பாலாரிஷ்டம் : 6


அண்ணே வணக்கம்ணே !
சமீப காலமா பாலாரிஷ்ட விதிகளை பார்த்துக்கிட்டிருக்கம். இந்த விதிகளிலான கிரக ஸ்திதிகள் இருந்தால் சிசுவின் உசுருக்கே ஆபத்துனு அருத்தம்.ஆனால் தற்போதைய மருத்துவ -விஞ்ஞான முன்னேற்றங்கள் காரணமா மரணங்கள் பெருமளவு தவிர்க்கப்படுது. அதே சமயம் உபி -ல ஆதித்ய நாத் யோகி மாதிரி பிரதமர் வேட்பாளர்கள் உபயத்துல சிசுக்கள் கூண்டோட கைலாயத்துக்கு போயிருதுங்க அது வேற கதை .

இந்த விதிகளிலான கிரகஸ்திதிகள் இருந்தும் தற்போதைய மருத்துவ -விஞ்ஞான முன்னேற்றங்கள் காரணமா மரணங்கள் தவிர்க்கப்படலாம். அதே சமயம் மரணத்துக்கு ஒப்பான வறுமை -கெண்டங்கள் -அவமானங்கள் குடும்பத்துக்கு ஏற்பட வாய்ப்பிருக்குங்கோ.

இணையத்துல ஜியோசிட்டீஸ்ல ஆரம்பிச்சு மை ஸ்பேஸ் வந்து அங்கிருந்து ப்ளாக் -ப்ளாகுலருந்து வெப்சைட் -வெப்சைட்ல இருந்து ஃபேஸ்புக் வந்தம். கடந்த 2 வருசமா வீடியோ ப்ளாகிங் ரெம்ப இழுக்குது. இங்கே படிக்கிறவிக தான் அங்கே பார்க்கிறாய்ங்களா? அங்கே பார்க்கிறவிக இங்கே படிக்க வருவாய்ங்களா ஒன்னமே தெரியாது. ஆனாலும் இங்கே வரவிக வேற அங்கே வரவிக வேறங்கற மூட நம்பிக்கையில வண்டி ஓடிக்கிட்டிருக்கு.
ஜோதிடத்துல ஆர்வமிருந்து ஒரு ரெண்டு பக்கமாச்சும் தொடர்ந்து படிக்கிற தாக்கத் உள்ள உங்க ரேஞ்சுக்கு ஒர்த்தான விஷயங்களை நம்ம யு ட்யூப் சானல்ல இருந்து பதிவின் கடைசியில தந்திருக்கேன். நேரம் கிடைக்கிறப்ப பாருங்க. இப்ப பாலாரிஷ்ட விதிக்கு போயிரலாம்.

சூரியன் நீசனாகி 9 ல் நின்றாலும் – அதே பாவத்தில் சந்திரன் பாவர்களுடன் கூடி நின்றாலும் சிசுவுக்கு அரிஷ்டம் -இந்த விதியை புரிஞ்சுக்க உங்களுக்கு ஒரு பொது விதி தெரியனும். அஃதாவது சூரியன் பித்ருகாரகன் -சந்திரன் மாத்ருகாரகன். இதுல ட்விஸ்ட் உண்டு. பகல்ல பிறந்தவிகளுக்கு மட்டும் தான் சூரியன் பித்ருகாரகன் . அப்ப இரவில் பிறந்தா? சனி தான் பித்ருகாரகன். இதே போல இரவில் பிறந்தவர்களுக்கு மட்டும் தான் சந்திரன் மாத்ருகாரகன்.பகலில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் . (பித்ரு =அப்பா ,மாத்ரு =அம்மா)

இப்ப மறுபடி விதியை பாருங்க .//சூரியன் நீசனாகி 9 ல் நின்றாலும்// சூரியன் பித்ருகாரகன். 9 ங்கறது பித்ருஸ்தானம். இங்கே சூரியன் நீசமானா – குழந்தை பகல்ல பிறந்திருந்தா ? அப்பாவுக்கு டப்பா டான்ஸ் ஆடும். அது மட்டுமில்லிங்ணா குழந்தைக்கும் கால்ஷிய குறைபாடால் வரக்கூடிய எல்லா பிரச்சினைகளும் வரும். முக்கியமா செல்ஃப் இருக்காது (சுயம்) .எடுப்பார் கைப்பிள்ளையா இருக்க வாய்ப்புண்டு. இத வச்சித்தேன் சிசுவுக்கு அரிஷ்டம்னு சொல்லியிருக்காங்க.

இரவில் பிறந்தவர்களுக்கு ? ஒன்பதில் சனி நீசமானால்னு வச்சுக்கனும். அவ்ளதான்.

விதியின் அடுத்த பகுதி //அதே பாவத்தில் சந்திரன் பாவர்களுடன் கூடி நின்றாலும் // . ஒன்பதுங்கறது பித்ருஸ்தானம். அப்பாங்கறவரு கு.பட்சம் ஒரு 20 வருசமாச்சும் ஸ்டெடியா இருந்தா தான் குழந்தைக்கு /அதன் எதிர்காலத்துக்கு நல்லதொரு ஃபௌண்டேஷன் விழும் .இல்லின்னா ஆப்புதானே?
சந்திரன் நிலையில்லா கிரகம்.ரெண்டே கால் நாளைக்கொருக்கா ராசி மாறிருவாரு. ஆகவே அப்பாவின் வாழ்க்கையில் வாழ்வில் ரெண்டேகால் நாளைக்கு ஒரு முறை சின்ன மாற்றமேனும் ஏற்படும் . 14 நாட்களுக்கொருமுறை பெரிய மாற்றம். ரெண்டே கால் வருசத்துல தலைகீழ் மாற்றம் ஏற்படும். காடாறு மாசம் – நாடாறு மாசம் மாதிரி மாசத்துல பாதி நாள் பாசிட்டிவ்,பாதி நாள் நெகட்டிவ் ரிசல்ட்ஸ் இருக்கும்.

இந்த மாற்றங்கள் காரணமாக இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் இருக்கும். தெய்வ பக்தி, இன்னபிற சென்டிமென்ட்ஸ் இருக்கும். திடீர் முடிவுகள் ,அதிகம் உணர்ச்சிவசப்படுவது ,திடீர் பயணங்கள் இருக்கும்.

இதெல்லாம் குழந்தையோட வளர்ச்சிக்கு நல்லதான்னா நல்லதில்லை தானே?

சந்திரன் தனிய நின்னாலே இந்த ஆப்பு . பாவகிரகங்களோட சேர்ந்தா ? சந்தன மரம் வெட்டற க்ரூப்போடவும் சேர்ந்து திருப்பதி பக்கம் டூர் வந்துரலாம் தானே?

அடுத்த பதிவுல இன்னம் சில விதிகளை பார்ப்பம். உடுங்க ஜூட்டு

நீங்கள் பார்த்தே ஆக வேண்டிய சில வீடியோக்கள்:

ஜோதிடத்தில் ஜெனட்டிக் ஃபீச்சர்ஸ்

பிராமணர் வெர்சஸ் சூத்திரர் : வெற்றி யாருக்கு?

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *