பாலாரிஷ்டம் : 4 (லக்ன செவ்)

அண்ணே வணக்கம்ணே !
லக்னத்தில் செவ் இருந்து குரு பார்வை பெறாவிட்டால் சிசுவுக்கு அரிஷ்டம்னு ஒரு விதியை பார்த்தம். லக்னத்துல செவ் இருந்தா என்ன பல்பு ? குரு பார்த்தா என்ன ரிலீஃப்னு பார்த்துரலாம்.

கடந்த பதிவுல சொன்ன உதாரண ஜாதகத்துல லக்னம் மகரம் -மகரத்துக்கு செவ் நான் சொன்னாப்ல யோக காரகனில்லன்னாலும் சுபன் ( திருத்திய பாண்டியனுக்கு நன்றி)
மேஷம்-விருச்சிகத்தை எடுத்துக்கிட்டா லக்னாதிபதி. லக்னாதிபதி லக்னத்துல ஆட்சி பெற்றால் நல்லது தானே? அப்பவும் பல்பான்னு கேப்பிக.

லக்னம் -லக்னத்துல லக்னாதிபதி மேட்டரை விடுங்க. ஜஸ்ட் மேஷ -விருச்சிக ராசி காரவிக லைஃப் ஸ்டைலை பாருங்க. சின்ன வயசுல க்யூட்டா -ஆக்டிவா இருப்பாங்க. யூத்துல அக்ரெசிவா -அட்வென்சரசா இருப்பாங்க. எல்லாம் ஓகே.ஆனால் நடுவயதை கடந்த பிறகு?

ரத்தம் -எரிச்சல் -கோபம் உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பிச்சிரும். ரத்தம்னா ரத்த விருத்தில பிரச்சினை /ரத்த சுத்திகரிப்புல பிரச்சினை பி.பி /ப்ரஷர், எரிச்சல்னா அல்சர் / உஷ்ணம்னா பைல்ஸ் வரை எதுவேணா.

பால்யத்துல இம்யூன் சிஸ்டம் சரியா எவால்வ் ஆகி இருக்காதுங்கறதால அந்த சமயத்துல ரத்த சுத்திகரிப்புல பிரச்சினை ஏற்பட்டு கட்டி -கொப்புளம்னு கிளம்பும். சிலருக்கு சொறி சிரங்குல்லாம் கூட வரும். பிறவு நாளாவட்டத்துல செட் ரைட் ஆகும். நடு வயதை கடந்த பிறகு கடைக்கால் லேசா ஆட்டம் காணும்ல அப்ப ரிபீட்டு.
ஏன் இப்படி நடக்குது ?

இவிகளை ஒரு தீப்பந்தம்னு வச்சுக்குவம். கீழ் நோக்கி பிடிச்சாலும் ஜுவாலை மேல் நோக்கியே எழும். மேல் நோக்கி பிடிச்சா மேகத்துக்கு ஹலோ சொல்ல துடிக்கும். எல்லாம் ஓகே.ஆனால் பந்தத்துல எண்ணெய் தீர்ந்து போயிட்டே இருக்கும் தானே.அப்ப என்னாகும்? கருக ஆரம்பிக்கும்ல.

செவ்வாயை போலீஸ்,மிலிட்டரிக்கெல்லாம் காரகமா சொல்றம் .ஏன் ? செவ் சுபபலமா உள்ள பார்ட்டிய விட செவ் பல்பு வாங்கின ஜாதகர் தான் நிறைய கோபப்படுவார் /பதட்டப்படுவார்/ கைய நீட்டுவார்/ஆயுதத்தை தூக்குவார்.அவருக்கு தான் போட்டியாளர்கள் நிறைய இருப்பாங்க. எதிரிகளிருப்பாங்க.

செவ் சுப பலமா உள்ளவிகளுக்கு இதெல்லாம் இல்லவே இல்லைன்னு இல்லை. ஆனால் போட்டி -பகைல்லாம் கட்டுக்குள்ள இருக்கும் .ஜாதகர் கான்ஃபிடன்டா இருப்பார். எப்ப வேணா அடிச்சு தூள் பண்ண முடியுங்கற ஃபீலிங்ல இருப்பார்.ஆயுதத்தையே தூக்கினாலும் சாலாக்கா பிரயோகிப்பார் ( போலீஸ் காரர் முழங்காலுக்கு கீழே சுடறாப்ல)
ஆனால் வயசு ஆக ஆக எல்லாமே தேசலாகி /மந்தமாகி கிட்டு வரும் போது ஹெல்த் பல்பு வாங்கிருது .
இப்ப மே-விருச்சிக லக்னம் /லக்னாதிபதி லக்னத்துல இருந்தா எப்பூடினு ரோசிப்பம். செவ் 1000 வாட்ஸ் பல்ப் மாதிரி .வெளிச்சம் ஓஹோ தான். ஆனால் அதுக்கேத்த சூடும் இருக்கும் தானே?

செவ் களம் கண்ட பிறகு /களம் காண்பதற்கு முன் வியூகம் வகுக்க /வியூகத்தை மாற்ற உதவகூடிய கிரகமே கண்டி சிவில் லைஃப் / ஃபேமிலி லைஃப் /ஃப்ரண்ட்ஷிப்/லவ்க்கெல்லாம் உதவாதுங்கோ

மேலும் லக்னத்துல உள்ள செவ் ஜாதகருக்கு ஆப்பு வைக்கிறாப்லயே 7 ஆம் பார்வையா களத்திரத்தை பார்க்கிறதால களத்திரத்துக்கும் ஆப்பு வைப்பாரு.

ஒருத்தர் பொங்கும் போது அடுத்தவர் தணிஞ்சு போனா தான் மண வாழ்வு. ரெண்டு பேரும் பொங்கினா? நான்கை பார்க்கிறதால தாய்க்கு /வீட்டுக்கு/வாகனத்துக்கு கூட ஆப்புதேன். என்ன ஒரு ஹவுசிங் சைட் ஒன்னு மிஞ்சும்.
எட்டை பார்க்கிறதால ஆவிசுக்கே கூட ஆப்பு வரலாம் இன்னம் விபத்து/அறுவைசிகிச்சைக்கெல்லாமும் வாய்ப்பு . நான்கு என்பது இதயம் -செவ் என்றால் ரத்தக்கசிவுலருந்து எதுவேணா நடக்கலாம்.

குரு பார்வை இருந்தா என்னாகும்? கொஞ்சம் ப்ளான் பண்ணி கோவப்படுவம்/ பைசா புரளும் சிகிச்சை செய்துக்கலாம்/விபத்தே நடந்தாலும் இன்ஷியூரன்ஸ் /மெடிக்க ரீ எம்பர்ஸ்மென்ட் கிடைக்கலாம். அரசியல்செல்வாக்குல போலீஸ் பிரச்சினை சால்வ் ஆகலாம். அம்புட்டுதேன்.

என்னப்பா நான் செரியா பேசறனா..கமெண்ட் ப்ளீஸ் ..

4 Replies to “பாலாரிஷ்டம் : 4 (லக்ன செவ்)”

சொக்கலிங்கம் இராமநாதன்

07/11/2017 at 5:21 pm

// அவருக்கு ஆஸ்மா இருந்தது .ரத்த சுத்திகரிப்பில் பிரச்சினை இருந்தா ஆஸ்மா வரும். ரெண்டுமே செவ் காரகம் தானே. // — இத்துனை நாள் வரைக்கும் சந்திரன் பல்பு வாங்கினா தான் ஆஸ்துமா ன்னு இருந்தேன் … அண்ணன் செவ்வாய் ன்னு ஒருத்தர் LED பல்பு போல …செவ்வாய் வக்கிரமா இருந்தாலும் இது ஒத்து போகுமா

அனுபவம் …நன்றி …

Reply

  S Murugesan

  07/11/2017 at 9:23 pm

  சொக்கலிங்கம் இராமநாதன்!
  செவ் இருக்க வேண்டிய இடத்துல இருந்து வக்ரமாகி இருந்தா எஸ்.

  Reply

PONNUSAMY CHENNAPPAN

28/10/2017 at 7:14 pm

சித்தூர் காரு,
லக்னாத் செவ் லக்னத்திலேயே பலமானால் ஜாதகரை காப்பாத்தத்தானே வேணும். நல்லதைத் தானே செய்யோணும். நம்ம தியரிப்படி மேச விருச்சிக காரவிக தேறதுக்கு வாய்ப்பே இல்லியா? சட்டுனு மண்டையிலே ஏற மாட்டேங்குதில்லே?

Reply

  S Murugesan

  28/10/2017 at 8:57 pm

  பொன்னுசாமி சென்னப்பன் !
  சேகுவாரா தெரியும் தானே ..அவரை ஒத்த போராளியை வரலாற்றில் கூட தேடிப்பிடிக்க முடியாது . அவருக்கு ஆஸ்மா இருந்தது .ரத்த சுத்திகரிப்பில் பிரச்சினை இருந்தா ஆஸ்மா வரும். ரெண்டுமே செவ் காரகம் தானே.

  செவ் பலம் பெற்றிருந்தால் போரில் வெற்றி கிடைக்கலாம். கூடவே நான் சொன்ன பிரச்சினைகளும் வரும். ஒரு வேளை களத்தில் இருந்து விலகி விட்டால் மேற்படி பிரச்சினைகள் குறையலாம்.

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *