியஸை விட சக்தி வாய்ந்தது நம் ஆத்மா. நம்மில் குற்ற உணர்ச்சி இல்லாதவரை – பேத பாவம் புகாத வரை -நம்மில் சுய நலம் சுருங்கி -பொது நலம் புஷ்டியாய் இருக்கும் வரை மனம் செம்மையாக இருக்கும். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்பது என் கருத்து .

மேலும் கோவில்கள் ,பூசைகள்,யாகம்,ஹோமம் இத்யாதி குறித்த “தெளிவு உணர்வு -நுட்பம் ” நம் தலைமுறை வரை கடத்தப்படவில்லை/ செல்ஃப் பூஸ்ட் அப் ஆகி விட்ட /ஈகோ தலைவிரித்தாடும் இன்றைய மனித மனங்களுக்கு அன்றைய ஃபார்முலா வெற்றி தராது என்பதும் என் விமர்சனத்துக்கு ஒரு காரணம்.

மேலும் மேற்படி சமாசாரங்கள் கிரகங்கள் தரும் தீய பலனை ஒத்திப்போடுமே தவிர தடுக்காது. இதை சம்பிரதாய பரிகாரங்கள் என்ற அத்யாயத்தில் விளக்கியிருக்கிறேன். புரட்டிப்பாருங்கள்.

முடிவாக ஆன்மீகம் தான் என் ஓ.எஸ் (ஆப்பரேட்டிங் சிஸ்டட்ம் ) பெரியார் என் ஆன்டிவைரஸ்.

3.ராகு காலம்-எமகண்டம் குறித்து?

எல்லோருக்கும் எக்காலத்துக்கும் என்று பொத்தாம் பொதுவாக சொல்லப்படுவனவற்றை சற்றே எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.ஒருவர் ஜாதகத்தில் ராகு பலம் இருந்து -கோசாரத்திலும் ராகு அனுகூல நிலையில் இருக்க – ராகுவுக்குரிய நட்சத்திர நாளில் வரும் ராகு காலம் அவருக்கு தரும் பலனும் / சர்ப்ப தோஷ ஜாதகருக்கு -கோசாரத்திலும் ராகு பல்பு வாங்கியிருக்க கூடிய நபருக்கு அது தரும் பலனும் ஒன்றாக இருக்குமா? ராகு -எம காலத்திலும் விமானங்கள் பறந்து கொண்டு தானே இருக்கின்றன?

4.கௌரிபஞ்சாங்கம்?

ஒரு முறை கௌரி பஞ்சாங்கப்படி அமிர்த வேளையில் தான் வாழ் நாளில் முதல் முறையாக 1500 வோல்ட் ஷாக் வாங்கினேன். அதிலிருந்து இதை பார்ப்பதில்லை.

5. நல்ல நேரம் -கெட்ட நேரம் வித்யாசம் என்ன?

கெட்ட நேரம் நம் உழைப்புக்கான நேரம்.அனுபவங்களை பெறுவதற்கான நேரம். நல்ல நேரம் நம் கடந்த கால உழைப்புக்கான பலனை பெறும் நேரம். பெற்ற அனுபவங்களில் இருந்து கற்ற பாடங்களை உபயோகித்து வெற்றி காணும் நேரம். உழைப்பின்றி -அனுபவமின்றி-அனுபவ பாடங்கள் இன்றி வெற்றி ஏது? நல்ல நேரத்துக்கான வெற்றிக்கு கெட்ட நேரத்து தோல்விகளே அடிக்கல்.

6.ஜோதிடம் பார்ப்பது ?

நல்ல நேரமோ -கெட்ட நேரமோ எதற்கும் ஒரு முடிவு உண்டு. நல்ல நேரத்துக்கு முடிவு எப்போது என்று தெரிந்தால் அலார்ட் ஆயிக்கலாம். கெட்ட நேரத்துக்கு முடிவு எப்போது என்று தெரிந்து கொண்டால் நம்பிக்கை பெறலாம்.

7.பஞ்சாங்க வித்யாசம்?
திருக்கணிதம் -வாக்கியம் பற்றி கேட்கிறீர்கள். வாக்கியத்தில் உள்ள சில குறைகள் நீக்கப்பட்டு உருவானதே திருக்கணிதம்.

8.குறிப்பிட்ட நட்சத்திரம் -திதிகள் என்றாலே சிலர் அலறுவதும் துள்ளி குதிப்பதும் சரியா?

இல்லை. பஞ்சாங்கம் என்றால் திதி-வாரம்-கரணம்-யோகம் -நட்சத்திரம் என்ற ஐந்து அங்கங்களை கொண்டது. இதில் ஏதோ ஒன்றை பிடித்துக்கொண்டு தொங்குவது சிம்பி தனமாய் விரல் வித்தையாகி விடும் அபாயம் உண்டு.

9.அதென்ன பகுத்தறிவில் புடம் போட்ட ஜோதிடம்?
இன்ன கிரக ஸ்திதி இருந்தால் இது தான் நடக்கும் என்பது ஜோதிடம் .ஜோதிட விதிகளின் படியே குறிப்பிட்ட கிரக ஸ்திதி என்ன வெல்லாம் செய்யும் வாய்ப்பிருக்கிறது -அதில் எது லெஸ்ஸர் டேமேஜ் -எதை நாமே நடத்திக்கொண்டால் /நடக்க அனுமதித்தால் அது டீ ஆக்டிவேட் ஆகும் என்று சொல்வது பகுத்தறிவு . உதாரணம் எட்டில் செவ்வாய் இருந்தால் ரத்த தானம் செய்ய சொல்வது .

10.குழந்தை பேறு?
அடிப்படை ஹெல்த் ரூல்ஸ் -சத்தான உணவு – நேர் மறை சிந்தனைகள் -முக்கியமாய் தம்பதிகளுக்கிடையில் மனப்பொருத்தம் இவையாவும் இருந்து குரு -சுக் -குரு சுக்கிரர்களுடன் இணைந்த பாப கிரகங்கள், ஐந்துக்குடையவர் ,அவருடன் சேர்ந்த பாப கிரகங்கள், ஐந்தில் நின்ற பாப கிரகங்களுக்கென்று இந்த நூலில் சொல்லப்பட்ட பரிகாரங்களை தங்கள் வயது என்னவோ அத்தனை மாதங்கள் பின்பற்றி வந்தாலே பலன் கிடைக்க வாய்ப்புண்டு. பலனில்லா விட்டால் உடனே கைனகாலஜிஸ்டை அணுகுவது நலம். அவர் ஆலோசனைகளுடன் -மேற்படி பரிகாரங்களையும் பின்பற்றினால் டபுள் கியாரண்டி.

11.கல்வி -வேலை வாய்ப்பு?
ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் கெட்டுக்கிடக்கிறதோ அந்த கிரக காரக கல்வி தான் குழந்தை மீது திணிக்கப்படுகிறது . ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் கெட்டுக்கிடக்கிறதோ அந்த கிரக காரக தொழில் தான் ஜாதகனை ஈர்க்கிறது. இதனாலேயே கல்வி -வேலை வாய்ப்பில் இத்தனை சிக்கல்.

தமக்கு விதிக்கப்பட்ட கல்வி -வேலையை ஆப்ட் பண்ணிக்கிட்டா நோ ப்ராப்ளம் அட் ஆல் !

12.திருமணம் -காதல்?

இங்க உள்ள எல்லா மனிதர்களும் ஒன்னு சாடிஸ்டா இருப்பாங்க. அல்லது மசாக்கிஸ்டா இருப்பாங்க. ஒரு சாடிஸ்டுக்கும்-மசாக்கிஸ்டுக்கும் இடையில் காதல் -திருமணம் நடந்தால் ஆதர்ச தம்பதிகளா இருப்பாங்க.
அதே சமயம் தங்கள் ரோலை ஒவ்வொரு 12 மணி நேரத்துக்கும் மாத்திக்கிட்டா இன்னம் சூப்பர். இல்லின்னா வாழ்வின் இரண்டாம் பகுதியில் ரோல் மாறும். வாழ்க்கை நரகமாயிரும்.

13. நல்ல வாஸ்து உள்ள வீட்டில் இருந்து விட்டால் ஜாதக தோஷங்கள் வேலை செய்யாதா?
எஃபெக்ட் குறையும். கத்திக்குத்துங்கறது ப்ளேட் கீறலோட முடியலாம். வாஸ்து உள்ள வீடு பங்கர் மாதிரி. மினிமம் கியாரண்டி. எம்.ஜி.ஆர் வீட்ல உள்ளவிக ஆரும் எம்.ஜி.ஆர் ஆகலியே? என்.டி.ஆர் டி.நகர் வீடே இப்ப குட்டிச்சுவராகி விற்பனைக்குன்னு போர்ட் வச்சிருக்காங்களே?

வாஸ்து உள்ள வீடு ஃப்ரிட்ஜ் மாதிரி.அதுல எலந்தை பழந்தை வச்ச மாத்திரத்துல அது ஆப்பிள் ஆயிராது.

14. ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன ஆகிவிடும்?

ஒன்னும் ஆகாது. நடக்கவேண்டியது நடந்துக்கிட்டே இருக்கும். ( நாம கடியாரத்தை பார்க்காட்டாலும் அதும்பாட்டுக்கு ஓடிக்கிட்டே தானே இருக்கு)

15.சாதி வெறி?

சூரியபலம் இல்லாதவர்கள் சாதி வேறுபாடுகளை தூக்கி பிடித்து சிறிய கூட்டம் ஒன்றை சேர்த்துக்கொண்டு தன் சாதியினரை “நான் காப்பாற்றுகிறேன்” என்று ஃபிலிம் காட்டி கொண்டிருப்பார்கள்.
செவ் பலம் இல்லாதவர்கள் சாதி வேறுபாடுகளை தூக்கி பிடித்து சிறிய கூட்டம் ஒன்றை சேர்த்துக்கொண்டு தன் சாதியினருக்கு -இன்னொரு சாதியை விரோதிகளாக காட்டி ..

கொலை ,கொலை வெறி தாக்குதல் ,சொத்துக்களுக்கு தீ வைத்தல் போன்ற செயல்களில் இறங்குவார்கள்

16.எதையும் கற்க முடியுமா? கிரகங்கள் இதற்கும் தடை போடுமா?
வித்தைக்கும் கெரகத்துக்கும் சம்பந்தமில்ல பாஸ் ! வித்தைய கத்ததுக்க தேவை ஆர்வம் அக்கறை .வித்தையால பயன் இருக்குமாங்கறதுக்கு வேணம்னா கெரகம் தேவைப்படலாம்.

17.அனைவரும் ஜோதிடம் கற்கலாமா?
அல்லாரும் கையில வாட்ச் கட்டிக்கிட்டு சுத்தறாய்ங்க.எவனையாச்சும் டைம் கேட்டா சொல்ட்டு போறான்னு ..நாம வாட்ச் கட்டாம இருந்தோமா?

நம்ம எதிர்காலத்தை நாம அசெஸ் பண்றது சேஃப்டியா? மூஞ்சி மொவம் தெரியாத ஜோசியர் அசெஸ் பண்றது சேஃப்டியா?

18.

ரத்த தானத்தால் ஜோதிட ரீதியாக என்னென்ன நன்மைகள் ஏற்படும்?

ரத்ததானம் கொடுப்பதால் விபத்து,தீவிபத்து தவிர்க்கப்படும். கோபம் குறையும். எதிரிகள் தொல்லை தீரும். பாகபிரிவினை/ நில தகராறு சுமுகமா சால்வ் ஆகும்.

19.டெஸ்ட் ட்யூப் பேபிகளுக்கும் ஜாதகம் வேலை செய்யுமா?
டெஸ்ட் ட்யூப் பேபிகளுக்கு கூட ஜாதக ராசி வேலை செய்யுதுங்கோ. முதல் பேபியை பிறப்பிச்சவருக்கு நோபல் பரிசு. ரெண்டாவது குழந்தையை பிறப்பிச்சவருக்கு ..

தற்கொலை பரிசு.

11 Replies to “யுவர் மைன்ட் வாய்ஸ் & மை ஓப்பன் டாக்”

thanigaivel

13/01/2018 at 4:09 pm

ஐயா,

குளிகை நேரம் பற்றி சொல்லுங்கள்.

நன்றி
தணிகைவேல். ம

Reply

  S Murugesan

  13/01/2018 at 4:33 pm

  தணிகை வேல் !

  ஜாதகத்தில் மாந்தி -குளிகன் நின்ற பாவங்கள் / பார்ட் ஆஃப் பாடி வீக்கா இருக்கும் -சூனியம் வைக்கிறச்ச அந்த பார்ட்டுக்கு வச்சா சீக்கிரம் ஒர்க் ஆகும்னு மாந்திரீகர்கள் சொல்ல கேட்டிருக்கேன்.

  Reply

thanigaivel

12/01/2018 at 7:21 pm

ஐயா,
எந்த பஞ்சாங்கம் சரியானது. எதை பின்பற்ற வேண்டும்?. ( திருக்கணிதம் / வாக்கியம்)
நன்றி.
தணிகைவேல். ம

Reply

  S Murugesan

  12/01/2018 at 8:36 pm

  தணிகை வேல் !

  நான் திருக்கணிதம் பின்பற்றுகிறேன். அதையே சிபாரிசு செய்கிறேன்.

  Reply

   thanigaivel

   13/01/2018 at 10:31 am

   ஐயா,

   உள்ளூர் ஜோதிடர்கள் வாக்ய பஞ்சாங்கம் மட்டுமே உபயோகிக்கிறார்கள். அதன் படி தான் ஜாதகம் கணிக்கிறார்கள். அதன் படி தான் பலன்கள் நடைபெறுகிறது என்கிறார்கள். நானும் ஒரு முறை டிவி-யில் சொல்வதை கேட்டிருக்கிறேன். (வாக்கியம் தான் சரியானதென்று)

   என் குழப்பத்தை தீர்க்க வேண்டுகிறேன்.

   மேலும் மரணம் சம்பவிக்கும் காலகட்டத்தை பற்றி விரிவாக உங்களது வெப்பில் எழுதவும். (என்னுடைய மரண நாளை அறிய எனக்கு ஆவலாக உள்ளது)

   நன்றி,

   தணிகைவேல். ம

   Reply

    S Murugesan

    13/01/2018 at 12:24 pm

    தணிகை வேல் !

    வாக்கியம் அவுட் டேட் ஆயிருச்சு. அதுல உள்ள குறைகளை நிவர்த்தி செய்தே திருக்கணிதம் வந்தது. மாற்றத்தை விரும்பாதவிக வாக்கியத்தை கட்டி அழறாய்ங்க.

    மரண நேரம்? ஏனிந்த கொலை வெறி? மரணத்தை எண்ணி வாழ்ந்தால் வாழ்வே சுவர்கம். மரணத்தையாவது கடவுளோட ஜூரிஸ்டிக்சனுக்கு விட்டுருவமே

    Reply

     thanigaivel

     13/01/2018 at 4:04 pm

     ஐயா,
     தங்கள் பதிலுக்கு நன்றி .

     ராமன் அயனம்சம் , கிருஷ்ணமூர்த்தி அயனம்சம், திருக்கணிதம் இவைகளுக்குள் உள்ள வித்தியாசம் என்ன ?

     தசா புக்தி நாட்கள் எந்த முறையில் கணக்கிடுவது ? (365.25 அ 360 நாட்கள்)

     நன்றி
     தணிகைவேல். ம

     Reply

      S Murugesan

      13/01/2018 at 4:35 pm

      தணிகை வேல் !

      நான் லஹரி முறையை பின்பற்றுகிறேன்.

      Reply

       thanigaivel

       14/01/2018 at 6:27 pm

       நன்றி ஐயா

       தணிகைவேல்.ம

       Reply

thanigaivel

12/01/2018 at 7:17 pm

ஐயா,
எனக்கு எப்போது மரணம் ஏற்படும் (தேதி அ காலகட்டம் – தசா புக்தி) என்று தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி சொல்லுங்கள்.
நன்றி.

தணிகைவேல்.ம

Reply

  S Murugesan

  12/01/2018 at 8:36 pm

  தணிகை வேல் !
  கடந்த புக் ஃபேர்ல இப்படி ஒரு புஸ்தவம் வாங்கினேன். ஆனால் ஜஸ்ட் ஒரு நட்சத்திரத்தை வச்சே சொல்றதால எனக்கு நம்பிக்கை வரல.

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.