புதிய நூல் : முடிவுரை

அண்ணே வணக்கம்ணே !

ஆறில் இருந்து அறுபதுவரை நூலுக்கான லே அவுட் வேலை நாளை / நாளை மறு நாள் முடிந்துவிடும். அடுத்தது ப்ரின்டிங்-பைன்டிங். எப்படியும் ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸ் ரிலீஸு தான்.

மேற்படி நூலுக்கு அடியேன் தந்த முடிவுரை உங்கள் பார்வைக்கு.

தெலுங்கு தேசத்தில் சிக்கி – சுற்று வட்டாரத்தில் ஜோதிடம்+தமிழ்+கணிணி அறிவிருக்கும் ஒரே பட்சி நான் என்ற நிலையில் – நானே டிடிபி ஆப்பரேட்டராக –நானே எடிட்டராக அஷ்டாவதானம் செய்ததில் டங்குவார் அந்துவிட்டது.

ஆனாலும் இதுவரை கொடுத்த ஜோதிட விதிகள்,ஆய்வுகள் ஆகியன நூல் தலைப்பையும் –அதற்கு முக நூலில் கொடுத்த ஏக பில்டப்பையும் ஜஸ்டிஃபை செய்துள்ளதாகவே நினைக்கிறேன்.

இந்த முடிவுரையில் நான் சொல்ல விரும்புவது நீங்களோ –அல்லது அடுத்த தலைமுறையோ இந்த நூலின் முழுபயனை பெற வேண்டுமானால் முதலில் நீங்கள் இந்த படைப்பின் ஃபோன்சாய்க் வடிவம் என்பதை உணருங்கள். ஜோதிடத்திலான கால புருஷ தத்துவம் ஞா இருக்கிறதல்லவா? உங்கள் உடலில் பால் வீதியே இருக்கிறது. ராசிச்சக்கரம் இருப்பது பால் வீதியில் தானே ?

இது உங்கள் மனதுக்கு எட்டாத ஒன்றாக இருந்தால் இதை கூட விட்டு விடுங்கள். இந்த படைப்பில் இருந்து நான் தனி என்பதை மறந்து விடுங்கள். இதை மறக்க நீங்கள் உயரத்துக்கு செல்ல வேண்டும்.

உதாரணமாக சென்னை நகரத்தை உங்கள் வீட்டு மாடியில் இருந்து பார்ப்பதற்கும்/ எல்.ஐ.சியின் 14 ஆவது மாடியில் இருந்து பார்ப்பதற்கும் வித்யாசம் இருக்கிறதல்லவா? விமானத்தில் இருந்து பார்த்தால் ??

நான் கிருஷ்ணன்-கோவிந்தன் / நான் தமிழன் –தெலுங்கன் /நான் இந்தியன்-ஜெர்மானியன் என்று பார்ப்பதற்கும் நான் மனிதன் என்று பார்ப்பதற்கும் வித்யாசம் இருக்கிறதல்லவா?

இன்றைய ஜனத்தொகை பெருக்கத்தில் நீங்களோ நானோ எம்மாத்திரம்? எல்லோரும் ஒரு கூட்டுப்பறவைகளே. ஒரு விண்கல் சிந்தாமல் சிதறாமல் வந்து பூமிபந்தை தாக்கினால் போச்சு.

ஆகவே உங்களை மையப்புள்ளியாக வைத்து சிந்திப்பதை விடுங்கள். உங்களையோ என்னையோ அறிந்தவர்கள் /பேசுகிறவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.அவர்களுக்கும் ஆயிரத்தெட்டு வேலைகள் –சிந்தனைகள். 24×7 நம்மை பற்றி யோசிப்பதுதானா வேலை?

வந்து பிறந்துவிட்டோம். வாழ்ந்து தான் ஆகவேண்டும். ஆனால் நான் மட்டும் வாழ்வேன் என்பது இயற்கைக்கு பொருந்தாத ஒன்று. இப்படி வாழ்ந்தவர்கள் எல்லாம் தங்கள் ஜாதகங்களை கிரெடிட் கார்டுகளாய் மாற்றி “மேலுக்கு சிரிக்கிறேன்-உள்ளுக்குள் அழுகிறேன்”என்று வாழ்ந்தவர்களே. வாழ்ந்து முடிந்தவர்களே.

இதை எல்லாம் மனதில் வைத்து –மனதில் பதித்து இயற்கையே நான் வாழவேண்டும்-நான் வாழ்ந்தால் ஒரு சிலரையாவது வாழவைப்பேன் என்று இயற்கைக்கு உறுதி கூறுங்கள். விதியே சற்று நெகிழ்ந்து கொடுக்கும்.

இதற்கு மாறாக முட்டி மோதுபவர்களுக்கும் இந்த நூல் ஓரளவு பயன் தரலாம். ஆனால் அவுட் புட் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. நான் அறிந்தவரை கொடூரமாகவே இருந்திருக்கிறது ( 1989 முதல் ஜோதிடனாக கிடைக்கப்பெற்ற என் அனுபவத்தில் சொல்கிறேன்)

டிஸ்கி போதும் விஷயத்துக்கு வருகிறேன்.

உங்கள் வீட்டு வாஸ்துவை நொங்கெடுத்து விடுங்கள். (அறைகளின் நீள அகலங்கள் –சன்னல்களின் எண்ணிக்கை இத்யாதி சப்பை மேட்டர்களை அல்ல)
நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் உங்கள் ஜாதகத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்ளுங்கள். இதற்கான விதி/வழி முறைகளை நிறையவே இந்த நூலில் தந்திருக்கிறேன்.

லக்னமே பல்பு வாங்கியிருந்தால் எதிர்கால மனைவி ஜாதகத்திலாவது அவரது ஜாதகப்படியான லக்னம்-லக்னாதிபதி பலம் பெற்றிருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். வசிய பொருத்தத்தில் அவர் உங்களுக்கு வசியமாக இருப்பதை விட நீங்கள் அவருக்கு வசியமாக இருப்பது போல் ப்ளான் செய்யுங்கள்.
உங்கள் ஜாதகத்தில் ஆயுள் பங்கம் இத்யாதி இருந்தால் எதிர்கால மனைவியின் ஜாதகத்தில் 7- 8 ஆகிய இடங்கள் சுப்பலமாய் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

இருவரின் ஜாதகங்களிலும் செவ்,ராகு கேதுக்கள் நிலையை பாருங்கள் . இவை கெட்டிருந்தால் முறையே செவ் தோஷம் –சர்ப்பதோஷம் என்பது தெரியும் தானே?

தோஷம் –தோஷம் என்று ப்ளைன்டா செட் பண்ணிராம தோஷத்தின் கடுமையையும் பாருங்கள். உதாரணமாக 1-7 ல் ராகு கேதுவுக்கும்/ 2-8 ல் ராகு கேதுவுக்கும் வித்யாசம் இருக்கிறது.

தசவித விவாக பொருத்தம் என்று பார்ப்பார்கள். ஒன்னாங்கிளாஸ் டிக்டேஷன்ல மார்க் மாதிரி பத்து ஏழு/பத்துக்கு எட்டு என்பார்கள் . இதெல்லாம் ப்ரிலிமினரி. இந்த பத்து பொருத்தத்தில் நாடி வேதைதான் ரொம்ப முக்கியம். மற்றதெல்லாம் செகன்டரி.

இந்த பொருத்தங்கள் பத்துக்கு பத்து வந்தாலும் ஜாதகங்கள் பொருந்தாவிட்டால் பயனில்லை.

மேற்படி தச வித விவாக பொருத்தங்களை எளிதில் செக் செய்து கொள்ள முடியும். உதாரணமாக கீழ் காணும் தொடுப்பில் போய் பெண் –ஆண் நட்சத்திரங்களை தந்தால் போதும். கண் சிமிட்டும் நேரத்தில் ரிசல்ட் கிடைத்துவிடும்.

http://www.tamilhoroscope.in/marriage_matching_tamil_horoscope.php

ஜாதகங்களை பொருத்துவதில் தான் ஜோதிடரின் உதவி அவசியம். இவை எல்லாவற்றையும் விட உங்களுக்கு “எப்படிப்பட்ட “பெண் மனைவியாக வரவேண்டும் என்பது உங்கள் ஜாதகத்திலேயே இருக்கும். அதை போன்ற மனைவி கிடைப்பதும் முக்கியம்.

இந்த விவரங்கள் எதிர்கால மனைவி என்ற தலைப்பில் இலவச இணைப்பான ஜோதிடமும் தாம்பத்யமும் நூலில் உள்ளன.

உங்கள் இருவரின் ஜாதகங்களிலும் குரு ,சுக் பலம் , 7 ஆம் இடத்து அதிபதி பலம், இருப்பது முக்கியம். சமமாக இருப்பதும் முக்கியம்.

திருமணம் என்பது ஏதோ ஆண்- பெண் சுக வாழ்வுக்கானதல்ல. திருமணத்தின் நோக்கமே குழந்தை பேறு என்பதால் ஜாதகங்கள் பொருத்தும் போதே குரு –புத்ர பாவாதிபதி நிலையையும் பார்த்து ஜாதகங்களை சேர்ப்பது நலம்.

தாம்பத்யம் என்பதை இரண்டு விதமாக புரிந்து கொள்வது நல்லது . வெறுமனே சரீர சந்தோசத்துக்காக என்றால் கூடலின் சமயம் அவரவர் ராசிக்கு சுக்கிரன் அனுகூலமாய் இருந்தாலே போதுமானது.

ஆனாலும் இந்த நூலில் ஆங்காங்கே தந்திருக்கும் டிப்ஸ்/ ட்ரிக்ஸ் பின்பற்றுவது உடலுறவை லகுவாக்கி தம்பதி இடையில் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தும்.
இருவரின் சரீர தர்மங்களும் ஒன்றை ஒன்று அனுசரிக்க குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. அதுவரை சரீர சந்தோசத்துக்காக மட்டுமே கூடுவது பெட்டர்.

ஆனால் சந்தானத்துக்காக கூடுவது என்பது வேறு.இதற்கு தான் மேற்சொன்ன கால அவகாசம் தேவைப்படுகிறது. இதன் பிறகே ஒரு கைனகாலஜிஸ்டின் ஆலோசனையையும் பெற்ற பிறகே சந்தானத்துக்காக கூடுவது நல்லது.

அஃதாவது கருவுறா நாட்கள் /கருவுறும் நாட்கள் என்று உண்டு. இதை பின்பற்ற மனைவியின் மாதவிலக்கு சக்கரம் சீராக இருப்பது முக்கியமாகிறது.
அவ்வாறில்லாத பட்சம் முதற்கண் ரத்த விருத்திக்கான சத்தான உணவு –லேசான நடைபயிற்சி இத்யாதிகளோடு கைனகாலஜிஸ்டின் சஜஷன்+ ப்ரிஸ்கிரிப்ஷனும் தேவைப்படலாம்..

கருவுறா நாட்களிலான உடலுறவு குறித்து கவலையில்லை. கருவுறும் நாட்களை பொருத்த வரையில் அவை வருவதற்கு முன்னமே கு.பட்சம் 7 நாட்களாவது பிரம்மச்சரியம் அவசியமாகிறது.

இந்த உறவில் உருவாகும் கரு மேலும் ஆரோக்கியமானதாக இருக்கும் வாய்ப்பு அதிகம்..

கர்பதானம்:
ஜாதக கணிப்புக்கு அடிப்படையான பிறப்பு நேரத்தையே எடுத்துக்கங்க. நாட் நாட்ல கர்பதான முகூர்த்தத்தை வச்சுத்தான் ஜாதகம் கணிப்பாய்ங்க.அப்பாறம் கொளந்தை தலை தெரிஞ்சதுமே நேரம் குறிச்சிக்கிட்டு ஜாதகம் கணிக்க ஆரம்பிச்சாய்ங்க. இப்போ? கொளந்தை வெளிய வந்து மூக்கை துடைச்சு மூஞ்சை துடைச்சு புட்டத்துல பளார்னு ஒன்னு விட்டு அது கூவின நேரத்தை வச்சு கணிக்கறோம். எந்தளவுக்கு டீட்டெயில்ஸ் மிஸ் ஆகும்னு ரொசிங்க.
ஆகவே கர்ப தானத்துக்கு மனைவி கருத்தரிக்க வாய்ப்புள்ள நாட்களில் ஒரு லக்னத்தை நீங்களே டிசைட் பண்ணுங்க. உங்க ஆன்ட்ராய்ட் ஃபோன்ல ஒரு ஆப் ‘ ஐ இன்ஸ்டால் பண்ணிக்கிட்டா மேட்டர் ஓவர்.

வழக்கமா ஜாதகம் கணிக்கிற மாதிரி குறிப்பிட்ட நேரத்தை ஃபீட் பண்ணி ராசிச்சக்கரம் போட்டு பாருங்க. இந்த நூலின் கடைசி பக்கத்தில் தந்திருக்கும் ஷார்ட்டா க்யூட்டா அத்யாயத்தின் அம்சங்கள் ஓரளவாவது பொருந்துதா பாருங்க.

ரெண்டு மணி நேரம்,ரெண்டு மணி நேரம் தள்ளி தள்ளி ஜாதகம் போட்டுப்பாருங்க.. மனசுக்கு வந்தாச்சுன்னா காரியத்துல இறங்குங்க.
ஜோதிடம் என்பதே சாங்கியம்-சம்பிரதாயம் என்ற ஃபீல் பலருக்கும் இருக்கிறது. ஆனால் ஜோதிடம் எத்தனை ப்ராக்டிக்கல் என்றால் திருமண பொருத்தம் குறித்து பேசும் போது இந்த தசவித பொருத்தங்களை விடவும் மனப்பொருத்தமே முக்கியம் என்று சொல்கிறது. அதிலும் கந்தர்வ திருமணத்துக்கு (காதல் திருமணம்) பொருத்தம் பார்க்க தேவையில்லை என்கிறது..

எனவே இவற்றின் நீட்சியாக நான் சொல்ல விரும்புவது கிரக ஸ்திதிகளை விட உங்கள் மன ஸ்திதி ரொம்ப முக்கியம்.

மேலும் கருவுற்ற காலம் முதற்கொண்டு மனைவிக்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி குறித்த காலங்களில் தடுப்பூசி –டெஸ்ட் இத்யாதி ரெகுலரா செய்ங்க. இந்த ஹீலர் கும்பல்களின் பேச்சை கேட்டு வம்பை விலை கொடுத்து வாங்கிவிடாதீர்கள். இதே போல் குழந்தை விஷயத்திலும் ப்ராக்டிக்கலா இருங்க-சைன்டிஃபிக்கா யோசிங்க. தடுப்பூசிகளை மறக்காம போடுங்க. அவசியம் ஏற்பட்டால் உடனே டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க.

குழந்தைக்கு பெயர்:
குழந்தை பிறந்த நட்சத்திரத்துக்குரிய எழுத்தில் ஆரம்பிக்கும் படி வைக்கப்பாருங்கள் .முடியாத பட்சம் விவரம் தெரிந்த பிறகு அதற்கு அதன் நட்சத்திரம்/பாதம்/ராசி எது என்று சொல்லி வையுங்கள் .

இந்த எண் கணிதம் /நேமாலஜி பற்றி ஏற்கெனவே இந்த நூலில் ஒரு அத்யாயமே இருப்பதால் இதை இத்துடன் விட்டு விடுவோம்.
குழந்தையின் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபனாகி ஓரளவு பலம் பெற்றிருக்கிறதே அந்த கிரக காரகத்தில் பெயர் வையுங்கள்.
உ.ம் சூரியன் – சூர்யா,பாஸ்கர்,கதிரவன்

பெயர் வைத்துவிட்டால் மட்டும் போதுமா என்ன?

உங்கள் ஜாதகத்தில்/ உங்கள் மனைவி ஜாதகத்தில் / பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் பலவீனமாக இருக்கிறதோ அந்த கிரக காரகத்தை விட்டு விலகியே இருங்கள். எந்த கிரகம் வலிமையுடன் இருக்கிறதோ அந்த கிரக காரகங்களில் எது மிக முக்கியமோ அதை தவிர்த்து மற்றவற்றையும் விலக்கி வையுங்கள்.

உதாரணமாக சுக் = வீடு , வாகனம் . இதில் எது முக்கியம்? வீடா ?வாகனமா/ முடிவு செய்யுங்கள். இரண்டுக்கும் அலைபாயாதீர்கள்.
ஸ்கூல் ஃபைனல் வரை குழந்தையின் ஜாதகத்தை பெரிதாய் அலசாதீர்கள்.ஜாதகம் அருமையாக இருந்தாலும் ராகு /கேது./சனி தசா காலங்களில் கல்வியில் சுணக்கம் இருக்கக்கூடும். பயந்துக்காதிங்க. ராகு-கேது தசைன்னா பிற மதத்து குழந்தைகளோடு பழக விடுங்கள். சனி தசைன்னா தலித் குழந்தைகளுடன். செம பரிகாரம் பாஸ் !

இப்போ எட்டாங்கிளாஸ்ல ப்ப்ளிக் எக்சாம்ங்கறாய்ங்க. ஆகவே எட்டாங்கிளாஸ் ரிசல்ட்டுக்கு பிறகு குழந்தையோட ஜாதகத்தை பாருங்க.
குழந்தை ஜாதகத்துல எந்த கிரகம் பலம் பெற்றிருக்கோ அது தொடர்பான ஸ்பெசலைசேஷன் பெஸ்ட்.

குழந்தைக்கு பிரச்சினை வந்தா அது எந்த கிரகத்தோட காரகம் பாருங்க. அந்த கிரகத்துக்குரிய பரிகாரத்தை ஃபாலோ பண்ணுங்க. இது ஒரு பக்கம்னா ப்ராக்டிக்கலா என்ன பண்ணனுமோ அதையும் பண்ணுங்க.

அந்த குழந்தை இந்த பூமிக்கு வர நீங்கள் ஒரு வாசல் அவ்வளவு தான். நீங்க எப்படி ஒரு யுனிக் கேரக்டரோ அப்படியே அதுவும் ஒரு யுனிக் கேரக்டர். உங்களோட நகலா உருவாக்க நினைக்காதிங்க.

நீங்களும் டென்ஷனாகி –அதையும் டென்ஷனாக்காதிங்க. ஆல் தி பெஸ்ட் !

ஷார்ட்டா..க்யூட்டா !!

1.கிரகங்கள் என்னமோ ஃபுட் பால் ப்ளேயர்ஸ் மாதிரியும் நீங்க என்னமோ வர்ணனையாளர் மாதியும்ஃபீல் பண்ணிக்காதிங்க. கிரகங்கள் எப்படி வேலை செய்யுதுன்னு தெரிஞ்சா வா.வெ.
மனிதனின் உடல்,மன செயல்பாடுகளை, குண மாற்றங்களை தீர்மானிக்கிறது நாளமில்லா சுரப்பிகள் சுரந்து ரத்தத்துல கலந்து விடற இரசாயனங்கள். இந்த நா.சுரப்பிகளை கமாண்ட் பண்றது ஹைப்பொதலாமஸ். ஹைப்போதலாமஸை கமாண்ட் பண்ற்து உங்க எண்ணம். கிரகங்கள் உங்க எண்ணங்களை தூண்டுது அவ்ளதான்.மத்த வேலைகளை க்ளாண்ட்ஸ் பார்த்துக்குது
2.லக்னாதிபதி , சந்திரன், ஐந்தாம் பாவாதிபதி ஸ்ட்ராங்கா இருந்தா அஷ்டமசனி கூட ஜுஜுபி. மேற்சொன்ன மேட்டர்ல பிரச்சினை இருந்தா தாளி சந்திராஷ்டமத்துல கூட செத்துப்போயிர்ராய்ங்க. மொதல்ல ஜாதகத்தை தூக்கிவச்சுக்கிட்டு பார்க்கவேண்டியது இந்த 3 மேட்டரை தான்.
3. அடுத்து லக்னாத் 6,8,12 காலியா இருக்கா பாருங்க. இது மினிமம் கியாரண்டி. இந்த இடங்கள் காலியாவே இருந்தாலும் இதன் அதிபதிகள் விடமாட்டாய்ங்க. அம்மா கொடைக்கானல்ல இருந்தாலும் நமது எம்.ஜி.ஆர்ல கட்டம் கட்டிர்ராப்ல வேலை “கொடுத்துருவாய்ங்க”
4.இந்த 6,8,12 அதிபதிகள் எங்கே இருந்தாலும் அந்த பாவத்துக்கு ஆப்புதேன்.ஆரோட சேர்ந்தாலும் அந்த கிரகத்துக்கு ஆப்புதேன்.
5.கிரகயுத்தம்னா தெரியுமோல்லியோ? எல்லா கிரகங்களையும் முந்திக்கிட்டு செவ் நிக்கறது. செவ்வாய்க்கு பின்னாடி நிற்கிற கிரகமெல்லாம் கிரக யுத்தத்துல தோத்துப்போனாப்ல கணக்கு.
6.பரஸ்பர முரண்பாடுள்ள கிரகங்கள் சேருவது : உ.ம் சூரியன்+சனி/ராகு சந்திரன்+கேது , இந்த சேர்க்கையில் சூரியன் பால் மாதிரி சனி/ராகுல்லாம் பாலிடால் மாதிரி. பாலிடால் கலந்தது ஒரு பேரல் பாலாயிருந்தாலும் அதை பாலிடாலா ட்ரீட் பண்றாப்ல மொக்கை பண்ண கிரகத்தோட எஃபெக்ட் தான் அதிகமா இருக்கும்.
7. உச்சனை உச்சன் பார்க்கக்கூடாது.
8.ஒரு கிரகம் நீசமாகி அது நின்ற இடத்து அதிபதியும் நீசமான உச்சம் பரிகாரம்
9.ஒரு கிரகம் நீசமாகி அது நின்ற இடத்து அதிபதி உச்சம்/ஆட்சி பெற்று நீச கிரகத்தை பார்த்தா நீசம் பங்கமாகி ராஜயோகம் ஏற்படும்
10.ஜாதகத்துல லக்னாத் 6, 8, 12 அதிபதிகள் இந்த 6 ,8 ,12 பாவங்களில் ஏதோ ஒரு பாவத்தில் ஒன்று சேர்ந்தா அது விபரீத ராஜ யோகம். ஓ.பன்னீர் செல்வம் சி.எம் ஆன கதையா படக்குனு க்ளிக் ஆயிருவாய்ங்க.
11.குரு+செவ் , சந்திரன்+செவ் மாதிரியான கிரகங்களோட காம்பினேஷன் ஓகேதான். ஆனால் இப்படி சேர்ந்த கிரகங்கள் லக்னத்துக்கு சுபர்களா இருக்கனும்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.