பாலாரிஷ்டம்: 7

அண்ணே வணக்கம்ணே !

எச்சரிக்கை:

இந்த விதிகளிலான கிரக ஸ்திதிகள் இருந்தால் சிசுவின் உசுருக்கே ஆபத்துனு அருத்தம்.ஆனால் தற்போதைய மருத்துவ -விஞ்ஞான முன்னேற்றங்கள் காரணமா மரணங்கள் பெருமளவு தவிர்க்கப்படுது. அதே சமயம் உபி -ல ஆதித்ய நாத் யோகி மாதிரி பிரதமர் வேட்பாளர்கள் உபயத்துல சிசுக்கள் கூண்டோட கைலாயத்துக்கு போயிருதுங்க அது வேற கதை .

இந்த விதிகளிலான கிரகஸ்திதிகள் இருந்தும் தற்போதைய மருத்துவ -விஞ்ஞான முன்னேற்றங்கள் காரணமா மரணங்கள் தவிர்க்கப்படலாம். அதே சமயம் மரணத்துக்கு ஒப்பான வறுமை -கெண்டங்கள் -அவமானங்கள் குடும்பத்துக்கு ஏற்பட வாய்ப்பிருக்குங்கோ.

_____________

ரஜினி சார் சொன்னாப்ல சிஸ்டம் கெட்டுருச்சா? அல்லது வயசாவுதா தெரியல. மூளை ஆக்டிவா இருக்கும் போது பாடி கோ ஆப்பரேட் பண்ண மாட்டேங்குது . பாடி ஆக்டிவா இருக்கும் போது மூளை மக்கர் பண்ணுது. இதுக்கு தான் ஜூரிங்க டிக்டேட் பண்ணா அடிச்சு கொடுக்க ஆள் வச்சிருக்காய்ங்க போல. அவ்.
ஏதோ நமக்கு தெரிஞ்ச ஹெல்த் ரூல்ஸ்லாம் ஃபாலோ பண்ணி சிஸ்டத்தை ஒரு சிஸ்டத்துக்கு கொண்டு வந்து ஆஹா எல்லாம் ஓகேன்னு ரிலாக்ஸ் ஆனா ஆரோ புண்ணியம் கட்டிக்கிறாய்ங்க. //சிஸ்டத்தை ஒரு சிஸ்டத்துக்கு கொண்டு வந்து //ன்னா ஒழுங்கு மருவாதியா ராவுல தூங்கி பகல்ல வேலை பார்க்கிறது .காலையில நோ ப்ரேக் ஃபாஸ்ட் /மதியம்+இரவு சாப்டு வைக்கிறது .

சிஸ்டம் ராங்கா போறதுன்னா நைட் ஷிஃப்ட் முடிச்சுட்டு அப்டியே காலை வாக் /ப்ரேக் ஃபாஸ்ட் அடிச்சுட்டு தூங்கிர்ரது. மாலை எந்திரிச்சு சிங்காரிச்சுக்கிட்டு ஊர் மேல போய் ஈஈஈ.

இதை எல்லாம் ஏன் பாஸ் ..இங்க சொல்றிங்கனு கேப்பிங்க. என்னங்க பண்றது நம்மை ப்ரமோட் பண்றதுக்கு ஆரு இருக்கா?

இதை படிக்கிற நீங்களே இந்த பதிவை ஷேர் பண்ண மாட்டிங்க.

ஆக நாமதேன் நம்மை ப்ரமோட் பண்ணிக்கனும். மேலும் இப்டில்லாம் சொல்லி வச்சாலும் அவா ஆத்து பெண்கள் நம்மை வடிகட்டிய நாத்திகனா தான் புரிஞ்சு வச்சிருக்கா.

நிற்க பதிவுக்கு போயிரலாமா? சப்ஜெக்ட் என்ன பாலாரிஷ்டம்.இந்த பதிவுலயும் சில விதிகளை பார்க்கலாம். இன்றைய முதல் விதி சூ,சனி,செவ், தே.பி சந்திரன் கூடி 1,9,12 ல் இருக்க-குரு பார்வை இல்லாவிட்டால் சிசுவுக்கு அரிஷ்டம்.

இந்த குரு பார்வைய பத்தி ப்ளாக் காலத்துலயே நிறைய எழுதியிருக்கம்.ஆனால் சனம் அதை சீந்தமாட்டேங்குது. ஆகவே மறு ஒளிபரப்பு. குரு பார்த்தால் கோடி புண்ணியம்னு ஒரு சொலவடை இருக்கு. குரு பார்த்துட்டா அப்படி என்ன அற்புதம் நடந்துரும்?

குருவை பத்தி 3 மேட்டர் சொல்லோனம். ஒன்னு பைசா -ரெண்டு செல்வாக்கு -மூன்று முன் யோசனை . இந்த 3 ஐட்டத்துக்கும் மேல ஒரு வித டிவைன் பவர்னு சொல்லலாம்.

நம்ம ஜாதகத்துல லக்னத்துலயே குரு . இவர் 5-7-9 பாவங்களை பார்க்கிறாரு. அஞ்சுன்னா என்ன புத்தி ஸ்தானம். நாம பேசற எழுதற மேட்டர்லாம் பார்த்தா உங்களுக்கே புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன். மதுரையிலருந்துன்னு ஞா .ஒரு சோசியர் “ஐயா ! உங்களுக்கு எங்கயோ ஓப்பன் ஆயிருச்சுய்யா -அதனாலதான் யாருக்கும் ஸ்பார்க் ஆகாத மேட்டர்லாம் உங்களுக்கு ஸ்பார்க் ஆகுது”ன்னு சொன்னாரு.

இது ஒரு பக்கம்னா அடுத்தது ஸ்பான்டேனியஸ்னெஸ். எல்லா பக்கமும் கேட் விழுந்த சமயம் கூட ஜெர்க் ஆயிராம புது சொல்யூஷன் ஸ்பார்க் ஆறது. இதுக்கும் உதாரணம் சொல்லலாம்.ஆனா சொந்தகதைனு கடுப்பாயிருவிங்க. வேணம்னா ஸ்வீப்பிங்கா சொல்லிர்ரன். நாம ப்ரெட் ஹன்டரா இருந்தப்போ “முடிஞ்சு போச்சுரா முருகேசன் கதைன்னு நம்ம புரவலர்களே முடிவு பண்ணி கஜானவ க்ளோஸ் பண்ணிருவாய்ங்க.ஆனால் படக்குனு புதுசா ஒரு சோர்ஸ் உருவாக்கிருவம்.(உருவாகிரும்)

அஞ்சுங்கறது வாரிசுகளை காட்டற இடம். பலமுறை சொன்னாப்ல ஏழாங்கிளாஸ் ரெண்டு தபா ஃபெயில் ஆன மவள் இன்னைக்கு நம்மை விட பெட்டர் லைஃப் லீட் பண்றதுக்கு காரணம் இந்த குரு தேன்.

ஏழாம் பாவத்திலும் குரு பார்வை விழுது. பொஞ்சாதிக்கு கூட பிறந்த அக்காமாரு இன்னம் 4 பேர் இருக்காய்ங்க. நம்முது கடகலக்னமா இருந்தாலும் / லக்னத்துல இருந்து சூரியன் -விரயபாவாதிபதியான புதன் பார்த்தாலும் /அப்பப்போ அல்லு சில்லு பஞ்சாயத்துகள் வந்தாலும் வண்டி ஓடிக்கிட்டே இருக்கு. இதுக்கு காரணம் என்ன ? குரு பார்வை தான்.

ஒன்பதாம் பாவம் . அப்பா அட்டென்டரா தன் வாழ்க்கையை ஆரம்பிக்கிறாரு .நாம பிறந்த பிறவு படிப்படியா பச்சை இங்க். மாவட்ட கருவூல அதிகாரி . வாடகை வீடு அவரோட மடிசஞ்சித்தனத்தையும் மீறி லாஜிக்கே இல்லாம சொந்த வீடாகுது. குட்டிச்சுவரா இருந்தது மழைக்கு விழுந்து வச்சு விதி இல்லா குறைக்கு கோழி பண்ணை ஆகி /பிறவு பக்கா வீடும் ஆகுது .

நாமளாச்சும் பரவால்ல கெட்ட வார்த்தை பேசறம் – இந்த வேளை சோத்துக்கு இல்லின்னா எந்த கோல் மால் வேணா செய்வம் – பெரிய மன்சங்களை எல்லாம் ஒரண்டை இழுத்துட்டு ரிலாக்ஸ்டா இருப்பம். ஆனால் அப்பா அப்டி கிடையாது. எந்தளவுக்கு வெள்ளந்தின்னா பெரிய பொறுப்பு – அதிலான அழுத்தங்கள் தாங்காம மன நிலைபாதிக்கப்பட்டு குட்டிக்கரணம்லாம் போட்டுக்கிட்டிருந்தாருனு செய்தி. ஆனாலும் நின்னு காட்டிட்டாருல்ல.

அதே போல இந்த பெரியமன்சங்க விவகாரம், நாம கயிவி கயிவி ஊத்தினாலும் இதுவரை தெ.தேசம் தலைமை நிலையத்துலருந்து ஒரே ஒரு தாட்டி மிரட்டல் கால் வந்ததே கண்டி ..ஒரு மனாவும் நடக்கல. இதுக்கெல்லாம் காரணம் குருபார்வை தேன்.
_________
//சூ,சனி,செவ், தே.பி சந்திரன் கூடி 1,9,12 ல் இருக்க// ங்கற விதியை விட்டுட்டு குரு பார்வைக்கு தாவிட்டம். மொதல்ல லக்ன சூரியனை பார்ப்பம்.

லக்ன சூரியன்:
ஒலகத்தை தட்டி எழுப்பற சூ லக்னத்துல ஒட்கார்ந்தா என்னாகும்? இன்சோம்னியா வரும். அதனால வரக்கூடிய காம்ப்ளிக்கேஷன்ஸ் எல்லாம் வரும் ( ஹி ஹி நமக்கும் லக்ன சூரியன் தேன் -ஆனால் கூடவே குரு . முருகேசா ! எவனும் திருந்தறாப்ல இல்லை. நீ தூங்குடா.. நெல்லா தூங்கி எந்திரிச்சு ஃப்ரஷ்ஷா ப்ளான் பண்ணி எதுனா செய்தா திருத்திரலாம்டா.இல்லின்னா நீயும் ஹீலர் பாஸ்கர் மாதிரி ஆயி உளற ஆரம்பிச்சுருவன்னு ஆட்டோ சஜஷன் கொடுத்துக்கிட்டு தூங்கிருவன்.)

இது போக உபரியா லக்ன சூரியன் சிடுசிடுப்பு – கடுப்பு – ஈகோ – அதி உஷ்ணம்லாம் கொடுப்பாருங்கோ .

________

லக்ன சனி :

சனி = டிலே. லக்னத்துல சனி இருந்தா எல்லமே மந்தமாயிரும். எல்லாமே லேட்டு . ( எந்திரிக்கிறதுலருந்து – தூக்கம் வரை ) கஞ்சத்தனம் வரும். எல்லாத்துக்கும் விதி மேல பழி போட்டுட்டு அலேக் மே ரஞ்சன் மாதிரி இருந்துருவாய்ங்க. தூசு -அழுக்கு-பிசுபிசுப்பு எதுவும் உறைக்காம கிடப்பாய்ங்க. பொஞ்சாதி நிலை தான் பரிதாபம். போக போக அவியளும் இவியள மாதிரியே ஆயிருவாங்க. இருவருக்கும் கால் -நரம்பு -ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.
இதுல ஒரு வில்லங்கமான பலன் என்னன்னா குதப்புணர்ச்சில கூட ஆர்வம் வந்திரும். அவ்வ்..

__________

லக்ன செவ்:
அல்லல் அலைச்சல்,மைனர் ஆக்சிடென்ட்,சர்ஜரி ,தையல் போடவேண்டி வருவது,போராட்டமயமான வாழ்க்கை ,ரத்தம்,எரிச்சல் தொடர்பான வியாதிகள்,எதிரிகள் தொல்லை . லக்ன செவ் அப்படியே 4-7-8 பாவங்களை பார்ப்பார். எனவே இதே பிரச்சினைகள் தாய்,மனைவிக்கும் வரலாம்.

***********

சூ,சனி,செவ், தே.பி சந்திரன் தனித்தனியா லக்னத்துல இருந்தாலே இவ்ள ஆப்பு .இவிக சேர்ந்திருந்தா எவ்ள பெரிய ஆப்பு?இந்த கூட்டணியில உள்ல சந்திரன் மேற்படி பலன் களில் ஒரு திடீர் தன்மையைவேற தருவாரு .எதிராளி அப்படியே ஷாக் ஆயிருவாங்க.

@@@@@@@

இந்த சேர்க்கை 9 ல் இருந்தால் அப்பாவுக்கு மேற்படி பலன்லாம் நடக்க ஆரம்பிச்சிரும். பனிரண்டில் இருந்தால் மேற்சொன்ன பலன் களின் காரணமா ஜாதகரின் உணவுப்பழக்கம் – தூக்கம் -கில்மா எல்லாமே பாதிக்கும் ( கில்மாவில் குதப்புணர்ச்சி உட்பட/கூட செவ் இருந்தா? சொல்லவே தேவையில்ல .சனி+செவ் சேர்க்கைன்னு பல பதிவுகள் போட்டிருக்கம் தேடிப்பாருங்க .ஜெர்க் ஆயிருவிங்க)

இன்னும் சில விதிகள் :
1,5,8,9,12 பாவங்களில் சூ,சந்தி,செவ் கூடினால்/ லக்னம் விருச்சிக 1முதல் 6 வீடுகளில் பாவ கிரகங்களும் ,பின் 6 வீடுகளில் சுப கிரகங்கள் இருந்தால் சிசுவுக்கு அரிஷ்டம். இவற்றை அடுத்த பதிவுல விளக்க ட்ரை பண்றேன். அதுலயும் இந்த மொத ஆறு வீடுகளில் பாவ கிரகம் -அடுத்த ஆறு வீடுகளில் சுப கிரகங்கள் விஷயத்துல நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கு. சொல்லிருவம்ல. உடுங்க ஜூட்டு .

3 Replies to “பாலாரிஷ்டம்: 7”

Pandian

28/11/2017 at 1:47 am

வணக்கம் ஐயா,
பாலாரிஷ்டம் என்பதே குழந்தை பிறந்து சிறு வயதில் இறந்து போவது தானே. //விஞ்ஞான முன்னேற்றங்கள் காரணமா மரணங்கள் தவிர்க்கப்படலாம்.// எப்படியாவது அந்த குழந்தை காப்பாற்றப்பட்டால் அந்த குழந்தைக்கு ஆயுள் உண்டு என்று ஆகிவிடுமே! என்ன தான் மருத்துவம் பார்த்தாலும் ஆயுள் இருந்தால் தானே அந்த குழந்தை பிழைக்கும்?

Reply

  S Murugesan

  28/11/2017 at 4:16 am

  பாண்டியன் !
  நல்ல கேள்வி . பாலாரிஷ்டம் வெர்சஸ் மருத்துவ முன்னேற்றம் என்ற இந்த சேர்க்கை ஒர்க் அவுட் ஆகனும்னாலும் அதுக்கும் ஜாதகம் ஒத்துழைக்கனும் தானே?

  உதாரணமா புதன் சுபரா இருந்து பலம் பெறுதல் /ஆறுக்குடையவர் கெடுதல்

  Reply

தணிகைவேல்

26/11/2017 at 12:51 pm

ஐயா வணக்கம்,

பாலாரிஷ்டம் அல்லாத, மரணம் சம்பவிக்கும் நாட்களை துல்லியமாக கணிக்க முடியுமா?

மரணம் ஏற்படும் கால கட்டம் எது? கிரக நிலைகள் என்னென்ன?

ஒவ்வொரு லக்கினத்திற்கும் தனித்தனி அமைப்பு என்ன?

எட்டாம் பாவத்தை ஜூம் செய்து கணிப்பது எப்படி?

பெற்றோருக்கு ஜாதகம் இல்லாத போது குழந்தையின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் (அம்மா/அப்பா) மரணத்தை/மரணம் ஏற்படும் காலகட்டம்/கிரக நிலைகள் பற்றி விரிவாக எழுதுங்கள்.

நன்றி,
தணிகைவேல்.ம

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.