ஆறில் இருந்து அறுபதுவரை : நூல் உள்ளடக்கம் & நோக்கம்

அண்ணே வணக்கம்ணே !

ஏற்கெனவே கடந்த பதிவுல சொன்னாப்ல இதுவும் சேம் சைட் கோல் தான். முன் பதிவு செய்தவர்கள் யு டர்ன் அடிக்கலாம். நோ ரெக்ரெட்ஸ். பதிவுக்கு போயிரலாமா?

நூலின் நோக்கம் & உள்ளடக்கம்:
இந்த உள்ளடக்கத்தை இரண்டு விதமாக உபயோகித்து கொள்ளலாம். ஒன்று ஏற்கெனவே நீங்கள் பிறந்து வளர்ந்து ,கல்வி கற்று ,வேலை பெற்று ,மணந்து ,பிள்ளைகள் பெற்று ஓய்ந்து கூட போயிருக்கலாம். ஆனாலும் கவலையில்லை. இந்த புத்தகத்தில் நான் ஆராய்ச்சி பூர்வமாக சொல்லியிருக்கும் விஷயங்களை முக்கியமாக பரிகாரங்களை இன்று முதலே பின்பற்ற ஆரம்பித்து விடலாம்.உங்கள் வயது என்னவோ அத்தனை மாதங்கள் மன உறுதியுடன் பின்பற்றி வந்தால் உங்கள் வாழ்க்கை தலை கீழாக மாறும்.ஏற்கெனவே சொன்னபடி பிறவாமையும் நிச்சயம் + இந்த பிறவியிலான வாழ்வும் சுமுகமாக மாறும்.(ரிப்பீட்டு: சுகமாக அல்ல).

இதை படிக்கும் நீங்கள் கல்வி கற்கும் /தொடரும் நிலையில் இருந்தால் குபட்சம் இப்போதாவது உங்களுக்கு விதிக்கப்பட்ட கல்வியை பெறலாம் .விதிக்கப்பட்ட வேலை /உத்யோகம்/வியாபாரம், விதிக்கப்பட்ட வாழ்க்கை துணை இப்படி அமைத்துக்கொள்ளலாம். முக்கியமாக உங்கள் குழந்தைகளின் வாழ்வை திட்டமிடலாம்.

வருத்தம்:
2000 முதல் சிலகாலம் இலக்கண தமிழில் எழுதி வந்தாலும் பிறகு பேச்சு தமிழுக்கு மாறிவிட்டேன். இந்த புத்தகத்தை புதிதாகவே எழுதி வந்தாலும் ஒரு சில விஷயங்களை மட்டும் அப்படியே உபயோகித்துள்ளேன். எனவே அவை பேச்சுத்தமிழில் இருப்பது அதிர்ச்சியையோ –இன்ப அதிர்ச்சியையோ தரலாம். அவற்றையும் ரீரைட் செய்யத்தான் ஆசை.ஆனால் நேரம்- உதவிக்கு ஆளின்மை காரணமாக அப்படியே உபயோகித்துள்ளேன். இதற்கு என் வருத்தத்தை முதற்கண் தெரிவித்து கொள்கிறேன்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *