என் தேசம் என் கனவு : கனவு நனவாக

அண்ணே வணக்கம்ணே !

இந்த வலைதளத்துக்கு வர்ரவிக ஜோதிட பதிவுகளுக்காவத்தான் வர்ரிங்கனு தெரியும்.ஆனால் ஜோதிடத்துல நம்ம ஸ்கில் /ஸ்டஃப் எல்லாத்துக்கும் காரணமே நம்ம கனவுகள் தான்.ஐ மீன் தேச கனவுகள் , மானில கனவுகள்.

சுய நலம் சுருக்கி -பொது நலம் பெருக்கி வாழ்ந்தா ஜோதிடம் தெரியனுங்கற அவசியம் கூட இல்லை. மனசுக்கு பட்டதை சொன்னாலே போதும் பட்டு பட்டுனு நடக்கும்.

நிற்க நம்ம கனவுகளோட வரலாறு 1986 லயே துவங்குது. இன்னய தேதிக்கு 31 வருசம் ஆகுது. நடந்த சம்பவங்கள் எனக்கே மறந்து போயிட்டிருக்கு. (வயசாவுதுல்ல)

ஆகவே ஷார்ட்டா ஒரு ஃப்ளாஷ் பேக்.

1986 ஒரு பாடாவதி சினிமா பார்த்து பெண்ணில் அதுவரை காணாத கோணம் கண்டு ஒரு 6 மாசம்னு நினைக்கேன்.. கொஞ்சம் மடியா இருந்தம்.

உலகமே வேற மாதிரி தெரிஞ்சது ..அதுவரை நம்ம கனவெல்லாம் டிக்கி நிறைய கரன்சி வச்சுக்கிட்டு ஒரு கிராமத்துக்கு போய் அதை ஆதர்ச கிராமமா மாத்தறது மட்டும் தேன்..

ஏரியாவுல த.நா காதல் சோடி தஞ்சம். அது தெரிஞ்சு நல்ல குடும்பத்துல பிறந்த நம்ம செட் பசங்களே ஒரு நா ராத்திரின்னு ஸ்கெட்ச் பண்ணதும் ஷாக் ஆயிட்டன்.

எதிர்கால வரலாற்றாசிரியர்கள் குறிச்சு வச்சுக்க வேண்டிய சம்பவம் இது.இந்த செகண்ட்ல தான் டிசைட் பண்ணேன். கொய்யால இந்த நாட்ல ஒரு பயலும் வேலை இல்லாம இருக்கப்படாது

என்ன வேலை கொடுக்கிறது? இன்னைக்கு மாதிரி உலகமயம்-தாராள மயம்-தனியார் மயம், தனியார் ஜாப் மேளா எல்லாம் கிடையாது.

ஒரே சோர்ஸ் கவர்ன்மென்ட் எம்ப்ளாய்மென்ட் எக்சேஞ்சுதேன்.
இன்னைக்கு அதை எல்லாம் இன்ஃபர்மேஷன் சென்டர் ஆக்கி ப்ரைவேட் கம்பெனிக்கு ஆள் எடுத்து அனுப்பறாய்ங்க

அந்த காலத்துல எம்.எஸ்.உதய மூர்த்தியும் -நதிகள் இணைப்பும் மாஸ் மீடியா மூலம் பரிச்சயம்.
கொய்யால ஆளுக்கு ஒரு மம்முட்டி,கடப்பாரை,கூடை கொடுத்து அனுப்பிர வேண்டியதுதான்னு டிசைட் ஆயிட்டேன்.

986 வாக்குல இன்னைக்கு போல விக்கி பீடியா -கூகுள் எல்லாம் கிடையாது.
ஊருக்குள்ளவே சென்ட்ரல் லைப்ரரி இருந்தது . நதிகள் இணைப்பை பத்தி நிறைய படிக்க முடிஞ்சது .
ஐ மீன் வரலாறு தான். பேசிக்கலா நமக்கு ஜியாக்ரஃபிக்கல் நாலட்ஜ் கிடையாது.

ஆனாலும் நதிகள் இணைப்புங்கற கான்செப்ட் ரெம்ப பிடிச்சிருந்தது .
இதை அமலாக்கனும்னா எம்பிகளை நம்பி ஆட்சி நடத்தற பிரதமரால முடியாதுன்னு மட்டும் உறைச்சது .
ஆகவே நம்ம திட்டத்துல ரெண்டாவது அம்சமா நேரிடை ஜன நாயகத்தை சேர்த்துக்கிட்டேன்.
மொத அம்சம் நதிகள் இணைப்பு ..அவ்வ்வ்

என்.டி.ஆர் முதல்வராவறாரு. தமிழ் நாட்ல எம்.ஜி.ஆர் முதல்வர்.
சென்னைக்கு கிருஷ்ணா நீரை கொடுக்க ஒரு திட்டம் அறிவிக்கிறாரு.
தெலுங்கு கங்கை திட்டம்.

அந்த காலத்துல நம்ம தெலுங்கு ஹெட் லைன் படிக்கிற அளவுக்கு தான் போதும்.ஆனாலும் இந்த நில கையகப்படுத்தல்ல ஏற்பட்ட தாமதங்கள் நல்லா உறைச்சது.
என்னங்கடா இது ? இதுக்கு என்னதான் தீர்வுனு ரோசிக்க ஆரம்பிச்சேன்.

அந்த காலத்துல ரஷ்யா செம சவுண்டு. சூப்பர் குவாலிட்டியோட புஸ்தவங்களை நம்ம நாட்டு லைப்ரரிகளுக்கு அள்ளி விடுவாய்ங்க போல. அதுல இருந்த கூட்டுறவு பண்ணை விவசாயம் என்னை கவர்ந்தது .

இருக்கிற நூறு ஏக்கரை பாசனம் இல்லாம காய விடறத விட 10 ஏக்கர் கால்வாய் வெட்ட போனாலும் 90 ஏக்கர் சாகுபடிக்கு வந்துருமில்லையா? ஆனால் இழக்கப்படும் அந்த பத்து ஏக்கர் காரன் நிலை என்ன ஆவறது?

அதுக்கு தேன் நாடு முழுக்க விவசாயிகள் சங்கம் உருவாக்கி – விளை நிலங்களை அந்த சங்கத்துக்கு நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில கொடுக்கிறது. அரசின் உதவி – மேற்பார்வையில் கூட்டுறவு பண்ணை விவசாயம்னு டிசைட் பண்ணேன்.

நேரிடை ஜன நாயகம் – 10 கோடி நிருத்யோகர்களை கொண்டு சிறப்பு ராணுவம் -விவசாய நிலங்களை விவசாயிகள் சங்கத்துக்கு லீசுக்கு தந்து கூட்டுறவு பண்ணை விவசாயம் எல்லாம் செரி.

பிரதமரா வந்த ஆள் நெல்லவனாவே இருந்து இதை செய்ய முற்பட்டாலும்.. மேற்படி அம்சங்கள் அமலில் இல்லாத காரணத்தால – அதனால் நிலவும் வறுமை நிலையை பயன்படுத்தி சுரண்டி பிழைச்சு அத்தனை காலம் ஆட்டைய போட்டு மூட்டை மூட்டையா கருப்பு பணத்தை சேர்த்து வச்சிருக்கிற பக்கிங்க நல்லது நடக்க விடுவானுவளா?
விடமாட்டானுவளே??

அதுக்கு என்ன பண்ணனும்? தற்போதைய கரன்சி ரத்து. பழைய கரன்சியோட அக்கவுன்டபிலிட்டி -லீகாலிட்டிய நிரூபிச்சு வங்கிகள் மூலமா புதிய கரன்சி பெற ஏற்பாடு .இப்படி அஞ்சாவது அம்சமும் அம்சமா ஃபைனலைஸ் ஆயிருச்சு.

இதை தேன் மோடி சாப் சி.எம் ஆ இருக்கிறச்ச அவிக சைட்ல நாம கமெண்டா போட / பிரதமரான பிறவு லெட்டரா அனுப்ப ஆட்டைய போட்டு சொதப்பி நாறடிச்சுட்டாய்ங்க.

நம்ம திட்டத்துல எதுவுமே புதுசு இல்லை. எல்லாம் எங்கயோ ஒரு இடத்துல -எப்பயோ ஒரு காலத்துல இம்ப்லிமென்ட் ஆன கருமம் தான்.

ஆனால் நம்ம திட்டத்தோட பெசாலிட்டி ஜன நாயக நாட்ல -ஜன நாயக பூர்வமா – ரத்தம் சிந்தாம -புரட்சி வெங்காயம்னு நாசமுத்து போயிராம -யாருக்கும் வலிக்காம -எல்லாத்துக்கும் லாபமா மாத்தக்கூடிய 5 அம்சங்களின் சேர்க்கை .

பென்சிலின் கண்டுபிடிச்ச ஃப்ளமிங் மாதிரி ஒரு ஃபீல். கொய்யால சட்டு புட்டுன்னு சினிமாவுல சேர்ந்து நிறைய பணம் பண்ணி ஒரு ஆல் இண்டியா டூர் போயி மக்கள் ஆதரவை திரட்டி -பிரதமராகி -அரசியல் சாசனத்தை திருத்தி நேரிடை ஜன நாயகம் கொண்டு வந்து ……………..இப்படி கனவுகள்.

இந்த கனவுகளோட 1989 லயே சென்னைக்கு படையெடுத்து பயங்கர பல்பு வாங்கி ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன்.

1991 நவம்பர்,29 ஆம் தேதி காதல்-கலப்பு திருமணம்.1992 மார்ச்சுக்கெல்லாம் அப்பா கோர்த்துக்கிட்டாரு.
அது வேற கதை .ஆனால் கொய்யால .. அரிசி பருப்பு விலை ,குடக்கூலில்லாம் 3 மாசத்துலயே மரண பயத்தை காட்டிருச்சு பரமா !
___________

கொய்யால நாமளா கல்யாணம் கட்டிட்டம். பொஞ்சாதியா முழுகாம வேற இருக்கா. இதுல பெத்து வளர்த்து ..சென்னையில் செட்டில் ஆகி -நடிகனாகி
இதெல்லாம் நடக்கிற காரிய …மானு ஆயிருச்சு.
__________

ஆகவே எனக்கே எனக்குன்னு வச்சிருந்த இந்த திட்டத்தை தாய் நாட்டுக்கு அர்ப்பணிக்க முடிவு பண்ணிட்டன்.
__________

அந்த நல்ல எண்ணத்தோட சக்தியா என்ன தெரியல மொத அட்டெம்ப்ட்லயே ஜன சக்தி ங்கற ஏடு நம்ம திட்டத்தோட முழு வடிவத்தை பப்ளிஷ் பண்ணிருச்சு.

நிறைய படிச்ச ஆளு தேன். சிந்திக்க கூடிய ஆளுதேன். ஆனால் ஒலக ஞானம் ரெம்ப குறைவாச்சே ..
ஜனசக்தியில பப்ளிஷ் ஆனதுமே -ஆஹா .. பத்திக்க போகுது ..மிஞ்சிப்போனா ஏழெட்டு வருசத்துல இம்ப்லிமென்டே ஆயிரும்னு பிரமை. அதனாலதேன் நம்ம திட்டத்துக்கு ஆப்பரேஷன் இந்தியா 2000 னு பேரை வச்சம்.

ஆனா ஒரு ம………னாவும் நடக்கல.( எப்படி நடக்கும்? ஜனசக்திங்கறது ஒரு கட்சியோட பத்திரிக்கை -ஏதோ சந்தா தாரர்களுக்கு மட்டும் போஸ்ட்ல போகும் போல. நாம சொல்லியிருக்கிற எல்லா அம்சமும் அவியள பொருத்தவரை ரெம்ப ஓல்டு ) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நாம நினைச்சது என்ன? ஜனசக்தியை பார்த்து வேற ஏதாச்சும் பத்திரிக்கை காரன் போடுவான். அதை பார்த்து எவனாச்சும் நம்மை பேட்டி எடுப்பான். நம்ம வாய் தான் லோக பிரசித்தமாச்சே.. எஸ்கிமோவுக்கே ஃப்ரிட்ஜ் வித்துருவமே .. விடறதில்லனு வெய்ட் பண்றேன். வெய்ட் பண்றேன். நத்திங் ஹேப்பனிங்..
அங்கருந்துதான் நம்ம திட்டத்தை தலைவர்களுக்கும் -மீடியாவுக்கு அனுப்பற “நோய் வந்தது ”
ஒரு அஞ்சுவருசம் போல ரீட்டெய்லா அனுப்பிக்கிட்டிருந்தம்.

ரெஸ்பான்ட் ஆனவிக பேரை ஒரு போஸ்டல் ஸ்டாம்ப் பின்னாடி எழுதிரலாம்.
ட்ரென்ட்ல சொல்லனும்னா ஒரு ட்வீட்ல முடிச்சுரலாம் மத்தபடி ..பெரிய பூஜ்ஜியம்…இது 1986 – 1998 கால வரலாறு.

இந்த வீடியோவுல 1998-2017 தவளை பாய்ச்சல்ல நம்ம முயற்சிகளை இந்த வீடியோவுல சொல்ல ட்ரை பண்ணியிருக்கன். நிறைய ஸ்கிப் பண்ணீட்டேன். (உங்க மேல கருணையோட) ச்சும்மா பார்த்து வச்சுக்கங்க

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.