ஜெயின்ட் வீல் : யாருக்கெல்லாம் பரிகாரம்

famous ferris wheel at the oktoberfest in munich – germany

அண்ணே வணக்கம்ணே !
தலைக்கு மேல வேலை இருக்கு (பொளப்பை சொன்னேன்) நம்முது வேற ப்ரிப்பெய்ட் சர்வீஸா ? காச போட்டுட்டு வெயிட்டிங்குல உள்ளவிக கொலைவெறியில இருப்பாய்ங்க.

ஆனால் நாம என்னடான்னா என் தேசம் என் கனவு மின் நூலை ப்ரிண்ட் எடுத்து திமுக தகவல் தொழில் நுட்ப அணி தலைவருக்கு ,கமலுக்கு,டிடிவிக்கெல்லாம் அனுப்பிட்டிருக்கம்.அல்லது ரெண்டாவது தடவையா எக்சிபிஷன் போறம் -அல்லது இப்படி நீட்டி முழக்கி வலைப்பதிவு போட்டுக்கிட்டிருக்கம்.

இதுக்கும் பொளப்புக்கும் என்னய்யா சம்பந்தமுன்னு கேப்பிக. இதை ஓஷோ செயலின்மையில் செயல்படுதல்னு அழகா சொல்வாரு . அதாவது நான் நிலுவையில உள்ள ஜாதகங்களை எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு மல்லு கட்ட ஆரம்பிக்கிறேன்னு வைங்க . மொத ஜாதகத்துக்கு ஒன்னு,ரெண்டு ஃபைலை ஃபினிஷ் பண்றேன்னு வைங்க ,மூனாவது ஃபைல் பதிவு பண்றதுக்குள்ள தன்னிரக்கம் ஆரம்பிச்சிரும்.

இன்னைக்கு ஞா கிழமை .சனம்லாம் அக்கடான்னு எங்கயாச்சும் வெளிய போயி ஜாலியா பொழுதை போக்கிக்கிட்டிருப்பாங்க. நாம என்னடான்னான்னு ஆயிரும். இதே இப்பிடி வெளிய போயி வெட்டிய பொளுதை போக்கிட்டு வந்தம்னு வைங்க. பரபரன்னு இருக்கும். அய்யய்யோ என்னடா இது நாம கூட இப்படி பொறுப்பில்லாமன்னு கில்ட்டி வந்துரும் .

இந்த மன நிலையில ஒன்னு ரெண்டு ஃபைல் இல்லை ஆத்தா கொஞ்சம் கூலா பார்த்தான்னு வைங்க 3 ஜாதகங்களையே பைசல் பண்ணிரலாம்.

வேலை செய்றது எவ்ள முக்கியமோ படக்குனு ஜூட் விட்டுட்டு வேலை வெட்டி இல்லாம சுத்தறதும் முக்கியம். சிவாஜி மாங்கு மாங்குனு படம் நடிச்சாரு. என்னாத்த வாரிக்கினாரு ? சொந்த தொகுதியில செயிக்க முடியல.ஆனா வாத்யாரு ? ச்சொம்மா ஃபிலிம் காட்டிட்டு கிடந்தாரு . எம்.எல்.ஏ ,மந்திரி ஆக்கலனு கோவிச்சுக்கிட்டு தனிகட்சி கண்டு முதல்வராகி முதல்வாராவே வாழ்ந்து பூட்டாரு .

எல்லாம் செரி பாஸ் ! அதான் ஏற்கெனவே எக்சிபிஷன் போயி ஃபோட்டோல்லாம் போட்டு அலப்பறை குடுத்தாச்சே மறுபடி எதுக்குனு கேப்பிக. அப்ப போனது சனங்க மென்டாலிட்டியோட போனம்.

எதுவுமே மொத முறை தான் மதி மயக்கும்.

எக்சிபிஷன்னா இந்த ஒலகமே எக்சிபிஷன் தான். ச்சொம்மா வந்தம். போயிட்டே இருக்க போறம்.ஆனால் நமக்கு இந்த வாழ்க்கை ஒரு எக்சிபிஷன் தான்ங்கற மேட்டர் அப்பப்போ மறந்துருது . ஆகவே ஒலகமே ஒரு எக்சிபிஷன்ங்கற மேட்டரை ஞா படுத்திக்கலாம்னு ஆட்டோ சஜஷன் கொடுத்துக்கிட்டே போனன். செம எக்ஸ்பீரியன்ஸ்

போன தபா போனப்ப நான் -பொஞ்சாதி -சின்னவரு மட்டும் தான் .இந்த தபா பெரியவரு ,மவ,மருமவன் எல்லாருமா போனம். நம்ம ஆட்டோசஜஷன் செமயா வேலை செய்ய சனங்களை ஜஸ்ட் அப்சர்வ் பண்ணிக்கிட்டே இருந்தம். இதுல ஜெயின்ட் வீல் ரெம்ப அட் ராக்ட் செய்துருச்சு.

தலைக்கு 60 ரூவா சார்ஜ் பண்றான். ஆன்டி,அங்கிள்ஸ், சின்னஞ்சிறுசுங்க,பொடிசுங்க,ஆண் -பெண் வித்யாசம் இல்லாம எல்லாமே க்யூல நின்னு டிக்கெட் வாங்கி வெயிட்டிங்குல இருந்து ஏறி பேயா அலறுதுங்க. சனம் மோடிக்கு ஓட்டு போட்டுட்டு டிமானிட்டைசேஷனுக்கும் – ஜிஎஸ்டிக்கும் அலர்ராப்ல.

அப்பத்தான் இந்த கொல்லும் இச்சை -கொல்லப்படும் இச்சை ஞா வந்தது . மன்சங்க ஸ்தூலமா எந்த செயலை செய்தாலும் அதன் பின்னாடி இருக்கிறது கொல்லும் இச்சை -கொல்லப்படும் இச்சை தாங்கறது மனவியல் விதி. என்னா கச்சிதமா பொருந்துது பாருங்க.

ஒரு வேளை இந்த ஜெயின்ட் வீல் மன்சங்களோட பிறவிச்சக்கரத்தை ஞா படுத்துதோ என்னமோ (சப் கான்ஷியஸா ) ஆரு கண்டா? ஜோஸ்யத்துல சகட யோகம் உள்ளவிக வாழ்க்கையில வாழ்வும் தாழ்வும் மாறி மாறி வரும்னு சொல்லியிருக்கு. வாழ்வு தாழ்வுங்கறது ஒலக வாழ்க்கையில ஜகஜம் தேன்.ஆனால் இந்த சகட யோக பார்ட்டிங்களுக்கு வர்ர வாழ்வும் தாழ்வும் லாஜிக்கே இல்லாம /படக்கு படக்குனு மாறும். லாஜிக்கே இருக்காது. சந்திரனுக்கு 6-8-12 ல் குரு இருந்தா சகட யோகம் . நமக்கு லக்னத்துல குரு (உச்சம் -கடகத்துல) ரெண்டுல சந்திரன்.
செரி கொய்யால பரிகாரத்துக்கு பரிகாரமாச்சு -ஒரு அட்வென்சருமாச்சுன்னு ஏறிட்டன்.

கல்ஃப் இளவரசர் -ட்ரம்ப் பத்தி ஒரு முக நூல் பதிவு கண்ல பட்டது . அஃதாவது ட்ரம்ப் தொழிலதிபரா இருந்தப்போ தன் செல்லமான கப்பல் கம்பெனிய கல்ஃப் இளவரசருக்கு வித்துர்ராரு. சகடம் (சக்கரம் ) சுத்துது .ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி.கல்ஃப் இளவரசர் ஏதோ ஊழல் குற்றச்சாட்டுல சிக்கி பதவி இழந்து மேற்படி கப்பல் கம்பெனிய ட்ரம்புக்கே வித்துர்ராரு. இதான் பாஸ் சகட யோகம்.

இந்த ஜெயின்ட் வீல் யாருக்கெல்லாம் பரிகாரம் ஆகமுடியும்னு கொஞ்சம் யோசிச்சன். ஆயுள் பங்கம் உள்ளவிகளுக்கு. (உதாரணமா லக்னாதிபதி அஷ்டமத்துல/ லக்னாதிபதியோடு அஷ்டமாதிபதி சேர்க்கை)

ஜெயின்ட் வீல்னா சொம்மா இல்லிங்கோ “மரண பயத்தை காட்டிட்டாங்கடா பரமா” ரேஞ்சு . ,மரணத்தை சந்திச்சா என்ன? மரண பயத்தை முதுகெலும்புக்குள்ள ஜிலீரா உணர்ந்தா என்ன ரெண்டும் ஒன்னு தானே?

2-8 ல் ராகு கேது என்ன பண்ணும். “வெட்டி விடும்”. சக்கரம் உச்சிக்கு போகும் போது நிலத்துல இருந்து கட் ஆயிர்ரமில்லை .இதே போல தனிமைத்துயர்/ஏழ்மை/அவப்பெயர் /காதல் தோல்வி /விவாகரத்து எல்லாமே மரணத்தின் நிழல்கள் தான்.

ஒரு தபா ஜெயின்ட் வீல் ஏறி தொலைச்சா மேற்படி தோஷம்லாம் கழியும்ல?

டிஸ்கி:
இந்த பதிவுக்கு கு.பட்சம் 24 மணி நேரத்துல 500 பேஜ் வ்யூஸ் வந்தா ஜெயின்ட் வீல் அனுபவத்தையும் எழுதிர்ரன். சஸ்பென்ஸ் பிடிக்காதவிக இறங்கினதும் எடுத்த இந்த படத்தை பார்த்தாலே போதும் .அவ்வ்

இப்டியே தான் வீட்டுக்கு போனியளானு கேட்டுராதிய . அஞ்சு செகண்ட்ல தமாய்ச்சுக்கிட்டம்ல .(பார்க்க படம்)

2 Replies to “ஜெயின்ட் வீல் : யாருக்கெல்லாம் பரிகாரம்”

.G.Chandrasekaran

12/12/2017 at 2:17 pm

பேச்சு தமிழில் படிப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது.

Reply

    S Murugesan

    12/12/2017 at 6:32 pm

    சந்திர சேகரன் !
    இங்கே எல்லாமே பழக்க தோஷம் தான். செயற்கை பழகிவிட்டால் இயற்கை கடினமாக இருக்கும்.கொஞ்சம் நாள் போனா இதுவும் பழகிரும்.

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.