பாலாரிஷ்டம் : 5

அண்ணே வணக்கம்ணே !
ப்ளாக் போயி வெப்சைட் வந்தது டும் டும். வெப்சைட் போயி ஃபேஸ்புக் வந்தது டும் டும்,ஃபேஸ்புக் போயி யு ட்யூப் வந்தது டும் டும்னு ஆயிருமா தெரியல. ஃபோக்கஸ் மாறிட்டே வருது . ஆனாலும் ஒரு நன்னி விஸ்வாசத்துல இந்த வெப்சைட்டை விடாம அப்டேட் பண்ணனும்ங்கற எண்ணமும் இருக்கு.

கடந்த சில பதிவுகளில் பாலாரிஷ்ட விதிகளை பார்த்துக்கிட்டிருக்கம். இந்த தொடரின் மொத பதிவுல சொன்னாப்ல இந்த விதிகள் வகுக்கப்பட்ட காலத்துக்கு பின் வந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் -மருத்துவ முன்னேற்றங்கள் காரணமாக இந்த கிரக ஸ்திதிகள் இருந்தாலும் பாப்பாவுக்கு ஏக் தம் டிக்கெட்டுதான்னு இல்லை. அதுக்கு சமமான வறுமை -அல்லல் -அலைச்சல் இத்யாதி பலன் கூட ஏற்படலாம் என்பதை கவனத்தில் வைத்து படிக்கவும்.

செவ் 1,6,8 ல் பாவ கிரகத்துடன் நின்றாலும் சூரியன் 1-8 ல் பாவ கிரகங்களுடன் நின்றாலும் சிசுவுக்கு அரிஷ்டம். செவ் ஆறில் இருந்தால் நல்லதுன்னு தானே கோசார விதிகள் சொல்லுது. இது என்ன செவ் ஆறில் இருந்தால் பல்புனு சொல்லியிருக்கு? செவ் =ரத்தம் , 6 =ரோக பாவம். அதுவும் செவ் என்றால் வெள்ளை அணுக்கள். வெள்ளை அணுக்கள் தான் இம்யூன் சிஸ்டம். இதுலயே சிக்கல் இருந்தா ? எந்த நோய் வேணா வரலாம்ல?

செவ் லக்னத்தில் இருந்தால் ? ரத்த உற்பத்தி -ரத்த சுத்திகரிப்புல பிரச்சினை வந்துரும்ல. வளரும் பயிருக்கு இதெல்லாம் எப்படியா கொத்த ஆப்பு என்பதை எண்ணி பார்க்கவும்.

செவ் எட்டில் என்பது இன்னம் ரிஸ்க். ஏன்னா 8 = மரணம் / செவ் =உடனடி மரணம். செவ் = நெருப்பு /மின்சாரம்/எரிபொருட்கள். செவ் தனியா நின்னாலே பிரச்சினை .இதுல பாவ கிரகம் வேற சேர்ந்தா ?

8 ல் பாவ கிரகங்கள் சேர்ந்திருந்தாலும் /6-8-12ல் சனி செவ் சேர்ந்திருந்தாலும் சிசுவுக்கு அரிஷ்டம். எட்டுல ஒரு பாவ கிரகம் இருந்தாலே இமிசை. ரெண்டுபாவ கிரகம் இருந்தா ? நம்ம நண்பரோட கேஸ் தான் ஞா வருது. டிபி -சுகர் ரெண்டும் ஒரே நேரத்துல மாட்டிக்கிச்சு.

டிபின்னா நல்லா சாப்பிடனும். சுகர்னா அளவோட சாப்பிடனும் .அவ்வ். சனி செவ் சேர்க்கை பொருத்தவரை ஏற்கெனவே நிறைய தனிபதிவுகளே போட்டிருக்கம். ஷார்ட்டா சொன்னா அங்க ஹீனம் -அழுகிபோறது கூட நடக்கலாமுங்கோ .

(டிஸ்கி:எட்டுல பாவ கிரகம் இருந்தாலும் பரவால்ல இழுத்துக்கிட்டு கிடக்கும். சுப கிரகம் இருந்தா பட்டுனு போயிரும்னு ஒரு விதியும் இருக்கு. )

1- 7 ல் பாப கிரகங்களுடன் சந்திரன் சேர்ந்திருந்தாலும் 1-7-12 ல் நீசமாக சந்திரன் பாப கிரகங்களுடன் கூடியிருந்தாலும் 1-7-12 ல் பாபிகள் இருந்தாலும் சிசுவுக்கு அரிஷ்டம்

எல்லா கிரகமும் 7 ஐ பார்க்கும் . பாபகிரகங்களுடன் சந்திரன் சேர்ந்தால் மனம் -நுரையீரல் -சிறு நீரகம் பாதிக்கப்படும் வாய்ப்பிருக்கு . பனிரண்டுங்கறது செலவுகள் – உணவு -உறக்கம் -கில்மாவ காட்டற இடம். இங்கே சந்திரன் இருந்தா ? மனம் போன போக்குல செலவுகள் – உணவு -உறக்கம் -கில்மா இருக்கும். இதன் மொத எஃபெக்ட் தூக்கமின்மை / சஞ்சலம் /தீய கனவுகள்.

லக்னம்னா நாம. ஏழுன்னா நம்ம சகாக்கள். நாம அப்படி இப்படி இருந்தாலும் சகாக்கள் நெல்லவிகளா இருந்து நெல்ல வழிய காட்டினா உருப்பட சான்ஸிருக்கு. அவியளும் நம்ம மாதிரி கேஸாவே இருந்தா எங்கருந்து உருப்பட? மேலும் 7 ங்கறது மனைவியையும் காட்டும்.
இதர எதிரிகளோட வில்லங்கம்னா லந்து கொடுத்துட்டு தனியவந்து பாதுகாப்பா தூங்கலாம். பொஞ்சாதியே எதிரி ஆயிட்டா? கிரைண்டர் கல்லை கூட தூக்கி போட்டுருவாளே?

அடுத்த பதிவுல இன்னம் சில விதிகளை பார்க்கலாம்.

குறிப்பு:
இந்த பாலாரிஷ்டம் தரும் கிரக ஸ்திதிகள் வளர்ந்த உங்க ஜாதகத்திலும் இருக்கலாம் .இதுல இருந்து என்ன தெரியுது இந்த பாலாரிஷ்ட விதிகள் இருந்த மாத்திரத்தில் குழந்தை டிக்கெட் தான் போடும்னு இல்லை.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *